சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 சுப்ரபாரதிமணியன் • உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. • இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல் அந்த ஊருக்குள் நுழைய முடியாது என்றார்கள். ஆனால் புல்வெளிகளும் கூட காய்ந்து கிடந்தன. புவிவெப்பயமாதலின் விளைவுதான் இங்கும் பாதிப்பாகியுள்ளதாகச் சொன்னார்கள். அது சார்ந்த விளக்கங்களுக்கு கடைசிப்பத்தியைப் பாருங்கள். உடனே அல்ல.. இக்கட்டுரையை மெதுவாகப் படித்து விட்டு ..மெதுவாகப் பாருங்கள் . • சிரபுஞ்சி என்றால் “ஆரஞ்சுகளின் நிலம்” என்று அர்த்தமாம். மெட்ராஸ் சென்னை ஆனதுபோல, கல்கத்தா கொல்கத்தா ஆனது போல மேகாலயா அரசும் சிரபுஞ்சியை பழைய பெயரான ஷோரா என்றே மாற்றியிருக்கிறது. சிரபுஞ்சியை ஒட்டியே வங்கதேச நாடு அமைந்துள்ளது. சிரபுஞ்சி ஷில்லாங்க்கிலிருந்து நோங்கரம் வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது. • தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும். • 2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1]. • 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. • காண்பதற்கே பயமுறுத்தும் வகையில் மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், காண்பதிலேயே தலை சுற்றச் செய்யும் நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் முழு பரப்பையும் நன்றாக காணத்தகும் முழுமையான காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பகுதி • சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது.இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. சராசரியாக வருடத்திற்கு 180 நாட்கள் சிரபுஞ்சியில் மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை. இரவில்தான் அதிக மழை பெய்வதால், பகலில் அடைமழை கூட . • நோகலிகை நீர்வீழ்ச்சி: இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுவாகும். அதிக அளவு நீர் வரத்து காரணமாக நீர் வீழ்ச்சி பிரம்மாண்ட மாக காட்சியளிக்கும். அருகில் உணவு விடுதிகளில் உள்ளூர் காஸி உணவு வகைகள், வடக்கு மற்றும் தெற்கு இந்திய உணவு வகைள் கிடைக்கின்றன. • நோக்காலிகாய்(Nohkalikai) அருவி. உலகின் நான்காவது பெரிய அருவி. 1115 அடி உயரம் கொண்ட அருவியில் குளிக்கவெல்லாம் முடியாது. தூரத்திலிருந்து தரிசனம் மட்டுமே. ஆனால், அதுவே எல்லையில்லா ஆனந்தம் தரவல்லது. இந்த அருவிக்கும் ஒரு கதை இருக்கிறது. நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அருவியை மறக்காமல் இருக்கவும், ஷோரா வந்தவர்கள் இந்த அருவியைப் பார்க்காமல் போகவும் விடாத கதை. • லிகாய் என்பது அந்தப் பெண்ணின் பெயர். திருமணமாகி ஒரு குழந்தையும் அவளுக்கு இருந்திருக்கிறது. திடீரென அவள் கணவன் இறந்துவிடுகிறான். லிகாய் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறாள். புதிய கணவன் குழந்தையையும் அவளையும் நன்கு பார்த்துக்கொள்கிறான். சில நாள்களில் அவன் சுயரூபம் தெரிகிறது. அவளை வேலைக்குச் செல்லுமாறு அடிக்கிறான். அந்தப் பணத்தில் வாழ்கிறான். ஒருநாள் வேலையிலிருந்து வீடு திரும்புகிறாள்; வீட்டில் இருவரையும் காணவில்லை. ஆனால், மேஜையில் உணவு தயாராக இருந்திருக்கிறது. களைப்பாக இருந்த அவளுக்கு பசித்தது. உணவை சாப்பிடுகிறாள். சாப்பிட்டபின் வெற்றிலைப் போட கூடையை எடுக்கிறாள். உள்ளே அவள் மகளின் கைவிரல் துண்டாக கிடக்கிறது. நல்லவன் போல் நடித்தவன் குழந்தையைக் கொன்று, அதை சமைத்தும் வைத்திருக்கிறான். தன் மகளை தானே தின்றுவிட்டோமே என்ற சோகத்தில் லிகாய் அருகிலிருக்கும் அருவியில் குதித்து உயிரை விட்டிருக்கிறாள். அந்த இடம் தாம் நோக்காலிகாய் அருவி. குதிப்பது என்ற அர்த்தம். லிக்காய் குதித்த இடம்.- விகடன் வாசகர் .விஜயா இதைப்பகிர்ந்து கொண்டார். • மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி: மேகாலயாவின் கண்கவர் நீர் வீழ்ச்சிகளில் ஒன்று ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகள் இணைந்து இந்த நீர்வீழ்ச்சி ஓடுகிறது.சூரியனிலிருந்து வரும் ஒளி இங்கு பிரதிபலித்து மிகவும் வித்தியாசமானதாக காட்சியளிக்கும் கைன்ரெம் நீர்வீழ்ச்சி: கைன்ரெம் நீர்வீழ்ச்சி சோஹ்ராவின் மலைகளில் இருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது.அருகாமையில் பாயும் மற்ற அருவிகளை இணைத்துக் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சியை, மழைக்காலத்தின் போது கட்டாயம் காண வேண்டும். • . நோங்சாவ்லியா: நோங்சாவ்லியா சிரபுஞ்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.வட கிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயம் இங்குதான் அமைக்கப்பட்டது ஈகோ பூங்கா: • மேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஈகோ பூங்காவைச் சுற்றிலும் அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும் கொண்டது ஆகும்.சுற்றுலாப் பயணிகள் மலைகளிலிருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளை கண்டு களிக்கும் வண்ணம், உயரமான மேட்டு நிலங்களுள் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. • பூங்காவைப் போல் இங்கு வருகிறவர்கள் விவேகானந்தா மடத்திற்கும் செல்கிறார்கள் .1924-ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தரின் சீடர்களுள் ஒருவரான கேதகி மஹாராஜ் என்பவர் காசி மக்களின் முன்னேற்றத்திற்காக, ஷெல்லா கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடமும் ஒரு சுகாதார மையமும் ஆரம்பித்தார். ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி தொடர்ந்து காசி மலைப் பகுதி கிராமங்களில் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கே கல்வி நிறுவனங்கள், சுகாதார மையம், ஆஸ்ரமம் என பலவும் தொடங்கப்பட்டது. சிரபுஞ்சியில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் 1934-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. • • கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அங்கே ஒரு சிறிய அருங்காட்சியகமும் உண்டு. அங்கே சென்று காசி பழங்குடி மக்களின் பாரம்பர்யம், அவர்களது நடவடிக்கைகள் ஆகிய பற்றிய காட்சிப்பொருட்களையும், ராமகிருஷ்ணா மிஷன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் கண்டோம். அங்கேயும் சில கடைகள் உண்டு. அப்பகுதி மக்கள் தங்கள் கைவினைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள் என்பதை தில்லி வெங்கட் பகிர்ந்து கொண்டார்.. • சிரபுஞ்சியானது வங்கதேசத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடிய இந்திய எல்லையோரப் பகுதி. மேகாலயா மாநிலத்தில் எல்லையோரத்தில் அமைந்திருக்கிறது. வங்கதேசம் தரைப்பகுதியாக இருக்கும். சிரபுஞ்சியில் இருந்தே வங்கத்தேசத்து சமவெளியை பார்க்க முடியும். வங்காள விரிகுடா கடலில் இருந்து எழும் குளிர்காற்று மேகங்கள் தவழ்ந்தோடும் மேகலாயாவின் சிரபுஞ்சி மீதுதான் முதலில் மோதுகின்றன. இதனால்தான் அங்கு மழைபொழிவு உலகிலேயே அதிகமாக இருந்து வருகிறது. • 1973-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரைக்கும் சிரபுஞ்சியின் சராசரி மழை அளவானது 11,820.8 மில்லி மீட்டராக இருந்து வருகிறது. இருப்பினும் 2010-ம் ஆண்டு 13,472.4 மில்லி மீட்டராக இருந்த ஆண்டு மழைப் பொழிவானது 2011-ம் ஆண்டு கணிசமாகக் குறைந்து 8732.2 ஆக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு 9069.9 ஆக பதிவாகி இருந்திருக்கிறது.இது இப்போது இன்னும் குறைந்துள்ளதாம் • சிரபுஞ்சியில் ஒரேநாளில் 471.7 மி.மீட்டர் மழைபெய்து உள்ளது. ஒரேநாளில் அதிகபட்ச மழைப்பொழிவு என்ற கடந்த 10 ஆண்டு சாதனையை சிரபுஞ்சி உடைத்தது.10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது சிரபுஞ்சியில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 12,000 மில்லி மீட்டராக பதிவாகிறது. சிரபுஞ்சி காசி மலைப்பகுதியின் தென்சரிவில் அமைந்து இயக்கை எழிலை தன்னுடனே கொண்டு உள்ளது. சிரபுஞ்சியில் கடந்த 1974-ம் ஆண்டு, 24,555 மி.மீ. பெய்ததே, ஒரு ஆண்டில் பெய்த அதிகப்பட்ச மழைப்பொழிவு ஆகும். சிரபுஞ்சி கடல்மட்டத்தில் இருந்து 1,290 மீட்டர் உயரத்திலும் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. மேகாலயாவிலும் வழக்கத்திற்கு மாறாக அதிகப்பட்சமாக கடந்த செவ்வாய் அன்று 100.4 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகிஉள்ளது. . இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இந்த சிரபுஞ்சியில் இன்று வறட்சி நிலவுகிறது, இயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளுக்கு உலகிற்கே மழைக்களஞ்சியமாக விளங்கிய ஒருகாலத்து பசுமை சிரபுஞ்சி இன்று காய்ந்துபோன வறட்சி பூமிக்கு உதாரணமாக திகழ்கின்றது, மழை இப்படி மீட்டர் கணக்கில் கொட்டும் போது மக்களின் தாகத்தை தனிப்பதற்கு ஒரு துளிகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அலைகிறார்கள். இதற்கு எல்லாம் மூலகாரணம் அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதுதான், முன்னொரு காலத்தில் சிரபுஞ்சியை சுற்றிலும் இருந்த மலைகளில் அடர்ந்த காடுகள் இருந்தன, அதிகமாக பெய்த மழையால் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருந்தன இங்குள்ள காடுகள், காடுகளில் இயற்கையாகவே கொட்டிக்கிடந்த இலை தழைகள் சிறிது சிறிதாக பெய்யும் மழை நீரை பூமிக்குள் அனுப்பி வைத்தன, இந்த செயல் தொடர்ந்தும், பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தன, ஆனால் சமீபகாலமாக கண்மூடித்தனமாக காட்டுமரங்கள் அளவுக்கு அதிகமாக வெட்டி சாய்க்கப்பட்டன, இலை தழைகளால் மூடப்படாமல் கட்டாந்தரையில் படிந்து கிடந்த வளமான மேல் மண் கனமாக பெய்யும் மழையால் அடித்து செல்லப்பட்டு வருகின்றன. , அதனால் சிரபுஞ்சியில் இருக்கும் மலைச்சரிவுகள் பாலைவனங்களாக காட்சி தருகின்றன, போதாகுறைக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பது போல இங்குள்ள காடுகளில் சுரங்கங்கள் தோண்டுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள், இந்த சுரங்கங்களில் நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லும் வெட்டி எடுக்கப்படுகின்றன, இதனால் தூசுக்கள் நிறைந்த காற்றை இங்குள்ள மக்கள் சுவாசிக்கிறார்கள், ஒடிவந்த மழைநீரை முன்பெல்லாம் தேக்கி வைப்பதற்கு நீரை சேமித்துவைக்கும் வசதிகள் இங்கு கிடையாது, கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கு வசிக்கும் மக்கள் பல செ.மீ மழை பெய்தாலும் அதை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை . கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அலைந்த கதையைப் போலாகிவிட்டது சிரபுஞ்சியின் அமைப்பு. இங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறையும் தான். காடுகள் முன் யோசனையின்றி அழிக்கப்படுவதால் சிரபுஞ்சியில் பெய்யும் மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, காடுகள் அழிக்கப்பட்டால் பொங்கி எழும் உணர்வு நம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்பட வேண்டும், காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதால் பெய்யும் மழையின் அளவும் குறைகிறது., சிரபுஞ்சிக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைமை பூமி முழுவதற்குமே இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது, நாளை ஒரு நாள் சிரபுஞ்சி போல மழை என்றால் என்ன என்பதற்கு விடையாக வருங்கால சந்ததிகளுக்கு அதையும் இணையதளத்தின் வழியாய் காட்ட வேண்டிய ஒரு கேடு கெட்ட நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். எச்சரிக்கை, அதற்கு முன்னால் இந்த பூமியின் மொத்த இயற்கை வளங்களுக்கும் சொந்தக்காரன் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாம் விழித்துக்கொண்டால் பிழைத்தோம். இல்லை என்றால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் பாலுட்டிகள் குடும்பத்தில் சீக்கிரத்திலேயே மற்ற உயிரினங்களோடு மனிதன் என்ற ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனமும் சேர வேண்டியிருக்கும் என்று பசுமை இந்தியா அமைப்பின் ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி இடத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. . இதற்கு வளிமண்டல மேலடுக்கு தான் காரணம். கூடுதலாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், கனமழை எல்லா இடங்களிலும் கொட்டி தீர்த்துள்ளது. நீலகிரி மாவாட்டத்தில் உள்ள அவலாஞ்சி பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இங்கு எப்போதும் பருவமழை காலங்களில் மழை அதிகமாக பெய்யும். இந்த ஆண்டு மிகவும் அதிகமாக மழை பெய்துள்ளது. பதிவாகி உள்ளது. அதிகப்படியான மழை பெய்துள்ளதால், “தமிழகத்தின் சிரபுன்ஞ்சி”என்று ஆனது, அவலாஞ்சி. இது ஒரு நீர்ப்பிடிப்பு பகுதி அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. • சிரபுஞ்சியில் நிலவி வரும் சீரற்ற மழைப் பொழிவானது மற்றும் மழை இல்லாமல் போவது புவிவெப்பயமாதலின் விளைவு என்ற போதும் அங்கிங்கெணாதபடி தொடரும் பசுமை வேட்டையைத் தடுத்தால்தான் சிரபுஞ்சியின் புகழைத் தக்க வைக்க முடியும் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள். • அதிக மழைப்பொழிவு ஊரிலிருந்து ஒரு சொட்டு மழையைக் கூட உணராமல், மழை பெய்து கிளம்பும் மண் வாசனையை உணராமல் திரும்ப வேண்டியிருந்தது. 00000
வடகிழக்கு இந்திய பயணம் 7 சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு உடை இல்லாததால் உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . 9டிகிரி சி யில் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.குளிர் மட்டுமா நம்மைப் பிரிக்கிறது , எல்லைப் பிரச்சினை எப்போதும் இங்கு மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்றார் வாகன ஓட்டுனர். மேகாலயா எல்லைப்பிரச்சினை சக மனிதர்களையும் இடம் பெயர்ந்தவர்களையும் கூறு போட்டுத் தனியே பிரித்து வைத்திருப்பதையும் நான் மொழிபெயர்த்த சாகித்ய அகாதமி வெளியிட்ட “ பூமியின் பாடல்கள்” நூலில் மூன்று கதைகள் வெளிப்படுத்துகின்றன அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது. இவர்களுக்கான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அஸ்ஸாம், மேகாலயா முதல் அமைச்சர்களைக்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நடத்திய மாநில எல்லைகள் சார்ந்த பிரச்சினைகள் பற்றியச் செய்திகளை அங்கிருக்கும் போது பத்திரிக்கைகளில் படித்தேன். காங்கிரஸ் கட்சியினரும் மேகலாயா அரசாங்கம் எல்லைப்பிரச்சினைகளைப் பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது . அதைக்கண்டிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டிருந்த்தைக் காண முடிந்தது. கொரானா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு இந்த மாநிலங்களில் இடம் பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதையும் அவர்களின் அடையாளங்கள்- அடையாள அட்டைகள், உரிமங்கள் சார்ந்து- எதுவுமில்லாமல் இருப்பதையும் கண்டித்தும் குரல்கள் எழுப்பியதைப்பார்க்க முடிந்தது. உக்ரேனிலிருந்து போர் சூழலில் தப்பித்து வந்த இரண்டு மாணவர்கள் கவுகாத்தி வருவதற்குப் பணமின்றி சிரமப்பட்டுக்க்கொண்டிருப்பதாக சில செய்திகள் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தன.நாங்கள் அங்கிருந்த மார்ச் மாத்த்ஹ்டின் இரண்டாம் வாரம் வரி சுமார் 110 பேர் உக்ரேனிலிருந்ஹ்டு தப்பித்து வந்து ஊர் சேர்ந்திருந்தார்கள் . கடைசியாக வந்தவர்கள் டெல்லி, காசியாபாத்தில் அடக்கலமாகியிருப்பதையும் அஸ்ஸாம் வர அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதையும் செய்திகள் சொல்லின. உக்ரேனில் சாப்பாட்டு வசதியில்லாமல் குண்டு போடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தவர்கள் தங்கள் நிலைகளை வீடியோ மூலம் சமூக ஊடகங்களுக்குத் தர அவர்கள் வெளியேற சமூக ஊடகங்கள் உதவியதை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் டெல்லி, காசியாபாத் கூட அவர்களுக்கு நெடுந்தொலைவு ஆகி விட்டது பொதுவாகவே, வடகிழக்குப் பிராந்தியம் மலைப் பாங்கானதால் சாலைப் பயணம் சிரமமானது. தூரம் குறைவாய் இருந்தாலும் மலைப் (மழைப்?) பாதையில் நேரம் அதிகம் எடுக்கும். தவிர, மேற்கு வங்கத்தில், உதாரணமாக, கொல்கத்தாவிலிருந்து சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால், இடையில் பெருமளவுக்கு வங்க தேசம் வந்து விடுகிறது. எனவே நீங்கள் மிகவும் சுற்றித்தான் குவாஹாத்தியை அடைய முடியும்.இவற்றை விட மிக எளிதானது, சிக்கனமானது விமானப் பயணம் என்று முன்பே முருகன் வேம்பு தெரிவித்திருந்தார். நியூஜல்பைகுரி…அப்புறம்…கவுஹாத்தி..திமாபூர்..நியூடின்சுகியா.அத்தோடு இந்தியா பார்டர்.ஒரே இரயில் செல்லும் பாதை (கிழக்கு-மேற்காக) தவிர மற்ற அனைத்தும்(வடக்கு, தெற்கு)மலைப்பிரதேசங்கள் வளைந்து வளைந்து சாலை செல்லும்.ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலையில்…ஏற வேண்டும். பொழுதுபோக விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு….. சாலை போடுவது, பராமரிப்பது கடினம். இரண்டு சமயங்களிலும் அதிக நேரம் காத்திருந்து செல்லவேண்டும். ஆனால் இயற்கையின் அழகை ரசிக்க இதை விட அருமையானச் சந்தர்ப்பம் கிடைக்காதல்லவா. மேகாலயா : 30 லட்சத்திற்கும் கீழ் தான் இங்கு மக்கள் தொகை. பேசப்படுகிற மொழி காசி மற்றும் காரோ. இங்கு ஒரு 1% மக்கள்தான் ஹிந்தி பேசுகிறார்கள். சிறப்புஞ்சி இந்த மாநிலத்தின் சிறப்பம்சம். இம்மாநிலத்தின் ஒரு சிறப்பு மனிதரைப் பற்றி கண்டிப்பாக கூற வேண்டும் அவர் பெயர் ராம் சிங் இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவர் தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்கிக்கொள்வார் தன் தேவைக்கேற்ப. கூடவே நாட்டிற்கு தேவையான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்கிறார். சிறிய மாநிலங்களின் சாபக்கேடு என்னவென்றால் மத்திய அரசின் கவனத்தை அவர்களால் ஈர்க்க முடியாது. காரணம் அவர்களின் ஓட்டு வங்கி மிக மிக குறைவு. பெரிதான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு விளையாட்டு வீரர்களும், கலைத்துறை சார்ந்தவர்களும் அங்கு வளர்வது அரிது. வடகிழக்கு மாநிலங்களில் பெரிய பலவீனம் அவர்களுக்கு துறைமுகங்கள் கிடையாது. அதனாலேயே பெரிய தொழிற்சாலைகள் ஏற்றுமதிக்கு ஏதுவாக இருப்பது இல்லை. அதனால் விவசாயத்தை மட்டும் நம்பி அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறப்பான சீதோசன நிலை எப்போதும் அங்கு காணப்படுகிறது. அதனால் சுற்றுலாத்துறை அங்கு சிறப்பாக செயல்படுகிறது. மெத்த படித்தவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களில் குடியேறும் அவலநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், இது போல் உள்ள சிறிய மாநிலங்களில். லாட்டரி சீட்டு நாடு முழுதும் தடை செய்யப்பட்டாலும் 13 மாநிலத்தில் இன்றும் லாட்டரி தொழில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த 13 மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. செந்தில்நாதன் அவர்கள் தெரிவித்த தகவலையொட்டி லாட்டரி சீட்டு வாங்கி விடுவது , அதிஷ்ட்த்தைப் பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் லாட்டரி சீட்டுகள் கண்ணில் படவில்லை • எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் மேகங்களின் ஆலயம் 'மேகாலயா" என அழைக்கப்படுகிறது. • மேகாலய மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழி பேசப்படுகிறது. • மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. • 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. • பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். • மேகாலயாவின் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. • மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. தகவல் தந்த அஜய் சாய்க்கு நன்றி 0 பிரம்மபுத்திரா ஆறு (Brahmaputra River) 2900 கிலோ மீட்டர்கள் பிரம்மபுத்ரா ஆறு சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் வழியாக பாய்கிறது. திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் ஆரம்பித்து நாம்சா- படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு சேர்ந்து மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 2900 கிலோ மீட்டர். பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை பல படகுப் பயணங்களில் கண்டேன் . எங்கு போனாலும் அக்ண்ணில் படும் அதன் அழகு மன்திற்கு இதம் தருவது. அது தரும் வெள்ளம், அழிவு சார்ந்த விசயங்கள் மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை கவிதைகளால், ஓவியங்களால் சரியாகச் சொல்லி விடமுடியும் வங்கதேசத்தின் எல்லை ஓரத்தில் இது தூய்மையானதாக ஓடி வியப்புகளை அள்ளி வழங்குகிறது வடகிழக்கு இந்தியப் பயணம் : 8 சுப்ரபாரதிமணியன் ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும் போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார். சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாக அது இருக்குமாம்.. இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு செல்ல வேண்டாம். இந்தியாவிலே செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா ஷில்லாங்கில் நடைபெறுகிறது. சமீபமாய் சில ஆண்டுகளாய் இந்தியாவில் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் செர்ரி பூக்கள் அபரிமிதமாய் பூத்து அழகு தருமாம்..வழக்கமாய் செர்ரி மரங்களைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெறும் சமயத்தில் மேகாலயாவின் விசேசமான உணவு வகைகள் கிடைக்கும் அவற்றில் அரிசி உணவு ஜடோ, நகாம் பிச்சு சூப், அசைவ சாலட் டோலி, அசைவ உணவு துங்கிரிம்பை ஆகியவை முக்கியமானவை மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை (74.59 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் (0.32 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர். இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது.வட்டார மொழிகளோடு வட்டார உணவுகளும் முக்கியம் \வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மட்டுமல்லாமல் உணவு வகைகளும் உணவு முறைகளும்கூட இந்திய பெருநிலத்திலிருந்து வேறுபட்டவை. மேகாலயா மாநிலம் அளவில் சிறியது என்றாலும் தனக்கென தனித்த உணவு முறைகளைக் கொண்டது. மேகாலயா மக்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தவர்களாகவே உள்ளனர். மலை மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள மேகாலயாவில் வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது. அரிசி, சணல், இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, மிளகு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றன. பழத்தோட்டங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் மேகாலயாவில் அதிகம் காணப்படுகின்றன. அரிசி, மீன் மற்றும் இறைச்சிகள் மேகாலயா மக்களின் முதன்மையான உணவுகள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். இவை இல்லாமல் சோளம், கிழங்கு மற்றும் சிறுதானியங்களையும் விரும்பி உண்கின்றனர். மேகாலயாவில் உள்ள வெவ்வேறு இன மக்களின் உணவு முறைகளின் அடிப்படையில், அவர்களின் உணவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கரோ, காசி மற்றும் ஜெயின்டியா. கரோ வகை உணவுகள் சமைப்பதற்கு மிகவும் எளிமையானவை. காய்ந்த மீன் கொண்டு தயாரிக்கப்படும் நகாம் பிட்சி மிகவும் புகழ்பெற்ற கரோ வகை உணவாகும். அரிசியினால் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான உணவுகள் காசி என அழைக்கப்படுகின்றன. ஜடோ, ஜஸ்டெம் ஆகியவை பிரபலமான காசி உணவுகள். காளானில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், ஜெயின்டியா எனப்படுகின்றன. ‘டிட் துங்’ மேகாலயாவில் விரும்பி உண்ணப்படும் ஜெயின்டியா வகை உணவு. சாதத்தை புளிக்கவைத்து தயாரிக்கப்படும், கியாத் எனும் பானம் மேகாலயாவில் மிகவும் பிரபலம். மேகாலயாவில் உள்ள காசி எனும் குறிப்பிட்ட சமூகத்து மக்களால் தயாரிக்கப்படும் அரிசி உணவு ஜடோ. அரிசி, இறைச்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிகுந்த காரத்துடன் ஜடோ உணவு சமைக்கப்படுகிறது. மேகாலயா செல்பவர்கள் ஜடோ உணவை சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். இந்த உணவு பிரியாணியின் சுவைச் சாயலைக் கொண்டது. ஆனால் பார்ப்பதற்கு பிரியாணியைவிட ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். மேகாலயா மக்களின் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களை கியாத் பானம் இல்லாமல் பார்க்க முடியாது; முழுமையும் பெறாது. அந்த அளவுக்கு அவர்களின் வாழ்வோடு ஒன்றியது மேகாலயா கியாத். சோற்றைப் புளிக்கச் செய்து அதிலிருந்து கியாத் பானம் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சுவைகள் மற்றும் பிளேவர்களில் தயாரிக்கப்படும் இந்தப் பானத்தை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் விரும்பி அருந்துகின்றனர். மற்ற மேகாலயா உணவு வகைகளைவிட நகாம் பிட்சி சூப்பை தயாரிப்பது மிகவும் எளிதானது. மேகாலயாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த சூப், நன்றாக சாப்பிட்ட பின்பு அருந்த வேண்டியது. நகாம் பிட்சி சூப், காய்ந்த மீன் (கருவாடு) கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக மீன்களைத் தேர்ந்தெடுத்து காய வைக்கின்றனர். அதிக அளவு காரம் சேர்த்து மிகவும் சுவையாக இந்த சூப் தயார் செய்யப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற அசைவ சாலட் டோக்லி. இறைச்சி, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து இந்த சாலட் தயார் செய்யப்படுகிறது. சருமத்துக்கு நன்மை தரக்கூடியது என நம்பப்படுவதால், டோக்லி மீது ஈர்ப்பு அதிகம். பீன்ஸ், தக்காளி, கேரட் ஆகியவற்றையும் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்து பதமாகத் தயாரிக்கப்படும் உணவு என்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. மேகாலயாவில் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் புகழ்பெற்ற அசைவ உணவு, துங்கிரிம்பை. இறைச்சி, பீன்ஸ் மற்றும் எள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு, உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. இறைச்சி, பீன்ஸ் இரண்டையும் வேக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து, அதை அரைத்து எடுத்துக்கொண்டு, வேக வைத்துள்ள பீன்ஸ் உடன் சேர்த்து, கடைசியாக இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இஞ்சி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். ( விக்கிபீடியா/ இணைய தள தகவல்கள்) எங்கள் குழுவில் மூன்று சமையல் பணியாளர்கள் கோவையிலிருந்து கூட வந்திருந்தனர். ( அதில் ஒருவர் முதல் விமானப் பயணம் என்பதால் கையில் வைத்திருந்த பையில் கரண்டி, கத்தி உட்பட பல சமையல் சாமான்கள் இருக்க ஸ்கேனரில் சோதித்த விமான நிலைய அதிகாரிகள் அலறி விட்டனர். விமானத்திற்குள் நுழைய அதனால் தாமதமாகி விட்டது) அவர்கள் சமைக்கும் சமையலில் வீட்டுச்சமையல் தன்மை இருக்கும்.வயிறு கெடாமல் இருக்கும். காலையில் பேருந்து கிளம்பும்போதே மதியம் உணவும் தயாரிக்கப்பட்டு நாங்கள் செல்லும் வாகனத்திலேயே வந்து விடும். சில இடங்களுக்குச் செல்லும் போது சமையல் பொருட்கள், பாத்திரங்கள் என்று சகலத்தையும் கொண்டு செல்வோம் .சமைப்போம். அப்படி நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு சென்று போது அங்கு சமைத்து உண்ணலாம் என்றத்திட்டம் சாலை சிரம காலதாமதத்தால் சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் என்ற திட்டத்திலிருந்து நழுவி வெறும் ரசம், கத்திரிக்காய் பொறியல் . அப்பளம் என்ற அளவில் சுருங்கி பசிக்கு அமிர்தமாக இருந்தது. அதனால் மேகாலயாவின் உணவுகளை ஆசைக்குத் தேடிப் போய் உண்ண வேண்டியிருந்தது. கண்ட இடத்தில் மேய வேண்டியிருந்தது. அப்படி கொஞ்சம் மீனும், துங்கிரிம்பையும் எனக்குச் சுவைக்கக் கிடைத்தன.
வடகிழக்கு இந்தியப் பயணம் :6 சுப்ரபாரதிமணியன் கவுகாத்தியில் தங்கியிருந்த ஹோட்டல் பிரின்ஸ் நகரத்தின் முக்கியமான நேரு விளையாட்டரங்கம் அமைந்த வீதியில் இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களின் காலை நடை சற்று தாமதமாகத்தான் ஆரம்பித்தது. முக்கிய வீதி . மிதமானத் தாங்கிக்கொள்கிற குளிர்தான் . ஆனால் நடமாட்டம் குறைவாக இருந்தது . இரண்டு கி மீ நடந்தும் எந்தக்கடையும் திறக்கப்படாமல் இருந்தது ஆச்சர்யப்படுத்தியது. அதுவும் தம் டீ கடைகள் கூடத் திறக்கப்படவில்லை. நகராட்சி துப்புறவுத்தொழிலாளர்கள் வந்து காத்திருக்கும் வண்டிகளில் ஏறி பயணப்படுவதைக்காண முடிந்தது. “ கவுகாத்திக்கார்ர்கள் , பொதுவாக அசாமியர்கள் சோம்பேறிகள் ”என்றார் கூட வந்த நண்பர் இந்த விசயத்தை விடுதிக்காரர் காதில் போட “ அப்படியெல்லாம் இல்லை . குளிருக்கு தங்களை இதமாக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் “ என்றார் அப்போது அவருடன் இருந்த ஒருவர் குளிருக்கு நம்மை இதமாக்கிக் கொள்ள அரசாங்கமே அரை நாள் விடுமுறை தரப்போவதாகச் சொன்னார் அது என்ன காஷ்மீர் பைல்ஸ் படம் வெளியாகப் போகிறது . அதைப் பார்க்க அரை நாள் விடுமுறையை அரசு ஊழியர்களுக்கு அரசு தருகிறது. படத்தைச் சாக்காக வைத்து குளிரை விரட்ட பாரில் நேரம் செலவிடலாமே அப்படி அரசை ஏமாற்ற முடியாது.பார்த்த பட டிக்கெட்டுகளை கொடுத்தால் மட்டுமே விடுமுறை அங்கீகரிக்கப்படும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா படம் பார்க்கத் தயாராகிக்கொண்டிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்லின. அதே தினத்தில் அவர் செய்தித்தாளிதந்த இன்னொரு செய்தி கவனத்திற்குறியதாகியிருந்தது,அசாம் மாநிலஅமுஸ்லீமக்களை சிறுபான்மையினராகக் கருதஅமுடியாது. அவர்கள் மாநிலத்தில் 35 சதவீதமான மக்கள் தொகை கொண்டவராகிவிட்டனர்.காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகள் அங்கிருந்து விரட்டப்பட்டதைப் போல தங்களுக்கும் நேருமா என்று அச்சத்துடன் கேட்கின்றனர் . முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக நடந்து கொண்ட காஷ்மீர் மாதிரி நடக்காது என்று உறுதியளித்து அவர்களில் அச்சத்தை போக்குவோம் என்று சொல்லியிருந்தார். இனி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ப்ற்றி.. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ள நிலையில், அந்தப் படத்திற்கு நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து இருப்பதுடன், பாஜக ஆளும் மாநி லங்களில் அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, படத்தைப் பார்ப்ப தற்காக அரசு ஊழியர்களுக்கு விடு முறையும் வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவு நடிகர்களான அனு பம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கர வர்த்தி, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஹிந்திப் படம்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. சுமார் 3 மணி ஓடும் இந்தப் படத்தை விவேக் அக்னி ஹோத்ரி இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 26- குடியரசுத் தினத்தன்றே வெளியிடுவதற்கு திட்டமி டப்பட்டிருந்த இந்தப் படம், ஒமைக்ரான் பரவல் காரணமாக தடைப்பட்டு, தற் போது மார்ச் 11 அன்று நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியாகி யுள்ளது. இந்தப் படத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் துவங்கி பாஜக வினர் அனைவரும் கொண்டாடி வரு கின்றனர். தியேட்டர்களில் தங்கள் செல வில் சிறப்புக் காட்சிகளையும் நடத்தி வரு கின்றனர். ஆனால், வரலாற்றைத் திரித்து, முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் பான்மை இந்துக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் தீய நோக் கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருப்ப தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காஷ்மீரைச் சேர்ந்த மாணவர், தாத்தாவுடன் தில்லியில் வசித்தவாறே ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தன்னுடைய பெற்றோர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக, தாத்தா தெரிவித்ததை நம்பி வருகிறார். தன்னுடைய ஜேஎன்யு ஆசிரியை ராதிகா மேனன் கூறுவதையும் அப்ப டியே நம்புகிறார். எனினும், தாத்தாவின் இறப்புக்குப் பிறகு அவரின் அஸ்தி யைக் கரைக்க, காஷ்மீர் செல்லும் மாண வருக்கு வேறோர் உலகம் விரிகிறது. தனது பெற்றோர் வன்முறையில் கொல் லப்பட்டதை அறிந்துகொள்கிறார். அந்தக் கல்லூரி மாணவனின் பய ணமே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் கதைச் சுருக்கம் என்று கூறப்படுகிறது. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980-களின் பிற்பகுதியிலும் 90-களி லும் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறி யதன் பின்னணியை கதைக் களமாக வும், அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவும் கொண்டே ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை எடுத்தி ருப்பதாக அதன் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவிக்கிறார். ஆனால், “முஸ்லிம்கள் காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்றதாகவும், அவர்கள்தான் பண்டிட்டுகளை வெளி யேற்றியதாகவும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் சித்தரிக்கிறது; 90-களில் காஷ்மீ ரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே கொடூரமாக கொலை செய்யப்பட்டது போல் காட்டு கிறது; வரலாற்றின் ஒருபக்கத்தை மட்டுமே காட்டி, முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் வன்முறையை தூண்டுகிறது. இதுதான் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது சரிதான் என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது; நாட்டின் முற்போக்கான கல்வி நிறுவனமான கருதப்படும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்தும் படத்தில் தவறாக சித்தரிக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின்போது உயிரி ழந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி, தன்னுடைய கணவர் குறித்து படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நிலையில், சம்பந்தப்பட்ட வீரரின் குறித்த காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏராளமான சர்ச்சை களுக்குள் சிக்கியிருக்கும் படத்திற்குத் தான் பிரதமர் நரேந்திர மோடி நாடா ளுமன்றத்திலேயே பாராட்டு தெரி வித்துள்ளார். `கருத்து சுதந்திரத்தின் பெயரால் குரல் எழுப்பும் மொத்த ஜமாத்தும் கடந்த 5, 6 தினங்களாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திரைப்படத்தை அதன் தகவல்களுக்காகவும், கலைக்காகவும் விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, அதனை அவமதிக்க சதித் திட்டம் உரு வாகி வருகிறது’ என்று பேசியுள்ளார். மேலும், “இந்தத் திரைப்படம் சரியானது அல்ல’ என நினைப்பவர்கள் தாங் களே சொந்தமாகத் திரைப்படம் இயக்க வேண்டும். அவர்களை எது தடுக்கிறது? இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மறைத்து வைத்திருந்த உண்மை வெளியே வந்திருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்துக்கு பாஜக ஆளும் உத்த ரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரி யானா, குஜராத், கர்நாடகா, உத்தர கண்ட், கோவா, திரிபுரா மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அசாம் மாநில பாஜக அரசு, ஒருபடி மேலே சென்று, தனது மாநில அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அரை நாள் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. படத்தைப் பார்த்து, மறுநாள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளது( தீக்கதிர் ) 0 தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற் கான மோடி அரசின் ஆக்ரோஷ மான பிரச்சாரம், பழைய காயத்திற்கு மருந்திடாமல், சமூகப் பிரிவினை யைத் தூண்டுவதாக உள்ளது என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வ ரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறி யுள்ளார். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியதை யும், தீவிரவாதிகளின் எச்சரிக்கை யைத் தொடர்ந்து பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறிய சம்ப வங்களையும் அடிப்படையாக கொண்டு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால், படம் எடுக்கப்பட்ட வித மான முஸ்லிம்களுக்கு எதிராக, இந்துக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதாக உள்ளது என்று விமர்ச னங்கள் எழுந்துள்ளன. தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிர லுக்கு உதவியாக இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்கள் இந்தப் படத் திற்கு வரிவிலக்கு அளித்திருப்பது டன், இலவசமாக படத்தை திரை யிட்டுக் காட்டி, மதவெறியைத் தூண்டி வருகின்றனர். பிரதமர் மோடி படக் குழுவினரை நேரடியாகவே அழைத்துப் பாராட்டியதோடு, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜக மாநில முதல்வர்களும் இப்படத்துக்கு ஆத ரவாக பிரச்சாரம் செய்து வருகின்ற னர். இந்நிலையில், இப்படத்தின் மூலம் பாஜக பிரிவினையைத் தூண் டுவதாக ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை ஒன்றிய அரசு ஆக்ரோஷமாக ஊக்கு விப்பது காஷ்மீர் பண்டிட்டுகளின் வலியை ஆயுதமாகப் பயன்படுத் தும் அவர்களின் தவறான உள்நோக் கத்தை வெளிப்படுத்துகிறது. பழைய காயங்களுக்கு மருந்திடாமல் இரு சமூகத்தினரிடையே இணக்கமான சூழலை உருவாக்குவதற்குப் பதி லாக, அவர்கள் வேண்டுமென்றே பிரிக்கிறார்கள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். OVER 19/3 வடகிழக்கு இந்தியப் பயணம் : 7 சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில் குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம் கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும் . பருத்திக் கல்லூரி 1901 ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் முன்னாள் பிரிட்டிஷ் மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ஹென்றி ஸ்டெட்மேன் காட்டனால் நிறுவப்பட்டது. இது அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பழமையான உயர்கல்வி நிறுவனமாகும் . [2] பருத்திக் கல்லூரி 1948 இல் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரியாக மாறியது , பின்னர் அது 2011 இல் நிறுவப்பட்டபோது, அஸ்ஸாம் அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம் (2011 ஆம் ஆண்டின் XIX ஆம் சட்டம்) காட்டன் கல்லூரி மாநில பல்கலைக்கழகம் ஆனது. பருத்திப் பல்கலைக்கழகச் சட்டம், 2017 கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இயற்றப்பட்டது கல்லூரி இல்லாத ஒரே மாகாணம் அஸ்ஸாம் என்பதாலும், குவஹாத்தி மிகவும் வசதியான இடம் என்பதாலும், குவஹாத்தியில் கல்லூரியைத் திறக்குமாறு மாணிக் சந்திரா 1899ல் பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதினார். பதிலுக்கு, சர் ஹென்றி ஸ்டெட்மேன் காட்டன் , KCSI, அப்போதைய அஸ்ஸாமின் தலைமை ஆணையர், 3 நவம்பர் 1899 அன்று கவுகாத்தியில் ஒரு கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்தார். பெயர்: பொது மக்களால் தீர்மானிக்கப்பட்ட பருத்திக் கல்லூரி, 27 மே 1901 அன்று பருத்தியால் தொடங்கப்பட்டது. கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது மேலும் ஐந்து பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டது; இதில் கல்லூரியின் முதல் முதல்வர் பிரடெரிக் வில்லியம் சட்மர்சன் மற்றும் 39 மாணவர்கள் அடங்குவர். இக்கல்லூரியானது சுதந்திர இயக்கம் மற்றும் மாநிலத்தின் இலக்கிய மற்றும் கலாச்சார இயக்கங்களின் மையமாக இருந்தது, இது இந்தியாவின் ஒரு தனித்துவமான, ஒருங்கிணைந்த அங்கமாக அஸ்ஸாமின் அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. 1948 இல் கௌஹாத்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, கல்லூரி அதனுடன் இணைக்கப்பட்டதால், அது ஒரு தொகுதிக் கல்லூரியாக மாறியது 2015 இல் கல்லூரி சிறப்பு பாரம்பரியக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, கல்லூரி சிறந்த மையமாக அறிவிக்கப்பட்டது, [6] இந்த நிகழ்வானது , அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மாவுடன் ஒரு புனிதமான விழாவில் கொண்டாடப்பட்டது . மேலும் இது அதிகாரப்பூர்வமாக முதுகலை கல்லூரியாக மாறியது. [5] பருத்திக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை 27 மே 2001 முதல் 26 மே 2002 வரை ஒரு வருட நிகழ்ச்சியுடன் கொண்டாடியது. ₹ 4.00 நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. பருத்தி கல்லூரி மாநில பல்கலைக்கழகம் அசாம் அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கு உலகத் தரம் வாய்ந்த ஒன்றாக, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குவது, காமரூப் ஊரக மாவட்டம் அதிக அளவில் பருத்தியை விளைவிக்கிறது மகாராஷ்டிரம் மாநிலம் அதிக அதிக அளவில் பருத்தியை விளைவிக்கிறது காமரூப் ஊரக மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் அருகில் உள்ள பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம் ஆகியவற்றுடன் இதுவுன் சேர்ந்த பகுதியை காமரூப் பகுதி என்கின்றனர். இந்த மாவட்டங்களில் காமரூபி மொழி பேசுவதே இதற்கு காரணம். இந்த மாவட்டம் 4345 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆத்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா பருத்தி விளைச்சலில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேரளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பே 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு விளைச்சல் செய்யப்பட்டது. பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர்.. மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் எந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல ஈடுகள் தொடர்ந்து வளரக்கூடியது. பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது. பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணெய் ஆட்டப்படுகிறது. தூய்ம செய்யப்பட்ட பின், இது மனிதர்களால் மற்ற எண்ணெய்கள் போலவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்ஸாம் மாநில மக்கள் அதிக அளவில் பருத்தி ஆடைகள் அணிகிறார்கள் என்பது முக்கியமானச் செய்தியாகும். பருத்தி போலவே தேயிலை என்பது இந்த மாநிலத்தில் முக்கியமான விளை பொருளாகவும் பொருளாதாரத்தை நிர்ணயிக்க்க்கூடியதாவும் விளங்குகிறது அஸ்ஸாம் தேயிலை என்பது அதன் உற்பத்திப் பிரதேசமான இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தேயிலை ஆகும். அசாம் தேயிலை ஒரு கருப்பு தேயிலை ஆகும். அசாம் தேநீர் குறிப்பாக கேமல்லியா சினன்சிஸ் என்ற சீனத் தேயிலைச் செடியிலிருது பெறப்படுகிறது.[1][2] இதே தேயிலைச் செடி பாரம்பரியமாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் பயன்படுத்தப்படுகிறது அஸ்ஸாம் தேநீர் பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு நிகரான உயரட்திலோ அல்லது அதற்கருகிலோ வளர்க்கப்படுகிறது. மேலும் அதன் வடிவம், அதன் உற்சாகம், தீஞ்சுவை, அடர்வு, பிரகாசமான நிறம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. அசாம் தேயிலை மற்றும் அசாம் தேயிலைக் கலவைகள் கொண்ட தேயிலைகள் காலைத் தேநீர் ‘ என விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஐரிஷ் காலை உணவு தேநீர், ஒரு சுவையான மற்றும் வலுவான காலைத் தேநீர் ஆகும். இத்தேயிலை சிறிய அளவிலான அசாம் தேயிலை இலைகளைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலம் உலகின் தேயிலை வளரும் பகுதியில் மிகப்பெரியது ஆகும் பிரம்மபுத்ரா ஆற்றின் இருபுறமும், பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் எல்லையிலும் அசாம் உள்ளது. இந்தியாவின் இந்த பகுதி அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மழைக்காலத்தில், ஒரு நாளைக்கு 10 முதல் 12 அங்குலங்கள் வரை (250–300 மிமீ) மழைப் பொழிவு இருக்கும். பகல்நேர வெப்பநிலை சுமார் 96.8 பாரன்ஹீட் (36° C) ஆக உயர்கிறது. தீவிர ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் காரணமாக பைங்குடில் விளைவு போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது. இந்த வெப்பமண்டல காலநிலை அசாமின் தனித்துவமான உலர் தேயிலைச் சுவையில் பங்களிக்கிறது, இந்த அம்சத்தால் இந்தத் தேநீர் நன்கு அறியப்பட்டதாகத் திகழ்கிறது. அசாம் தேயிலை பொதுவாக அதன் தனித்துவமான கருப்பு தேயிலைகளைக் குறிக்கிறது என்றாலும், இப்பகுதி சிறிய அளவிலான பச்சை மற்றும் வெள்ளை தேயிலைகளையும் அவற்றின் தனித்துவமான குணாதிசயங்களையும் உற்பத்தி செய்கிறது. வரலாற்று ரீதியாக, உலகின் சொந்த தேயிலைச் செடிகள் உள்ள இரண்டு பகுதிகளில் அசாம் தெற்கு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது வணிகத் தேயிலை உற்பத்தி பிராந்தியம் என அழைக்கப்படுகிறது. ஐரோப்பாவிற்கு அஸ்ஸாம் தேயிலைச் செடி ஸ்காட்லாந்து சாகசக்காரரான ராபர்ட் புரூஸ் என்பவரால் அறிமுகமானது.[5] அவர் 1823 ஆம் ஆண்டில் இதை அறிந்தார். இப்பிராந்தியத்தில் அவர் வணிகம் செய்யும் போது அசாமில் "காட்டுச் செடிகளாக" தேயிலைச் செடிகள் வளர்ந்து வருவதை புரூஸ் கண்டதாகக் கூறப்படுகிறது மனிராம் திவான் என்பவர் இதுகுறித்து வழிகாட்டியதோடு அவரை உள்ளுர் பழங்குடியினத் தலைவரான பெஸா காம் என்பவரிடம் அழைத்துச் சென்றார்.[6] உள்ளூர் பழங்குடியினர் (சிங்போஸ் மக்கள்) இச்செடியின் இலைகளில் இருந்து தேநீர் காய்ச்சுவதைக் கவனித்த புரூஸ், பழங்குடித் தலைவர்களுடன் இலைகள் மற்றும் விதைகளின் மாதிரிகளைச் சேகரித்து வழங்க ஏற்பாடு செய்தார், அதை அவர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யத் திட்டமிட்டார். ராபர்ட் ப்ரூஸ் சிறிது காலங்களில் இறந்து போனதால் இச்செடி சரியாக வகைப்படுத்தப்படவில்லை. 1830 களின் முற்பகுதியில் ராபர்ட்டின் சகோதரர் சார்லஸ், அசாம் தேயிலைச் செடிகளிலிருந்து சில இலைகளை கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கு முறையான பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அங்கு, இச்செடியானது இறுதியாக பலவிதமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இது தேயிலைச்செடி அல்லது கேமல்லியா சினென்சிஸ் வர் அசாமிகா என அடையாளம் காணப்பட்டது, ஆனால் சீனத் தேயிலையிலிருந்து ( கேமல்லியா சினென்சிஸ் வர். சினென்சிஸ் ) வேறுபட்டதாகும். நீலகிரியில் விளையும் தேயிலை மூன்று வகைப்படும். அவையாவன (1) தூய்மையான சீனத் தேயிலை. இத் தேயிலை மிகவும் உறுதியானதாக இருக்கும் (2) அஸ்ஸாமில் பெரும் அளவு விளையும் நாட்டுத் தேயிலை. இது 25 அல்லது 30 அடி உயரம் வளரும் தன்மையுடையது. (3) சீன இனத்தையும், நாட்டு இனத்தையும் கலந்து உண்டாக்கப்பட்ட தேயிலை (Hybrid). இது சீனத் தேயிலையைப்போல் இருமடங்கு இலைகளைக் கொண்டிருப்பதோடு, அதன் உறுதியையும் பெற்றிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, அங்கு விளையும் அரியவகை கோல்டன் டீத்தூள் கவுகாத்தி தேயிலை ஏல நிலையம் (GTAC) மூலம் 99,999 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது., மனோகரி கோல்டு டீத்தூள் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது. சென்ற ஆண்டு 75,000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது இந்த அரியவகை தேயிலைத்தூளை சவுரவ் வர்த்தக நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் அதிகபட்ச விலை கிலோவுக்கு 99,999 ரூபாய் என விற்கப்படுகிறது. இது போன்ற அரிய வகை டீத்தூளை பல வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்புவதாக பிகானி தெரிவித்தார். இந்த விற்பனை அஸ்ஸாம் தேயிலை விற்பனையில் ஒரு பெரிய மைல் கல்லாகும். இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 52 விழுக்காடு அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தியாகிறது. அஸ்ஸாமின் பல இடங்களில் விளையும் பல்வேறு தேயிலை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் இந்திய தேயிலை ஆணையம் (NTA) தேயிலைத் தோட்டங்களை விரிவுப்படுத்துவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது, மேலும் அங்குப் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு கால வருங்கால வைப்புத்தொகை (PF) வழங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி அஸ்ஸாமில் 850 சிறிய, பெரிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதன் பராமரிப்புப் பணிகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம்செய்ய வேண்டும். இந்திய தேயிலை ஆணையமும் இதையே பரிந்துரைசெய்கிறது. மனிதனின் அடிப்படைத் தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர். காலை எழுந்தவுடனே தேநீர் அருந்தவில்லையென்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாகக் கலந்து விட்டது. பிரிட்டிஷார் நம் நாட்டில் திணித்தவற்றுள் மிக முக்கியமானது தேயிலை. அவர்கள் தேவைக்காக நம்மை பயிரிடச் சொல்லி பின்பு நம்மையே நுகர வைத்து அதன் தேவையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டினார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு சர்வதேச அளவில் தேயிலையின் தேவை அதிகரித்தையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது. இந்த தேயிலை துறையை பற்றியும் தேநீரை பற்றியும் சில தகவல்கள் உங்களுக்காக…. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. கி.மு.800 களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது. 17ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டனில் தேநீர் மிக பிரபலமடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை பிரிட்டிஷார் தொடங்கினர். முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான் தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி (Tasseography) என்று பெயர். சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது. மத விழாக்கள், திருமணம் போன்றவற்றின் போது தேநீர் விருந்து நடத்தப்படுகிறது. சீனர்கள் இதை `ஆர்ட் ஆஃப் டீ’ என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இரண்டாவது அதிகம் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய துறை தேயிலை துறை. ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் தேநீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் விளம்பரப்படுத்தினர். 1920-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பரவலானது. உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனாவின் பங்கு 36% இந்தியாவின் பங்கு 22.6% உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25% இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அஸ்ஸாம். அஸ்ஸாமில் 3,04,000 ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது. அஸ்ஸாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம். 2014-ம் ஆண்டு தகவலின் படி இந்தியாவில் தேயிலை சந்தையின் மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் கிரீன் டீ சந்தையின் மதிப்பு 250 கோடி ரூபாய் எகிப்தியர்கள் ஹைபிஸ்கஸ் என்று அழைக்கக்கூடிய செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே. ஐரோப்பியர்கள் மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் உடல் எடையை குறைப்பதற்கு வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கிரீன் டீயை விரும்புகிறார்கள். 1800களுக்குப் பிறகு கிரீன் டீ உலகளவில் பிரபலமடைந்தது. அதிலும் அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கமீலியா சைனசிஸ் என்ற தேயிலையிலிருந்துதான் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் ஜப்பான். அஸ்ஸாமில் உள்ள தேயிலைத் தொழிலாளர்கள் தினக்கூலியாக 205 யை கூடப் பெறவில்லை. இது கேரளா (403), கர்நாடகா (349), மற்றும் தமிழ்நாடு (333) ஆகிய மாநிலங்களின் தினக்கூலியை விட மிகக்குறைவு. அசாமின் 7 மாவட்டங்களில் 5,000 தேயிலைத் தொழிலாளர்களுடன் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது‌. தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஊதியத்தை உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு அரசாங்கம் மற்றும் தேயிலைத் துறைக்கு ஆக்ஸ்பாம் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுமார் 39% நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 61% தற்காலிக தொழிலாளர்கள் அங்கு வேலை பார்க்கிறார்கள். கோவிட் நெருக்கடிக்கு முன்னர், 7% பெண் தொழிலாளர்கள் மட்டுமே மகப்பேறு விடுப்புக்குப் பதிவுசெய்துள்ளனர். வெறும் 2% பேர் மட்டுமே தங்கள் முதலாளிகளால் வழங்கப்படும் குழந்தைகளின் கல்விக்கான வசதியைப் பெற முடிந்தது” என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு தோட்டத் தொழிலாளியின் ஊதியத்திலிருந்து முதலாளிகள் சராசரியாக 778 ஐ மாதத்திற்குக் கழிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளி உண்மையில் ஒரு நாளைக்கு 160-180 ரூபாய் தான் ஊதியமாய் பெற்றுள்ளனர். தரத்தின் காரணமாக அசாம் தேநீர் முதன்மையாகக் கென்யா மற்றும் இலங்கை போன்ற ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் போட்டியிடுகிறது. ஆக்ஸ்பாம் கருத்துப்படி, இந்த நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மோசமான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளே கிடைக்கின்றன. அசாமின் தினக்கூலி 205 ரூபாயும் ஒப்பிடும் போது அது கென்யாவில் 370 மற்றும் இலங்கையில் 260 ரூபாயாக உள்ளது. ஆங்கிலேயர்களால் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களில் எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. கிராமங்கள் தற்போது வளர்ந்துவிட்டன; சில கிராமங்களில் தேயிலை தோட்டம் சாராத பணிகள் கிடைக்கிறது; ஆனால் அனைவருக்கும் கிடைப்பதில்லை. உலகின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் சில, தாங்கள் தேயிலை வாங்கும் இந்தியத் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்திருக்கின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆபத்தான மற்றும் மிகவும் இழிவான நிலைமைகளில் வேலை செய்ய வேண்டியிருப்பதை பிபிசி ஆய்வு ஒன்று கண்டறிந்ததை அடுத்து இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய கழிப்பிட வசதிகள் இல்லை, கழிப்பிடங்கள் இருந்தால், அவை மிக மோசமான நிலையில் இருக்கின்றன. கழிவுப் பொருள் தொட்டிகள் நிரம்பி வழிந்து தொழிலாளர்கள் வாழும் இடங்களுக்குள் கழிவு நீர் வருகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இது போன்ற மோசமான நிலைமைகளும், மிகக் குறைவான ஊதியமும், தொழிலாளர்கள் ஊட்டச்சத்து இல்லாத நிலையிலும், வியாதி தொற்றும் நிலையிலும் இருப்பதற்கு வழி வகுத்திருக்கின்றன. தேயிலைப் பயிரின் மீது தொழிலாளர்கள் பாதுகாப்பு ஏதுமின்றி ரசாயன உரங்களைத் தெளிப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது. முன்னணி பிரிட்டிஷ் தேயிலை நிறுவனங்களான, பி.ஜி.டிப்ஸ், ட்வினிங்ஸ், மற்றும் டெட்லீஸ் போன்றவை நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்திருக்கின்றன. இந்தியாவில் தேயிலை தயாரிப்பு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும், இந்திய தேயிலை சங்கம் என்ற அமைப்பின் அஸ்ஸாம் கிளையின் தலைவரான, சந்தீப் கோஷ், தொழிலாளர்களின் வாழ்விட நிலைமைகள் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்டார். கழிப்பறை சரியாக இல்லாத நிலை, திறந்த வெளியில் கழிப்பது போன்றவை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைமைகள், இவைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டியவை, என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறி கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவின் தேயிலைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 22ஆம் தேதியிலேயே தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரம் இல்லாமல் காங்கிரஸின் "சதித்திட்டத்தின்" ஒரு பகுதியாக உலகெங்கிலும் பிரபலமான அஸ்ஸாம் தேயிலை மற்றும் நமது பண்டைய புனித பாரம்பரியமான யோகாவை அவதூறு செய்ய ஒரு ”டூல்கிட்” கருவித்தொகுதி சமீபத்தில் முயன்றது என்றார். பிரதமர் நரேந்திர மோடி "அசாம் தேயிலைக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. நீங்கள் ஒரு கருவித்தொகுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இது அசாமின் தேயிலைத் தோட்டங்களை அழிக்க முயன்றது. எந்த இந்தியரும் அதை அனுமதிக்க மாட்டார்" என்று அவர் கூறினார். இது ஒரு வித்யாசமானப் போட்டியும் பேட்டியும் ஆகும். எப்படியிருந்தாலும் நேனீர் சாப்பிடும் போது தொழிலாளர்களின் ரத்தமும் ஞாபக்ம் வருவதும் தவிர்க்க இயலாததே .
வடகிழக்கு இந்தியப் பயணம் :5 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட செய்தியைக் கவனியுங்கள் ) அசாம் மாநிலம் ...ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அசாம் மாநிலம் கில்சாரில் இருந்து கோவைக்கு வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி கில்சாரில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது. அசாமை சேர்ந்த அர்பிந்து ராய் (வயது 30) என்பவர் எஸ்.3 பெட்டியில் ஏறி பயணம் செய்தார். அவர் ஜோலார்பேட்டை வரை பயணம் செய்ய முன் பதிவு செய்து டிக்கெட் வைத்திருந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக அர்பிந்து ராய் பணியாற்றி வந்தார். அவருடன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் அந்த பெட்டியில் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ரெயில் ஜோலார்பேட்டை வந்ததும் அர்பிந்து ராய் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். உடனே அவருடன் பயணம் செய்த வடமாநில தொழிலாளர்கள் அவரை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. உடனடியாக அவருடைய செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அர்பிந்து ராயின் சகோதரி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரை தொடர்பு கொண்டு தெரிவித்தபோது அர்பிந்து ராயின் உடலை ரெயில் மூலமாக திருப்பூரில் கொண்டு வந்து இறக்கி விடுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் கம்பளி போர்வையால் அர்பிந்து ராயின் உடலை போர்த்தி அவர் தூங்கிக்கொண்டிருப்பதை போல் செய்து விட்டனர். அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகளுக்கு இந்த விவரம் தெரியவில்லை. அவர்கள் வழக்கம் போல் பயணத்தை தொடர்ந்தனர். காலை 10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் எஸ்.3 பெட்டியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், ரெயிலில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரிடம் அர்பிந்து ராய் இறந்து விட்டதை தெரிவித்தனர். உடனடியாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு ரெயில் திருப்பூர் வந்ததும் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து, அர்பிந்து ராயின் உடலை தூக்கிக்கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது தான் அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகளுக்கு கடந்த 4 மணி நேரமாக, சடலத்துடன் பயணம் செய்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நடைமேடையில் உடலை கிடத்தினர். அதற்குள் அர்பிந்து ராயின் உறவினர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில்வே போலீசார் உதவியுடன் உடலை 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அர்பிந்து ராயின் உடலை அவரது உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.( தினமலர் ) ஒரு "மோசமான வேலை கலாச்சாரம்"; காலியிடங்களை விளம்பரப்படுத்துவதில் தோல்வி; மற்றும் அஸ்ஸாமுக்கு வெளியில் இருந்து ஆட்களை பணியமர்த்துவது. 2020 ஆம் ஆண்டில், முதல் இப்பகுதியில் தொடர்ச்சியான வன்முறைக் கொலைகள் நிகழ்ந்தன.மற்றும் சாதிய அடக்குமுறைகள் மோசமான தட்ப வெப்ப நிலை. கட்டாய மதமாற்றத்தால் பழைய சாதி மக்களிடமிருந்து ஏற்படும் அழுத்தம் , மதம் மாற்றப்பட்டவர்களின் தனிமையாக்கப்பட்ட மன அழுத்தங்கள் ..இதெல்லாம் அந்த மக்களை மூன்று நாட்கள், நான்கு நாட்கள் பிரயாணத்திற்குப் பின் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு சாதாரண் உழைக்கும் மக்களை விரட்டி விடுகிறது அஸ்ஸாம் புவியியல் அம்சம் குளிரும் மழையும் கடும் வெயிலும் கலந்தது அஸ்ஸாமின் குறிப்பிடத்தக்க புவியியல் அம்சம் என்னவென்றால், இது இந்தியாவின் ஆறு இயற்பியல் பிரிவுகளில் மூன்று - வடக்கு இமயமலை (கிழக்கு மலைகள்), வடக்கு சமவெளி (பிரம்மபுத்ரா சமவெளி) மற்றும் டெக்கான் பீடபூமி (கர்பி அங்லாங்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரம்மபுத்திரா அசாமில் பாய்வதால் இங்கு குளிர்ந்த காலநிலை நிலவுகிறது மற்றும் மாதத்தின் பெரும்பகுதி மழைப்பொழிவு இருக்கும். அஸ்ஸாமின் உயிர்நாடியான பிரம்மபுத்திரா, இமயமலையை விட பழமையான ஒரு முன்னோடி நதி என்று புவியியல் ஆய்வுகள் முடிவு செய்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் ரேபிட்களுடன் அஸ்ஸாமிற்குள் நுழைகிறது, சடை நதியாக மாறுகிறது (சில சமயங்களில் 10 மைல்/16 கிமீ அகலம்) மற்றும் துணை நதிகளுடன், வெள்ள சமவெளியை உருவாக்குகிறது (பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு: 50-60 மைல்/80-100 கிமீ அகலம், 600 மைல்/1000 கிமீ நீளம்). [52] கர்பி ஆங்லாங் மலைகள் ,வடக்கு கச்சார் மற்றும் குவஹாத்தியில் உள்ள மற்றும் அருகில் உள்ளவை (காசி-காரோ மலைகள் கூட) இப்போது அரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டவை முதலில் தென்னிந்திய பீடபூமி அமைப்பின் பகுதிகளாகும். [52] தெற்கில், பரைல் மலைத்தொடரில் (அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லை) உருவாகும் பராக் , 25-30 மைல்கள் (40-50 கிமீ) அகலமான பள்ளத்தாக்குடன் கச்சார் மாவட்டம் வழியாகப் பாய்ந்து, சுர்மா நதி என்ற பெயருடன் பங்களாதேஷில் நுழைகிறது . உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில் ஒன்றான குவஹாத்தி நகர மையங்களில் அடங்கும் . குவஹாத்தி "வட-கிழக்கு இந்தியாவின் நுழைவாயில்" என்றும் குறிப்பிடப்படுகிறது. சில்சார் , (பாரக் பள்ளத்தாக்கில்) அஸ்ஸாமில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் மற்றும் வணிகத்தின் முக்கிய மையமாகும். மற்ற பெரிய நகரங்களில் திப்ருகர் , எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில் மையம், [54] காலநிலை வெப்பமண்டல பருவமழை காலநிலையுடன் , அஸ்ஸாம் மிதமானதாக இருக்கும் (கோடையில் அதிகபட்சம் 95-100 °F அல்லது 35-38 °C மற்றும் குளிர்காலத்தில் நிமிடம். 43-46 °F அல்லது 6-8 °C) மற்றும் அதிக மழைப்பொழிவு மற்றும் அதிக ஈரப்பதத்தை அனுபவிக்கிறது. காலநிலையானது கடுமையான பருவமழையால் கோடை வெப்பநிலையை குறைக்கிறது மற்றும் பனிமூட்டமான இரவுகள் மற்றும் காலைகளை குளிர்காலத்தில் பாதிக்கிறது, பிற்பகலில் அடிக்கடி நிகழ்கிறது. வசந்த காலம் (மார்ச்-ஏப்ரல்) மற்றும் இலையுதிர் காலம் (செப்டம்பர்-அக்டோபர்) பொதுவாக மிதமான மழை மற்றும் வெப்பநிலையுடன் இனிமையானது. அசாமின் விவசாயம் பொதுவாக தென்மேற்கு பருவ மழையை நம்பியே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதி போன்ற பிற நதிகளில் இருந்து வரும் வெள்ளம் அசாமில் உள்ள இடங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது. மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து கரையோரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து அருகில் உள்ள பகுதிகளை மூழ்கடிக்கிறது. வெள்ள நீரில் வீடுகள் மற்றும் கால்நடைகள் அடித்துச் செல்லப்படுவதைத் தவிர, பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் சாலைகள் ஆகியவை பேரிடரால் சேதமடைந்துள்ளன, இது பல இடங்களில் தகவல் தொடர்பு செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மாநிலத்தின் பல இடங்களில் இயற்கை சீற்றத்தால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அசாம் அரசின் கூற்றுப்படி, அசாமில் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் எல்லைப் பிரச்சனை உள்ளது. அசாம் - மிசோரம் இடையே மோதல் மிசோரம் ஒரு தனி யூனியன் பிரதேசமாக செதுக்கப்படுவதற்கு முன்பு லுஷாய் மலைகளாக அசாமின் ஒரு மாவட்டமாக இருந்தது , பின்னர் 1987 இல் மற்றொரு மாநிலமாக மாறியது. வரலாற்றின் காரணமாக, மாவட்டத்தின் எல்லைகள் நீண்ட காலமாக உள்ளூர் மக்களுக்கு உண்மையில் முக்கியமில்லை. மிசோரம் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியின் கீழ் வரும் கச்சார் , ஹைலகண்டி மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது . காலப்போக்கில், எல்லை நிர்ணயம் எங்கு இருக்க வேண்டும் என்பது குறித்து இரு மாநிலங்களும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கத் தொடங்கின. மிசோரம் அது இன்னர் லைன் அனுமதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறதுபழங்குடியினரை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க 1875 இல் அறிவிக்கப்பட்டது, இது மிசோக்கள் தங்கள் வரலாற்று தாயகத்தின் ஒரு பகுதியாக உணர்கிறது, அஸ்ஸாம் மிகவும் பின்னர் வரையப்பட்ட மாவட்ட எல்லைகளின்படி அது வரையறுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. அஸ்ஸாம்-மேகாலயா பிரச்சனை மாநிலத்தின் எல்லைகள் குறித்து அஸ்ஸாமுடன் தகராறு உள்ள ஒரு டஜன் பகுதிகளை மேகாலயா அடையாளம் கண்டுள்ளது. இரு மாநில முதல்வர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மேகஹல்யாவின் கான்ராட் சங்மா ஆகியோர் , மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் முதல் சந்திப்பை நடத்தினர். கடந்த காலத்தில் மேகாலயாவால் கொடியிடப்பட்ட 12 பகுதிகளுக்கான உரிமைகோரல்களை தனித்தனியாக மதிப்பீடு செய்ய இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு மாநில முதல்வர்கள் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய அரசின் பங்கு என்ன என்ற கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்“சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்போடுதான் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்பதும், பரஸ்பர மனப்பான்மையில் சுமுகத் தீர்வுக்கு மத்திய அரசு உதவியாளராக மட்டுமே செயல்படுகிறது என்பதும் மத்திய அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. புரிதல்." அசாம் - நாகாலாந்து தகராறு 1963ல் நாகாலாந்து உருவானதில் இருந்தே இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. அசாமின் கோலாகாட் மாவட்டத்தின் சமவெளிப் பகுதிக்கு அடுத்துள்ள மெரபானி என்ற சிறிய கிராமத்தில் இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடி வருகின்றன. 1960களில் இருந்து இப்பகுதியில் வன்முறை மோதல்கள் நடந்ததாக செய்திகள் வந்துள்ளனஅசாம்-அருணாச்சல பிரதேசம் இடையே மோதல் அசாம் அருணாச்சலப் பிரதேசத்துடன் 804.10 கிமீ மாநிலங்களுக்கு இடையேயான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது . 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேச மாநிலம், பாரம்பரியமாக அதன் குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான சில நிலம் அஸ்ஸாமுக்கு வழங்கப்பட்டதாகக் கூறுகிறது. அஸ்ஸாமில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு சில பிரதேசங்கள் மாற்றப்பட வேண்டுமென முத்தரப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருகின்றன. எல்லையில் இருந்து சில உள்ளூர் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அசாமில் தனி மாநில கோரிக்கை தனி போடோலாந்து மாநிலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் விளைவாக இந்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் போடோ விடுதலைப் புலிகள் படை இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது . 10 பிப்ரவரி 2003 அன்று செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி, அஸ்ஸாமில் உள்ள 3082 போடோ கச்சாரி -பெரும்பான்மை கிராமங்களை உள்ளடக்கிய நான்கு மாவட்டங்களை ஆளும் வகையில், அஸ்ஸாம் அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமான போடோலாந்து பிராந்திய கவுன்சில் உருவாக்கப்பட்டது. [137] [138] சபைக்கான தேர்தல்கள் 13 மே 2003 அன்று நடத்தப்பட்டன, மேலும் ஜூன் 4 அன்று 46 உறுப்பினர்களைக் கொண்ட சபையின் தலைவராக ஹக்ராமா மொஹிலரி பதவியேற்றார். மக்கள்தொகை அடிப்படையில், பழங்குடியினர் போடோ பழங்குடியினர் பிராந்தியத்தின் மக்கள்தொகையில் பாதியாக உள்ளனர், மேலும் இப்பகுதியுடன் கணிசமான எண்ணிக்கையிலான பிற இன சிறுபான்மையினரும் உள்ளனர்: கர்பி அங்லாங் அசாமின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். கர்பி ஆங்லாங் முன்பு மிகிர் மலைகள் என்று அழைக்கப்பட்டது. இது பிரித்தானிய இந்தியாவில் விலக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பகுதி விலக்கப்பட்ட பகுதிகளின் (தற்போதைய வடகிழக்கு இந்தியா) பகுதியாக இருந்தது. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் இந்தப் பகுதியை தங்கள் அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் ஒருபோதும் சேர்க்கவில்லை. இதன்மூலம், அரசு வளர்ச்சிப் பணிகளோ, செயல்பாடுகளோ செய்யப்படவில்லை, கர்பி ஆங்லாங் உள்ளிட்ட மலைகளில் இருந்து எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கர்பி தாயகத்திற்கான முதல் குறிப்பாணை கவர்னர் ரீடிடம் 28 அக்டோபர் 1940 அன்று மொஹோங்டிஜுவாவில் செம்சன்சிங் இங்டி மற்றும் கோர்சிங் தெராங் ஆகியோரால் வழங்கப்பட்டது. கர்பி தலைவர்கள் அப்போது, 6 ஜூலை 1960 இல் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஹில் தலைவர்கள் மாநாட்டின் (APHLC) ஒரு பகுதியாக இருந்தனர். 1981 இல் கர்பி ஆங்லாங் மாவட்ட கவுன்சில் தனி மாநிலம் கோரி தீர்மானம் நிறைவேற்றியபோது இயக்கம் மீண்டும் வேகம் பெற்றது. பின்னர் மீண்டும் 1986 முதல் தன்னாட்சி மாநில கோரிக்கைக் குழுவின் (ASDC) தலைமையின் மூலம் கர்பி அங்லாங் மற்றும் டிமா ஹசாவோவின் சட்டப்பிரிவு 244(இன் கீழ் தன்னாட்சி மாநில உரிமை கோரப்பட்டது. A). 2002 இல், கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பல அமைப்புகளால் பல்வேறு சமயங்களில் பல குறிப்பாணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 31 ஜூலை 2013 அன்று மாணவர் போராட்டக்காரர்கள் அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தபோது தனி மாநில கோரிக்கை வன்முறையாக மாறியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்பி ஆங்லாங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூட்டாக இந்தியப் பிரதமரிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர்.தனி மாநிலம் கோருகிறது. மக்கள்தொகை அடிப்படையில், கர்பி ஆங்லாங் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்தோருடன் பழங்குடி கர்பி பழங்குடியினரால் ஆனவர்கள். வடகிழக்கு இந்தியாவின் திமாசா மக்கள் பல தசாப்தங்களாக திமராஜி அல்லது "டிமாலாண்ட்" என்ற தனி மாநிலத்தை கோரி வருகின்றனர் . இது திமாசா - கச்சாரி மக்கள் வசிக்கும் பகுதிகளான திமா ஹசாவ் மாவட்டம் , கச்சார் மாவட்டம் , பராக் பள்ளத்தாக்கின் சில பகுதிகள், நாகோன் மாவட்டம் , ஹோஜாய் மாவட்டம் மற்றும் அசாமில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டம் மற்றும் நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் . ஹைலகண்டி மாவட்டங்களை உள்ளடக்கிய பராக் பள்ளத்தாக்கு சில்ஹெட்டிற்கு (வங்காள சமவெளி) அருகில் உள்ளது , அங்கு வங்காள இந்துக்கள், வரலாற்றாசிரியர் ஜே.பி. பட்டாச்சார்ஜியின் கூற்றுப்படி, வங்காள இந்துக்கள் நன்கு குடியேறினர். காலனித்துவ காலம், டிமாசா கசஹாரிஸின் கலாச்சாரத்தை பாதிக்கிறது.திமாசா மன்னர்கள் வங்காள மொழி பேசியதாகவும், எழுதப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் வங்காள எழுத்தில் இருந்ததாகவும் பட்டாசார்ஜி விவரிக்கிறார். இப்பகுதியை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் கச்சார் நகருக்கு இடம்பெயர்வுகள் அதிகரித்தன. அஸ்ஸாமின் பூர்வீக வங்காள மக்கள் , அசாமின் பெங்காலி பெரும்பான்மையான பகுதிகளுக்குள், குறிப்பாக பெங்காலி பெரும்பான்மையான பராக் பள்ளத்தாக்கு மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தனி மாநிலத்தை கோரினர்: கச்சார் , ஹைலகண்டி , கரீம்கஞ்ச் மற்றும் டிமா ஹசாவோ மற்றும் லும்டிங் ஆகியவை உருவாக்குவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்ய கோரப்பட்டன. அசாமின் பெரும்பான்மையான பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் NRC க்குப் பிறகு பிரித்து தனி மாநிலம் . சில்சார்பராக் மாநிலத்தின் முன்மொழியப்பட்ட தலைநகரம் ஆகும். பராக் பள்ளத்தாக்கு அதன் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாத் துறை, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், IT தொழில்கள், GDP, HDI போன்றவற்றின் அடிப்படையில் அசாமின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வசதிகளுக்கும் அணுகல். உண்மையில், தெற்கு அசாமில் ஒட்டுமொத்த பூர்வீக வங்காள பெரும்பான்மை மக்கள் உள்ளனர், குறிப்பாக லும்டிங் (95%) பெங்காலி பெரும்பான்மையைக் கொண்டுள்ளது, பராக் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பகுதி உள்ளது. பெங்காலி பெரும்பான்மை (80.3%), அதே சமயம்டிமா ஹசாவோ குறிப்பிட்ட சில பாக்கெட்டுகளில் குறிப்பாக மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் சுமார் (30.2%) குறிப்பிடத்தக்க பெங்காலி பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. துணைக் கண்டத்தின் பிரிவினைக்குப் பிறகு, அஸ்ஸாம் ஒரு முக்கிய இடம்பெயர்வுத் தளமாக இருந்து வருகிறது , இந்தியா மற்றும் பாகிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம் முதலில் கிழக்கு என அழைக்கப்படும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது) இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிறுவப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் வந்த வங்காள இந்து அகதிகளால் முதல் அலை உருவாகிறது. பாகிஸ்தான் ) 1947-1951 இல். முதல் இணைப்புகளின் காலத்திற்கு (1946-1951) இடையில், சுமார் 274,455 வங்காள இந்து அகதிகள் தற்போது பங்களாதேஷ் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) என்று அழைக்கப்படும் அஸ்ஸாமின் பல்வேறு இடங்களில் நிரந்தர குடியேறிகளாகவும், மீண்டும் (1952-1958) இரண்டாவது இணைப்புகளாகவும் வந்துள்ளனர். அதே பத்தாண்டுகளில், பங்களாதேஷில் இருந்து சுமார் 212,545 வங்காள இந்துக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக தஞ்சம் புகுந்தனர். பிறகு1964 கிழக்கு பாக்கிஸ்தான் கலவரங்கள் பல பெங்காலி இந்துக்கள் அகதிகளாக அஸ்ஸாமிற்குள் ஊற்றப்பட்டனர் மற்றும் மாநிலத்தில் ஹிந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 1968 இல் 1,068,455 ஆக உயர்ந்தது (கலவரத்தின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கூர்மையாக). [161] 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பிறகு சுமார் 347,555 எண்ணிக்கையிலான நான்காவது இணைப்புகள் அகதிகளாக வந்துள்ளன, அவர்களில் பெரும்பாலோர் வங்காள மொழி பேசும் இந்துக்கள் பின்னர் நிரந்தரமாக அசாமில் தங்க முடிவு செய்துள்ளனர். [162]இந்தியா மற்றும் பங்களாதேஷ் அரசாங்கங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளுக்குப் பிறகு சில அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தங்களைச் செய்த போதிலும், அகதிகள் மற்றும் பிற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சந்ததியினர் மாநிலத்தில் இருந்தனர். இருப்பினும், வங்கதேச மக்கள் தொடர்ந்து அசாமில் குடியேறி வருகின்றனர். அறிக்கைகளின்படி, வங்கதேச மக்களில் 635 பேர் பெரும்பாலும் இந்துக்கள், தினசரி அஸ்ஸாமுக்கு குடிபெயர்கின்றனர். இடப்பெயர்ச்சியால் ஏற்படும் இடம்பெயர்வு தவிர, அஸ்ஸாம் மற்றும் வங்காளதேசத்தின் அண்டை பகுதிகளுக்கு இடையே விதிவிலக்கான நுண்துளை எல்லையுடன் கூடிய பெரிய மற்றும் தொடர்ச்சியான கட்டுப்பாடற்ற இயக்கமும் உள்ளது. இந்த நிலைமை அசாம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் வங்காளதேசத்தில் இருந்து அஸ்ஸாமிற்குள் தொடர்ந்து சட்டவிரோதமாக மக்கள் நுழைவது பொருளாதார எழுச்சி மற்றும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் இயக்கத்தின் போது (1979-1985), அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் (AASU) மற்றும் பிறர் புலம்பெயர்ந்தோரின் வருகையை நிறுத்த வேண்டும் மற்றும் ஏற்கனவே குடியேறியவர்களை நாடு கடத்த வேண்டும் என்று கோரினர். [168]இந்த காலகட்டத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் காவல்துறையினருடனான பல்வேறு மோதல்களில் 855 பேர் (AASU 860 என்று கூறுகின்றனர்) இறந்தனர். 1983 சட்டவிரோத குடியேற்றவாசிகள் (தீர்ப்பாயம் மூலம் தீர்மானித்தல்) சட்டம், அஸ்ஸாமுக்கு மட்டுமே பொருந்தும், வங்காளதேசம் 1971 இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் அறிவித்த பிறகு அஸ்ஸாமுக்குள் நுழைந்த எவரும் அங்கீகாரம் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டவராகக் கருதப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. , நியமிக்கப்பட்ட தீர்ப்பாயங்களால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டவர் நிலை குறித்த முடிவுடன். 1985 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கமும் போராட்டத்தின் தலைவர்களும் மோதலைத் தீர்ப்பதற்காக அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பு எல்லை மாவட்டங்களின் மாறிவரும் மக்கள்தொகையை மேலும் தெரியப்படுத்தியது. 2010 ஆம் ஆண்டு முதல், இந்திய அரசாங்கம் அஸ்ஸாமிற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பித்துள்ளது, மேலும் 2018 ஆம் ஆண்டில் அசாமில் வசிக்கும் 32.2 மில்லியன் மக்கள் தங்கள் குடியுரிமையை மறுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 2019 இல், அஸ்ஸாமில் வசிக்கும் 2 மில்லியன் குடிமக்களின் பெயர்களை இந்தியா வெளியிட்டது, அவர்கள் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டது மற்றும் அவர்களின் பெயர்கள் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை நடவடிக்கைக்கு உட்படுத்தியது. , மற்றும் அவர்களில் சிலரை நாடற்றவர்களாக விட்டுவிடலாம், மேலும் அரசாங்கம் குடிமக்கள் அல்லாதவர்களை நாடு கடத்தத் தொடங்கியுள்ளது, அதே ஆண்டில் 1,000 பேரை அதே ஆண்டில் தடுத்து வைத்துள்ளது. ஜனவரி 2019 இல், அசாமின் விவசாய அமைப்பான கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதி (KMSS) குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால் , அசாமில் சுமார் 20 லட்சம் இந்து வங்காளதேசிகள் இருப்பதாகக் கூறியது . ஆனால், எட்டு லட்சம் இந்து பங்களாதேசிகளுக்கு மட்டுமே குடியுரிமை கிடைக்கும் என்று பாஜக கூறியது. பல்வேறு ஆதாரங்களின்படி, சட்டவிரோத இந்து பங்களாதேஷிகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறிவது கடினம். மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி , இந்துக் குடியேறியவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது பிப்ரவரி 2020 இல், அஸ்ஸாம் சிறுபான்மை மேம்பாட்டு வாரியம் சட்டவிரோத வங்காளதேச முஸ்லீம் குடியேறிகளை மாநிலத்தின் பூர்வீக முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் திட்டங்களை அறிவித்தது, இருப்பினும் ஒரு பழங்குடி முஸ்லீம் நபரை அடையாளம் காண்பதில் சிலர் சிக்கல்களை வெளிப்படுத்தினர். வாரியத்தின் படி, மாநிலத்தில் 1.4 கோடி முஸ்லிம்கள் உள்ளனர், அவர்களில் 1 கோடி பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். அசாமில் உள்ள மொத்த 33 மாவட்டங்களில், அசாமின் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் வங்கதேசத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள் அவற்றின் கரைகள் மற்றும் அருகிலுள்ள நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கும். வெள்ளத்தில் வீடுகள், கால்நடைகள் உள்ளிட்ட சொத்துக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. பயிர்கள் மற்றும் வயல்களுக்கு சேதம் ஏற்படுவதால் விவசாயத் துறை பாதிக்கப்படுகிறது. பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் சாலைகள் ஆகியவையும் சேதமடைந்து, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புக்கு தீங்கு விளைவிக்கின்றன, மேலும் சில ஆண்டுகளில் உணவுகளை தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு காற்றில் இறக்கிவிட வேண்டும். வெள்ளம் காரணமாக சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.( விக்கிபீடியா தகவல்கள் ) அந்த மலைப்பிரதேச அழகை ரசிக்க நாம் அங்கு ஓடுகிறோம். ஆனால் வயிற்றை நிரப்பிக்கொள்ளும் வேலைக்காக அவர்கள் பல இடங்களுக்கும் இடம்பெயர்கிறார்கள் . இந்த அவலம் உலகம் முழுமைக்குமானது. உலக மயமாக்கலின் இன்னொரு முகம். 00000
வடகிழக்கு இந்திய பயணம் சுப்ரபாரதிமணியன் அத்யாயம் மூன்று ஒற்றைக்கொம்பன் காண்டா மிருகத்தைப்பார் அஸ்ஸாம் செல்வதாகச் சொன்னபோது பறவை,விலங்கியல் சார்ந்த விசயங்களில் அக்கறை கொண்ட நண்பர் சின்னராஜ் அவர்கள் அஸ்ஸாமில் ஒற்றைக்கொம்பன் காண்டா மிருகத்தைப்பார்க்கச் சொன்னார். அப்புறம் பிரம்மபுத்திரா நதியையும் பாருங்கள் என்றார். அஸ்ஸாம்- கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில். நான் கொஞ்சம் எழுத்தாளர்களைச் சந்திக்க ஆசை. ஆனால் சுற்றுலாவில் பெரியக் குழுவில் இருப்பதால் தனிப்பட்ட ஆசைகள் , சந்திப்புகள் சாத்தியமா என்று தெரியவில்லை என்றேன் இவ்வாண்டின் ஞானபீடம் பரிசு, தேசிய விருதுத்திரைப்படம் ஆகியவை அஸ்ஸாம் சார்ந்தவர்கள் பெற்றிருந்தார்கள் என்பது கவுகாத்தி விமானநிலையத்தில் இறங்கியபோது மனதில் வந்தது. முகப்பில் தென்பட்ட அழகான ஓவியங்கள், சிற்பங்கள் கவனத்திற்குரியதாக இருந்தன.உக்ரேனில் இருந்து வரும் இந்திய மாணவர்களை வரவேற்று விமான நிலையத்தில் வரவேற்புப் பதாகைகள் இருந்தன. முதலில் ஒற்றைக்கொம்பன் காண்டா அப்புறம் உக்ரேனுக்குப் போகலாம். இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விலங்கு அசாமின் மாநிலவிலங்காகும். ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும். மூதாதைய மூக்குக்கொம்ன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது. உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்திய மூக்குக்கொம்பனின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கோலோசின் காலத்தில் இம் மூக்குகொம்பன்கள் தற்போதய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. முகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் மூக்குக்கொம்பன்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்: மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான், ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும். தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும். நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை.. இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள். அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும். இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும். இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும். ( வி பீடியா ) கடிக்கும் கொம்பனை விட்டு விட்டு இலக்கியம் பக்கம் போகலாமே இவ்வாண்டு அசாமிய கவிஞர் நில்மணி பூகன் ஜூனியர் 56வது ஞானபீட வென்றார். நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடமானது "இலக்கியத்திற்கான அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக" எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது. " 90 வயதான பூகன், சாகித்ய அகாடமி மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கவுகாத்தியைச் சேர்ந்த அவர் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சூரிய ஹேனு நமி அஹே எய் நொடியேடி , குலாபி ஜமுர் லக்னா மற்றும் கோபிதா ஆகியவற்றை எழுதியுள்ளார் . ஆனால் உரைநடை எழுதுவார். அவர் அஸ்ஸாமின் முன்னோடி கலை விமர்சகர்களில் ஒருவராக இருந்தார், மேலும் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில் பணியாற்றினார். பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார். இதற்கு முன் 1979 இல் பிரேந்திர குமார் பட்டாச்சார்யா மற்றும் 2000 இல் மாமோனி ரைசோம் கோஸ்வாமி ஆகியோர் விருது பெற்றவர்கள். contd வடகிழக்கு இந்திய பயணம் சுப்ரபாரதிமணியன் அத்யாயம் நான்கு தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது அது கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு ஊரில் வீசப்பட்டதாயும் அதில் அவரின் உதடு இங்கு வந்து வீழ்ந்து இந்தக்கோயில் உருவாகியிருப்பதாயும் சொன்னார். இன்னொரு சாமியாரிடம் கேட்டபோது அவர் போதை போல் இருந்த கணத்தில் அது உதடல்ல, உதடல்ல.. உதடு போல் இருந்த இன்னொரு உறுப்பு யூகியுங்கள் என்றார். நான் பதில் தெரியாத நான்காம் வகுப்பு மாணவனைப் போல் திருதிருவென் விழிக்க உதடு போல் இருக்கும் பெண்ணின் யோனி என்றார். கவுகாத்தியில் காமக்யா கோவில் பிரசித்தி பெற்றது. பல சுற்றாய் பாதைகளைக்கடந்து போனால் கொரானா தடுப்பூசி போட்டதற்கு அத்தாட்சி காட்டி கோயில் நிர்வாகத்திடம் அனுமதி சீட்டு பெற்றுதான் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் அந்த ஈஸ்வரனைச் சந்திக்கவிடாமல் செய்யும் சிரமங்கள் என்று குழுவில் இருந்த பல பெண்களின் கண்களில் கண்ணீர் சுரந்தது. ஐந்து மணி நேர வரிசை அல்லது 500 ரூபாய் பணச்சீட்டுடன் 1 மணி நேர வரிசை என்று இரண்டு வகை இருந்தது.சுழன்று சுழன்று போய் பாதாளத்தில் நீர்க்கசிவில் இருந்த ஈஸ்வரனைச் சந்தித்து கண்கள் கசிந்தவர்கள் பலர்...இவ்வளவு கஷ்டப்படுத்துகிற கடவுளைப் பார்க்கணுமா என்று நான் லேசாகக் கிண்டல் அடித்ததில் பலர் கவுகாத்தியின் கொடும் வெயிலில் முகத்தைக் கருக்கிக் கொண்டவர்கள் போல் முகத்தைக் காட்டினர் காமாக்கியா கோவில் . இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் சிலை இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது, அதனால்தான் காமக்கியா தேவியும் இரத்தப்போக்கு தேவி என்று போற்றப்படுகிறார். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள் , குழந்தை பாக்கியம் கிடைக்கும் , நிண்ட நாள் வயதுக்கு வராதா பிள்ளைகள் பூபு அடைவாரகள்....[6] இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது. அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது. அஸ்ஸாம்- கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில் அஸ்ஸாம் பற்றி சில செய்திகள். தற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்தியப் பிரதேசங்கள் வந்தன.[1] 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது. அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது. தனி நாடாக இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.[3] பிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது.[4] அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது. ( w p ) இது பழைய கதைதான்.பழைய சரித்திரம்தான் இன்றைய சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை அங்கு பல முறை பயணம் செய்தவரும் கல்கத்தாவில் 25 ஆண்டுகள் வாழ்ந்தவருமான பத்திரிக்கையாளரின் வி பா கணேசன் அவர்களின் வார்த்தைகளில் அப்படியே கீழே தந்திருக்கிறேன்: வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றின் 98 சதவீத எல்லைகள் சீனா, பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), பூட்டான் ஆகிய அண்டைநாடுகளைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலுமுள்ள நீர்மின் உற்பத்திக்கான திறன் 145 ஜிகாவாட்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 45% (57.6 ஜிகாவாட்ஸ்) வடகிழக்கில் உள்ளது. அதிலும் 46.9 ஜிகாவாட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் (காரணம், பிரம்மபுத்ரா). இருந்தபோதிலும் இயற்கை அழகும் வளமும் நிறைந்த இப்பகுதி இன்றளவும் இந்தியாவின் ‘சவலைப் பிள்ளை’யாகவே இருக்கிறது. முதல் பர்மா போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 1826-ல் அசாம் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது. அப்போது அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகியவை நிர்வாகப் பிரிவுகளாக இருந்தன. மணிப்பூர், திரிபுரா மன்னராட்சியின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் ‘திறை’ செலுத்திவந்தன. இவற்றின் அரச வம்சத்தினரும் பழங்குடிப் பிரிவினரே. அசாமின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகம் இருந்தது. எளிதில் அணுக முடியாத மலைப் பகுதிகளில் பழங்குடிகள் தங்கள் இனக்குழுத் தலைவர்களின் பாரம்பரிய முறையிலான நிர்வாகத்தின்கீழ் வாழ்ந்தனர். அசாம் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலை ஆங்கிலேயர் அறிமுகம் செய்தபோது, பழங்குடிகள் கூலி வேலைகளில் ஈடுபட மறுத்தனர். அவர்களுக்குப் பதிலாக, பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நலிவடைந்த மக்களையும் அன்றைய வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயத் தொழிலாளர்களையும் இப்பகுதியில் தொழிலாளர்களாக ஆங்கிலேயர் குடியேற்றினார்கள். மேலும் அன்றைய சூழலில் ‘அதிகம் படித்த’வர்களான வங்காளிகளை நிர்வாக ஊழியர்களாக நியமித்தனர். 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1947 வரை (இந்து-முஸ்லிம்) வங்காளிகளின் குடியேற்றம் இப்பகுதியில், குறிப்பாக அசாம், திரிபுராவில், தொடர்ந்து நிகழ்ந்தன. கல்வி, மருத்துவம், அரசு நிர்வாகம், நீதித் துறை எனச் சமூகத்தின் முக்கியப் பொறுப்புகளை அவர்கள் வகித்தனர். மறுபுறம் கிறித்துவ பாதிரிமார்கள் எட்டாத மலைப் பகுதிகளுக்குச் சென்று பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர். இதனால் இதர இனத்தவரின் (குறிப்பாக அஹோம், வங்காளி) ஆதிக்கத்தை எதிர்க்கும் கருத்துகள் உருவாகத் தொடங்கின. இதற்கு உரமூட்டும் வகையில் முதல், இரண்டாம் உலகப் போர்களில் பாரம்பரியமாகவே சண்டைக் கலையில் தேர்ச்சி பெற்ற நாகா, மிசோ இனத்தவர் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் இணைந்தனர். இந்தியா விடுதலை பெறவிருந்த நேரத்தில் பழங்குடி இனத்தவர், குறிப்பாக நாகா, மிசோ இனத்தவர் தங்கள் தனித்தன்மை கருதி இந்தியாவுடன் இணைய மறுத்தனர். பொதுவாகவே மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள், இனவாரியாக, அதற்குள் அடங்கியிருந்த குழுவாரியாக, தங்களுக்குள் சண்டையிடுவதும், தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பதும் அடிமைப்படுத்துவதும் தொடர்கிறது. இதில் தனிநாடு கோரும் நாகா, மிசோ இனத்தவருக்குப் போட்டியாக, போடோ, குக்கி, சக்மா போன்ற இனங்களும் களத்தில் இறங்கின. மறுபுறம் மணிப்பூர், திரிபுரா அரச வம்சத்தினர் தங்கள் இனக்குழுக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்தியாவுடன் இணைந்துகொண்டனர். விடுதலைக்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய வடிவில் நீடித்ததைத் தொடர்ந்தே பல்வேறு கட்டங்களில் அசாம் பகுதியானது அசாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் என ஐந்து மாநிலங்களாயின. இவற்றோடு மணிப்பூர், திரிபுரா இணைந்து ஏழு சகோதரிகளாக இப்பகுதி உருமாறியது. பின்னர் 1980-களில் வடகிழக்கு வளர்ச்சிக்கான கவுன்சில் உருவானபோது சிக்கிம் மாநிலமும் (புவி அமைப்பில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்தபோதிலும்) நிர்வாக வசதிக்காகச் சேர்க்கப்பட்டு ‘அஷ்டலட்சுமி’யாக உருமாற்றம் பெற்றது. இன்றுவரை இங்கு நீடிக்கும் இன மோதல்கள், அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதுபுதிதாக உருவாகும் ஒப்பந்தங்கள் இந்தியாவின் இதர பகுதிகளைச் செய்திகளாக மட்டுமே வந்தடைகின்றன. இன்றளவும் மத்திய அரசின் கையை எதிர்பார்க்கும் ‘சவலைப் பிள்ளை’களாக நீடிக்கும் இப்பகுதிக்கு இந்திய அரசு அளித்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டதன் விளைவாகவே, மக்களின் தேவைகள் நிறைவேறாத நிலையில், பயங்கரவாதக் குழுக்களின் களமாக, AFSPA என்ற கருப்புச் சட்டம் (விதிவிலக்காக திரிபுராவைத் தவிர) நடைமுறையில் உள்ள பகுதியாக நீடிக்கிறது என்கிறார் வீ பா கணேசன். அவர் விரிவாய் எப்போதாவது எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் ,. over
வடகிழக்கு இந்திய பயணமும் .. சுப்ரபாரதிமணியன் For my part I travel not to Go anywhere, But to go I travel for Travels sake The great affair Is to move - Robert Louis Stevenson ( 115 issue Feb 2022 ) ( Read during Chennai to Calcutta Indigo flight Indigo magazine ) வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும் ----1----சுப்ரபாரதிமணியன் “பூமியின் பாடல்கள்” என்ற தலைப்பில் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் கதைகளை நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் மொழிபெயர்ப்பு செய்திருந்தேன் அந்த பதினைந்து கதைகளைக் கொண்ட தொகுப்பை சாகித்திய அகாதமி வெளியிட்டிருந்தது ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 சிறிய மாநிலங்களைக் குறிக்கும் அருணாச்சல பிரதேசம் அசாம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் மேகாலயா சிக்கிம் மற்றும் திரிபுரா இவையாகும் .பண்பாடு சமூக மற்றும் அரசியல் தளங்களில் இந்த பழம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது . என் பூமியின் பாடல்கள் தொகுப்பு வந்தபின் அப்போது மேகாலயாவில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக் இருந்ததால் அவரை கொண்டு அங்கு அந்த நூலை வெளியிடலாம் என்று சில நண்பர்கள் முயற்சி செய்தார்கள். அந்த மாநில ஆளுநர் தமிழகத்திற்கு வந்தபோது திருப்பூருக்கு வந்திருந்தார் அப்போது அந்த நூலை அவரை கொண்டு அறிமுகம் செய்ய வெளியிட நண்பர்கள் முயற்சி எடுத்துக் கொண்டனர் .ஆனால் அரசியல் சார்ந்த கருத்துக்களின் காரணமாகவும் நான் இடதுசாரி அரசியல் சார்ந்த எழுத்தாளர் என்ற முறையிலும் அங்கு ஏற்பட்ட பிணக்குகள் அந்த விழா ஏற்பாடு செய்ய முடியாமல் போய்வட்டது சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் அரசியல்வாதிகளும் புறாவும் என்ற மொழிபெயர்ப்பு கவிதைகள் நூலை கனவு பதிப்பகத்தில் வெளியிட்டு இருந்தேன் அதில் மணிப்பூரை சேர்ந்த ரகு லைசாங்கதம் மற்றும் தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி) போன்றோரின் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்தி ருந்தேன் இதில் ரகு லைசாங்கதம் என்பவரை டெல்லியிலிருந்து சாகித்ய அகாதமி நிகழ்ச்சியிலிருந்துத் திரும்புகிற போது ரயில் பயணத்தில் சந்தித்தேன் அவர் தந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூலில் இருந்து அவரின் கவிதையை மொழிபெயர்த்து தொடர்வண்டி பயணத்திலேயே அவரிடம் கொடுத்தேன் மகிழ்ச்சியடைந்தார். ஒருமுறை வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றிற்கு சாகித்ய அகாதமி அழைத்திருந்தார்கள் ஆனால் அந்த சமயத்தில் அசாமில் வெள்ளம் மற்றும் மேகாலயா போன்ற பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. என்னால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்ட வேறு தேதிகளில் ஒரு முக்கியமான குடும்ப காரியம் காரணமாக செல்ல முடியவில்லை அதனால் மேகாலயா குறிப்பாகச் சில்லாங் செல்வது என்பது என்னுடைய நீண்ட நாள் திட்டத்தில் ஒன்றாக இருந்தது அது மார்ச் மாதம் நண்பர்களுடன் வாய்ப்பு ஏற்பட்டது தொடரும்/.... வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் கவிதைகளும் ----2----சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு மாநில மக்களின் குரல்களை வெளிப்படுத்தும் இந்தக்கவிதைகளை நான் பத்து ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்த்தேன் .இன்றையச் சூழலில் இன்னும் அவை பொறுத்தமான அரசியல் குரல்களாகவே விலங்குகின்றன. அரசியல்வாதியும் புறாவும் ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும் அன்பாகவும் இருந்தனர் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டிருந்தனர் வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது. அரசியல்வாதி சொன்னார்: “ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ அது என் அரசியல்” “ புறா மீண்டும் சொன்னது: “நான் என் இறக்கைகளை அடித்தபடி வானில் பறப்பேன்”” அரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான். புறா பறக்க இயலாமல் மெளனமானது. இப்போது வெள்ளைப்புறா அரசியல்வாதியின் சட்டைப் பாக்கெட்டில் இருக்கிறது. - ரகு லைசாங்கதம் (மணிப்பூரி) * காந்தியும், ரோபோவும் நீண்ட காலத்திற்கு முன் நேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார் அதன் வாய் ஒரே நிமிடத்தில் ஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும் பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார் பத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும் விக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்: ட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன் தில்லி செங்கோட்டையில் வெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும் கழுதைகள் கத்துகின்றன. வண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை துண்டுதுண்டாக்கி தின்னக் கொடுக்கிறார்கள். இன்று சாதுக்கள் அறிவிக்கிறார்கள்: பொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம், புது புத்தரை வைக்க. மகிழ்ச்சியுடன் கத்தினேன்: “வாழ்க பாரதம், வாழ்க”” - -தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி) இந்தியாவில் இயற்கை வளம் மிக்க மாநிலங்களில் குறிப்பிடத்தக்கவை வடகிழக்கு மாநிலங்கள். இந்த மாநிலங்களின் கலாச்சாரம் சமூக பொருளாதார அரசியல் குறித்த பல்வேறு அம்சங்களை நான் முன்பு மொழிபெயர்ப்பு ” பூமியின் பாடல்கள் “ என்ற நூலில் . கண்டேன் அந்த நூல் வெளிவந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை இந்திய சுற்றுப்பயணம் முடித்து திரும்புகிற போது அந்த கதைகளை நான் மீண்டும் படித்தேன .இப்போது அந்த கதைகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது சுலபமாக இருந்தது.அங்கு இருக்கிற சாதாரண மக்கள் அவர்கள் மத்தியில் திடமான நம்பிக்கைகள், மதம் சார்ந்த உணர்வுகள், தொன்மங்கள் சார்ந்த நம்பிக்கைகள், வறுமை சூழல் போன்றவை அந்த கதைகளில் முக்கிய அம்சங்களாக இருந்தன. இயற்கை வளமும் அழகும் கொண்ட இந்த பகுதி இன்றளவும் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகவும் இருக்கிறது அங்க இருக்கிற தோட்டத்தொழிலாளர் பிரச்சனைகளில் பல கோணங்கள் இருந்தன.எளிதில் அணுக முடியாத மலைப்பகுதிகளில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய நிர்வாகம் செய்து வருவதை கண்டு கொள்ள முடிந்தது காசி போன்ற பகுதிகளில் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும் தாய்வழிச் சமூகத்தின் கூறுகளை அவர்கள் பின்பற்றுவதும் தெரிந்தது அங்கு வங்க தேச மக்களின் குடியேற்றம் பல சமயங்களில் நிகழ்ந்தது. கிறிஸ்தவர்கள் பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர் மத மாற்றங்களும ஏற்பட்டன விடுதலைக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய படி வெடித்தன இன்று வரை இது நீடிக்கும் சூழல்கள் இன மோதல்கள் அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதாக ஒப்பந்தமாகும் சில விஷயங்கள் வழிவிட்டுக் கொண்டே இருக்கின்றன மற்றும் குடியேறிகளுக்கும் மரபான ,புராதான மக்களுக்கும் இடையில் கூடிய மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இந்த அம்சங்களை நான் அங்கிருக்கும் மக்களுடன் பேசுகிறபோது அறிந்துகொண்டேன் இந்த “ பூமியின் பாடல்கள் “ நூலின் கூட அந்த அம்சங்கள் இருப்பதை நான் மறுவாசிப்பு செய்கிறபோது அறிந்துகண்டேன் பிரம்மபுத்திரா நதியின் விகாச்த் தன்மையும் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோரங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து அந்த பகுதியில் நாசமாவதையும் கூட அறிந்து கொள்ள முடிந்தது எல்லை பிரச்சனை என்பது காலப்போக்கில் எல்லை நிர்ணயம் என்பது கொண்டிருக்கிறது தனி மாநிலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் விளைவு இந்திய அரசு அசாம் மாநில அரசு மத்தியில் பதட்டமான நிலையே பல ஆண்டுகள் கொண்டிருந்தது. அவ்வப்போது பக்கத்திலிருந்து குடியேறும் மக்களுடைய பிரச்சனைகளும் கிழக்குப் பாகிஸ்தான் கலவரங்களால் வங்காளிகள் அகதிகளாக குடியேறி வரும் சார்ந்த பல்வேறு அம்சங்களை அதனுடைய கதைகள் சொல்லியிருக்கின்றன. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் வெறும் மலைக் குன்றுகளையும் நிகழ்ச்சிகளையும் குகைகளையும் இயற்கை சார்ந்த பல்வேறு அம்சங்களையும் இந்த வடகிழக்கு இந்தியாவின் பயணத்தில் நான் அறிந்துகொள்ள முடிந்தது . இயற்கை பிரம்மாண்டமானது அது அதனோடு மனிதன் இணைந்து வாழ்வது தான் மனிதனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.அப்படி இல்லாதபோது துயரங்கள் தான் அதிகமாகின்றன. இயற்கையை வெற்றி கொள்ள மனிதன் முடியாது என்பதை இந்த பயணத்தில் நான் தெரிந்து கொண்டேன். வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில், ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலைக்கு வரவேண்டியது ஒரு அருவியை பார்க்க வேண்டுமெனறால் தூரம் இருந்துதான் ரசிக்க வேண்டும்,கனகத்துள்தான் அவை அடங்கிப்போயிருக்கும் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள்,ஒரு மலையில் ஏறி அடுத்த மலையில் இறங்கவேண்டும் சாலை போடுவது பராமரிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருப்பதால் பயணங்கள் மிகுந்த தாமதமாகத்தான் ஆகின்றன .ஆனால் அந்த இயற்கையின் பேரழகை ரசிப்பதற்கு எதுவுமே தடை இல்லை என்பதை இந்த வடகிழக்கு இந்திய பயணம் உணர்த்தியது. அசாமில் சில நாட்களும் சில்லாங்கில் சில நாட்களும் சிரபுஞ்சியில் சில நாட்களுமாக வடகிழக்கு இந்திய பயணம் அமைந்திருந்தது .இன்னும் மணிப்பூர் நாகாலாந்து உட்பட சில மாநிலங்களில் பயணப்பட வேண்டி இருக்கிறது அடுத்த பயணம் அதற்கான ஆயத்தங்களையும் வழிமுறைகளையும் சொல்லும் என்று நினைக்கிறேன் நான் மொழிபெயர்த்த இரண்டு மணிபூரி கவிதைகளை உங்கள் பார்வைக்கு மேலேத் தந்திருக்கிறேன் ( தொகுப்பு : அரசியல்வாதியும் புறாவும் மொழிபெயர்ப்புக்கவிதைகள்/ சுப்ரபாரதிமணியன் வெளியீடு : கனவு பதிப்பகம், திருப்பூர்) இந்த அரசியல் குரல்களின் யதார்த்த நிலையை பின்னால அலசிக்கொள்ளலாம் Contd..
ஜாய் ஜோசப் :அப்பாவின் மரணம் கவிதை தமிழில் சுப்ரபாரதிமணியன் மூலம் மலையாளம்/ ஆங்கிலத்திலிருந்து 0 அப்பா தினசரிகளில் எல்லா செய்திகளையும் படிப்பார் அஞ்சலி செய்திகளை விசேஷமாக நாட்டின் பலரும் மரணமடைந்த செய்தி நாங்கள் அறிந்தது அப்பாவின் செய்தித்தாள் வாசிப்பு மூலமே இன்று செய்தித்தாளில் அப்பாவின் மரண செய்தி அப்பா மரண செய்தி மீது அப்பாவின் உடைந்த கண்ணாடி கிடக்கிறது எங்கிருந்தாலும் அப்பா அவரின் இந்த மரணச் செய்தியை தினசரியில் வாசித்து இருப்பார் * தீபன் சமீபமாய் பாடல்களையும் எழுதி வருகிறார். சமீபத்திய பாடல் ஒன்று . ஏதாவது மெட்டை தாங்களே போட்டுக்கொள்ளலாம் 0 R Seepan Tirupur -song சரி சரி எல்லாம் சரி, சரி சரி தானுங்க... சரி தானுங்க... சரி தானுங்க... அரச மரத்து பிள்ளையாரு, மேடை துனைய வந்தாருங்க... காண வந்த பக்தர்களுக்கு மரத்த சுத்த விட்டாருங்க.... மணி அடிச்ச சத்ததுல, கூட்டு பறவை பறந்துருச்சுங்க... சரி தானுங்க, சரி தானுங்க.. தொப்பு தொப்புனு எச்சம் விழுக, சட சடனு ஓடுறாங்க... வேலை வெட்டி இல்லையினு, சிரிச்சு நக்கல் பண்ணாதீங்க... இருந்த வேலை போச்சுனு, இரக்கப்பட யாரும் இல்லிங்க... சரி தானுங்க, சரி தானுங்க, எல்லாம் சரி தானுங்க... தினமும் பொழுது விடிந்து மறையும், வயிறு கடுக்க பசிக்குதுங்க... தானம் தர்மம் காத்த மனுச, தொன்னை சோறால் நிறஞ்சுதுங்க.. கோவில் கோபுரம் பார்த்த கரங்கள், இனி மெல்ல இறங்கும் பாருங்க.... சரி தானுங்க, சரி தானுங்க.. சரி சரி எல்லாம் சரி, சரி தானுங்க சரி தானுங்க சரி தானுங்க....
எழுத்து, வாசிப்பு திரைமொழி ஊடகபயிலரங்கு சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பாக இன்று 11/04/2022 குடியரசு தலைவரின் கதா விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த நாவல் விருது பெற்ற எழுத்தாளர் திரு சுப்ரபாரதிமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு திரைமொழி ஊடக பயிலரங்கு நடத்தினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் க. இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார். காட்சி தொடர்பியல் துறையின் ஆசிரியர் முனைவர் கி. ஜெயராஜ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் செய்தி பிரசுரங்களை வைத்துக்கொண்டு சிறுகதை உருவாக்கம் நடைபெற்றது. மேலும் மாணவர்களின் கட்டுரைகள் கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பெறும் 'கனவு' இலக்கிய பத்திரிக்கையில் இடம் பெரும் பொருட்டு ஊக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை எழுத்து வடிவில் சமூகத்திற்கு கொண்டு செல்லும் இந்த அரிய ஊடக தள வாய்ப்பு எதிர்கால வேலைவாய்பிற்கு ஊன்றுகோலாய் அமைந்துள்ளது.
வாரிசுகள் : சுப்ரபாரதிமணியன் ” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ” “ விதவிதமான க்ளயண்ட்ஸ்.. குடிகார நாய் ஒருத்தன் எல்லார்த்தையும் கஷ்டப்படுத்தறான். தற்கொலை பண்ணிக்கவன்னு மிரட்டல் வேற பண்றானம்மா.அதெப்பத்தி பேசிகிட்டிருந்தன்.” ”குடிகாரனோட ஒண்ணு சேத்தி சொன்னீங்களே . அது உங்களுக்கும் சேத்தா ‘ தேவராஜன் பெருமூச்சு விட்டுக்கொண்டார். ” செரி.. உள் ரூம்லே போயி உட்காருங்க. வந்தர்ரன்.. மகளே உள்ள போயி உட்காரு. வந்தர்ரேன்” சியாமளா தளதளத்துக் கொண்டிருந்த சேலையை சரிசெய்து கொண்டு உள் அறையைப் பார்த்தாள். அவளின் சேலைத்தலைப்பைப் பிடித்திருந்த குழந்தை தன் மிரட்சிப்பார்வையைத்தவிர்த்து இயல்பாகிப் புன்னகைத்தது. சியாமளா வாசலில் நின்று பார்த்த்போதே நாலைந்து பேர் மும்முரமான விவாதங்களில் இருப்பது தெரிந்திருந்தது. தேவராஜன் அவர்களைப் பார்த்த கணத்தில் அங்கிருந்தே வா மகளே என்றார். அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டு புருவம் உயர்த்துவது போல் பார்த்தார்கள். மகளே என்ற அவரின் விளிப்புதான் அந்த புருவம் உயர்த்தலுக்குக் காரணம்.புருவம் உயர்த்தினவர்களின் மத்தியில் மீண்டும் சென்று உட்கார்ந்து கொண்டான். முன்வாசலில் இருந்த நாய் குரைத்து புது ஆள் யாரோ வருவதைச் சொன்னது .” சும்மா இருடா கருப்பா. சும்மா சும்மா விசுவாசத்தைக்காட்டிக்காதே “ தேவராஜன் உரக்கச் சப்தமிட்டார். அந்த ஆள் மறைந்து போனார். நாயின் குரைப்பும் நின்று போய் விட்டது. லேசான சப்தத்தில் அந்த விவாதம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு போல் குரல்கள் கேட்டன. முன் வாசலில் கட்டப்பட்டிருந்த கோழியொன்று கரகரத்து அதன் இருப்பைக்காட்டிக் கொண்டிருந்தது. . “ என்ன திடிர்ன்னு மகளே.” தேவராஜன் உள் அறைக்கு வந்து உட்கார்ந்தார். குழந்தையின் எதிரில் அரைவட்ட நாற்காலியில் இடமிருந்தது “ இந்தப்பக்கம் வந்தோம் . ஸ்கூல் தொறக்கப்போவுதே ஒரு நல்ல பேக் வேண்டியிருந்துச்சு.. வாங்குணம்” ” அப்பாவுக்கு பேக்கெ காட்டு மகளே” “ அங்கிருக்கு “ “ எங்கம்மா.” “ புத்தகம் வாங்குன இடத்தெலேன்னு சொல்லு “ “ புத்தகம் வாங்குன எடத்துலே எதுக்கு வுட்டுட்டு வந்தீங்களாமா” “ போறப்போ எடுக்கத்தான் ” “ இங்க கொண்டாந்திருந்தீங்கன்னா நானும் பாத்திருப்பன்லே “ “ நெக்‌ஷ்ட் டைம் கொண்டாரம் “ குழந்தையின் பார்வை எதிரிலிருந்த குழலூதும் கிருஷ்ணன் படத்தின் மீது படர்ந்த்து. விரல்களை வாய் அருகில் கொண்டு சென்று குழல் பாவனையைச் செய்தது. அதன் உதடுகளில் புன்னகை தவழ்ந்து மறைந்தது. “ நீயும் கண்ணன் ஆகணுமா “ “ இல்லே கிருஷ்ணன் “ “ ஓ கிருஷ்ணன் ஆகணுமா “ “ அதெப்படி நான் கிருஷ்ணன் ஆகறது. ராதாவா வேண்ணா ஆகலாம் ” “ அதெல்லா உனக்குத் தெரியுமா.. “ பின்பக்கமிருந்த பீரோவைத்திறந்து பணத்தை எடுத்து ஒரு கவரில் போட்டு குழந்தையிடம் தந்தார்.அந்த பீரோவில் ஒட்டப்பட்டிருந்த வெளிநாட்டுக்குழந்தை முகம் அந்தப்பக்கம் போய் நின்று கொண்டது. “ ஸ்கூல் பீஸ் கட்டறதுக்கு பணமெல்லா வேணுமே. வாங்கிக்க பாப்பா” குழலூதும் கண்ணன் மேலேயே அப்பெண்ணின் பார்வை நிலைத்திருந்தது. ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தபடி “ ”அம்மாகிட்டதா இருக்கே “ என்றது. குழந்தையின் பின்பக்க மயிர்கள் கலைந்து கண்களை மறைத்ததை சியாமளா வலது கையால் தள்ளி விட்டாள். “ இருந்தா என்ன .. அப்பாவும் ஸ்கூல்காரங்களுக்குத் தரணுமில்லையா “ முன் அறையில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வை ஏகதேசம் அவர்களின் மீதே இருந்த்து. பத்துக்கண்கள் உட்கார்ந்திருந்த நாலு கண்களின் மேல் பதிந்திருந்தன. “ குடிகாரங்களெப்பத்தி ஏதோ சொல்ல ஆரம்பிச்சீங்க.. கவுன்சிலீங் கூட பண்ரீங்களா.. “ “ அனுபவம்தா கொஞ்சம் ஆறுதல் வார்த்தைகளா வரும். அதுக்குன்னு தியரி ஒண்ணும் தெரியாது. போற போக்குலெ வந்துது” “ எப்பவிருந்து இது ..இந்த கவுன்சிலிங்கெல்லா” ” எல்லாம் சேந்ததுதா ..ஒவ்வொண்ணும் பிரிச்சுபாக்க முடியுமா “ “ செரி வர்ரம் . நெறையப் பேர் இருக்காங்க. காத்திட்டிருக்காங்க “ சியாமளா எழுந்து குழந்தையின் இடது கையைப்பிடித்தாள். அது வலது கையில் அவர் தந்த கவரைப்பிடித்தபடி அவளைப் பார்த்தது. சுவர் ஓவியம் பார்வையிலிருந்து சற்றே விலகிப்போனது.சுவர் ஓரத்து சுவரின் பிய்ந்த காறை மெல்ல விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. முன் வாசலுக்குச் சென்று செருப்பைப் போட்டுக் கொள்ளும் போது குழந்தைத் திரும்பி பார்த்து “ டாடா டாட் “ என்றது. ” பை ..மகளே ‘ நின்றபடியே தேவராஜன் தலையை நிமிர்த்தியபடி வலது கையை உயர்த்தினார். புருவங்களைத் தாழ்த்தி சகஜமாகிக் கொண்டவர்கள் போல் அந்த ஐவரும் தேவராஜைப் பார்த்தனர். ஏதோ விளக்கம் கோருவது போல் அவர்கள் பார்வை தேவராஜ் மேல் நிலைத்தது. “ இன்னிக்கு எனக்கு முடியுமுன்னு தோணலே” “ என்ன உடம்பு செரியில்லையா..” “ டாக்டர் கிட்ட செக்கப்புக்குப் போயிட்டு வந்தன். “ அறையின் குளிர்சாதனப்பெட்டியின் ரிமோட்டை எடுத்து குறைப்பதற்கான ஆயத்ததில் ஈடுபட்டவன் போல் தேவராஜன் இருந்தார். பின்பக்க திரைச்சீலை அவனின் முகத்தில் பட்டு தொந்தரவு செய்தது. .” எதுவா இருந்தாலும் புரோக்கர்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே “ “ பணமும் தேவையாயிருந்துச்சு.உடனே அவர்கிட்ட எதுவும் சொல்ல முடியலே ..” “ செரி அந்த புரோக்கர் நாய் கிட்ட சொல்லிட்டுப் போ. வேற ஆளெ அனுப்பச்சொல்லி ..” “ சொல்லீர்ரன் “ “ என்னமோ சோகத்திலே இருக்கே. ஒரு ஸ்மால் அடிக்கறையா “ “ அதுக்கும் மூடு இல்லே” “ செரி.. காசுதா வேணுங்கறே.. வாங்கிட்டுப்போ. என்னன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுபோ “ “ டாக்டர் இனிமேலையும் அபார்ஷன் ஒடம்புக்கு ஒத்துவராதுன்னார். உசிருக்கே ஆபத்துன்னார் “ “முந்தி எத்தனை தரம் பணியிருப்பே “ “ ரெண்டுதரம் .உசிரைக்காப்பாத்துன்னார்“ “ உசிரா.. கொழதையான்னு யோசிச்சு முடிவு பண்ணிரு “ “ உசிர் வேணுமுன்னாலும் குழந்தையும் காப்பாத்தணும் .. யார்துன்னுதா.. .. யார்துன்னு சொல்றது. கொஞ்சம் ஜாக்கிரைதியா இருந்திருக்கலா “ “ ஜாக்கிரதைங்கறது எப்பவுந்தா இருந்திருக்க வேண்டியிருக்கு. ஜாக்கிரதையா இருந்துத் தொலச்சிருக்கலாமே “ கண்ணாடி டம்ளரிலிருந்து வாயை எடுத்தவன் அதன் கசப்பை உள்வாங்கிக் கொண்டவன் போல் முகத்தைச் சற்றே சுளித்தான். “ என் உசிரோட இன்னொரு உசிரும் .. அது யார்துன்னு தெரியாமெ” “ அதுக்கு நான் தகப்பனா இருக்கட்டுமா “ “ கிண்டலா கேக்கறீங்களா ” ”பல சமயங்கள்லே கிண்டலா கேட்டிரூக்கன். இப்போ சீரியஸ்சாத்தா சொல்றேன் “ “ எப்பிடிங்க “ “ நீ கேட்டெ .. நான் சொல்றேன். நீயும் சாகக்கூடாது. அந்தக்குழந்தைக்கும் அப்பன் ஒருத்தன் வேணும். அது நானா இருந்துட்டுப் போறன் “ “ முடியுமா. யார் ஏத்துக்குவாங்க “ “ இதுலே ஏத்துக்க என்ன வேண்டியிருக்கு. இந்த நாப்பத்தஞ்சு வயசிலெ என்ன யார் எதுக்குன்னு கேட்டிருக்காங்க.என்னைப் பத்தி எல்லார்த்துக்கும் தெரியும். தெல்லவாரித்தனமாத்தா வாழ்க்கை போயிட்டிருக்கு. குடியும் பொம்பளைகளும்ன்னு. பெரிசா நல்லதா எதுவும் பண்ணுனதில்லே..உனக்காச்சும் செய்யலாமே. திடீர்ன்னு ஞானோதயம்மன்னு கூட சொல்லலாம் “ “ என்னெக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா..” “ அதெல்லா இல்லே. உன் கொழந்தைக்கு மட்டும் தகப்பன்கற ரோல் . அவ்வளவுதா. அந்தக் கொழந்தையெ வளர்க்கறதிலெ தகப்பன் பேருன்னு ஒண்ணு வேணும்பாரு. அந்த அவதூறிலிருந்து வாழ்க்கை முழுவதும் உன்னெக்காப்பாத்த மட்டும் என்னாலே முடியும்ன்னு தோணுது ” “ அது போதுங்க “ “ செரி ..நீ போலாம். அந்த புரோக்கர் கிட்ட சொல்லிட்டுப் போயிரு .வேற ஆளெ அனுப்பச் சொல்லி ” குளிர் அறையை மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பாட்டிலின் வாசம் அறையெங்கும் நிரம்ப ஆரம்பித்தது. வாகனங்களின் நெரிசலில் அந்தக்குறுக்குச்சந்து திமிறிக்கொண்டிருந்தது .இருபுறமும் மனிதத்தலைகள் ஹெல்மெட்டுடன் மொட்டையாகக் காணப்பட்டன. ” டாட்.. பை “ தேவராஜன் எழுந்து வந்து வாசல் அருகில் நின்றார். இரட்டைச் சக்கர வாகனம் ஒன்று குறுக்காய் நின்று இடைஞ்சல் செய்து கொண்டிருந்தது.இருபுறமும் ஜடையை விரித்தப்பெண் போல் வாகனங்கள் நின்றிருந்தன. ‘ பை டாட்.. “ “ ஓகே.. மகளே “. குழந்தைக்கு வாகனங்களில் கவனம் என்பது போல் அதன் பார்வை இருபுறங்களிலும் நகர்ந்தது. “ ரெண்டு பேர்த்தே கூடச் சேத்திட்டையுன்னு கேள்விப்படேன்.” “ ஆமாங்க. அதைப்பத்தி இன்னிக்குச் சொல்லனும்ன்னு நெனச்சேன். கூட்டமா இருந்ததுனாலே ஜாஸ்தி பேச முடியலெ..” “ அதுதா..” “ பக்கத்து வீட்லெ இருந்த குடிகாரன் ஒருத்தன். உங்க பாஷையிலெ ஒரு குடிகார நாய். பெரிய தொந்தரவாப் போச்சு. அவனை பொறுத்துக்க முடியாமெ அவன் பொண்டாட்டி மண்ணெண்னெய் வெச்சு அவனைக் கொளுத்திட்டு அவங்களும் செத்துட்டாங்க. அவங்களோட ரெண்டு பொண்ணுக இப்போ என்கூடத்தா இருக்காங்க .. வேற அவங்க உறவினர்கள் யாரும் அந்தப் பொண்ணுகளெக் கண்டுக்கலே. அதுதா” “ எப்பிடி பணரீதியா சமாளிக்க முடியும்ன்னு தோணுதா..” “ நீங்க வாங்கிக் குடுத்த ரிப்கட்டிங்க் மிஷின் ஓரளவுக்கு பிரயோசனமா இருக்கு. நாலு பேர் சாப்படறதுக்கு ஆகற வருமானம் அந்த மிஷின் போடுது...” வாகனங்கள் மெல்ல நகர ஆரம்பித்தன. வலது பக்கத்தில் இருந்த பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு தேவராஜின் பார்வையில் சிறு வீடாய் வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.வாகனங்களின் திமிறலில் அந்த வீதி அடைபட்டிருந்தது. TAMIL WRITER SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003