அரிமா குறும்பட விருது,
அரிமா சக்தி விருது
( பெண்
எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா 2017
---------------------------------------------------------
*14/5/17 ஞாயிறு,. மத்திய அரிமா சங்கம், ,
காந்திநகர், திருப்பூர் நடைபெற்றது மத்திய அரிமா சங்கம் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை
வகித்தார்.
* சிறப்பு விருந்தினர்கள்: - கவிஞர் இந்திரன் , சென்னை
( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்., ) ., - கவிஞர் சின்னசாமி IPS., PhD. ( Deputy Commissioner of Police , Tirupur )
( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்., ) ., - கவிஞர் சின்னசாமி IPS., PhD. ( Deputy Commissioner of Police , Tirupur )
கவிஞர் இந்திரன் , சென்னை (( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் )
உரையில்:
உலகமயமாக்கலும் தொழில் துறை வளர்ச்சிக் காலத்தின் நெருக்கடிகளும் துயரப்படவே
வைத்திருக்கிறது. இந்த பெரும் செல்வத்தை விட்டுவிட்டு செத்துப் போவதற்கு நான் என்ன
முட்டாளா? என்ற கேள்வி மனிதனை நகைப்புக்குள்ளாகுகிறது. கைவினை கலைஞர்கள்
சமகாலத்தில் புறக்கணிக்கப்படுவது சாபமாய் உயர்கிறது. இந்த பூமியின் மீது
மாசடையாமலிருக்கட்டும் என்ற ஆசையின் விஸ்வரூபம்தான் ”செல்வத்தை நோக்கிய எங்களது பேராசை/ எங்கே
முடியுமென்று” ஆதங்கத்துடன் கேள்வியை
முன்நிறுத்துகிறது. .சாதி இன வேறுபாட்டைக் கடந்த
கலாச்சாரம் முன் வைக்கும்
நிபந்தனைகள் பற்றி உரக்கவே இன்றைய கவிதை உலகில் காணலாம். .மொழியின் சிக்கல்களை மீறி, கலாச்சார
சுதந்திரம் பற்றி விரிவாய் இவை பேசுகின்றன...கவிதை என்றைக்கும் காலத்தின் குரல் .
சுப்ரபாரதிமணியனின் உரையில்.. பெண்கள் மீதான வன்முறை
தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த
பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை
வாசிப்பதன் மூலம், மாற்றுச்சிந்தனைகளை உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.
உலகமயமாக்கல்
பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம்
சம்பாதிக்கிறவர்களாகவும், பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும்
மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை
வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள்
பகுத்தறிவின் துணை கொண்டே மாற்றியமைக்க
முடியும் .சமரசமற்ற சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய
சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.
1.அம்சப்ரியா , பொள்ளாச்சி, 2.இளஞ்சேரல், கோவை 3. சூரியநிலா , சேலம்
4. சந்திரகுமார் , கோவை 5. பன்னீர்செல்வம், மதுரை 6.பேரா. ராம்கோபால், கோவை 7.பேரா. ஆர்.பாலகிருஷ்ணன் , கோவை 8. செ.இராசு , ஈரோடு
9. இடைப்பாடி அமுதன் , நாமக்கல் 10.சி.ஆர்.ரவீந்திரன், கோவை இவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்றவர்கள் உரை நிகழ்த்தினர் :
பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது: விருது பெற்றவர்கள்
மனுஷி ,பாண்டிச்சேரி
ஜெயஸ்ரீ , திருவண்ணாமலை( மொழிபெயர்ப்பாளர் )
நித்யா ( மகிழினி ), கோவை
ஜெயந்தி , பெங்களூர் ( மொழிபெயர்ப்பாளர் )
உமா ஜானகிராமன் ., பெங்களூர்
நர்மதா, சென்னை
செங்கவின், பொள்ளாச்சி
கீதா பிரகாஷ், பொள்ளாச்சி
பேரா.சுஜாதா , குன்னூர்
பேரா. தி.சாந்தி திண்டுக்கல்
ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர் )
வத்சலா ரமேஷ் ( லண்டன் )
கீதா சச்சின் ( திருப்பூர் )
கவிதா மெய்யப்பன் ( திருப்பூர் )
குக்கூ அழகேசுவரி ( ஊத்துக்குளி )
சாந்தா மாணிக்கம் ( திருப்பூர் )
குறும்படம்:
அரவிந்தன் , கோவை
மணிவண்ணன், ஊட்டி
விக்னேஷ், தஞ்சை
மு.இளங்கோவன் , பாண்டி
.