சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 7 மே, 2024

14/ 40 கொண்டை ஊசி வளைவு நாவல் சுப்ரபாரதி மணியன் அறிமுகம் : மதுராந்தகன் தலைப்பை பார்த்தால் ஏதோ மர்ம கதையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும் ஆனால் வாசகனை ஏமாற்றி வைத்த பெயர் என்று அறிந்து கொள்வீர்கள். கதையில் நாயகன் ராஜகுமாரன் ஒரு நடுத்தர குடும்பஸ்தன். சிந்தனையாளன் வாழ்க்கை ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பறளியாற்றின் கரையில் உள்ள ஆசிரமத்திற்கு ஆன்மீக பயிற்சி முகாமுக்கு செல்கிறான். அங்கு சந்திக்கும் மனிதர்கள் பெண்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் அவர்களோடு பழகுவதும் நாவல் முழுக்க சொல்லியிருக்கிறார். பொதுவாக நான்கு நாட்கள் பயிற்சி முகாமில் இருந்த ராஜகுமாரன் அழகிய பெண்களோடு பேச வேண்டும், பழக வேண்டும் என்னும் ஆசையில் வள்ளி என்ற பெண்ணை நயன்தாரா என்ற பெயர் மாற்றி ஆவளோடு பேசுவது அவனுக்கு நிறைவு தருகிறது .பயிற்சி முகாமின் சூழ்நிலைகளை பற்றி மிக அழகாக சொல்கிறார். வாசகன் அந்த இடத்திலேயே இருப்பது போல் அந்த உலகம் பற்றி எழுதியுள்ளார். பயிற்சி முகாமில் உள்ள கட்டுப்பாடுகள் பணியாளர்களில் நடைமுறைகள் என்ற அனைத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார். நயனதாராோடு பேசுவது பழகுவதின் எல்லை வரை நாகரீகமாகச் சொல்லி இருக்கிறார் தலைப்பான 14/40க்கு என்ன அர்த்தம் என்பதை வாசகர்களுக்கு இறுதியில் ஒரு திருப்பம் ஏற்படுவதால் சொல்லியிருக்கிறார். பொதுவாக அந்த பயிற்சி முகாமில் தங்கி உள்ளவர்கள் தன் குடும்ப சிக்கலிலிருந்து தப்பிக்கு வந்து இந்த பயிற்சி முகாமில் தங்கி இருப்பது , சொர்க்கத்தில் இருப்பதாக சொல்வார்கள். ஆண்களும் பெண்களும் பலமுறை வந்தவர்களும் உண்டு பிரதேச சூழ்நிலையை வர்ணனையில் எழுதியிருப்பது எழுத்தாளரின் புறக்கண்ணோட்டத்தை தெளிவாக காட்டுகிறது இவர் ஒரு பயண ஆர்வலராக இருப்பதால் வாசகனுக்கு தெளிவாக சொல்லிச் உள்ளார்., வாசகன் அந்த இடத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்கும் நாவலை கொண்டு செல்வதில் ஒரு சரளமாக நடையை கையாண்டு உள்ளார். வாசகனுக்கு சிரமம் இல்லாமல் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது நயனதாரா தன் பெயர் அல்ல, அதுவா நான் பேசியது எல்லாம் பொய் என்று என்று சொல்லிவிட்டு வால்பாறை செல்லும் பஸ்ஸில் ஏறி சென்றுவிட கதையின் நாயகன் பிரம்மை பிடித்தவாறு நின்று கொடுப்பதுவுடன் நாவலை நிறைவு செய்கிறார். அவள் வந்து போகும் அனுபவம் எல்லாம் மாயை என்று சொல்லி செல்வதோடு கதை முடிகிறது இந்த நாவலில் எழுத்தாளர் சுப்ரபாரதிம்ணியன் நான்கு நாள் பயிற்சி முகாமுக்கு சென்றதை நாவலாக்கி இருப்பது நீ ஒரு கோடு போடு நான் அதை ரோடு போட்டு காட்டுகிறேன் என்று சொல்வது போல் உள்ளது. அவர் எழுதிய நாவலில் மிக எதார்த்தமான நாவல் இது அவர் பயணத்தை மேற்கொள்வது, அந்த பயணத்தைப் பற்றி நூல்கள் எழுதுவது இதைத் தவிர அந்த பயணத்தை நாவலாக எழுதுவது என்றெல்லாம் செய்து வருகிறார், அப்படி இருந்தால் இது ஒரு பயண நாவலாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த கதையின் தலைப்பு திரில்லர் கதை போல இருக்கிறது என்று சொன்னேன் இதை திரைக்கதையாக்கும் முயற்சியில் திரில்லர் திரைக் கதைஎன்றுதான் அவர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம் .ஒரு கதையை திரில்லர் கதையாக்குவதில் அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் ( ,உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூபாய் 200 மதுராந்தகன் )