----------------------------------------------------------------
உலக
சுற்றுச்சூழல் தினம் விழா
----------------------------------------------------------------
உலக சுற்றுச்சூழல் தினம் விழா ஞாயிறு மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம்,
அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி
மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “ நூல்
வெளியீட்டு விழா நடைபெற்றது. திருமதி சரோஜா வெளியிட புலவர் சொக்கலிங்கம்,.
சிவராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஜோதி “
கொங்கு நாட்டுச் சுற்றுச்சூழல்
பிரச்சினைகள் “ என்பது பற்றி விரிவுரை நிகழ்த்தினார் .
( சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “., கோவை ஷப்னா புக் ஹவுஸ் வெளியீடு,
பக்கங்கள் ரூ120, விலை ரூ 100 )
விழாவில் சுப்ரபாரதிமணியன் பேசும்போது
:
கண்முன் தெரியக்கூடிய
மிகவும் அதிசயமான இயற்கையின் அற்புதங்கள் மறைந்து வருவதை மனிதன் நினைப்பது இல்லை. எங்கேயோ
காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையின்
அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக அதிசயமாயுள்ளது.அப்படித்தான்
மரங்கள் அழிவதும்.
படைப்புக்கடவுளான
பிரம்மாவின் தலைமயிரிலிருந்து எல்லா தாவரங்களும் மரங்களும் உருவாயின என்று கதைகள்
உள்ளன.கால நிலை மாற்றம் பற்றி பேசுகிறோம் கால நிலை மாற்றத்துக்கான காரணங்களை
அறிவதில் காடுகளும் மரங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. ”தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும்” குறிப்பிடப்பட்டுள்ளன
நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல்
பெற்ற சிறப்புடைய நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை இப்போது உள்ளன. உலகின் தற்போதைய மக்கள் தொகையான 7.2 பில்லியன் எதிர்வரும் 2050-ம் ஆண்டு 9.2 பில்லியனாக
உயரும் எனக்கூறுகிறார்கள். நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை
முறையற்ற வகையில் பயன்படுத்துவதே
காரணமாகும். புவி வெப்பமய மாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத்தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின்
அழிவு மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்கால சூழலின்
சவால்களாக திகழ்கிறது.
. 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை
உலகெங்கிலும் காணப்பட்டது..அனலால் அலறினோம்.80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால்
சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது.
இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு
நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக்
காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது.
அதற்கான விழிப்புணர்ச்சியாய் மறைந்து வரும் சில மரங்கள் பற்றி அக்கறை
எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார். சக்தி மகளிர் அறக்கட்டளை விஜயா நன்றி கூறினார் .
( சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “., கோவை ஷப்னா புக் ஹவுஸ் வெளியீடு,
பக்கங்கள் ரூ120, விலை ரூ 100 )