சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 30 மார்ச், 2022
The hindu tamil Book review section ? From subrabharathimanian
தாங்கள் 45 ஆண்டுகளாக எழுதி வருகிறீர்கள். தி இந்து 30 என்று குறைத்து குறிப்பிட்டிருக்கிறது என்று வேலூர் சிந்து சீனு தொலைபேசியில் இன்று இந்து தினசரி பார்த்துவிட்டு பேசினார்
ஆம். என் முதல் சிறுகதை 1977ல்
திருப்பூர் சி பி எம் கட்சித் தோழர்கள் நடத்திய விழிப்பு இலக்கிய இதழில் வெளியானது.சுதந்திர வீதி கள் தலைப்பு. நெருக்கடி கால நிலையில் ஒரு கால்பந்தாட்ட வீரருக்கு ஏற்பட்ட காவல் துறை அத்துமீறல் பற்றிய கதை அது. அதற்கு முன்பு கோவை பூசாகோ கல்லூரியில் எம் எஸ் சி படித்த போது தமிழ் த் துறை நடத்தி ய புதுவெள்ளம் மாணவர் இதழில் சிலது எழுதினேன்
2
சி பி எம் தோழர் கணேசன் விழிப்பு இதழ்
சி பி எம் கட்சியினர் இதழ் அல்ல என்று குறிப்பிடுகிறார். கட்சி தோழர் கள் சிலர் இருந்தனர் என்று கூறினார்
ஆம்.. அதன் ஆசிரியர் குழுவில் கோவை
சி ஆர் ரவீந்திரன். கோவை ஞான பாரதி. பேன்டம் நடராஜன். பாவெல் துரை ஆகியோர் இருந்தனர்..பாவல் மறைந்து விட்டார் சமீபத்தில். கட்சி வட்டாரம் தாண்டி பல வெவ்வேறு வகை
இடதுசாரி ப்படைப்பாளிகள் அதன் எழுதினார் கள். நானும் பல கதைகள் எழுதினேன். செம்மலர் பத்திரிகை யும் கட்சியும் விழிப்பு இதழுக்கு கருப்பு கொடி காட்டி நிறுத்த வைத்தனர் என்று பரவலாக ப் பேசப்பட்டது
3
செம்மலர் பத்திரிகை யும் கட்சியும் விழிப்பு இதழுக்கு கருப்பு கொடி காட்டி நிறுத்த வைத்தனர் என்பதை இரு சி பி எம் தோழர்கள் மறுத்திருக்கின்றனர். விழிப்பு பொருளாதாரச் சிரமங்களால்தான் நிறுத்தப்பட்டது. கட்சித் தலையீட்டால் அல்ல என்று குறிப்பிட்டனர்
“
புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்
சி ஆர் ரவீந்திரன்
முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின் சிறந்த நாவலுக்காக சுப்ரபாரதிமணியனின் ” அந்நியர்கள் “என்ற நாவல் பரிசு பெற்றிருக்கிறது
மண்ணில் உயிர் வாழ்க்கை எங்கேயும் எப்போதும் ஓயாமல் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது .அதில் மனித இனம் தனது சிந்தனைத்திறன், தனது தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டே தொடர்ந்து வாழ்ந்து வருகிறது .இந்த வாழ்க்கை தான் அதனுடைய வாழ்க்கை வரலாறாக படைப்புகளில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாறு நெடுகிலும் மனிதன் இயற்கையை முகர கற்றுக்கொண்டே இருக்கிறான் .
அதில் முதன்மையான முயற்சியாக இருப்பது புலம்பெயர்தல் என்ற சிறப்பு மிகுந்த முயற்சி.. அந்த இடையறாத முயற்சியால் பன்முகத்தன்மை கொண்ட மனித வகைகள். ஒன்று கலந்து ஒருங்கிணைந்து வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன .இனம் நிறம் உருவம் மொழி மதம் என்று தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கிவருகிறது .தனது பாதுகாப்பிற்காக அதனுடைய தனித்தன்மையையும் ஒருங்கிணைந்த மனமும் முறைகளையும் காப்பாற்றிக் கொண்டே நிலப்பரப்பு முழுவதுமாக வாழ்க்கையை தொடர்கிறது.
வாழ்க்கையில் நிகழும் சிக்கலான மனப் பிறழ்வை முதன்மைப்படுத்தி அவலமான வாழ்க்கையை சித்தரிக்கும் இலக்கியப் போக்கில் இருந்து மாறுபட்டு ஒரு யதார்த்தமான வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கும் சுப்ரபாரதிமணியன் பொதுவாக நிகழ்கால பிரச்சினைகளையே , இயற்கை சீரழிவுப் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டு இயங்கி வருபவர் அப்படித்தான் இந்த “அந்நியர்கள்” நாவலை வடிவமைத்திருக்கிறார் .
சென்ற சில நூற்றாண்டுகளில் அரும்பியத் தொழில்நுட்பங்கள் வேகமாக பரவத் தொடங்கின அதன் விளைவாக நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கை முறை மிகப்பெரிய அளவிற்கு மாறிக்கொண்டிருக்கின்றது .அதனால் உலகளாவிய அளவில் மனிதர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
அதைத் திருப்பூர் போன்ற தொழில் துறை நகரங்களில் பரவலான முறையில் வெளிப்படையாகக் காணலாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியில் குறிப்பாக பின்னலாடைத் தொழிலில் முதன்மையாக இருந்து வரும் இந்த தொழிலில் ஒரு சாராருக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது .10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செல்வாணியையும் தந்து வருகிறது .இந்தியத் துணைக்கண்டம் சாதி மத இன நிற மொழியில் மட்டும் அல்ல. கலாச்சார பண்பாட்டு வாழ்க்கையிலும் மாறுபடும் மக்களை தன் அளவில் கொண்டுள்ளது .ஒன்று கலந்து வாழும் வாழ்க்கை முறை மக்களை பல வகைகளிலும் பாதிக்கக்கூடிய வழிவகைகளை சிக்கலுக்கு உள்ளாகின்றன. வளர்ச்சியடையாத மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் மக்களை உடல் ரீதியாகவும், பாலியல் வன்முறை ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சுரண்டி வரும் தொழில் மற்றும் வாழ்க்கைச் சூழலில் குறிப்பாகப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் வாழ்க்கை நிலைமைகளை மட்டும் அல்லாமல் மற்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அடையாளப்படுத்துகிறது இந்த மையம் சார்ந்த தன்னுடைய இந்த புதிய முயற்சியை குறித்த தனது நோக்கத்தையும் பார்வையையும் இவர் வெளிப்படுத்துகிறார்
துளசி என்ற வடநாட்டுப் பெண்ணின் கதை இது. அவள் வாழ்க்கையும் அவருடன் சேர்ந்த பிற இடம்பெயர்ந்து வந்த மக்களின் வாழ்க்கையையும் உள்ளூர் மக்களின் பார்வையில் இடம்பெயர்ந்தோர் சிரமங்களையும் இந்த நாவல் சொல்கிறது வளர்ச்சியின் வேகத்தை சாதாரண மனிதர்களின் பயணம் என்ற வகையில் நாவலில் சொல்லியிருக்கிறார்.. நாவல் முழுவதும் பல வகையான காட்சிகள் அடையாளப் படுத்தப் படுகின்றன அதைப்போலவே உள்ளூர் வெளியூர் மனிதர்களின் சந்திப்பு மூலம் வேறுபட்ட நடத்தை பழக்க-வழக்கங்கள் பலவகையான மனச்சிக்கல்கள் காட்டப்படுகின்றன. இந்த வகை யதார்த்தப் போக்கு வாசகனின் வாசிப்புக்கு மிகவும் ஏற்றதாகிறது.
வாழ்க்கையின் அடித்தளத்தில் வாழ வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த , உள்நாட்டு பின்னலாடை தேவைகளை நிறைவு செய்து பெருமளவுக்கு கொண்டு செல்லும் மனிதர்களில் ஒருவர் மையமாகக்காட்டப்படுகிறார் துளசியின் பார்வையில் .அங்கங்கே காணப்படும் சிறிய , பெரிய நடை பாதையோர கடைகளில் பொருட்களை வாங்கி போட்டியிடும் மக்கள் கூட்டத்தில் வாங்கும் திறனை சித்தரித்திருக்கிறார். அவ்வப்போது நகரில் பல பகுதியில் காணப்படும் சாவுகள் பற்றிய சித்தரிப்புகளையும் நாவலில் இவர் பதிவு செய்திருக்கிறார் .பக்கம் .
வழியில் யாராவது இப்படி சுலபமாக பிணமாக கிடப்பது சமீபத்தில் அதிகரிப்பதை அவர்
அறிந்திருக்கிறார் ..பலவகைகளில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட பெண்கள் சாலைகளில் கிடப்பார்கள் .கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எங்காவது கிராம ஓரங்களில் கிடப்பார்கள் சிதைந்த நிலையில் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக சிரமப்பட வேண்டியிருக்கிறது உ.டம்பும் முகமும் சிதைந்திருக்கும்போது அப்படி அடையாளம் காண்பதற்காக துளசியும் தேடிப் பார்த்திருக்கிறாள் .பாலியல் வன்முறைக்கு உள்ளான பல பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள் அவர்களின் உதவிக்கு சில சங்கங்களும் இருக்கின்றன .ஒரு புதிய சூழலில் சிரமம் ஏற்படுகிறது பெண்களுக்கு
. இதைத்தவிர வேறு வழிமுறைகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை சட்டென காட்சி மாறிவிட்டது இப்போது புதிய காட்சியில் அவள் மட்டும் தனியாக இருந்தாள் அவளைச் சுற்றி வளைத்த நான்கு பேரையும் காணவில்லை தன்னோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தமோகினியையும் காணவில்லை .இது போல் பல மோகினிகள் நாவலில்
முதலாளி தங்களை கொத்தடிமை போல நடத்தும் முறை யில்சில பெண்கள் வருகிறார்கள் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக , அதிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மாட்டுத் தொழுவத்தில் தங்கி இருப்பதாகவும் அது சொன்னது முகம் மறைக்கப்பட்ட அவரின் தோற்றம் குறித்து அந்த செய்தித்தாளில் செய்தி வழியாக இருந்தது என்று ஒரு பகுதி சொல்கிறது
துளசியின் வாழ்க்கை தாறுமாறாகப் போவதை நாவல் காட்டுகிறது. அவள் ஒரு குறியீடு.அவளின் அலைதல் புலம்பெயர்தலின் ஒரு குறியீடாகிறது.
இது போன்ற தொழிலாளர்கள் அவலம் நிறைந்த இந்த நாவல் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை சரியாகக் குறிப்பிடும் ஒரு முக்கியமான நாவலாக விளங்குகிறது. இந்த வாழ்வு ஒரு வேலைக்காக, சாப்பாட்டிற்காக ஆனால் இங்கே அவர்களின் திறமை, வாழ்க்கை உரிமைகள் தொலைந்த வாழ்க்கை பற்றியும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து முன்வைக்கிறது
இந்த நாவலுக்குக் கிடைத்திருக்கும் பரிசு முயற்சியை தொடர்ந்து செய்துவரும் எழுத்து அறக்கட்டளையும் இதைப் பதிப்பித்த கவிதா பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள்
(ரூபாய்250 கவிதா பதிப்பகம் சென்னை வெளியீடு )
திருப்பூரின் மூத்த எழுத்தாளர்களுக்குப் பாராட்டு
திருப்பூரைச் சார்ந்த மூத்த எழுத்தாளர்களுக்கு வியாழன் மாலை புது ராமகிருஷ்ணாபுரம் அரசு பள்ளிக்கு எதிரில் நடந்த கூட்டத்தில் திருப்பூர் இலக்கிய நண்பர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது
திருப்பூரைச் சார்ந்த மூத்த எழுத்தாளர்கள் மு. குழந்தை ( வயது 86 ), பழ விசுவநாதன் ( வயது ( 81 ) ஆகியோருக்கு ” கனவு விருதை “ எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வழங்கிப் பாராட்டினார்
மு. குழந்தை ( வயது 86 ) கவிதைகள் ,சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 16 நூல்கள் எழுதியுள்ளார் கரூரில் ஆசிரியராகப்பணி புரிந்து ஓய்வு பெற்றவர்
பழ விசுவநாதன் ( வயது ( 81 ) ராணுவத்தில் பணிபுரிந்தும் திருப்பூர் போன்ற பல் வேறு நகரங்களில் நகராட்சிப் பொறியாளராகப் பணிபுரிந்தும் ஓய்வு பெற்றவர் .. இலக்கிய விமர்சனக்கட்டுரைகள் எழுதியிருப்பவர் .
இந்த விருது வழங்கும் கூட்டத்தினை கனவு இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
செய்தி : சுப்ரபாரதிமணியன் 9486101003
முயற்சிகள் வெல்லட்டும்
பெரும்பாலும் இயற்கைப் பின்னணியே ஹைக்கூவின் மையமாக இருக்கிறது. இயற்கையின் மீதும் மானுடத்தின் வீதம் எழுத்தாளர்கள் தாங்கள் கொண்டிருக்கும் விருப்பத்தை சுருக்கமாக வெளியிடுகிறார்கள். இயற்கையைத் தழுவிய எண்ணங்கள் தொடர்ந்து ஹைக்கூவில் இடம்பெற்றுவருகின்றன ஆனால் அந்த அடிப்படைகளை மீறி தற்சமயம் தமிழில் வரும் ஹைகூக்கள் உள்ளன .பல்வேறு மீறல்களை கொண்டிருக்கின்றன
இயற்கையை மனிதன் வெற்றி கொள்ள முடியாது என்பதை இன்றைய சுற்று சூழல் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பது நம் அடிப்படையாக இருக்கிறது. அந்த எண்ணங்களை விஜயன் அவர்கள் தொடர்ந்து தன் படைப்புகள் மூலமாக சொல்லி வருகிறார்
அதைத் தாண்டி சுயமுன்னேற்ற சிந்தனைகள், தினசரி வாழ்க்கையின் சிலகணங்கள், காதல் காயங்கள், முகநூல் காயங்கள் என்று பல்வேறு விஷயங்களை கடுகைத் துளைத்து கடலை புகுத்துவது போல் ஹைக்கூ பாணியில் விஜயன் அவர்கள் இந்த தொகுப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்
கவிதை என்பது வாழ்க்கையோடு இணைந்தது. நிழல்போல் தொடர்ந்து வருவது அதுவும் வாழ்க்கை அனுபவங்களோடு இணைந்து சொல்வதில்தான் எழுத்தாளர் வெற்றி இருக்கிறது. அந்த வெற்றியை தொடர்ந்துக் கைக்கொள்ளும் விஜயன் அவர்கள் இந்த நூலிலும் அதை காட்டியிருக்கிறார் அவர் தொடர்ந்து வேறு வடிவங்களிலும் முயற்சி செய்யவேண்டும் முயற்சி செய்து வருகிறார் அதை புத்தக வடிவில் ஆக்கவேண்டும் அவருடைய முயற்சிகள் வெல்லட்டும்
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
1
மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோட்டில் 19.03.2022 ..அன்று சித்தார்த்தா பள்ளியில் நடைபெற்றது . ஜெயபாரதி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
மருத்துவர் ஜீவா பற்றிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன்
மருத்துவர் ஜீவாவுடன் 50 ஆண்டு தோழமை எனக்குண்டு. ஆரம்பத்தில் பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள், திரைப்பட இயக்கம் போன்றவற்றில் ஆரம்பித்தது.இது தொடர்ந்தது.
90களில் ஊட்டியில் எழுத்தாளர்களுக்கான சுற்றுச்சூழல் முகாம் இணைந்து செயல்பட்டேன் .
( இந்த மாதிரி முகாம்கள் பல்வேறு காலகட்டங்களில் இணைந்தோம். திண்டுக்கல் சிறுமலையில் முகாம் இறுதியான ஒரு நிகழ்வு)
அதைத் தொடர்ந்து நான் எழுதிய “ சாயத்திரை “ நாவல் அந்த முகாமின் இன்னொரு வடிவம் என்று மகிழ்ச்சியடந்தார். நமக்குத் தேவை வளர்ச்சியா , சுற்றுச்சூழல் பாதுகாப்பா என்ற கேள்வியை “ சாயத்திரை” நாவல் எழுப்பியதை அவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். சாயத்திரை ஆங்கிலப்பதிப்பு வெளியீட்டிற்கு திருப்பூர் வந்தார். வங்காளம், கன்னடம், இந்தி, மலையாளப் பதிப்புகள் வந்த போது செய்தியைப் பகிர்ந்து கொண்டேன்
“ புத்துமண் “ என்ற ஒரு நாவலை சுற்றுசுச்சூழல் பிரச்சினைகள் குறித்துப் போராடிய அவரின் கரூர் நண்பர் ஒருவரை மையமாகக் கொண்டு எழுதினேன்.அதில் ஜீவாவின் “ நாம் குளத்து மீனா , பாத்திரத்து மீனா “ என்ற அவரின்கடிதத்தைப் பயன்படுத்தினேன். முதல் பதிப்பு உயிர்மை பதிப்பகம். இரண்டாம் பதிப்பு என் சி பி எச் வெளியிட்ட போது அவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். மகிழ்ச்சியடைந்தார். சுற்றுச்சூழல் போராளிகளை கவனப்படுத்துவது அவசியம் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பார் .அவரைச் சந்திப்பது அடிக்கடியும் இயல்பாகவும் நடக்குக் காரணமாக இருந்தது திருப்பூரில் அவரின் பொதுவுடமை இயக்கத் தோழர்களோடு அவருக்கு இருந்தத் தொடர்புதான் அவருடனான தொடர்ந்த சந்திப்புக்கும் என் சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளுக்கும் வழிகோலியது
மற்றும் அந்ந்தியூர் அன்புராஜ், நாடக இயக்குனர் ராம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர் .
2.
21/3/22 அன்று கோத்தகிரி கே பி எஸ் கல்லூரியில் ஜீவா நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. பேரா சு சுஜாதா, கோத்தகிரி ராஜி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் உரை ஆற்றினர் .
தொகுப்பாசிரியர் : ப.கண்ணையா
அணுகுமுறை அறிஞர் என்ற அரிய பட்டத்தைப் பெற்றுள்ள நண்பர் ப.கண்ணையா அவர்கள், அப்பழுக்கற்ற தமிழ்த் தொண்டர். இலக்கிய இலக்கணங்களைக் கற்றுள்ள தமிழறிஞர்களிடம் இல்லாத தமிழ்ப் பற்று கொண்டவர் , நடத்துனராகத் தன் வாழ்க்கை முழுவதும் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு அளவிடற்கரியது. இன்றும் தொடர்கிறது.
மாதந்தோறும் பல நிகழ்ச்சிகளைக் கொண்ட இலக்கியக் கூட்டத்தைத் தனித்து நின்று சிறப்பாக நடத்துகின்றவர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளையும் வளர்க்கின்ற பண்பாளர்.
‘மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி’ என்ற பழமையான நூல் உட்பட பல அரிய நூல்களின் பயனை உணர்ந்து, தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்லுள்ளத்தோடு பெரும் பொருட் செலவில் மீண்டும் பதிப்பித்து வழங்கி வரும் பெருந்தகை ஆவார்.
அவர் உலகம் சுற்றும் வாலிபர். .பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருபவர். அவர் பயணம் செய்த நாடுகள், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, பினாங்க், லங்காவி, பாங்காக், பட்டயா, ஆங்காங், மக்காவ், கம்போடியா, பர்மா, அந்தமான், துபாய், ஷார்ஜா, சைனாவில் ஷங்காய், பீஜிங் ஆகியவை.
தான் சென்ற நாடுகளோடு தமிழர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து தனக்குக் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ‘கடல் கடந்து வாழும் தமிழர்கள்’ என்ற நூலைத் தமிழுலகத்திற்குத் தந்துள்ளார். அஃது ஓர் அறிய முயற்சி! அது போல் இந்த நூலும் முக்கியமானத் தொகுப்பு நூலாகும்.
- தமிழமுதன்
அந்திமகாலத்தில் வெளிச்சக்கீற்றுகள்
அந்திமம் :. ப. சகதேவன் நாவல் :
சுப்ரபாரதிமணியன்
கொங்கு பகுதியை சேரந்த நாவலாசிரியர் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார் இந்த நாவலின் தலைப்பு சொல்வது போலவே அவர் அந்திமத்தில் இருப்பதாக கருதுகிறார் .ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார் ..இந்த ஓய்வு வாழ்க்கையை கூடுதல் போனதாகவே கருதுகிறார்
இந்த சூழலில் பெங்களூர் சார்ந்த அவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் பற்றியும் கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை பற்றியும் இந்த நாவலில் எழுதியிருக்கிறார் . பெங்களூர் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கை இந்த நாவலின் பல பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன அதேபோல பெங்களூரில் வளர்ச்சியும் வளர்சிதை மாற்றங்களும் இணையாக வந்து செல்கின்றனர்
சகாதேவன் எழுத்துக்களில் வழக்கமாக இருக்கும் கிண்டல் துளியும் சற்றே நகைச்சுவையும் நாவல் முழுக்க நகைக்க வைக்கின்றன இந்த கிண்டல் குடும்ப வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் அதிகமாக இருக்கிறது .சக மனிதர்கள் மீதான நேசத்தை கூடிக்கொண்டே போகிறது ஒரு தனி மனித வாழ்க்கையின் விசாரமும் அவரின் குடும்பமும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன .
கொங்கு மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து முதல் பெங்களூர் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து வரை பல்வேறு அனுபவங்களின் சித்தரிப்பு இந்த நாவல் தனிமனித ஆர்வலர்களால் நிறைந்த இந்த நாவல் பெங்களூர் வாழ் தமிழர்கள் பற்றிய வேறு வகையான சிக்கல்களையும் அடையாள நெருக்கடி நிலையையும் அதிகமாக பேசவில்லை .அந்நகரின் 50 ஆண்டுகாலம் சரித்திரத்தில் பல முக்கிய சம்பவங்கள் சில கோடுகளாக வரையப்பட்டிருக்கின்றன ஆனால் அவை மெலிதான கோடுகளாக இருக்கின்றன .தனிமனித வாழ்க்கையின் அனுபவங்கள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன
நாவலாசிரியர் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமியின் பரிசு பெற்றவர்
ஒரே ஒரு நாவல் மொழிபெயர்ப்பு செய்தார் .. இது ஒரே ஒரு நாவல் முயற்சி ஆகக்கூடாது . அவரின் படைப்பிலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும் அபூர்வமாக தென்படும் கட்டுரைகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகள் தொடர வேண்டும் அவர் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளில் இருக்கிறார் என்பதுவும் ஆறுதலை தருகிறது
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
( யாவரும் பதிப்பகம் வெளியீடு விலை ரூ 550)
என்னுரை :
அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களின் சீரிய முயற்சியால் பல நூல்கள் பதிப்பு பெறுகின்றன. அரிய நூல்களுக்கும் இந்தவகையில் பதிப்பு வாய்ப்புகள் ஏற்படுகின்றன
அந்த வகையில் என்னுடைய இந்த நூலுக்கு அவர் ஆதரவு தந்திருக்கிறார்.
பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய நூல்கள் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றி ஓரளவுக்கு முழுமையான பார்வையைத் தரும் இவ்வகை தொகுப்பு கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் வெகுவாக பயன்படுவதாக இருக்கும். ஒரு படைப்பாளியின் பல்வேறு படைப்புகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் அந்த படைப்புகளை தேடிப்பிடிக்க உதவி செய்வதாகும் அமையும். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டிற்கு ஆதரவுக்கரம் கொடுத்திருக்கிறார் . அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்கள்.. கட்டுரையாளர்கள், அவற்றை வெளியிட்ட இதழ்கள், மற்றும் அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பயில்கின்ற மாணவர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்
அன்புடன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
தீபன் என்ற தீவிரமானத் திருப்பூர் குரல்
சுப்ரபாரதிமணியன்
இளம் நண்பர் ரா. தீபன் அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பதிலும் அவர்கள் சார்ந்த வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற எண்ண நடவடிக்கைகளும் கொண்டு நெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர் .அதன் ஆதாரமாக மார்க்சிய தத்துவத்தின் மீது அக்கறை கொண்டு தத்துவார்த்த நூல்களை தொடர்ந்து படிக்கவும் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயலும் நடவடிக்கைகளும் கொண்டவர்.
அந்த வகையில் அவரின் எண்ண எழுச்சிகளை சிறு சிறு கவிதைகளாக அவ்வப்போது எழுதி வெளியிட்டிருக்கிறார்.. தொகுப்பாகவும்,பின்னர் அந்தக் கவிதைகள் ஒரு நூலாய் வந்திருக்கிறது .அதன் தொடர்ச்சியாக உரைநடைக்கும் நுழைந்தவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் .அந்தக் கதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது .
வழக்கம் போல் அவரின் அக்கறை கவிதைகள் ஆனாலும், சிறுகதைகள் ஆனாலும் அது சாதாரண மக்கள் பற்றியதாகவே இருக்கிறது, அவர் எழுதும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளில் கூட விளிம்புநிலை மக்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களின் போராட்டங்களைப் பற்றியும் அவர்களுக்கான விடுதலை பற்றியும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர் அந்த மாதிரியான திரைப்படங்களை தேடி பார்ப்பவர். குறும்படங்களும் வெளியிட்டுள்ளார்
இந்த நூலில் கதை மாந்தர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்கள் .சாதிய, வர்க்க வேறுபாடுகளும் சாதிய அடுக்குகளும் சக மனிதனை எப்படி அந்நியப்படுத்துகிறது என்பது பற்றிய அக்கறை இந்தக் கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் சேரியில் வாழக்கூடிய ஒரு சாதாரண கழிவுநீர் சார்ந்த தொழிலை செய்யக்கூடிய ஒருவனைப் பற்றிய வாழ்க்கையையும் அவன் மனைவி காவேரியையும் ஒரு கதையில் பாத்திரங்களாக கொண்டுவந்திருக்கிறார் .ஆண்டான் அடிமை பிரச்சனை எப்படி ஊறிப் போயிருக்கிறது என்று அந்த கதையை ஆரம்பிக்கிறார் .கணவன் இறந்த போன பின்னால் அவள் மீது வைக்கிற பாலியல் சீண்டல்கள், தினசரி வாழ்க்கையை சிரமங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார் .அவள் தற்காலிகமாக வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ரசாயன பொருட்கள் தலையில் கொட்டிப்போக பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் தொழிலாளர் சங்க தலைவர் அந்த நிறுவனத்திலிருந்து கொஞ்சம் பணம் பெற்று விலகிக் கொள்கிறார். அவர் மாறி மாறி வேலைக்கு முயல்கிறார் அவர் வேறு வேலை கூட செல்ல முடியாத சிரமங்களையும் கடைசியில் எல்லோரும் அலட்சியப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு செல்ல வேண்டிய நிலையும் சொல்லப்பட்டிருக்கிறது கணவனின் தொழில் சார்ந்த விஷயங்களும் அதேபோன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்வதும் எதேச்சையாக நிகழ்ந்ததாக இருந்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அதுதான்.
ஒரு எழுத்தாளனின், கவிஞனின் முயற்சிகளில் அவன் ஏமாற்றப்படுவதை ஆட்டோ கவிஞர் என்ற கதையில் சொல்லியிருக்கிறார், எனக்கு தெரிந்த சில இலக்கியவாதிகளையும் அந்தக் கதைகளில் கண்டேன் தஸ்கான் என்ற கதையில் பழைய பொருள்களை சேகரிப்பதும் அதன் மூலமாக படுக்கையில் கிடக்கும் அம்மாவை காப்பாற்றுவதும் அவனுக்கு நிர்ப்பந்தமாக இருக்கிறது. அவனின் கனவு ஒரு சொந்த மிதிவண்டி. அது கூட கிடைப்பதில்லை .அம்மா இறந்து போகிறாள் கைகளில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக அவனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி அவனிடமிருந்த மிதிவண்டி பறிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற விளிம்புநிலை மக்களின் ஆதாரமாக இருக்கிற சிறுசிறு விஷயங்களும் அவர்களை விட்டு நழுவிப் போவதை இது போன்ற கதைகளில் சொல்கிறார்.
பல கதைகளில் மருத்துவமனைகளில் விளிம்பு நிலை மக்கள் படும் சிரமங்களையும் அவர்களுக்கு சரியாக மருத்துவ உதவி கிடைக்காத விஷயத்தையும் விமர்சனமாக வைக்கிறார் .ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ராசப்பன் பற்றி கூட இவரால் எழுத முடிகிறது. வேறு வேலை இல்லை. கொஞ்சம் சொத்து இருக்கிறது இந்த சொத்தை பிடுங்கிக் கொள்ள பெரிய கூட்டமே இருக்கிறது சொத்துடமை என்பது எல்லா பகுதியிலும் மனித உயிர்களை, உறவுகளை பிரிக்க விஷயமாக இருக்கிறது இந்த கதையிலும் அதுதான் ராசப்பனுக்கு நிகழ்கிறது அவன் சாதாரணமானவன் அவனை இன்னும் சாதாரணமானவன் என்று அலட்சியப்படுத்தும் சமூகமும் சொத்துரிமை பற்றிய கேள்வியும் இந்த கதைகளில் அடங்கியிருக்கிறது
மண்டபம் போன்ற கதைகளில் இருக்கிற குறியீட்டுத் தன்மை மிக முக்கியமானது. மண்டபம் கதையில் நடக்கிற விஷயங்களை ஒரு கூட்டுக்குடும்பத்தில், பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிற ஒரு காம்பவுண்டில், கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ எங்குமே நடக்கக் கூடியதுதான் அதனால்தான் அதை ஒரு குறியீடு என்று சொன்னேன், அங்கு நடக்கின்ற வர்க்க முரண்பாடு விஷயங்கள், சாதிரீதியான சுரண்டல்கள் சாதி நிலையிலிருந்து சாதாரண மக்களை பார்ப்பது எல்லாம் சரியாக வெளிப்படுகிறது ஆனால் அவர்கள்தான் உழைப்பின் அடிப்படையாக இருப்பரைச் சிறப்பாக சொல்கிறார் .இந்த மண்டபம் போன்ற குறியீடுகளை இந்த கதைகளில் பலவற்றில் காணலாம்.
இவரின் பார்வையில் இன்றைய சுற்றுச்சூழல் கேடும் அதிலிருந்து மக்கள் மீள வேண்டிய அவசியமும் தொடர்ந்து காணப்படுகிறது அப்படித்தான் மரம் சார்ந்த ஒரு கதை .இயற்கை வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனிதர் ஒரு மரத்தினை பாதுகாக்க வேண்டிய எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது ஆனால் அந்த மரத்தை சுற்றி நடக்கிற சமூகவிரோத செயல்களை விரிவாகச் சொல்கிறார் .இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டிய மனிதன் இதுபோன்ற இயற்கை செல்வங்களை சுரண்டுவது, தவறாக பயன்படுத்துவது அடையாளமாக இந்த கதை செல்கிறது ரசாயனப் பொருட்களை ஊற்றி அந்த மரம் பட்டு போக செய்ய வைக்கிறார்கள் .இடி விழுந்து தீ பிடித்துக் கொள்கிறது இந்த நிலைய பார்க்க அவனுக்கு மனம் சிரமமாகி விடுகிறது சாவு வரைக்குமான பயத்தையும் கொடுத்திருக்கிறது.
பெரும் நகரம் சார்ந்த கிராமிய வாழ்க்கை கதாபாத்திரங்களை இந்த சிறுகதைத் தொகுப்பில் நாம் காணலாம் அந்த மனிதர்களெல்லாம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்கள். அவருடைய பிரச்சனைகளை நாம் கூர்ந்து கவனிப்பது இல்லை ஆனால் தீபன் போன்ற எழுத்தாளர்கள் சமூக நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள். அதன்மூலம் விளிம்புநிலை மக்கள் பற்றிய விடுதலைக் குரலை மெலிதாக எழுப்புகிறார்கள். இந்த முயற்சி முக்கியமானதாகத் தோன்றுகிறது காரணம் 12 மணி நேரம் /15 மணி நேரம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இவ்வகை மனிதர்களைக் கூர்ந்து பார்த்து அவர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அவரின் அக்கறை இது போன்ற படைப்புகளை தொடர்ந்து உருவாக்கும் வேகத்தைக் கொண்டிருக்கும்
திருப்பூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் படைப்பாளிகள் சிறப்பாக உருவாகிக் கொண்டிருப்பதின் அடையாளமாய் இன்றைய இளைய தலைமுறையில் தீபன் அவர்கள் விளங்குகிறார். அவரின் இன்னொரு அழுத்தமானத் தடமாக அவரின் சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன வாழ்த்துக்கள்
சுப்ரபாரதிமணியன்
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
திருவள்ளுவர் தின விழா நிகழ்ச்சி: மக்கள் மாமன்ற நூலகத்தில்
என் சாயத்திரை நாவல் எழுப்பிய வளர்ச்சியா சுற்றுச்சூழலா சார்ந்த கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் இருப்பதை பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரும் நிட்மா அமைப்பின் தலைவருமான அகில் ரத்தினசாமி அவர்களிடம் முன் வைத்தேன்
*
நொய்யல் நதியை சாயக்கழிவுகளால் நாங்கள் கெடுத்ததை கடந்த 5 ஆண்டுகளாக சரி செய்து வருகிறோம். 2023 ல் நொய்யல் மீண்டும் ஜீவநதி யாக மாறும்.. ஏற்றுமதி யாளர்கள் சங்க த் தலைவர் களில் ஒருவரான அகில் ரத்தின சாமி ௨ரை.இன்று மக்கள் மாமன்ற நூலகத்தில். திருவள்ளூர் தின நாள். தமிழன் னை சிலைக்கு பெரும் நிதியுதவி வழங்கினார்
*
சுப்ரபாரதிமணியன்
1.பிறந்த ஊர் செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம்
2 பிறந்த ஆண்டு, தேதி : 25/10/1955
3 பெற்றோர் பெயர் “ : பழனிச்சாமி ,பழனியம்மாள் ( நெசவாளர்குடும்பம் )
4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள்.
ஆரம்பக்கல்வி : செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம்
உயர்நிலைப்பள்ளி: திருப்பூர்
பி எஸ் சி கணிதம் : திருப்பூர் அரசு கலைக்கல்லூரி
எம் எஸ் சி கணிதம் : கோவை பூ சா கோ கலைகல்லூரி
5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்” சுகந்தி செப்டம்பர்11 , 1984
சுகந்தி மறைவிற்குப் பின் இரண்டாம் திருமணம் : கிரிஜா
6.குழந்தைகள் பெயர்: ஸ்ரீமுகி, சுபமுகி
7 தொழில்: தொலைத்தொடர்புத்துறை ( 2014ல் ஓய்வு) 30 ஆண்டுகள் பணி
8.முதல் படைப்பு. ” திருப்பூர் விழிப்பு இடது சாரி இதழ் “1977 சிறுகதை சுதந்திர வீதிகள் ( இந்தியாவின் அவசரகால கட்டம் சார்ந்த சிறுகதை )
9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு - 1977
10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்- ஜெயகாந்தன், கிரா, ஜெயந்தன்
11.விருதுகள் : பட்டியல் இணைப்பு
12. நூல்பட்டியல் - [முடிந்தால்] இணைப்பு
13 கலை இலக்கியப் பெருமன்றம். உறுப்பினர் அரசியல் செயல்பாடுகள் இல்லை.
14: கனவு இலக்கிய இதழ் 36ம் ஆண்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது ( ஹைதராபாத்தில் ஆரம்பித்த இதழ் )
14 உங்கள் இணையதளம் பற்றி,. அதன் வெளியீட்டு நாள்
www.rpsubrabharathimanian.blogspot.com 2000
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)