சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்
------------------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று
நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார்.
மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) ,
மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் (
விமோசனம் தொகுப்பு ), சாயத்திரை நாவல் ( வே.பொன்னுசாமி ), அபூர்வன்ராஜா ( மற்றும்
சிலர் நாவல் ) வீரபாலன் ( கோமணம் நாவல் ) திருமுத்துலிங்கம் ( சமையலறைக்கலயங்கள்
நாவல் ) இராமையா ( ஓ
..செகந்திராபாத் ) நித்யா, விசயராணி (சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட
கவிதைகள் ( மந்திரச்சிமிழ் ), பற்றிப் பேசினர். சுப்ரபாரதிமணியனின் கதைகளின் பொதுவான த்ன்மை பற்றி கண்மணி ராசாஅ
உரையாற்றினார் . பெ.சரவணன் நன்றி கூறினார்.
எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும்
எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின்
மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய
யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய்
ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர்
விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும் என்றார் முன்னேற்றப் பதிப்பகம் உரிமையாளர்
வீரபாலன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள,
இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால்,
அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில்
இயல்பாகக் காண முடிகிறது.
நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும்
மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு
விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.
சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப்
பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக்
கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க
முனைவதில்லை.
தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து
மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக்
கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும்
விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம்
இல்லையென்றே கொல்லலாம்.
வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால
வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே
எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண
முடிகிறது.
இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை
வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான
புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர்
வெளிப்படுத்துகிறார் என்ற
கருத்துக்கள் அவரின் படைப்புகள் பற்றி முன் வைக்கப்பட்டன்.
ஏற்புரையில்
சுப்ரபாரதிமணியன் :
சாயம் அப்பிக் கொண்டு
திரிகிற மனிதர்கள். குழந்தைத் தொழிலுக்காக தங்கள் இளம் பருவத்தையும் கல்வியையும்
இழந்த குழந்தைகள். காணாமல் போன நதி. இவை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம்
வெளிப்பட்டன. விளிம்பு நிலை மனிதர்களை பிரதானப்படுத்தி முன் வைக்கப்பட்ட இலகியப்
பிரதியாக
அது அமைந்தது. பின்
நவீனத்துவ மனிதர்களும் உள்ளீடும் நாவலுக்கு தொழில் நிமித்தம் காரணமாக
வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை
நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய்
மாறியிருந்ததைக் கண்டேன். 10,000 ஆயிரம் கோடி போய் அந்நியச் செலவாநியைத் தரும்
தொழில் நகரமாயிருந்தது. என்னுடன் படித்த பலர் ஏற்றுமதியாளர்களாகி இருந்தனர். ஆனால்
இந்த வளர்ச்சிக்குப் பின்னால் நொய்யல் என்ற நதி காணாமல் போனதும், நொய்யல்
சாயக்கழிவுகளின் ஓடையாகியிருந்ததும், ஐம்பதாயிரம் குழந்தைத் தொழிலாளர்களும்,
சுற்றுச் சூழல் கேடும் என்னை வெகுவாக பாதித்தது. இந்த பாதிப்பு சுற்றுச் சூழல்
குறித்த அக்கறையாக என்னுள் விதைவிட்டது.
தொழில் வளர்சிக்குப் பின்னால் இருக்கிற
மனிதர்களின் இடர்பாடுகளும், சுற்றுச்சூழல் கேடும், மனித உரிமை பிரச்சனைகளும்
படைப்பினூடே சமூக இயக்கங்களிலும் பங்கு பெறச் செய்தது. என் போன்றோர் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்
என்ற பிரச்சாரமும் வலுப் பெற்றது. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது எதன் பொருட்டு
என்ற கேள்வியும் தார்மிகமாய் முன் வைக்கப்பட்டு போராட்ட வடிவமானது.
அச்சூழல் “சாயத்திரை” நாவலை எழுத வைத்தது. சாயங்களை பலமூட்டின. சிறந்த
நாவலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
ஆங்கிலத்தில் புதுவை பா.ராஜா அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்த நாவல்
வெளிவந்திருக்கிறது. ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி அவர்களால் ரங்க் ரங்கிலி
சாதர் மெஹெலி என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகியுள்ளது. தற்போது ஸ்டேன்லி அவர்களால்
மலையாளத்திலும், தமிழ்ச் செல்வி அவர்களால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே
சமயத்தில் வெளிவந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. .
தமிழில் இந்த நாவல் வெளிவந்து இருபதாண்டுகள்
ஆகிவிட்ட நிலையில் இந்த நாவல் முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள்
உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும்
துயரமானது. சிறப்புப் பொருளாதார
மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற
கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன. அடிப்படை
மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட்
சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம
விசுவரூபங்களைக்
கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை
மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம்
என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல்
கடந்த 20 ஆண்டுகளாக நானும்
படைப்பிலக்கியவாதிகளும் எழுதிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குழந்தைத்
தொழிலாளர் பிரச்சினைகள், குழந்தைத்தொழிலாளர் நலன்கள் குறித்த அக்கறையை தமிழ் ஹிந்து அக்கறைகொண்டு அவை பற்றிய
படைப்புகளை முன்னிருத்துகிறது. கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களையும்
அக்கறையுடன் வெளியிட்டு வருகிறது.கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம்
சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரை, மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை.
சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக கார்ப்பரேட்
சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும் என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும்
இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து
அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை ஹிந்துவின் கட்டுரைகள் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன.
கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப்
பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உலக
அளவில் மனித உரிமைப்பிரச்சினைகளாக
முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை ஹிந்து
முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும்.
சமூகத்தின் மனச்சாட்சியின் குரலாக, ஒருவகையில் எழுத்தாளர்களின் குரலாக அது இலக்கிய ஆளுமைகள், கலைத்துறையினர்,
அறிவுத்துறை முன்னோடிகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறது.உலக மயமாக்கலால்
கிராமங்களிலிருந்து துரத்தப்படும் மக்கள்
திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். இங்கு அவர்கள்
தொழிலாளிகளின் உரிமையற்று, வெறும் கூலிகளாக, கொத்தடிமைகளாக, சுமங்கலித்திட்டத்தின
கீழான அடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக தொடர்ந்து இயங்கி வருகிற
அவலத்திலிருந்து மீட்டெடுக்கிற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை
நுணுக்கமாகவும், பூடகமாகவும் சமீப்ப் படைப்புகள் செய்து வருவது
ஆரோக்கியமானதாக இருக்கிறது. இது இலக்க்கிய தர்மத்தின் குரலாக ஊடகங்களுக்கு முன்
உதாரணங்களை முன்வைக்கும் முயற்சியாகும்.
எனது பதினைந்தாவது நாவல் கோமணம் .பழனி பாதயாத்திரை
சார்ந்த இந்நாவலில் ஒரு நாத்திகவாதியாகவே நான் பயணித்திருக்கிறேன். மார்க்சீய
விஞ்ஞானம் தந்த வெளிச்சம் கடந்த 45
ஆண்டுகளாக சரியான வெளிச்சம்
காட்டியிருக்கிறது, இன்றைய சூழலில் பகுத்தறிவு , நாத்திகம் குறித்து நிறைய முன்னெடுக்கவேண்டியுள்ளது.பல ஆன்மீகவிசயங்களை
பாதயாத்திரையை முன்வைத்துக் கேள்விக்குறியாக்குவதே