சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 7 மே, 2024
சிக்காகோ மாநாடு
சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது .இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து குறிப்பிட தகுந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று சிலர் தெரிவித்தார்கள்.
அதில் கலந்து கொண்ட சிங்கப்பூர் முனைவர் லட்சுமி அவர்கள் தமிழகக் குழு கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து செல்ல வேண்டிய குழு விசா கிடைக்காத காரணத்தினால் செல்லவில்.லை அந்தக் குழுவில் நானும் ஒருவன். அந்தக் குழுவினர் பற்றிய முழு விவரங்கள் என்னிடம் இல்லை அப்படி சிகாகோ மாநாட்டில் விசா சிக்கலால் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள், கடைசி நேரத்தில் விசா பெற முடியாதவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை என் மின்னஞ்சலில் மற்றும் முகநூல் உள்பெட்டியில் தகவல் தரவும் சுப்ரபாரதி மணியன் / subrabharathi@gmail.com / 9486101003
00000
( 12 பேரின் 6 மாத அமெரிக்கப் பயணக்கனவு
ஆறு மாதங்களுக்கு முன் சிகாகோ தமிழ்ச் சங்கம் முன்னின்று நடத்தும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு என் கட்டுரை சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வந்தது:
தலைப்பு : ” சுற்றுச்சூழல் அறமும் குறளும் “
அதன் பின் 30 பக்க முழுமையானக் கட்டுரையை எழுதி அனுப்ப மூன்று மாதம் தவணை தந்திருந்தார்கள் அதை எழுதி அனுப்பி இருந்தேன்.. மார்ச் ஒன்றாம் தேதி அந்தக் கட்டுரை ஏற்கப்பட்டதாகவும் முறையான மாநாட்டுக்கு அழைப்பிதழ் வரும் என்றும் தெரிவித்திருந்தார்கள். மாநாடு ஏப்ரல் முதல் வாரம் சிகாகோவில் நடைபெறுவதாகும். சென்ற மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்தது .ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதில் கலந்து கொண்டேன்.
பிறகு அழைப்பும் விசா பெறுவதற்கான விண்ணப்பங்களும் நடைமுறைகளும் மின்னஞ்சலில் வந்து கொண்டே இருந்தன குழு விசா என்பதால் பலரிடம் விண்ணப்பங்கள் பெற்று அவர்கள் 15 தினங்களுக்கு பின்னால் ஒப்படைத்தார்கள. விசாக்கான கட்டணம் 16 ஆயிரம் ரூபாய் அவர்களால் செலுத்தப்பட்டது. ஆனால் ஒரு வாரம் கழித்து வந்த விசா நேர்முகத் தேர்வின் தேதி சில மாதங்களுக்கு பின்னால் இருந்தது.
ஏப்ரல் முதல் வாரம் மாநாடு என்பதால் அவசர விசா நேர் முகத்திற்கு வேண்டுகோள் விடுத்து விண்ணப்பம் தரப்பட்டது ஆனால் சில நாட்களுக்கு பின்னால் அப்படி அவசர விசா நேர்முக தேதி தர இயலாது. அவசர விசா நேர் முகம் தருவதற்கான பிரிவில் தாங்கள் இல்லை என்று குறிப்பிட்டு அதை நிராகரித்து விட்டார்கள் .எனவே வழக்கமான விசாத் தேதியில் வந்து பேட்டி தருமாறு கேட்டு இருந்தார்கள். அமெரிக்காவிலிருந்து சிக்காகோ தமிழ் சங்கத்தினரும் சென்னையில் உள்ள அவர்கள் சார்பானவர்களும் முயன்றார்கள் ஆனால் அவசர விசா நேர்முக பட்டியலில் இருக்கும் வகையாளர்களில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் இல்லை என்பது போல அவர்கள் தெரிவித்து விட்டார்கள். இந்த முறை அந்த மாநாட்டின் அழைப்பிதழில் சாலமன் பாப்பையா, ஜேம்ஸ் வசந்தன் உட்பட பலர் கண்ணில் பட்டார்கள். முன்பு வேறு காரணத்திற்காக விசா பெற்ற வேறு கட்டுரையாளர்கள் சிலர் செல்கிறார்கள் புதிதாக விசா பெற வேண்டி இருந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டவர்கள் 12 பேருக்கு விசா கிடைக்கவில்லை. அதில் நானும் ஒருவன்.. ஆறு மாதமாக இது சார்ந்த மின்னஞ்சல்களும் நடவடிக்கைகளும் இருந்தன கடைசி நேரத்தில் கைகூடவில்லை. சிக்காகோ தமிழ் சங்கத்தினர் முன்னதாகவே விசா ஏற்பாட்டை செய்திருக்கலாம் அல்லது அவர்கள் நினைத்தபடி கடைசி நேரத்தில் அவசர விசா என்பது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது..)