சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 7 மே, 2024

NCBHRs 1200 சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல் 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.. “ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது : NCBHRs 1200 சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/ subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru (( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது:: ( சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள்/ சுப்ரபாரதிமணியன் என் ” சிலுவை “ நாவல், என் நாவல்களின் பட்டியலில் இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள் பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது. கிறிஸ்துவ பாதிரியாக இருந்த எபிரேம் என்ற முதியவரை பனிரெண்டு ஆண்டுகளூக்கு முன் சேவூர் புளியம்பட்டி சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தித்தேன். பைபிளில் வரும் பல நிகழ்ச்சிகள் அந்த தேவாலயத்தின் உள்ளேயிருந்த சுவர்களில் சித்திரங்களாக வரையபட்டும் தூண்களாக அமைக்கப்பட்டு இருந்தன. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவர் அறிமுகமானார. அவர் ஒரு ஆய்வாளர் என்று சொல்லிக் கொண்டார். அவர் சோமனூர் என்ற பகுதியைச் சார்ந்தவர் என்ற வகையில் அவருடைய ஆய்வைப் பற்றி சொன்னார்.. நான் அவரின் சொந்த ஊரான சோமனூர் பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தை சார்ந்தவன் என்ற வகையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நானும் பேசினேன். அவர் ஆய்வாளர் என்ற வகையில் சோமனூர் பற்றி செய்திருக்கிற ஆய்வுகளையும் அவை கிறிஸ்துவ பத்திரிகைகளில் வந்திருப்பது பற்றியும் நிறைய சொன்னார். எனக்கு பெரிய நாவல்கள் எழுத வேண்டிய ஆசை இருந்தது ஆனால் அதற்கான களம் என் மனதில் இல்லை. என் நாவல்கள் எல்லாம் 300 பக்கங்களுக்குள் அடங்கிப் போகும் அளவில் இருந்திருக்கின்றன. இந்த சூழலில் ஒரு பெரிய நாவலை சோமனூரைக் களனாகக் கொண்டு கடந்து போன 300 ஆண்டு சரித்திரத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நான் வாழ்ந்த மக்கள், நிலம் பற்றி நான் அதிகம் எழுதவில்லை என்னுடைய மூதாதையர்ளின் தொழில் சார்ந்தும் என்னுடைய பரம்பரை சார்ந்தும் அவர்களுடைய அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் நான் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எனவே சோமனூரை பற்றி எழுதுவது என்பது என் மூதாதையர் நிலம் சார்ந்தும், என் மூதாதியர் தொழில் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது என்று பட்டது .அந்த கிறிஸ்துவ பாதிரியார் ஏறத்தாழ ஒரு முதுமை இல்லத்தில் தான் இருந்தார். அவரிடம் இருந்து சில சேகரித்துக் கொண்ட தகவல்கள் நாவல்கள் எழுத உதவினார். பின்னால் அவர் வால்பாறைக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். வால்பாறை போன்ற இடங்களின் சீதோஷ்ணம் அவருடைய உடல்நிலை எப்படி ஒத்துவரும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஆனால் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருந்தேன் அவரை தேடி சென்ற ஒரு முறை அவர் இறந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஆனாலும் அவர் சொன்னபடி இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் தான் சென்று சேர வேண்டும் என்பதால் நான் அதை ஒரு நாவலாக்கும் பணியில் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த நாவலை நான் எழுதினேன் இந்த நாவல் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுஅச்சிலும் புத்தகமாகவும் வருவது என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது நீண்ட நெடுங்காலமாக இதை எதிர்பார்த்து இருந்தேன். இடையில் வந்த கொரோனா காலம் இந்த தாமதத்தை அதிகப்படுத்தி விட்டது. அந்த வகையில் இந்த நாவல் என்னுடைய நூறாவது புத்தகமாகவும் அமைந்துவிட்டது. கலாச்சார சரித்திரம் என்பது அரசியல் சரித்திரம் மற்றும் கடந்து போகும்ஆண்டுகளின் நிகழ்வுகளின் தொகுப்புகள் என்றபடி இருக்கும். இந்த கலாச்சார சரித்திர நிகழ்வுகளை ஒரு நாவலுக்குள் கொண்டு வருவது , அந்த மனிதர்கள் வாழ்க்கையை இதற்குள் வைத்துப் பார்ப்பது எனக்கு தேவையானதாக இருந்தது சோமனூர் என்ற பகுதியில் திப்பு சுல்தான் போன்றவரின் வருகை கிறிஸ்தவர்களின் முக்கிய இடமாக இருந்த சத்தியமங்கலம், கொடிவேரி போன்று சோமனூர் விளங்கிய விதம், நெசவாளர் குடும்பங்களின் நிலை, பஞ்ச காலங்கள், மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிய வித்தைகள் என்று தொடர்ந்தது, என் நாவல் பின்னால் இரண்டாவது பாகமாக சோமனூர் மற்றும் கோவை பகுதிகளில் தொழிற்சங்க வரலாற்றுப் பதிவுகளாவும் மாறிவிட்டது. இன்னொரு பகுதியாக நான் அவர்களை திருப்பூருக்கு கொண்டு போனேன். காரணம் 10 வயது வரை தான் அந்த செகடந்தாளி கிராமத்தில் நான் வசித்து வந்தேன், தண்ணீர் பிரச்சினை, மேல் சாதி ஆதிக்கவாதிகளின் வன்முறை காரணமாக திருப்பூருக்கு குடி பெயர்ந்த நெசவாளர் குடும்பங்களில் என் குடும்பம் ஒன்றாகிவிட்டது. எனவே என் நாவலைக்கு அங்கு நகர்த்துவதும் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்த அந்த நெசவாளி குடும்பத்தை சார்ந்த ஒருவனின் பொதுவுடமை இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளும் தலைமறை வாழ்க்கையும் என்று தொடர்ந்தது .பின்னால் திருப்பூரில் பின்னலாடை வளர்ச்சியும் நவீன யுகத்தில் மற்றும் உலகமயமாக்களில் தொழிலாளர்கள் நிலைமை என்று தொடர்ந்தது. என் வாழ்க்கைஅனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டவற்றையும் சோமனூர், திருப்பூர். திருப்பத்தூர் என்று விரிவாக்கிக் கொண்டேன். நினைவுகளை, கலாச்சார பதிவுகளை பகிர்ந்து கொள்கிற அனுபவத்தில் இந்த நாவலை வடிவமைத்தேன், எனது பல படைப்புகளுக்குள் வந்த அமைந்திருந்த பின்னல் தொழிலும் விசைத்தறி தொழிலும் நெசவுத் தொழிலும் இயல்பாகவே இந்த நாவலுக்குள்ளும் வந்துவிட்டன சமீப காலம் வரை. நீண்ட கடல் பயணத்தில் அலைக்கடிக்கப்படுகிற படகு வாசிகள், படகு பயண வாதிகள் போல இருத்தலியல் சிக்கல்களும் வாழ்க்கை மீது மீதான நம்பிக்கையும் மாறி மாறி செயல்பட என் கதாபாத்திரங்கள் அமைந்து விட்டார்கள். அந்த வகையில் நினைவுகளையும் சரித்திரம் சொல்லும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிற வாய்ப்பும் இந்த நாவல் மூலம் ஏற்பட்டதும் இந்த நாவல் அனுபவங்கள் போல் பல அனுபவங்களும் வாழ்க்கையை கடந்து போக செய்திருந்தாலும் ஒரு பெரிய நாவலையே பதிப்பித்தலில் இருக்கும் சிரமங்களால் இன்னும் ஒரு பெரிய நாவலை எழுதுகிற ஆசையும் இப்போதைக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கை பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டே இருக்கலாம். அது கலாச்சார இயல்புகளூம் மொழியும் மாறிக்கொண்டிருக்கும் தன்மையில் அதை செய்து கொண்டே இருக்கலாம் என்றுதான் எனக்கு இந்த நாவல் வெளியிட்டில் தோன்றுகிறது.. 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..நாவலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நன்றி, ( ரூபாய் 1200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு) ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது 0 சிகாகோ தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பை ஒட்டி அமெரிக்க விசா விண்ணப்பித்தபோது அவர்கள் தந்த விசா நேர்முகம் தேதி. 13/6/2025. நிகழ்ச்சி தேதியைக்குறிப்பிட்டு மீண்டும் கேட்டபோது எமர்னென்சி விசா நேர்முகத் தேதி தரும் பட்டியலில் தாங்கள் இல்லை என்றும் வழக்கமான நேர்முகத்தேதியில் வருகை தருமாறும் கேட்டுக்கொண்டார்கள் மின்னஞ்சல் மூலம். நேர்முகத் தேதியை முன்னதாக பெற வாய்பு உள்ளதா. வழி முறை என்ன. தெரிந்தவர்கள் கருத்துக்கள் சொல்லவும். நேர்முகத்தேதி ஒரு ஆண்டுக்குப்பின் இருக்கிறது என்பதால் .. வணக்கம். சென்ற வாரம் கேரளா அட்டப்பாடியில் நடந்த திரைப்பட விழாவில் விம்வெண்டர் படம் பார்த்தேன். நேற்று அது பற்றிய உங்கள் கட்டுரை வெகு சிறப்பு. பராட்டுகள். காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவ தும் அதிக வெப்பம் (வெப்ப அலை) வீசி வருகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரண மாக குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுக ளுக்கு இடையே ஏற்கனவே உள்ள கல்வி கற்றல் இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இடைவெளி ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடையில் மட்டு மல்ல, நாடுகளில் உள்ள வளர்ந்த மற்றும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடையில் கூட அதிகமாகலாம் எனவும் எச்சரித்துள்ளனர். அதிக வெப்ப அலை வீசத் துவங்கிய பிறகு, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால் அவர்களுக்கு கடுமையான உடல் நலப்பிரச்ச னைகளை உருவாக்கும். வங்கதேசத்தில் மின் விசிறிகள் இல்லாத, காற்றோட்டம் இல்லாத பள்ளிகள் உள்ளன. மாணவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்ள அடிப்படை வசதிகளை கூட பள்ளிக ளில் தர முடியாத சூழல் உள்ளதை ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பின் வங்கதேச இயக்குநர் ஷுமோன் சென்குப்தா குறிப்பிட்டுள்ளார். வெயில் காலத்தில் மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது அதிக வெப்பநிலை மூளையின் அறிவாற்றல் செயல் பாடுகளை நிறுத்தி மந்தப்படுத்துகிறது. மேலும் இது மாணவர்களின் நினைவாற்றல் திறனையும் குறைக்கிறது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்க உயர் நிலைப் பள்ளி மாணவர்களிடையே அமெரிக் கன் எகனாமிக் ஜர்னல் நடத்திய ஆய்வில், அதிக வெப்பநிலை தாக்கத்தால் தேர்வுகளால் மாணவர்களின் மதிப்பெண் மிக மோசமாக குறைந்தது தெரிய வந்தது.அதாவது 0.55 டிகிரி செல்ஸியஸ் (1F) வெப்ப நிலை அதிகரித்ததால் அந்தாண்டு மாணவர்களிடையே 1 சதவிகிதம் கற்றல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் போதிய குளிரூட்டப்பட்ட காற்றோட்டம் உள்ள அந்த பள்ளிகளில் இவ் வாறான கற்றல் பாதிப்பு இல்லை என பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஜோஷ் குட்மேன் கூறியுள்ளார். பல்வேறு ஆய்வுகளின்படி, 40 முதல் 60 சத வீதம் வரையிலான அமெரிக்கப் பள்ளிகள் குறைந்தபட்சம் பகுதியளவேனும் காற்றோட்ட வசதி கொண்டதாகக் கருதப்படுகிறது. இது இல்லாத பள்ளிகள் பெரும்பாலும் அமெரிக் காவில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றம் சூடான மற்றும் குளிர் நாடுகளுக்கு இடையேயும், ஒரே நாட்டிற் குள்ளும் கற்றல் இடைவெளியை அதிகப்படுத் தும் என கூறப்படும் நிலையில் சில வளர்ந்த நாடுகள் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்கின்றன. 2026 ஆம் ஆண்டுக்குள் அதிக வெப்ப காலங்களில் மாணவர்களை பாதிக்காத வகை யில் குளிரூட்டப்பட்ட நல்ல காற்றோட்டமான வகுப்பறைகளுடன் கூடிய 30 வெப்ப - எதிர்ப்பு பள்ளிகளை ஜோர்டானில் கட்டப் போவதாக சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது குறிப்பிடத் தக்கது. 0