கவி ராத்திரி நிகழ்ச்சி
30வது தேசிய புத்தகத் திருவிழா
கவி ராத்திரி நிகழ்ச்சி
என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி அரங்கில் ( பழைய பேருந்து நிலைய
சாலை ) ஞாயிறு மாலை நடைபெற்றது.
கவிஞர் ஜோதி
தலைமை தங்கினார். என்சிபிஎச் நிர்வாகி குணசேகரன், செல்லம் ரகு, ஜீவானந்தம்,
துருவன் பாலா, முகில் திரையகம் ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனல்மதி, பூண்டி
முருகானந்தன், செந்தமிழ்வாணன், ஸ்டிபன் முடியரசு, ஜோதி, சுப்ரபாரதிமணியன், ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். செந்தமிழ்
வாணன் வெளிவர இருக்கும் அவரின் புதிய
நாவல் “ பித்தப்பிறை “ நாவல் பற்றிய அனுபவங்களை எடுத்துக்கூறி அறிமுகப்படுத்தினார். சுப்ரபாரதிமணியன் தன் “
மந்திரச்சிமிழ் “ நூலை சுய அறிமுகப்படுத்தி அதிலிருந்து கவிதைகள் வாசித்தார்.
சாகித்ய அகாதமி பரிசை எழுத்தாளர்கள் திருப்பி அனுப்பி வருவது பற்றிய விவாதத்தை
சிவகாமி துவக்கி வைத்தார்.சாகித்ய அகாதமி பரிசை திருப்பி அனுப்பிய தெலுங்கு கவிஞர்
பூபால் ரெட்டியின் “ நட்சத்திரப்பூ “ நூல் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர்
கனவு அமைப்பு வெளியிட்ட அந்த “ நட்சத்திரப்பூ “ கவிதைத் தொகுப்பு கவிதை
வாசித்தோருக்குப் பரிசாகத் தரப்பட்டது.. என்பிடி
என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி நவம்பர் 30
வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. 10% கழிவு உண்டு. இலக்கியம், சுயமுன்னேற்றம்
உட்பட அனைத்துப் பிரிவு நூல்களும் விற்பனைக்கு உள்ளன. செய்தி: குணசேகரன் ( என்சிபிஎச்)