“ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி
தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன்.
இது போதும்.
ஒரு பொம்பளைக்கு புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’
சிந்தாமணி சொல்வதைக் கேட்டு
ருக்குமணி ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன்
பார்பபது போல் நின்றிருந்தாள்;
அவள் ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தவள்
மாதிரி சொன்னாள்
. “ இதை விட
ஒரு பொம்பளைக்கு
வேறெ என்ன வேண்டியிருக்கும்’.
வானம் நீலத்தைக் குறைத்துக் கொண்டு பல்லிளித்த்து.
தாய்த்தமிழ்ப் பள்ளி
முக்கு திரும்புகிறவரைக்கும்
அந்த நாற்பது வயது ஆணும்,
பெண்ணும் போவதைப்பார்த்துக் கொண்டே இருந்தாள் சிந்தாமணி.
அன்றைக்கு பந்த்.
சாயப்பட்டறை மூடலை
எதிர்த்து பந்த்.
வீதியில் வேடிக்கை பார்த்த்க் கொண்டிருந்தனர்.
எதிர் வேப்பமரம் எல்லா வகைச் சோர்வையும் போக்கி விடுவது போல் காற்றைத் வீதியில் தாட்டிக் கொண்டிருந்த்து.
சிந்தாமணி தலை திரும்பிய போது அந்தப் பரவசம் குறைந்து நோயாளித்தன்மையுடன் அவள் முகம் மாறி விட்டது.
*****************
2.
சிந்தாமணியைப் பார்த்த முதல் கணத்திலேயே அவள் நோயாளிதான் என்று
தீர்மானித்திருந்தாள் ருக்மணி.
வெளுத்துப் போயிருந்தது முகம், ஒரு வகை
மஞ்சள் தன்மை வந்திருந்தது.
ஏதாவது நோயா என்று கேட்க வேண்டும்
போலிருந்தது. கேட்கவில்லை.
தவறாக நினைத்துக்கொள்ள்வார்களோ என்ற பயம் இருந்தது.
ருக்மணி சிந்தாமணியை பார்த்த முதல் கணத்தில்
எதுவும் பேசமுடியாதவள் போல்தான் நின்றாள்.
தண்ணீர் என்று கேட்டாதாக
எண்ணம் நீராவி போல் மேலெழுந்து கொண்டிருந்தது.
ஆனால் சிந்தாமணி
நோய்த்தன்மை மிகுந்த முகச் சோர்வை மீறி
என்ன என்று உரக்கத்தான்
கேட்டு விட்டாள்.
“ குடிக்கத் தண்ணீ வேணும்”
“ எங்க வேலை செய்யற பொம்பளை..
கட்டட ஆளா”
.
”இல்லீங்க.
எதுத்த பனியன் கம்பனி.”
” கம்பனியில தண்ணீ கூட வெக்கறதில்லையா..
அசோக்குமார் கிட்ட
சொல்றன் “
பரபரத்தபடி சென்னாள் ருக்மணி:
“ வேண்டாங்க. இப்போ டீ டைம்:
கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு.
அதுதா. “
3.
“ அசோக்குமாருக்கு என்ன.
மினரல் வாட்டரா வாங்கிப் போடலாம்.
ரெண்டுக்கு நாலு கேனா வாங்கிப் போட வேண்டியதுதானே
‘’
“ இருக்குங்க டீ டைம்
.அதுதா. கூட்டமா இருக்கு.
“ செரி..
இரு தர்ரன்.
என்னமோ கட்ட்ட வேலை செய்யற பொம்பள மாதிரி
இருந்துச்சு. வெயில்ல கருத்துக் கெடக்கறே.
பனியன் கம்பனிக்குள்ள பேன்
இல்லையா. அசோக்குமார்கிட்ட சொல்லணுமா
’
“ அதெல்லா இருக்குதுங்க.
வேலை அசதிதா”
இரவில் பஸ் பயணம்.தூக்கம் வேறு இல்லை.
சோர்வாகத்தான் இருந்தது
அவளுக்கு. ஒரு நல்ல தூக்கம் போட்டால் போதும்.
எல்லாம் சரியாகி விடும்.
நல்ல குளியலும்
, கொஞ்சம் பவுடரும் நல்ல முகப்பொலிவைக் கொண்டு
வந்து விடும்.
இன்றைக்கு இதெல்லாம் அவளுக்கு வாய்க்கவில்லை.
அவசரஅசரமாக வந்து இறங்கியவுடன் பேருந்து நிலையத்திலேயே
பல் துலக்கி முகம் கழுவி பாண்டியன் நகர் பேருந்து பிடித்து வந்து விட்டாள்.
மோகனப்பிரியா இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
வீட்டு எண்
2635 என்று வந்து விட்டது
. மோகனப்பிரியா விலாசத்தில்
2624 என்றிருந்த்து. பத்து வீடுகளுக்குள் தான்.
ஆனால் கண்டு பிடிப்பது சிரமம்
என்றபடி அலைந்து திரிந்தவளுக்கு சலித்துப் போய்விட்டது.
கிரிஜாகூட அவள் கொடுத்த முகவரியில் இந்திரா நகர் என்றிருந்தது.
பாண்டியன்
4.
நகருக்குப் பக்கத்தில்தான் இந்திரா நகர் என்றார்கள்.
போகலாமா என்ற
யோசிப்பு வந்த்த்து ருக்மணிக்கு.
எதற்கும் இன்னும் நாலு வீடு கேட்டு
விடலாம் என்று வீடு போன்ற முகப்பு இருந்த இடத்தில் நின்றாள்.
உள்ளிருந்து வந்தவன்
“ என்ன .. பனியன் கம்பனி வேலைக்கு யாராச்சும்
சொன்னாங்களா. ‘’” திணறியபடி
தொண்டை கரகரத்து குரலைச் செருமிக்
கொண்டாள். அதற்குள் அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“ சரின்னா உள்ளற போயி கூட்டற வழியப் பாரு.”
எதுவும் பேசாதவள் இதற்காகக் காத்திருந்தவள் போல்
உள்ளே சென்று
முகப்பு அறையின்மூலையில் சீமாரைத் தேட ஆரம்பித்தாள்.
வேலை தேடித்தான்
ஊரைவிட்டு இங்கு
வந்தது. மோகன்ப்பிரியாவையோ,
கிரிஜாவையோ பார்த்தாலும் அவர்கள்
இது மாதிரி ஏதேனும் ஒரு
வேலையைத்தான் வாங்கித்தர முடியும்.
அவளின் கையிலிருந்த பை நழுவி
மூலையில் பதுங்கிக் கொண்டது.
அப்படித்தான் அவளின் முதல் நாள்
பனியன் கம்பனியில் ஆரம்பித்தது.
சிந்தாமணி கொடுத்த சொம்பிலிருந்த நீர்
கடைவாயில் வழிந்து
ருக்குமணியின் ஜாக்கெட்டை
நனைத்தது.அது சற்றே அழுக்கேறி ஒரு வித வாசத்தையும் கிளப்பியது.
“ எந்த
ஊர் தண்ணீங்க
“
.
5.
“ ஒரு நாளைக்கு மேட்டுப்பாளையம் அத்திக்கடவுன்னு வரும்.
இன்னோரு நாளைக்கு பவானித் தண்ணீ வரும்.
இன்னும் வேணுமா
“
” போதுங்க
. சுருளி ஊத்து தண்ணி குடிச்சு வளர்ந்தது.
புதுசா ருசியா
இருந்துச்சு. ’
“ எல்லாம் குளோரினோ
கெமிக்கலோ போட்டு வர்ரதுதா.
அந்த ருசிதா.”
சிந்தாமணி காலிச் சொம்புடன்
திரும்பும் போது
என்ன்ங்க என்றாள்
ருக்மணி.
“ இந்தப் பையை இங்க வச்சிட்டுப் போகுட்டுங்களா.
‘
“ பைல என்ன
..”
’ ரெண்டு சேலையும்
. ஜாக்கெட்டும், பாவடைந்தா.’
“ செரி.,
அந்த மூலையில போட்டுட்டுப் போ.
அப்புறம் வந்து
எடுத்துக்கிவியலே.”
” ராத்திரி வேலை முடிஞ்சதும் வந்து எடுத்துக்கறேங்க..”
இரவு எழு மணிக்கு வேலை முடிந்து வந்தபோது கேட்டருகில் தண்ணீர்
நிரம்பி இருந்த மினரல் வாட்டர் கேனை
நின்றபடியே காலால் தள்ள
முயற்சித்துக் கொண்டிருந்தாள் சிந்தாமணி..
மினரல்வாட்டர் கேன் நகர
மறுத்தபடி நின்ற இடத்திலேயே திமிறிக் கொண்டிருந்தது.
“ நாசுமாப் போன மளிகைக்கடக்காரன் கேட்டுக்கு உள்ள வெச்சுட்டுப்
போயிருக்கலாம்.
இங்க வெச்சுட்டுப்போயிட்டான்.
இதை யாரு உள்ள எடுத்து
6.
வைக்கறதாமா.
ஆம்பளெ வெற
ஊர்ல் இல்லே’
“ நான் வேண்ணா எடுத்து வச்சுக்கறனம்மா..”
வீட்டு சமையல்
அறையில் ஸ்டுல் ஒன்றின் மேல் இருந்த
காலி கேனைப்பார்த்தாள் ருக்மணி.
“ ஊத்திருட்டுங்களா’
“ செரி..
செரி . இல்லீன்னா.
அதுக்கும் ஒரு ஆளைத்தேடணும்.
‘
மினரல்வாட்டரை நிரப்பியபின்
சிந்தாமணி சொம்பில் தண்ணீரைப் பிடித்து
நிதானமாய் வாயில் ஊற்றி தாகம் தீர்த்துக் கொண்டாள்.
“ தண்ணீ வேணுமா..
குடி..
சுருளி தீர்த்தம் தண்ணீ குடுச்சு வளந்தவள்ளன்னு சொன்னே.
எல்லாத்தையும் விட இதுல ருசி அதிகம்..
கெமிக்கல்தா. . நாக்கு
அடிமையாயிருச்சு.”
ருக்மணியின் பார்வையில் வாஸ்பேசினில்
இருந்த அழுக்குப் பாத்திரங்கள்
தென்பட்டன.கரப்பான் பூச்சியொன்று நெளிந்து ஓடியது.
அழுக்கு வாசம்
நாசியை எட்டுவதாயிருந்த்து
“ அதெல்லா வேற..
குவிஞ்சு கெடக்கு.
ய்யாருஇருக்கா இதெல்லா சுத்தம் பண்றதுக்கு..”
வாஸ்பேசின் பக்கம் நகர்ந்தாள் ருக்மணி.விறுவிறிவென்று கரப்பான் பூச்சிகள்
நகர்ந்தன.
“ கொஞ்சம்
தேய்ச்சு குடுக்கறியா.
பணம் வேண்ணா
தர்ரன்.தப்பா நெனைக்க மாட்டேன்
”
7.
ருக்மணி விறுவிறுவென்று பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தாள்.
ஒரு
வகை புளிப்பு நாற்றம் கிளம்பிக் கொண்டிருந்தது.
வியர்வை கன்னத்தில்
குறுகுறுவென ஓடி நகர்ந்தது.
“ இரண்டு பேர்த்துக்கு உப்புமா பண்ணீர்லாமா
“ தண்ணீர் வடிந்த
வாணலியை எடுத்துக் கொண்டபடி சிந்தாமணி கேட்டாள்.
“ வீட்டுக்கார்க்கும்,
உங்களுக்குமா “
“ இல்லே உனக்கும்
எனக்கும்தான். அந்த மனுசன் எப்ப வருவாரோ.
அவர்
வேலை அப்பிடி”
உப்புமா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது”
வீடு ரொம்ப தூரமா”
என்று
கேட்டாள் சிந்தாமணி.
பையை எடுத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து
தாரைதாரையாய் கண்ணீர் வழிந்தது.
“ வீட்டுலே பிரச்சினையம்மா.
வந்துட்டன்.
எங்க ஊர்க்காரிக ரெண்டு பேர்த்து அட்ரஸ்கொண்டு வந்தேன்
.
கண்டு புடிக்க முடியலே.
காலையில கம்பனிக்குள்ள புகுந்தது.
வேற
ஒண்ணையும் யோசிக்க முடியலே.
நீங்க பத்து பாத்திரம் கழுவி
தரச்சொன்னதும் பொழுது போயிருச்சு.
இந்னேரத்துக்கு அப்புறம் எங்க
போயித் தேடறது.
உங்க வீட்டு மொட்டை மாடியில
படுத்துக்கட்டுமா.காலையிலே அவங்களெ தேடிப் போயர்ரேன்.”
8.
” அடிபாதகி..
ஒத்தையிலெதா காலையில இருந்து அல்லாடிட்டு இருக்கறே.
புருசனோட சண்டை போட்டுட்டு
வந்துட்டையா.’
“ ஆமாமா.
அந்தாளு பண்ற இம்சைக்கு அளவில்லாமெப் போச்சு.
அதுதா
கெளம்பிட்டன்.’
“ குழந்தைக இல்லையா.
‘
‘ அதுக்கெல்லா குடுப்பினை அந்தாளுகிட்ட இல்லம்மா.
‘
“ சரி மொட்டை மாடியில படுக்காதே.
வெயில் காலம் நல்லா இருந்தாலும்
பாதுகாப்பில்லெ.
காம்பவுண்டுக்குள்ள ரெண்டு போர்சன் வாடகைக்குன்னு
கட்டி வுட்டிருந்தா என்க்கு பாதுகாப்பாச்சும் இருந்திருக்கும்
“
முன் கேட்டுக்கு பக்கத்தில் ஒரு மறைவான இடத்தில் பழைய பாய்
ஒன்றைப் போட்டு
தூங்க ஆரம்பித்து விட்டாள்
ருக்மணி. சிந்தாமணி தூங்க
ஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தபின் அவசரமாய் போய் குளியல்
போட்டுக் கொண்டதில் நிம்மதியான தூக்கம் வந்து விட்டது அவளுக்கு.
அடுத்த நாள் காலையில் எழுந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்து
விட்டாள்.
தூங்கி எழுந்த
சிந்தாமணி முன் வாசல் ஒதுக்கம் பார்த்து
செரி
காபி போட்டுத் தர்ரேன் என்று உபசரித்தாள்.
சிந்தாமணியின் கணவன் மூன்று நாட்களுக்குப் பின் வந்தவன் வீட்டைப்
9.
பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் போல
“ என்ன புதுசா
வேலைக்காரிங்க
கெடச்சிருக்காங்களா ‘’ என்றான்.
ருக்மணி நாலு நாளாய்
கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகள்,
துணி துவக்க
,
சமைக்க உதவுவது பற்றிச் சொன்னாள்.
“ பனியன் கம்பனிக்கே ஆள் கெடைக்காதப்போ நமக்கு வேலைக்கு
ஆள்
கெடச்சிருவாங்களா
‘
“ புது ஆளு.
எதுக்கு சிரமம்.
ஜாக்கிரதையாவே இரு
. ‘
“ வேலைதானே வாங்கறன்.
படுக்கையெல்லா கதவைச் சாத்திட்டு கேட்டு
பக்கத்தில பழைய பாயிலதா.”
“ பிரச்சினை வராமெ இருந்தாச் செரி.”
ருக்மணி உற்சாகமாகத்தான் இருப்பதாய் தோன்றியது
சிந்தாமணிக்கு.
சிந்தாமணி ஒரு ஆண்,
ஒரு பெண் குழந்தைகளுக்குப் பிறகு செய்த
ஆபரேசன் ஒன்றில் ஏதோ சிரமம் ஏற்பட முடங்கிப்போய் விட்டாள்.
வீட்டு
வேலை கூட செய்ய முடிவதில்லை.
கணவன் ஊரில் இருக்கும்
நாளென்றால்
கணவனின் உதவி இருக்கும்.
வேலைக்காரிகள் யாரும்
நிலைக்கவில்லை.கணவன் இல்லாத நாட்களில் எடுப்புச் சாப்பாடோ,
ஒரு
வேளை சமையலோ போதும் என்றாகிவிடும் அவளுக்கு.
சிந்தாமணியும்
10.
ருக்மணி பற்றித் துருவி எதையும் கேட்கவில்லை.
வீட்டு வேலைக்கு ஒரு
ஆள்
கிடைத்த்து என்ற அளவில் போதும்,
வெவ்வேறு விசயங்களை
விசாரித்துக் கொண்டு எதற்கு சங்கடம் என்று விட்டு விட்டாள்.
நாற்பது
வயது ருக்மணிக்கு.
“ அனுபவிக்க வேண்டிய வயசிலே இப்பிடி அனாதையா
கெடக்குறே
“ என்று மட்டும் ஓரிரு முறை சொல்லி அங்கலாயித்துக்
கொண்டாள்
சிந்தாமணி.
சுற்றி கட்டப்பட்ட
காம்பவுண்டும் பாதுகாப்பாக இருப்பதாக ருக்மணியும்
சொல்லிக் கொண்டிருந்தாள்.அடுத்த வீடுகள் தங்களை மறைத்துக் கொண்டு
யானை போல் நின்றிருந்தன.
ஒரு நாள்
சமையலறையிலிருந்த வாணலி ஓட்டை விழுந்து
விட்டதாகச் சொல்லி வீட்டிற்கு வெளியே காமபவுண்டுக்குள் இருக்கும்
பூட்டிய
அறைக்குள் தேடச் சொன்னாள் சிந்தாமணி.
அந்த அறை பற்றி
ருக்மணியும் கேட்கவில்லை.
திறந்த போது அதில் தட்டு முட்டுச்
சாமான்களும் பாத்திரங்களும் இருப்பது தெரிந்தது.
“ ஒதுக்கி வெச்சா ஒரு
ஆள் தாராளமாகத் தூங்கலாம் போல
“ என்றாள் ருக்மணி.
அன்றைக்கு இரவு
சிந்தாமணி ருக்மணிக்கு அந்த அறையைத் திறந்து விட்டாள்.
அவள் கணவன்
வீட்டிலிருந்தான்.
“ காலையிலதா
சொன்னே. நானும் யோசிச்சுப் பாத்தேன்.
கேட்டுக்குப்
11.
பக்கம் படுக்கறது
அவ்வளவு பாதுகாப்பிலே.
அந்த ரூம்மே ஒழிச்சிசுப்
போட்டுட்டு
படுத்துக்க.. “
மகனிடமே,மோ,
மகளிடமோ தொலைபேசியில் பேசும் போது
சிந்தாமணி உற்சாகமாய் இருப்பதாய் சொன்னாள்.
ஓரளவு உடல் நலம்
தேறியிருப்பது
மாதிரியும் இருப்பதாகச்
சொன்னதை ருக்மணி கேட்டாள்.
ருக்மணி உதவி செய்வது பற்றிச் சொல்லவில்லை.
“ அந்த ரூம் எனக்கு ரொம்பவும் புடிக்கும் ருக்மணி.
இந்த வீடு கட்ட
ஆரம்பிச்சப்போ அந்த சின்ன ரூம்தா மொதல்லே கட்டுனோம்.
சிமெண்ட்
மூட்டைக்கு,
சாமான்க போடறதுக்குன்னு.
சின்னதா ஒரு கட்டல் அங்க
இருந்துச்சு.
அதுல நாங்க இருந்தப்போ
இருந்த சுகம் சொல்லி மாளாது.
அவ்வளவு சந்தோசமா இருந்துருக்கறம்.
அது ஒரு காலம்.
. எப்பவாச்சும்
அந்த ரூமைத் தொறந்துட்டு அவர்கிட்ட இங்க இருந்த கட்டில்பத்தி ஞாபகம்
இருக்கான்னு கேட்டிருக்கன்.
அவர் ஒண்ணும் கண்டுகிட்டதில்லே.
எனக்கு
சங்கடமா இருக்கும்
“ அதை பல முறைச் சொல்லி விட்டாள்.ருக்மணி
நமுட்டுச் சிரிபை உதிர்த்து விட்டுப்போவாள் அவள் சொல்கிற போதேல்லாம்.
அவள் கணவன் வேலை காரணமாக வீட்டில் இரண்டு மூன்று நாள் இருந்து
விட்டு பத்து நாட்கள் காணாமல் போய்விடுவான்.
அப்போதெல்லாம் வந்து
12.
போகும் உறவினர் தவிர
ருக்மணியே பெரிய துணையாக இருந்தாள்.”
அவர்
வேலை அப்படி
. சீக்கிரம் அதை தலை மூழ்கிவிடுவார் என்றும் சொல்வாள்
.” பையனுக்கும்,
பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு.
அம்பதும்
ஆச்சு
. இனி என்ன வேண்டிக் கெடக்கு.
போதும்ன்னு அவர் கூடச்
சொல்வார்.
ஆனாலும் மாப்பிளை மாதிரி திரியிறார்.
அவர் வேலை அப்பிடி.
நான் ஒண்ணும் அவருக்குப் பிரயோஜனம் இல்லாத மாதிரி நோயாளி ஜீவனா
கெடக்கேன் “ அவர் வேலை என்ன என்று
ருக்மணி கேட்டதில்லை.
அவர்
ருக்மணியிடம் வெளி ஊருக்குக் கிளம்பும் போதெல்லாம்
” அம்மாவுக்கு
மாத்திரைக மாத்திரம் கரைக்கிட்டா குடுத்துரு.
அது போதும்
” என்பார்.
அவ்வளவுதான் பேச்சு.
***********
அன்றைக்கு பனியன் கம்பனிகள் மூடப்பட்டிருந்தன..
சாயப்பட்டறைகளை மொத்தமாய் மூட நீதிமன்றம் ஆணையிட்டுருந்ததை
எதிர்த்து ஒரு நாள் பந்த்.
சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத சாயப்பட்டறைகள்
அவ்வப்போது மூடப்படுவது திறப்பதும் சகஜம்.
இந்த தரம் அப்படியில்லாமல் முழுச்சாய் மூடப்பட உத்தரவு.
கேட்டோரத்தில்
நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர் சிந்தாமணியும்,
ருக்மணியும்.
“ நீ வந்து ஒரு மாசத்திலெ நிலமெ எவ்வளவு மோசமாயிருச்சு பாரேன்.
13.
நிலமிமை சீராகும்ன்னு தோணலே.
ஊரே காலின்னு பேசிக்கறாங்க.
சாயப்பட்டறைக மொத்தமா மூடிட்டா அவ்வளவுதான்னு சொல்றாங்க.
“
கவலையுடன் தான்
படுக்கச் சென்றாள் ருக்மணி.நாலு நாளாய்
சிந்தாமணியின் கணவன்
வீட்டிலிருந்தான். மோகனப்பிரியாவையும்,
கிரிஜாவையும் தேடிப்போய் பார்க்கலாமா என்றிருந்தது ருக்மணிக்கு..ஊரே
காலியாகும் போது எதற்கு அவர்களைப் போய் பார்த்துக் கொண்டு என்ற
நினைப்பும் வந்தது.
********
ரொம்ப நேரம் தூங்கி விட்டது போலிருந்தது சிந்தாமணிக்கு.
மாத்திரை
எண்ணிக்கை அதிகமாயிருக்குமோ,
அல்லது வீரியமான புது மாத்திரையோ
என்றிருந்தது.
வாசலில் பெரிதாக எட்டுப்புள்ளிக்கோலம்
விரிந்திருந்தது.ருக்மணிதான் போட்டிருப்பாள்.
ருக்மணி தலைக்கு குளித்து
பொலிவுடன் இருந்தாள்.
நல்ல சேலையும்,
முகப்பூச்சும் அவளை
தேவதையாக்கிவிடும் என்ற நினைப்பு வந்தபோது தொண்டையில் ஏதோ
கசப்பாய் இறங்குவது போலிருந்தது.
காபி தயாரித்து கணவனிடம் தந்த போது அவன் முகம் நன்கு தூங்கி எழுந்த
14.
பொலிவுடன் மிளிர்ந்திருந்ததைக் கண்டாள்.அவனையே வெறித்துப் பார்த்தாள்.
அவன் பார்வைத்தவிர்த்து விட்டு
தொலைக்காட்சி அலைவரிசையை
மாற்றுவதில் மும்முரமாக இருந்தான்.
இனி ருக்மணியை
வீட்டில்
வைத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று முதல் முறையாக யோசிப்பு
வந்தது.
அதைத்தான் அன்றைக்கு நாள் முழுக்க
யோசித்துக்கொண்டிருந்தாள்.
*********
பக்கத்து வீட்டு விஜயா
ஊர் முழுக்க பனியன் கம்பனிகள்
மூடப்பட்டிருந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள்.அவள் பேசப் பேச் அழுகை வந்து விட்டது.
குரல் தளதளத்து விட்ட்து.
வெயில் தாழ்ந்து
ஒருவகை காற்று மெல்ல ஊடுருவிச் சென்றது.
அழுக்கடைந்த
வீட்டு
முன்வாசல் பற்றியும் பேச்சு வந்தது.
அசோக்குமார் கம்பனியும்
மூடிக்கிடந்தது.
ருக்மணி இருந்திருந்தால் இது மாதிரி
வாசல் குப்பையாய்
இருந்திருக்காது என்றாள்.விஜயா
” ஊரே காலிபண்டீட்டு போகுது.
பனியன் தொழில் சீராகணுமில்லே.
ருக்மணியும் கெளம்பிட்டா.
வேலையில்லாமெ வேத்து ஊர்லே எப்பிடி
15.
கெடக்கறதுன்னு
“ என்று சிந்தாமணியும் அவள் பங்கிற்குச் சொன்னாள்.
ருக்மணியை
கடைசியாகப் பார்த்தபோது அவள் முகம் இருந்த பொலிவு
பொறாமையைக் கிளப்பிக் கொண்டிருந்தது
இன்னும் சிந்தாமணிக்குள்..
= சுப்ரபாரதிமணியன்.,
8/2635 பாண்டியன் நகர்.,
திருப்பூர்
641 602.