மற்றும் சிலர் : நாவல் மறுபதிப்பு வெளிவந்துள்ளது
(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )
மற்றும் சிலர் : ஜெயந்தன்
” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட
சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித
மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள்
உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல்
என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின்
அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல்
எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of
how much details and punches . Congradulations my dear rival (
ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )
(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை ,
டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )
மற்றும் சிலர் : நாவல் ஜெயமோகன்
நாவலுக்குரிய நிதானமும் அழகும்
கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு
சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப்
படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை,
மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு
புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும்
சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே
சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது
நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே
உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித
உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர
வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய
முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான்
பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்
அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது .
இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை
எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய்
மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை
வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87
(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை ,
டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )
மற்றும் சிலர் : நாவல் : நகுலன்
சில நாவல்களின் தலைப்புகளே நம்மை
அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன்
ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.
இந்த நாவலில்
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு
கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும்
பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும்
காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து
விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று.
(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை ரூ 180 )
( டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை
ரூ 180 )