சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும்“ ( பயண
கட்டுரைகள் நூல்
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் சார்பில் 24/10/15 மாலை 7
மணிக்கு அய்பெரும் விழா மத்திய அரிமா
சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர்,திருப்பூரில் நடைபெற்றது. .
ரங்கசாமி
(தலைவர் , மத்திய அரிமா சங்கம் ) தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் செயல்
அறிக்கை தந்தார். ஆசிரியர்கள் தின விழாவை ஒட்டி சண்முகசுந்தரம்( சிக்கண்ணா அரசு
கலைக்கல்லூரி முதல்வர் ), பேராசிரியர்
மோகன்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டார்கள்.அவர்கள் ஏற்புரை
வழங்கினர்.
சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும் ” ( பயணக்கட்டுரைகள் )
நூலை மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர் திருநாவுக்கரசு IPS வெளியிட்டுப் பேசினார். “ எட்டுத்திக்கும் ” ( பயணக்கட்டுரைகள்-ரூ110
என்சிபிஎச் , சென்னை வெளியீடு ).
முன்னதாக ஆர்.திருநாவுக்கரசு
IPS அவர்களின் (( “ உன்னுள் யுத்தம் செய் “ ரூ160 தமிழ் வாசல் பதிப்பகம், மதுரை ) நூலை
சுப்ரபாரதிமணியன் அறிமுகப்படுத்திப் பேசினார்.
திருநாவுக்கரசு IPS பேசியதிலிருந்து : ” பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இலட்சியக்கனவோடு
இருக்கும் மாணவர்களின் கனவுகள் பிற்காலத்தில் சிதைவதற்கு அடிப்படைக்காரணம்
கல்லூரியிலும் , பள்ளிகளிலும் படித்தப் புத்தகங்களைக் காட்டிலும் ஒரு பணிக்கென
வரும்போது அங்கே ஒரு மாணவனிடம் எதிர்பார்க்கப்படுவது தனி மனித
மேம்பாட்டுத்திறன். எண்ணங்கள் ஒருமிக்கப்படும்போது வாழ்க்கை வளம் பெறும். மிகச்சிறந்த
லட்சியங்களைக் கொண்ட எத்தனையோ மாணவர்களின்
கனவுகள் பிற்காலத்தில் நீர்க்குமிழியாய் உடைவதைப் பார்க்கின்ற போது கல்வி என்பது
புத்தகம் தாண்டிய நடை முறை அறிவு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். “
முன்னதாக
மெஜஸ்டிக் கந்தசாமி , தர்மர்ரஜ் உட்பட பலர் பேசினர் .
நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
செய்தி: ராஜராஜன், மேலாளர் திருப்பூர் மத்திய அரிமா சங்கம்.
(படத்தில் சண்முகசுந்தரம், மெஜஸ்டி கந்தசாமி, திருநாவுக்கரசு , சுப்ரபாரதிமணியன்,
ரங்கசாமி )