சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 2 டிசம்பர், 2015

இரு சிறுவர் கதைகள்
1.உள்ளூர் சுற்றுலா
-சுப்ரபாரதிமணியன்

------------------------------------------------------------------------------

            ஏஞ்சலின் கண்கள் கசிந்தன. அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். "திருப்பூர் குமரன்" எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்றாள். பக்கத்தில் இருந்த உஷா அவளை ஏறிட்டுப் பார்த்தாள். "சாவிலும் கூட அவருக்கு எவ்வளவு கஷ்டம்" என்றாள்.
            திருப்பூர் புகைவண்டி நிலையத்திலிருந்து புகைவண்டியொன்று பெருத்த சப்தத்துடன் கோவை நோக்கிச் சென்றது. புகைவண்டி நிலையம் அருகில் இருந்தது குமரன் நினைவிடம்.. நினைவிடத்தில் சிறு நூலகம் இருந்தது. திருப்பூர் குமரனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இருபது வர்ண ஓவியங்கள் இருந்தன. அவரின் பிறப்பு. படிக்க வசதியில்லை. வறுமை காரணமாக படிப்பை கைவிட்டது. பருத்தி ஆபீசுக்கு வேலைக்குப் போனது, சிறுவயதுத் திருமணம். சென்னிமலை வாழ்க்கை. பிறகு திருப்பூர் வாழ்க்கை. சுதந்திரப் போராட்ட ஈடுபாடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஊர்வலம். காவல்துறை அடித்தல். மூவர்ணக் கொடியை பிடித்து உயிர் விட்டது. வாழ்க்கையின் பல சம்பவங்களை ஓவியங்களாக்கி இருந்தனர்.
            கல்வி ஆலோசகர் சாந்தா மாணிக்கம் 'தூரி' மாதிரி கட்டி குமரன் பிணத்தை எடுத்துச் செல்லும் ஓவியத்தைப் பார்த்தபடி இருந்தார். " அவரை புதைக்கக் கூட எவ்வளவு சிரமம்"
            "அடுத்து எங்கு செல்லலாம் அக்கா" ஹேமலதா கேட்டாள்.
            "என்ன அவசரம். குமரன் நினைவிடத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்" என்றாள் ஏஞ்சலின்.
            "இருக்கலாம். அதன் பின்பு குமரன் அடிபட்டு இறந்த இடத்திற்குப் போகலாம்."
            "அவரின் இறந்த இடம் வேறா..."
      "ஆமாம். இதே வீதியில் இன்னும் ஐந்து நிமிடம் நடந்தால் அதைக் காணலாம்..."
            "இந்த வீதிக்குப் பெயர் குமரன் வீதி"
            "திருப்பூர் குமரன் நினைவாய் குமரன் வீதி என்று பெயர். அதற்கு முன்னால் இதன் பெயர் என்னவாக இருந்திருக்கும் அக்கா..."
            "ஆமாம்... என்னவாக இருந்திருக்கும். யாரிடமாவது கேட்கணும்"
            “ நம் சிவதாசன் அவர்களிடம் கேட்கலாம். அவர் வரலாற்று ஆய்வாளர்"
            குமரன் நினைவிடத்திலிருந்து ஐம்பது அடி நடந்ததும் சாந்தா மாணிக்கம் நின்றார். "இந்த சிலையை கவனியுங்கள்" பேருந்துகள் விரைவாக ஓடின. வாகனங்கள் ஒன்றையொன்று துரத்தின. பெருத்த இரைச்சலாக இருந்தது.
            "சிலைகள் என்றால் ஒருவர்தான் இருப்பர். இதில் இருவர் உள்ளனர்."
            "ஆமாம் அக்கா வித்தியாசமாக உள்ளது. இருவர் சிலைகள் ஒன்றாய்..."
            "ஒன்றாய் என்பது இல்லை. ஒரு சந்திப்பு என்பதே சரி."
            "ஆமாம் அக்கா பெரியாரும், அண்ணாவும் உள்ளனர்" கௌசல்யா உற்சாகமாய் சொன்னார்.
            "எல்லோரும் கவனியுங்கள். இந்த இடம் வாகன நெரிசல் உள்ள இடம். கவனமாக இருக்கவும். இதில் உள்ளவர்களில் ஒருவர் பெரியார். .வே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்டவர். சமூக சீர்திருத்தவாதி. இன்னொருவர் அண்ணா. சி.என். அண்ணாத்துரை. தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். சிறந்த பேச்சாளர். எழுத்தாளர்"
            "ஏன் ஒரே இடத்தில் சிலைகளாக இருக்கிறார்கள் அக்கா..."
            "இருவரும் தமிழகம் முன்னேற பாடுபட்டவர்கள். இருவரும் முதன் முதலாக சந்தித்தது திருப்பூரில்தான். 1934ல் இங்கு நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள் அதன் நினைவாய் சமீபத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்" எல்லோரும் நின்று ஏறிட்டுப் பார்த்தார்கள். அண்ணா, பெரியார் இருவர் முகங்களிலும் தோழமையுடனான நட்பு இருந்தது. இருவர் உருவங்களும் பகல் வெளிச்சத்தில் மின்னின.
            மாணவ மாணவியரை இருவர் இருவராக செல்லுமாறு ரூபா ஆசிரியை சொன்னார். "இடதுபுறம் செல்லும் பாதை எங்கே செல்கிறது தெரியுமா?"
            "தெரியும் அக்கா... தொலைபேசி நிலையம் போகலாம். ஜெய்வாய்பாய் பெண்கள் உயர்நிலைப் பள்ளி போகலாம். அப்பள்ளியில்தான் என் அக்கா சுபா படித்தாள்." நிர்மலா உற்சாகத்துடன் சொன்னாள்.
            "அந்தப் பள்ளியின் விசேஷம் தெரியுமா" ரூபா கேட்டார்.
            "அது பெண்கள் பள்ளி அக்கா. ஆறாயிரம் பெண்கள் படிக்கிறார்கள். தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் படிக்கும் அரசுப் பள்ளி அக்கா."
            "அதுதான் முக்கியம். பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் வெகுவாக வளர்ச்சி பெற்ற பள்ளி..."
            தலைமைத் தபால் நிலையத்தைக் கடந்தார்கள். "இடது புறம் செல்லலாமா அக்கா" சண்முகம் கேட்டான். யுவராசு பதிலளித்தான்.
            "இடதுபுறம் சென்றால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செல்லலாம்."
            "அவ்வளவுதானா..."
            "இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் திருப்பூர் திருப்பதி கோவிலுக்குச் செல்லலாம்."
            "இன்றைக்கு நம் உள்ளூர் சுற்றுலாவில் திருப்பூர் திருப்பதி கோவில் இருக்கிறதா அக்கா..."
            "இன்னும் முடிவு செய்யவில்லை. நேரத்தைப் பொறுத்தது அது. ஆனால் நம்மூரின் பழமையான செல்லாண்டியம்மன் கோவிலுக்குப் போகும் திட்டம் இருக்கிறது."
            "செல்லாண்டியம்மன் கோவில் எங்குள்ளது..."
            "யுனிவர்சல் திரையரங்கு ஓரமாய் நொய்யல் கரையை ஓட்டிச் சென்றால் செல்லாண்டியம்மன் கோவில் வரும். வழியில் வளம் அமைப்பினர் கட்டியுள்ள புது பாலத்தையும் வளம் நினைவு சின்னத்தை நொய்யல் நதி பாதையில் கட்டியிருப்பதையும் பார்க்கலாம்"
யுவராஜ் ரூபா ஆசிரியை அருகில் வந்தான்.
            “ . பொங்கல் பண்டிகையின் போது அங்கு சென்றிருக்கிறேன். அப்போது பொங்கல் வைக்கிறார்கள். கரகாட்டம், காவடியாட்டம், காளையாட்டம் நடந்ததைப் பார்த்தேன். கலை நிகழ்ச்சிகள் கூட நடக்கும். நொய்யலில் உள்ள பாறைகளுக்குப் பல வர்ணங்கள் இடுவார்கள். ரொம்பக் கூட்டம் கூடும். நொய்யல் கரையில் காணும் பொங்கல் என்று கூடும் கூட்டம் அது..."
            அவர்கள் வரிசையில் சென்றபடி குமரன் வணிக வளாகத்தைக் கடந்தார்கள். வாகனங்கள் வெகு விரைவாய் சென்றது. பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் பயமுறுத்தின. வெயில் சற்றே புழுதியுடன் சேர்ந்தது.
            ரூபா "ஒரு நிமிடம் அக்கா" என்றபடி சாந்தா மாணிக்கம் அருகில் வந்தார். "இந்த நினைவுச் சின்னத்தை கவனித்தீர்களா அக்கா" வலது புறம் தொழிற்சங்கக் கட்டிடத்தையொட்டி இருந்ததைக் காட்டினார். "மாணவர்கள் ஒர நிமிடம் நில்லுங்கள்"
            அது மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னம். அறுபதுகளில் இந்த எதிர்ப்புப் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது. அதில் பலர் இறந்தனர். காயம்பட்டனர். அவர்களின் நினைவாக அந்த மொழிப் போர் தியாகிகள் நினைவுச் சின்னம் நின்று கொண்டிருந்தது.
            "அக்கா மொழிப் போர் ஈகி பெரியசாமி அய்யா பெயர் இருக்கிறது. நினைவுச் சின்னம் அமைத்தவர்களில் ஒருவர் என்று"
            "ஆமாம்... பெரியசாமி அய்யா நம் பள்ளி விழாக்களுக்கு அடிக்கடி வருபவர்..."
            "அக்கா... மொழிப் போர் எதற்காக."
            "இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்து..."
            "இந்தி மொழியைக் கற்றுக் கொள்ளக் கூடாதா..."
            "கற்கலாம். அவரவர் விருப்பம். ஆனால் இந்தி திணிப்பை எதிர்த்துதான் போராட்டம் நடந்தது. திருப்பூரில் பெரிய கலவரமெல்லாம் நடந்திருக்கிறது. ஒரு காவல்துறையினர் கூட பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் நடந்தது."
            எதிரில் டவுன்ஹால் கட்டிடம் பிரமாண்டமாய் நின்றது. முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடக்கும்.
            "ஞாயிறுகளில் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கேன் அக்கா. அரசு பொருட்காட்சி, தனியார் பொருட்காட்சி என்று நடக்கும். கைத்தறி கண்காட்சியில் பெட்ஷீட் போர்வை வாங்கி இருக்கிறோம்" என்றான் பிருத்வி ராசு.
            "ஈமு கோழியை இங்குதான் ஒரு அரசு கண்காட்சியில் பார்த்தேன். அக்கா..." என்றாள் நிஷா
            "ஈமு. கோழி எவ்வளவு பெரியது. பெரிய முட்டை"
            "அதன் கறி நானூறு ரூபாய் ஒரு கிலோவுக்கு."
            "சாப்பிட்டிருக்கியா..."
            "சௌசத் அலி மாமா சொல்வார்"
            காவல் நிலையத்தின் முன்பு நிறைய காவல்முறை வாகனங்கள் தென்பட்டன. காவலர்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். எதிரில் இருந்த குமரன் நினைவிடத்தில் எல்லோரும் நின்றார்கள். கறுப்புத் தூண் ஒன்று அஞ்சலியாக நின்றது.
      தேவாலயத்தின் காம்பவுண்டு சுவர் நீளமாய் இருந்தது. எல்லோரும் கை கூப்பி நின்றார்கள். ஒரு நிமிடம் பேசாமல் மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
      விரைசலாக வரிசையில் நகர்ந்தார்கள்.
      "அய் ஆலுக்காஸ் நகை மாளிகை"
            "சமீபத்தில் நகை கொள்ளை நடந்த இடம்"
            "40 கிலோ தங்கம் கொள்ளை போனது. 10 கோடி"
            "காவல் நிலையம் எதிரிலேயே கொள்ளை"  பிருத்விராசு ஹா... ஹா... என்று வாய்விட்டுச் சிரித்தான். சுற்றியிருந்த மாணவர்களும் சிரித்தார்கள்.
            பிருந்தாவன் பூங்கா புல்தரையில் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோரின் முன்பும் சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்தன. பிருந்தாவன் பூங்கா நொய்யலாற்றின் கரையில் இருக்கிறது. உள்ளூரில் பொழுதுபோக்கிற்கான நல்ல இடம். கொஞ்ச தூரத்தில் எம்.ஜி.ஆர். சிலை நொய்யலைப் பார்த்து நின்றிருந்தது.
            "காந்தி கட்டம்ன்னு இந்த இடத்தைச் சொல்லுவாங்க ஒரு காலத்திலெ. இப்போ எம்.ஜி.ஆர் சிலை, பிருந்தாவன் பார்க்குன்னு பேர்." என்றார் சாந்தா மாணிக்கம்.
            "இந்த விபரமெல்லா புதுசா இருக்கு அக்கா" என்றார் ரூபா.
            "ஒரு காலத்தில இந்த பிருந்தாவன் பார்க் இருக்கற எடம் நொய்யல் கரை. மணலா கெடக்கும். அரசியல் தலைவர்கள் வந்து பொதுக் கூட்டம் போடுவாங்க..."
            "இப்போ நொய்யல் சாய நாத்தம். நிக்கக் கூட சிரமம் அக்கா" என்றான் சிரித்துக் கொண்டே சொன்னான் பிருத்விராசு.
            "பிருத்வி பெரிய விமர்சகன் ஆயிட்டான். திருப்பூரோட மனசாட்சியின் குரல் மாதிரி சரியா எதையாவது சொல்லிட்டிருக்கான்."
            "நாம பெரியவங்க சொல்ல பயப்படறதெ சின்ன வயசுப்பசங்க சுலபமா சொல்லிருவாங்க..."
            "அதுதா புதிய தலைமுறை"
            நாலைந்து பேர் ஊஞ்சல் பக்கம் சென்றனர். சறுக்கு விளையாட்டில் சிலர் ஈடுபட்டனர். மரங்கள் தங்களை உலுக்கிக் கொள்ளும் விதமாய் காற்று வீசியது. மூக்கை அரிக்கும் சாயக்காற்று தவழ்ந்து சென்றது. வாகனங்கள் விரையும் சப்தம் பிருந்தாவன் ஓரத்தில் கேட்டது.
            "அடுத்து எங்க போலாம் அக்கா..." சாந்தா மாணிக்கம் கூண்டில் அடைபட்டிருந்த முயலைப் பார்த்தாள். மான் ஒன்று வடபுறத்தில் துள்ளிக் கொண்டிருந்தது.
            "மான் கூட இப்ப வழி தவறி நம்ம ஊருக்குள்ள வந்திருது."
            "வந்தா பரவாயில்லை. வாகனத்திலெ அடிபட்டு சாகுது..."
            "அதுதா வருத்தமா இருக்கு..."
            "ஆமாக்கா... அடுத்து எங்க போறம்."
            "இப்பிடியே மெல்ல நடந்தா வளம் பாலம். நொய்யல் கரை. அப்புறம் பழமையான செல்லாண்டியம்மன் கோயில்..."
            "ஆண்டி பாளையம் போட் ஹவுஸ் போறமா அக்கா..."
            "போட் ஹவுஸ் புதுசா அமச்சிருக்காங்க. நான் இதுவரை போனதில்லெ. நேரம் எப்பிடி வாய்க்குமோ..."
            "எவ்வளவு எடம் இருக்கு அக்கா..."
            "மேற்கே போனா கொங்கணகிரி கோவில் அரசு கலைக்கல்லூரி. வடக்கே போன திருமுருகன் பூண்டி சிற்பங்கள் பண்ற எடம். இன்னும் அஞ்சு கி.மீ. தள்ளி போனா அவினாசி. காசியில பாதி அவினாசி. நல்ல சிற்பங்கள் உள்ள எடம். கெழக்கே போனா பெரிய பாளையம் குளம். இன்னம் பேருந்து ஏறிப்போனா சாயக்கழிவு நெறஞ்சு கெடக்கற ஒரத்துப்பாளையம் அணை..."
            "நம்ம ஊர்லயே நெறைய எடங்கள் பார்க்க இருக்கு அக்கா."
            "இங்க இருக்கறதையே நாம செரியா பார்க்கறதில்லே. இதிலே சுற்றுலான்னு வெளியூர், வெளிமாநிலம் போயிர்ரம்..."
            "அப்புறம் வெளிநாடு... நம்மூர்ல இருந்து வெளிநாடு போறங்க எக்கச் சக்கம்."
            "அக்கா... இது செயற்கை புல்தானே..." பச்சைப் பசேல் என்று இருந்ததைச் சுட்டிக் காட்டினான் யுவராசு.
            "செயற்கை புல்தா..."
            "இதுவும் நல்லாத்தா இருக்கு..."
            "இயற்கைக்கு மாற்று செயற்கையில்லை. ஆனா முடியாதப்போ செயற்கையை ஏத்துக்குத்தா வேணும்."
            "எல்லாமே செயற்கையாத்தா போச்சு. இன்னிக்கு நம்ம மாணவர்கள் சாப்பாட்டதில நல்ல இயற்கையான உணவு ரொம்பவும் கம்மி. நூடுல்ஸ் நெறையப் பேர் கொண்டாந்திருந்தாங்க. ஜங்க் புட்ஸ்..."
            "அது என்ன ஜங்க் புட்..."
            "திடீர் உணவு..."
            "வெளிநாடு போறது பத்தி பேச்சு வந்தது. எங்கியோ ஜம்ப் ஆயிருச்சு..."
            "நம்மூர்காரங்க நெறைய வெளிநாடு போறவங்க..."
            "வேவாரத்துக்குன்னு போவாங்க. அப்புறம் சுற்றுலாவுக்கும்..."
            "நம்ம ஊர்லயே பாக்க எவ்வளவு எடம் இருக்குது..." ஆச்சர்யப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தான் பிருதிவ்ராசு. எல்லோரும் அவன் சொல்வதை ஆமோதிப்பவர்கள் போல அவன் சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திலீபன் "ஒவ்வொரு ஊர்லியும் அந்தந்த ஊருக்கு பெருமை தரும் இடங்கள் நிச்சயம் இருக்கும்" என்றான். சாந்தா மாணிக்கம் "நம் நாடு பழம் பெரும் நாடு. அதனால பாராம்பரியம், கலாச்சாரம் காட்டுகிற இடங்கள் ஒவ்வொரு ஊர்லயும் உண்டு" என்றார்.  


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 *சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602 -9486101003


சிறுவர் கதை
           அன்பே உலகம் 

                  சுப்ரபாரதிமணியன்
 
   கலைச் செல்வி கையிலிருந்த  கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டினாள்
உலகம் அழியாமெத் தப்பிச்சிருச்சு.. அதுக்குத்தா..
“ எத்னி மணிக்கு உலகம் அழியுமுன்னாங்க செல்வி..
“ மத்தியானம் மூணு மணி “
“ இல்லே.. மாயன் காலண்டர்லே ராத்திரி பன்னிரண்டு
“ அதுவும் கடந்து போயிருச்சே.
“ செரி .. தப்புச்சுட்டோம்.
“ ஒரு பெரிய் எச்சரிக்கை.. எச்சரிக்கையா யாரும் எடுத்துகலே போல “

  அப்பாவின் கையில் கேக்கைத் திணித்த் விட்டு ஏதோ ஞாபகம் வந்தது போல் வாசலுக்கு வந்தாள். “ அம்மா செம்பருத்தி எப்பிடி இருக்கா
“ இருக்கா . இத்தனி நேரம் எப்பிடி மறந்திட்டு இருந்தேன்னு ஆச்சர்யம்தா

     கலைச்செல்வி கல்லூரி விடுதியில் இருந்து திரும்பியிருந்தாள்.கையில் கொண்டு வந்த கனத்த பை வாசலில் கிடந்தது. அழுக்குத்துணிகள் நிறைய இருந்தன. எல்லாம் அம்மா துவைத்துப் போட என்று கொண்டு வந்திருந்தாள். உலகம்  அழிகிற நாள் என்று களேபரமாய் இருந்தது கல்லூரி “ டெஸ்ட் வேண்டாம். கண்டிப்பு வேண்டாம். உலகம்தா அழியப் போகிறதே என்று ஆசிரியைகளை கிண்டல்டித்து பாடம் நடத்தாமல் செய்திருந்தார்கள். அடுத்த நாள் சனி என்பதால் விடுதிக்கும் விடுமுறை விட்டார்கள். திவ்யா ஆசிரியைஎல்லாரும் கோயிலுக்குப் போய் சாமிக்கு தெங்க்ஸ் பண்ணுங்க “ என்றார்.காசிக்குப் போனா தப்பிச்சுக்கலாம். எல்லாம் அழிஞ்சாலும் காசி அழியாதுன்னு கடைசி நேரத்திலே ரயில் ஏறுன கோஷ்டியிலே எங்க தாத்தாவும் இருந்தார்என்றார் தனலட்சுமி மாம். எல்லாம் பொய் என்று அறிவியல் இயக்க பிரசுரங்களை  எக்கோ கிளப் மாணவிகள் இரு நாள் முன்னம் இருந்தே  பிரசுரங்களைக் கொடுத்து வந்தனர்.
  அப்பாவின் குட்டிக் கார் தெரு முனையில் நின்றிருந்தது. அதன் பளபளப்பு மின்னல் போல் தெறித்த்து.  அப்பா வீட்டு காம்பவுண்ட்டுள் காரை நிறுத்த வரும் போது இடது பக்கம் இடிக்கிறதென்று ப்ப்பாளி மரத்தை இடித்திருந்தார்.
“ என்னப்பா இப்பிடி பண்றீங்க “
“கார் உள்ளே வர முடியலே.
 “ அதுக்காக மரத்தை வெட்டறதா..’ப்ப்பாளிப் பழம்..
 “ அதுக்கென்ன பழமுதிர்சோலையிலெ வாங்கிக்கலாம்
“ கிலோ நாப்பது ரூபாய்.. “
 “ பரவாயில்லை..
    வாசலுக்கு வந்தாள் கலைச்செல்வி.  அவளின் பார்வை தெருவின் இரு பக்கங்களிலும் பாய்ந்தது. இரட்டை சக்கர வாகனங்கள் பக்கமிருந்த பனியன் கம்பனிகள் முன்னால் குவிந்திருந்தன.. மாலை நேரத்துக் காற்று இல்லை. ஜெனரேட்டர்கள் ஓடும் சப்தம் வீதியை நிறைத்திருந்தது.
     கலைச்செல்வி வீட்டில் இருக்கிற நாள் என்றால் வாசலில் இருக்கும் செடிகளுடன் கொஞ்சம் பேசுவாள். தண்ணீர் ஊற்றிக் கொண்டே ஏதாவது திரைப்படப் பாடலை முணுமுணுப்பாள். எப்பிடி இருக்கீங்க என்று உரத்து வாய் விட்டு கேட்பாள்.. அவளைக் கவனிப்பவர்களுக்கு ஆச்சர்யம் கிடைக்கும்.
   வாசலுக்கு வந்தவளின்  முகம் கறுக்கத் தொடங்கியது. வாசலில் தெரு விளக்குகளின் வெளிச்சம் இல்லை. மின்சாரத்தடை நேரம். ஆனால் செடிகள் ஏன் இவ்வளவு கறுத்துப் போய் கிடக்கிறது. எல்லாம் வாடிப் போய் இருந்தன. திக்கென்றது அவளுக்கு.அழாத குறையாக வாயில் கை வைத்துக் கொண்டு  வீட்டுள் விரைசலாக ஓடினாள்.

“ என்னம்மா.. செடிக வாடிக் கெடக்கு “. அப்பா கேக்கைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அம்மா  எழுந்து நிற்க அவகாசமிலாதவள் போல் வாசலுக்கு வந்தாள். கலைச் செல்வி அவளின் முதுகை ஒட்டி நின்றாள்.கோழிக் கொண்டை தளர்ந்திருந்தது. ரோஜாச் செடிகள் தலை தாழ்ந்திருந்தன.
“ என்னம்மா.. தண்ணி ஊத்தறதில்லையா
ஊத்தறன்.. நான் செய்யற வேலையிலெ இதுக்கு தண்ணி ஊத்தறது பெரிசு இல்லையே..
“ அப்புறம்.. ஏதாச்சும் புழு பூச்சி பட்டிருச்சா.. “
“ அப்பிடி ஒண்ணும் தெரியலே.. “
“ அப்புறம்..
“ நீயிருந்தா அதுக கூட பேசிகிட்டுருப்பே. அதுக கூட பேச ஆளில்ல பாரேன்
“ அதுக்குன்னு இவ்வளவு கோபமா இவங்களுக்கு.. “
“ உங்கப்பா வேறெ காரை காம்பவுண்டுக்குள்ள கொண்டுட்டு வர்றப்போ இடிக்குது. இதையெல்லாம் எடுத்தறணும்ன்னு சொல்லிட்டிருந்தார். அதக் கேட்டு மனசு கெட்டுச் போச்சு போல. வாடுதுக. “
 கலைச் செல்வி முகம் இருண்டது  அன்பாக பேசவில்லையென்றால் செடிகளும் வாடி விடுமே.
உலகம் வாடுவதோ அழிவதோ அதனிடம் அன்பாகாப் பேசுபவர்கள் குறைந்து விட்டதாலா..
என்ன யோசிக்கறே.. செடிக  வாடுறதப்பத்தியா.
 “ இல்லம்மா உலகம்  வாடறதெப்பத்தி..
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ‘Subrabharathimanian,8/2635 pandian nagar, tiruppur 641 602  94861