சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 3 மே, 2014

அணுத்திமிர்

அணுத்திமிர்


விஞ்ஞான விசயங்களில் எழுத்தாளனில் கற்பனை நிசர்சனமாகிற பல முன்னுதாரணங்கள் உள்ளன. அணு உலை விபத்து சார்ந்த "தி சைனா சிண்ட்ரோம்" என்ற ஆங்கிலத் திரைப்படம் மார்ச் 16, 1979ம் ஆண்டு வெளியாசை. அது வெளிவந்து 12 தினங்கள் கழித்து அப்படத்தில் இடம் பெற்ற விசயங்கள் பெனிசில்வேனியா பகுதி அணு உலை விபத்தில் நிகழ்ந்தது. கூடங்குளம் பற்றிய செய்திகளின் போது இப்படம் பற்றியச் செய்திகள் மனதில் நிழலாடியது.
            பெண் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தன் பத்திரிக்கைக் குழுமத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அணு உலைக்கு செய்தி சேகரிப்பிற்குச் செல்கிறார் அவர்கள் உள்ளிருக்கும் போது திடீரென மூட ஆயத்தம் நடக்கிறது. அணு உலை குளிர்விப்பான் செயலிழந்து வருவது பதற்றத்தை உருவாக்குகிறது. "சைனா சிண்ட்ரோம்" என்ற குளிர்விப்பான் செயலிழப்பு ஏற்படுத்தும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உயர் வெப்பம் வெளிப்படணும் கட்டிடம் வெப்பத்தால் சிதைவதும், கதிர் வீச்சும் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. அது பூமியை ஊடுருவி அமெரிக்காவின் நேர் எதிர்ப்புறம் இருக்கும் சைனாவை அடைந்துவிடும். இது அணு உலையின் முக்கிய நிர்வாகியின் பார்வைக்கு தொலைக்காட்சி நிருபர் கொண்டு செல்கிறார். கதிர் வீச்சுப் பதிவுகளை தேடுகிறார்கள். அதைச் சேகரிக்கிறவர்களிடமிருந்து ஆவணங்கள் பறிக்கப்படுகின்றன. அணு உலையில் சேதமும், கதிர் வீச்சும் உணரப்படுகிறது. அணு உலை அதிகாரிகள் உண்மையை மறைக்கின்றனர். அங்கு நடந்த பதற்ற நிலையைப்பற்றி தொலைக்காட்சி நிருபர் நேரடி ஒளிபரப்பில் கண்ணீருடன் விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நேரடி ஒளிபரப்பு திடீரெனத் துண்டிக்கப்படுவதோடு திரைப்படம் முடிகிறது. இதில் காணப்பட்ட இந்த அணு உலை விபத்து இப்படம் வெளியான 12 தினங்களில் நிகழ்ந்தது. இதை "மூன்று மைல் தீவு" விபத்து என்று குறிப்பிடுகிறார்கள். 1986ல் உக்ரேன் செர்னோபில் அணு உலை விபத்து, 2011ல் ஜப்பான் புருஷிமா விபத்து போன்றவை இதற்கு ஒப்புவமையான விசயங்களாகும். இதே காரணங்கள் கூடங்குளத்திலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்பது பொய் ஆகும் நிரூபணத்தைக் காட்டுகிறது இது.

            கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் பல்வேறு அணு மின் திட்டங்கள் வேகமாக மூடப்பட்டு வரும் வேளையில் இந்தியாவில் கூடங்குளம் போன்றவற்றில் அரசு அக்கறை காட்டி வருகிறது. ஜப்பான் (29%), ஜெர்மன் (27%), சுவிட்சர்லாந்த் (38%) என அந்த அளவுக்கு அணுமின் சக்தியை தேவையாகக் கொண்டிருப்பதை ஒப்பிட்டால் இந்திய அணுமின் சக்தி மிகச் சாதாரணமானதே. இந்தியாவில் 2% மட்டுமே. 63% (நிலக்கரி அனல் மின் நிலையங்கள்), 23% (நீர் மின் சக்தி) என்று இங்கு கிடைக்கிறது.

            அப்படியொன்றும் அணுமின் சக்தி மலிவானதல்ல. அனல், நீர், காற்று அணுமின் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதை விட அதிக லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. அணுமின் திட்டங்களில் முதலீடு செய்யும் பணத்தை அவ்வளவாகத் திரும்பப் பெற முடியாது என்ற நிலை இப்போது இருக்கிறது. புவி வெப்பமடைதலில் 27% கரியமிலவாயு காரணமான மின் உற்பத்தியால் வெளியாகிறது. ஆனால் அணு உலை தயாரிப்புகளில் இதுவும் குறையவில்லை. வழக்கமாய் 50% கரிய மிலவாயு குறைப்பு நல்லது. அணு மின் உலையால் 2% தான் சாத்யம்.

            பாதுகாப்பான அணு உலை எதுவும் இல்லை என்றுதான் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அணு உலைகளில் இருக்கும் 440 அணு உலைகளில் 1000 அணு உலை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. சிறிய அளவு விபத்துகள் வெளியில் தெரிவதில்லை. ஜப்பான் புருஷிமா அணுமின் நிலையத்தில் எல்லா பாதுகாப்புகளையும் மீறி மின் இணைப்பு துண்டிப்படைந்த பின்பு, சுனாமி தாக்கிய பின் குளிரூட்டும் வசதிகள் தகர்ந்ததால் வெப்பம் அதிகமாகி வெடி விபத்து நடந்தது. தொழில் நுட்ப காரணங்கள் மட்டுமில்லாமல், தொழில் நுட்ப கோளாறு விதிகளை கடைபிடிக்காததால் நடைபெறுகின்றன.

            பேராபத்துக்களும், சுற்றுசூழல் மாசுபடல் இல்லாத காற்று,  சூரிய ஒளி, சிறிய நீர் மின் திட்டங்கள் மாற்று மின் சக்தி திட்டங்களாக உள்ளன. இந்தியாவில் 300 நாட்களுக்கு மேல் ஒரு ஆண்டுக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு பெரும் அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். அணுமின் திட்டங்களை விட குறைந்த செலவில் ஆபத்து ஏதுமின்றி மாற்று எரி சக்தி மூலமாக மின்சக்தி பெற முடியும். கட்டுமானத்தில் பெரும் செலவு, விபத்து சமாளிப்பு, கழிவு சமாளிப்பு செலவுகள் என்று அதிக செலவாகக் கூடியதை மலிவானது என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் மூலம் சொல்லப்பட்டு வருகிறது. சில ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு கூடங்குளம் அணு மின் நிலையம் கட்டப்பாட்டாலும், அணுமின் திட்டம் நிறைவேற்றப்படும் போது பல லட்சம் கோடி தேவையாக இருக்கும். இந்த செலவீனம் பெரும் பாரமாய் வந்து போகும் அரசாங்கங்களுக்கும், செத்துப் போகும் மக்களுக்கும் அமையும்.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்