சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 7 மே, 2024

உலக புத்தக தினத்தையொட்டி திருப்பூரின் மூத்த எழுத்தாளருக்குப் பாராட்டு. .( 83 வயது மதுராந்தகன் ) 0 திருப்பூரின் மூத்த எழுத்தாளர் 83 வயது மதுராந்தகனுக்கு உலக புத்தக தினத்தையொட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாசகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ” என் முகவரி” என்ற கவிதைத் தொகுதி, ” வாழ்வை அறிந்த மாய சூழல்” இலக்கிய விமர்சங்கள் கட்டுரை நூல் ஆகியவை வெளியாகியுள்ளன. 5 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கானக் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் நூல் வடிவம் பெறாமல் உள்ளன. சமீபத்தில் வெளிவந்த “ கள்வன் “ திரைப்படத்தில் ( இயக்குனர் பிவிசங்கர் ) நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். பல வீதி நாடகங்களிலும் நடித்தவர். அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர். இந்த வாரம் 83 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். திருப்பூர் கனவு இலக்கிய வட்ட நண்பர்கள் அவருக்கு பாராட்டைத் தெரிவித்தனர். 0 தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 83. நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும் 27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ). எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் இருந்தார்.. தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு . “ என் முகவரி “ இவரின் கவிதை நூல் . நிரந்தர முகவரி இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர். வயது : 83 ( என்பத்து மூன்று ) ( 77089 89639 ) வேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர் படைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960 புரட்சித் தலைவி சாதனை மலர் 2005 மெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு ) எனது முகவரி ( கவிதை தொகுப்பு ) வீடு : சொந்த வீடு இல்லை., வாடகை வீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602 ( 77089 89639 ) 83 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. திருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர். சமீபத்திய கள்வன், முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர் அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர். ( சுப்ரபாரதிமணியன் ) இணைக்கப்பட்ட புகைப்படத்தில்: தூரிகை சின்னராஜ், மதுராந்தகன், சுப்ரபாரதிமணியன்..