சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 31 டிசம்பர், 2015

வடகிழக்கு இந்தியக் கதை: கைசம் பிரியோகுமார்
தமிழில்: சுப்ரபாரதிமணியன்

ஓர் இரவு

         கைசம் பிரியோகுமார்(பி. 1949) சிவில் என்ஜினியர். நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். அவர் “ நங்கி தரக் கிராதேசிறுகதைத் தொகுப்பிற்கு ஜந்து இலக்கியப் பரிசுகள் பெற்றவர். 1998ல் சாகித்ய அகாதெமி பரிசு உட்பட. அவர் இரக்கோல், வஹ்ஹால், மற்றும் சாகித்ய என்ற மூன்று இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர்.
         தூங்கும்போதும் தலைக்குள் ஏதாவது நிகழ்ந்தால் என்னாவது? அல்லது பலமான கத்தியொன்று அறியாமல் குத்தினால்? ஸ்டீபனுக்கு அந்த எண்ணம் அதிர்ச்சியாக இருந்தது. தூக்கத்திலிருந்து விடுபடும் வகையில் அவனின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. எதிர் திசைப் படுக்கையை கூர்ந்து பார்த்தான். லிங்க்பெள கால்களை நீடியபடி படுத்திருந்தான். அவன் அசையவேயில்லை. ஆனால் அவன் எண்ணினான்: ஒவ்வொரு இரவிலும் நான் பெருத்த குறட்டைச் சப்தம் கேட்பது வழக்கம். இப்போது தனியாக குறட்டை வரட்டும். அவன் மூச்சுகூட விடவில்லை என்பது போலிருந்தது. அவன் விழித்திருக்கானா? ஸ்டீபன் மறுபடியும் கண்களை மூட முடியவில்லை. மெல்லிய வெளிச்சம் மின்சார பல்பின் வெளிச்சத்தில் சின்ன அறையின் வெளிறித் தெரிந்த பொருட்களை ஊடுருவியது. சிறிய கட்டில், ஸ்டவ், சில பாட்டில்கள், ஒரு கூடை, பிளேட்டுகள், மற்றும் பாத்திரங்கள் சுவறின் அருகில் ஒன்றாய் குவிந்திருந்ததை காண முடிந்தது. கத்தி எங்கே? சுவற்றில் சாய்ந்திருப்பதா? குழப்பத்தில் மூழ்கினான். கவனமாகப் பார்த்தான். லிங்க்பெள முதுகை சுவற்றுக்குத் திருppiப்பியபடி படுத்திருந்தான். ஸ்டீபன் முழுமையாக எழுந்திருக்கவில்லை. கத்தியை படுக்கை அடியில் வைத்ததாக நினைப்பிலிருந்தது அவனுக்கு. கழுத்தை நீட்டிச் சாய்த்து படுக்கையின் அடியில் பார்த்தான். கத்தி தரையில் கொஞ்ச தூரம் தள்ளிக் கிடந்தது. கொஞ்சம் பெருமூச்சு விட்டான். ஆனால் அவன் கண்கள் மூடவில்லை.
         இரவு நீண்டது. எந்த ஒரு மனிதக் குரலும் கேட்கவில்லை, ஒன்றிரண்டு நாய்களின் அவ்வப்போதானக் குரைப்பைத் தவிர. இந்தச் சப்தங்களால் வேறு இரவுகளில் இந்த நேரத்தில் அவன் ஓரிரு முறை எழுந்திருப்பான். இன்று தூக்கம் சாத்தியமில்லையா?  நினைப்பால் எழுந்த பயத்தை தவிர்க்க நினைத்தான். அவன் எதிரில் படுத்திருந்த லிங்கபெளவை மறுபடியும் பார்த்தான். இப்போதும் அவன் அசையாமல் படுத்துக் கிடந்தான். உண்மையாகவே தூங்குகிறானா? விடியும் வரை குரலில் கொஞ்சம் தூங்காமல் காத்திருக்க வேண்டுமா. ஸ்டீபன் மீண்டும் நினைத்தான்.
         குறுக்குவாகு அலுவலகக் கட்டிடத்தின் தூரமூஅலி சின்ன அறையில் அவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கிறார்கள். இன்றைப்போல் குரோதமாய் எண்ணங்கள் அவனை அழைக்கழித்ததில்லை.
          ” “நீ இன்னும் இருவரும் சேர்ந்து இருக்க விருப்பமா?
         இன்று காலை இருவரையும் அழைத்த அலுவலர் கேட்டார். இந்தக் கேள்வியை முன்பு கேட்டதில்லை. அவர்கள் நேராக பதில் சொல்ல முடியவில்லை. இது போல் கேள்விகள் கேட்கப்படும் நிலை இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. சில நொடிகள். பிறகு தலைகளைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தனர்.
         “உங்கள் இருவருக்குமிடையில் எதுவும் நடந்து விடாது. ஆனால் யாருக்குத் தெரியும்? ஏதாவது மோசமாக நடந்து விட்டால்,எங்களையும் இழுப்பார்கள்
         இருவரும் மெளனமாகக் கேட்டார்கள். “ எனவே காவலாளி வேலை, சுத்தம் செய்யும் வேலை இரண்டையும் ஒருவரே சேர்ந்து செய்ய வேண்டும். அல்லது, குடியிருக்க இடம் தராத காரணத்தால் ஒருவர் வாடகை ரூம் எடுத்து இருக்கலாம். நாளை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
         இந்த முறையும் அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை. மெளனமாக அறையை விட்டு வெளியேறினர். ஒன்றாக வாழ்ந்தும், நெடுநாள் நண்பர்களாக இருந்தும் இருவரும் திடீரென ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்துவிட்டது போலத் தோன்றியது. நேருக்கு நேராக இனி இருவரும் பேச முடியாது.
           “குக்கி ஒருவனும், நாகா ஒருவனும் ஒரே அறையில் தங்கியிருந்து இரவில் ஒருவனை ஒருவர் கொலை செய்து கொண்டால் இந்த ஆபீஸ்க்கு கெட்டபேர் ஆகாதா
         அது அடுத்த அறையின் பேச்சின் பொது அர்த்தமாக இருந்தது. தலைமை எழுத்தர் குலாபிது அலுவலகத்தில் மற்றவர்களிடம் என்ன சொன்னார் என்பதைத் தெளிவாகக் கேட்டிருந்தான். லிங்கபவும் அதைக் கேட்டிருப்பான் என்று ஸ்டீபனுக்கு தெரியும். இது முன்பே வந்திருந்தால் அவன்  ஓதுக்கியிருப்பான். சில ஆண்டுகளில் இதுபோல பல கொலைகள் நடந்திருந்தால் தீவிரவாதிகள், அரசியல்வாதிகள் மீது பழி விழுமே தவிர சாதாரணமானவர்கள் மீதல்ல. ஸ்டீபன்  உடன்படாதவனாக இருந்திருப்பான். ஆனால் இருவரும் நகைச்சுவையான் பேச்சில் ஈடுபட இன்று வாய்ப்பிருந்தும் சேரவில்லை. ஒருவரைவிட்டு ஒருவர் விலகி எங்கோ ஓடுவது போலிருந்தனர்.
          “லிங்க்பெள, பசாங்க் என்பது உன் கிராமம் என்று சொல்லியிருக்கிறாய் அல்லவா? பத்திரிக்கையைப் பார்.. யரோ சாங்குபெலி சொன்ங்லோய், அவன் மனைவி, மூன்று வயது மகன் ஆகியோர் இஹாங் ஆற்றின் அருகிலான வயலில் சுட்டு கொல்லப்பட்டார்கள் என்று இந்தப் பத்திரிக்கை சொல்கிறது.
         டைப்பிஸ்ட் தொம்பி தினசரி செய்தித்தாளைக் காட்டியபடி ஒரே சமயத்தில் படித்தும், பேசியும்படி சொன்னான். ஸ்டீபன் வாழ்க்கையின் பெரும் அதிர்ச்சியை அடைந்தான். லிங்க்பெள ஏறத்தாழ பிடுங்கி, செய்தித்தாளுடன் சண்டையிட்டு கைகளில் பிடித்து வாசித்தான். அவனின் கை மோசமாக நடுங்கியது. அவன் கண்கள் சிவப்பாக மாறுவது போலிருந்தது. திருப்பித் தரும்போது, எதுவும் பேசாமல் தினசரி செய்தித்தாளை ஏகதேசம் தூக்கி எறிந்தான். ஸ்டீபன் தூணைப்போல் எதுவுமில்லாமல் நின்றான். அவனுக்கு அது கெட்ட கனவு... சாங்யுபெள, லிங்க்பெளவின் இளைய சகோதரன் என்பது அவனுக்குத் தெரியும்.
         உங்கள் ஆட்களைக் கொல்வது, அடிப்பது, இருவரின் வீடுகளை மாறிமாறி கொளுத்துவது இவையெல்லாம் இதுபோல முடிந்துவிடாது. இன்னும் பலர் இறப்பர். மோல்நோமில் சில நாட்களுக்கு முன்நடந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கை இது. லிங்க்பெள ஏன் எதுவும் சொல்லாமல் சென்றான்
         ஸ்டீபனைப் பார்த்து தோம்பி கேட்டான். “ எனக்குத் தெரியாது
         ஸ்டீபன் இவைகளையேப் பேசினான். வேறு சமூகத்தைச் சார்ந்தவனுடன் இதை கலந்தாலோசிக்க அவன் விரும்பவில்லை. அவன் அதுபற்றி யாரிடமும் பேச விரும்பவில்லை. ஸ்டீபனும் அறையிலிருந்து வெளியேறினான். அலுவல் கேட்டிற்க்கு நேராகச் சென்றான்.
     ஸ்டீபன் மீண்டும் லிங்க்பெளவை நோக்கத்துடன் பார்த்தான். முன்புபோல லிங்க்பெள அசையவேயில்லை. அவனைப் போல தூங்க முடியுமா? அவனால் அப்படித் தூங்க முடியாது. ஆனால் எப்படித் தூங்குவது? அவனின் முப்பது வயது இளைய சகோதரன் மனைவியுடனும், குழந்தையுடனும் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிந்த போது.  அந்த இரவில் அவன் தாமதமாக மது குடித்து கண்கள் சிவந்த நிலையில் திரும்பினான். துணிகளைக் கூட மாற்றாமல் நேராக படுக்கைக்குச் சென்றான். இரவு உணவும் சாப்பிடவில்லை. ஸ்டீபனுக்கு அவனுடன் பேசத் தைரியமில்லை. அவனுக்கு உணவும் பரிமாறவில்லை. லிங்க்பெளவும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இரவு வெகு நேரமாகியும் அவன் திரும்பாததால், லிங்க்பெள பாஸ்ஹோங்கிற்கு சென்றிருப்பான் என்று ஸ்டீபன் நினைத்தான். சாங்குபெளவின் சாவு குறித்து வருத்தம் தெரிவித்துப் பேச விரும்பினான். ஆனால் லிங்க்பெளவின் நிலை பார்த்து அவனுக்குத் தைரியம் வரவில்லை. இரவின் மிக அமைதியான சூழலில் அவன் மனதில் பயம் கிளம்புவதை உணர்ந்தான். தனியாகப் பேசலாம். ஸ்டீபன் முதுகைத் திருப்பி மேலே பார்த்தான். பிய்ந்து போன இடங்களின் ஒட்டவைத்தவற்றை அவன் கண்கள் பார்க்கவில்லை. அவனின் மனதில், இஹாங் நதியின் பக்கத்திலான மலைகளின் இடையில் சானாகைதில் கிராமத்தினை பார்க்க ஆரம்பித்தான். குக்கி கிராமம், பாசாங், வெகு தூரத்தில் இல்லை.சாமா கெய்திலின்  சிறிய சந்தையில்  பஸாங் கிராமத்தினர் அவர்களின் பொருட்களை விற்பர். அங்கிருந்து வாங்குவதும் விற்பதும் செய்வர். இஹாங் நதிக்கரையில் உள்ள அகலமான வயல்வெளிகள் இரண்டு கிராமத்தினருக்கும் சொந்தமானவை. இருவரும் நெல்லை ஒன்றாக பயிரிடுவர். இருவரும் ஒன்றாக ஆற்றில் மீன் பிடிப்பர். இப்போது? இப்போது என்ன நடந்தது. அவர்களின் கிராமங்களை காப்பாற்ற ஆயுதங்களை ஏந்துகிறார்கள். கிராமங்களில் தனியே வெளியே வர பயப்படுகிறார்கள். ஸ்டீபன் திடீரென நீளமான பெருமூச்சுவிட்டான்.
     ஸ்டீபன் சானா கைத் தேயின் சாங்குப் போவ் வழக்கமாக கறி விற்பான். ஸ்டீபன் அவனின் மூத்த சகோதரனுடன் நட்பாக இருப்பதால் சாங்கு போவ் திரும்புவதற்கு முன்னால் அடிக்கடி நல்ல கறியை ஸ்டீபனுக்கு கொடுப்பான். அவ்வப்போது அதை  தின்று அவன் சானகெய் தேனப்பில் இரவு தங்குவான். தாங்குல் இளைஞர்கள் பெரும்பாலும் அவன் நண்பர்கள். சேர்ந்து உட்கார்ந்திருந்த ஒரு மாலையில் ஸ்டீபம் சாங்குபோவிடம்,
      ” “சாங்கு போவ், அவர்கள் நமது ஆற்றில் ஒரு அணை அட்டுகிறார்கள் என கேள்விப்பட்டேன். கிராமங்களிலிருந்து சொவ்கிதார், கலாசி வேலைகளுக்கு ஆட்களை எடுக்கப் போகிறார்கள். நீ ஏன் சேர்ந்து கொள்ளக் கூடாதுஎன்றான்.
     சாங்குபோவ் உடனே பதிலளித்தான்,நான் போக விரும்பவில்லை. அரசாங்க வேலையை சமாளிக்க என்னால் முடியாது. படிப்பறிவில்லாத என்னைப் போன்ற ஒருவனால் என்ன செய்ய முடியும்? அதற்கு பதிலாக காட்டில் மிருகங்களை வேட்டையாடுவேன், ஆற்றில் மீன் பிடிப்பேன், மரங்களை வெட்டுவேன். ’’
     ’’ சரி, பரவாயில்லை. கறி விற்பனையை தொடர். அதன் ரத்தத்தில் உன் உடல்  ஊறியபடி’.
ஸ்டீபனும் சிரித்தபடியே உடனே பதிலளித்தான்.
      ‘கண்டிப்பாக. நான் கிராமத்திலேயே இருந்து விடுவேன். கொஞ்ச காலத்திற்கு பிறகு, அவர்கள் என்னை இம்பாலில் தங்கிவிட கேட்பார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை.’ ‘
      நிலவொளியில் உட்கார்ந்து இருவரும் சிரித்தார்கள். உக்ருலின் மலை மடுவுகள், சிறிய கிராம வீடுகள், கால்நடை மேய்ச்சல் புல் பகுதிகள் அங்கும் இங்கும் ஆகியவை நிலவொளியில் தெளிவாகத் தெரிந்தன. சர்ச்சிலிருந்து வேதவாக்குகள் கேட்டன. முதலில் குரல்கள் பலத்து இருக்கவில்லை. பிறகு அவை வளர்ந்தன. பள்ளத்தாக்குகளில் அவை எதிரொலித்தன. பாடல்களை நுணுக்கமாகக் கேட்க முடிந்தது.
      “ சர்ச் பூசையில் கலந்து கொள்ளலாம்
சாங்குபெள கேட்டபின் உடனேநீ போவதானால் போஎன்றான்.
      “ ஆமாம். மிருகங்களக் கொல்கிற என் பாவம் கழுவப்படட்டும். சரி. டங்குவில் மொழியிலும் நான் பாடுவேன்.
     ஸ்டீபன் நினைத்துப் பார்த்தான். கிராம சர்ச்சில் எப்படி சாங்குபெள வழக்கமாக இதயத்திலிருந்து வருகிற மாதிரி ஸ்லோகங்களைப் பாட பழகியிருக்கிறான் என்பதை. இயல்பாக சில சொட்டு கண்ணீர் ஸ்டீபனின் கண்களிலிருந்து விழுந்தது. அவற்றை அவன் துடைத்துக் கொள்ளவில்லை.
     இரவு எவ்வளவு அமைதியாக இருக்கிறது. இதுவரைக்கும் அவன் மனதில் வளர்ந்த பயம். இப்போது மெல்ல வடிவதாகவிருந்தது. லிங்க்பெள குறட்டை விடுவதைக் கேட்டான். மேலே வெறித்திருந்த அவன் கண்கள் மெல்ல மூடின.
      “ விடிவதற்க்கு இன்னும் எத்தனை நேரமிருக்கிறது.
     நேற்று காலையிலிருந்து லிங்க்பெளவின் உதடுகளிலிருந்து வந்து அவன் கேட்ட முதல் ஒலி அது. ஸ்டீபன் திடுமென  எழுந்தான். வெளியே பார்த்து படுக்கையின் அருகிலிருந்த ஜன்னலைத் திறந்தான். இன்னும் வெளியில் இருட்டாக இருந்தது. பக்கமிருந்த லாம்பெல் வறண்ட நில அலுவலகங்கள், மரங்கள் மற்றும் மூங்கில்கள் ஆகியவை இருளில் மூழ்கியிருந்தன. ஜன்னலை மூடினான்.
      “கொஞ்சநேரம் போனது. தூங்க முடியவில்லை.
      “ எனக்கு மட்டும் ?
 இந்த இரு வார்த்தைகளை மட்டும் சொல்ல, அவனின் இதயம் உணர்வுகளால் தத்தளித்தது.
      “ இன்று அப்புறம் கிராமத்திற்கு செல்கிறாயா?
கொஞ்ச நேரம் மெளனமாக இருந்துவிட்டு ஸ்டீபன் கேட்டான்.
      “ எனக்குத் தெரியவில்லை. பாதுகாப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை”.
ராணுவ பாதுகாப்பு இல்லாமல் இம்பாலிலிருந்து அந்த கிராமத்திற்கு நீண்ட நாட்களாக பேருந்துகள் செல்வதில்லை.
      “ நேற்று பாதுகாப்பு தந்தார்கள் . இல்லையா
     இல்லை. இன்று எப்படியும் அங்கு போவது பற்றி யோசிக்கிறேன். சாங்க்பவை சந்திக்க வேண்டும். என் மைத்துனி, மருமகள் ஆகியோரை புதைப்பிற்கு முன் பார்க்க வேண்டும். நாளை பிணங்களைப் புதைக்கிறார்கள்
     அவன் தொடரவில்லை. எழுந்து மூலையிலிருந்த விளக்குமாரை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியில் சென்றான். பின் கதவை மூடினான். பக்கத்து அறைகளில் பூட்டுகள் போடப்படும் சப்தம் கேட்டது. மீண்டும் கண்களை மூடிய ஸ்டீபன்   தூங்க முயற்சித்தான். எழுந்து சுவற்றில் சாய்ந்து தெரியுமாறு வைத்திருந்த கத்தியை படுக்கைக்கு அடியில் இருந்து எடுத்தான். மின்சார ஓளியில் அது பிரகாசமாக மின்னுவதாகத் தோன்றியது. இரவில் முடியாமல் போல தூக்கத்தைத் தூங்கும் முயற்சியில் அவன் கண்களை மூடினான்.

-   மணிப்பூரியிலிருந்து மொழிபெயர்ப்பு – ராபின். எஸ். நக்னகோம்.