சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 7 மே, 2024
14/ 40 கொண்டை ஊசி வளைவு
நாவல் சுப்ரபாரதி மணியன்
அறிமுகம் : மதுராந்தகன்
தலைப்பை பார்த்தால் ஏதோ மர்ம கதையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும் ஆனால் வாசகனை ஏமாற்றி வைத்த பெயர் என்று அறிந்து கொள்வீர்கள். கதையில் நாயகன் ராஜகுமாரன் ஒரு நடுத்தர குடும்பஸ்தன். சிந்தனையாளன் வாழ்க்கை ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பறளியாற்றின் கரையில் உள்ள ஆசிரமத்திற்கு ஆன்மீக பயிற்சி முகாமுக்கு செல்கிறான். அங்கு சந்திக்கும் மனிதர்கள் பெண்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் அவர்களோடு பழகுவதும் நாவல் முழுக்க சொல்லியிருக்கிறார். பொதுவாக நான்கு நாட்கள் பயிற்சி முகாமில் இருந்த ராஜகுமாரன் அழகிய பெண்களோடு பேச வேண்டும், பழக வேண்டும் என்னும் ஆசையில் வள்ளி என்ற பெண்ணை நயன்தாரா என்ற பெயர் மாற்றி ஆவளோடு பேசுவது அவனுக்கு நிறைவு தருகிறது .பயிற்சி முகாமின் சூழ்நிலைகளை பற்றி மிக அழகாக சொல்கிறார். வாசகன் அந்த இடத்திலேயே இருப்பது போல் அந்த உலகம் பற்றி எழுதியுள்ளார். பயிற்சி முகாமில் உள்ள கட்டுப்பாடுகள் பணியாளர்களில் நடைமுறைகள் என்ற அனைத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார். நயனதாராோடு பேசுவது பழகுவதின் எல்லை வரை நாகரீகமாகச் சொல்லி இருக்கிறார் தலைப்பான 14/40க்கு என்ன அர்த்தம் என்பதை வாசகர்களுக்கு இறுதியில் ஒரு திருப்பம் ஏற்படுவதால் சொல்லியிருக்கிறார். பொதுவாக அந்த பயிற்சி முகாமில் தங்கி உள்ளவர்கள் தன் குடும்ப சிக்கலிலிருந்து தப்பிக்கு வந்து இந்த பயிற்சி முகாமில் தங்கி இருப்பது , சொர்க்கத்தில் இருப்பதாக சொல்வார்கள். ஆண்களும் பெண்களும் பலமுறை வந்தவர்களும் உண்டு பிரதேச சூழ்நிலையை வர்ணனையில் எழுதியிருப்பது எழுத்தாளரின் புறக்கண்ணோட்டத்தை தெளிவாக காட்டுகிறது இவர் ஒரு பயண ஆர்வலராக இருப்பதால் வாசகனுக்கு தெளிவாக சொல்லிச் உள்ளார்., வாசகன் அந்த இடத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்கும் நாவலை கொண்டு செல்வதில் ஒரு சரளமாக நடையை கையாண்டு உள்ளார். வாசகனுக்கு சிரமம் இல்லாமல் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது நயனதாரா தன் பெயர் அல்ல, அதுவா நான் பேசியது எல்லாம் பொய் என்று என்று சொல்லிவிட்டு வால்பாறை செல்லும் பஸ்ஸில் ஏறி சென்றுவிட கதையின் நாயகன் பிரம்மை பிடித்தவாறு நின்று கொடுப்பதுவுடன் நாவலை நிறைவு செய்கிறார். அவள் வந்து போகும் அனுபவம் எல்லாம் மாயை என்று சொல்லி செல்வதோடு கதை முடிகிறது இந்த நாவலில் எழுத்தாளர் சுப்ரபாரதிம்ணியன் நான்கு நாள் பயிற்சி முகாமுக்கு சென்றதை நாவலாக்கி இருப்பது நீ ஒரு கோடு போடு நான் அதை ரோடு போட்டு காட்டுகிறேன் என்று சொல்வது போல் உள்ளது. அவர் எழுதிய நாவலில் மிக எதார்த்தமான நாவல் இது அவர் பயணத்தை மேற்கொள்வது, அந்த பயணத்தைப் பற்றி நூல்கள் எழுதுவது இதைத் தவிர அந்த பயணத்தை நாவலாக எழுதுவது என்றெல்லாம் செய்து வருகிறார், அப்படி இருந்தால் இது ஒரு பயண நாவலாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இந்த கதையின் தலைப்பு திரில்லர் கதை போல இருக்கிறது என்று சொன்னேன் இதை திரைக்கதையாக்கும் முயற்சியில் திரில்லர் திரைக் கதைஎன்றுதான் அவர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம் .ஒரு கதையை திரில்லர் கதையாக்குவதில் அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்
( ,உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூபாய் 200 மதுராந்தகன் )
A story written on a myth / published in uyirmmaai 200th issue
சிறுகதை :
சுப்ரபாரதிமணியன்
மாம்சம் – தரை –மார்புத்துணி
முத்தச்சி கதை : அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர் மெல்லப் பெருக்கெடுத்து அவள் வாயை நிறைத்தது.
இன்னொரு துண்டு மாமிசத்தை படையலில் இருந்துப் பிரித்தெடுத்த செல்வ சாம்பன் அவளின் பூரித்த முகத்தைப் பார்த்தபடியே கொண்டு சென்றான். படையலில்., நைத்தியத்தில் மாமிசம் படைப்பது வழக்கமாகத்தான் இருந்தது. படையல் மாமிசத்தின் மணம் செல்வ சாம்பனின் நாசிகளையும் நிறைத்தது.
பிராமணர்கள் ஒழுங்குடன் படையலைப் பார்த்தபடி நின்றிருந்தவர்கள் திடுக்கிட்டபடி செல்வசாம்பனைப் பார்த்தார்கள்.அவர்கள் உடம்புகள் அதிர்ந்து போனதுதால் வியர்வை ஒழுகியது.
” அடே என்னடா பிராமணன் நீ .. உனக்கு என்னடா அவசரம் “ வாயில் பெருக்கெடுத்த உமிழ்நீரை மாமிசத்துடன் சுவைத்தபடி அவனின் மனைவி தன் கர்ப்பமான வயிற்றைத் தடவிக்கொண்டாள்.
“ கர்ப்ப ஸ்திரி .. விரும்பினாள். அதுதான் “
“ அதற்கென்னடா அவசரம். சடங்குகள் சாஸ்திரங்கள் என்று உண்டல்லவா. அதை மீறி .”
“ “ பசி.. ருசி.. கர்ப்பஸ்திரியின் விருப்பத்திற்கேற்ப ,,
“ அவளின் விருப்பத்திற்கேற்ப இதைச் செய்கிறாயா. எங்கள் விருப்பத்தை நாங்கள் சொல்லட்டுமா. “
பிராமணர்கள் சூழந்து கொண்டார்கள். வாயில் உமிழ்நீர், முகத்தில் , உடம்பில் வேர்வை என்று ஒழுகித்தீர்த்த்து கர்ப்பஸ்திரிக்கு, முகத்தில் திகில் கூடிவிட்டது.சூழ்ந்திருந்த யாகப்புகை நறுமணத்துடன் கொட்டாரமெங்கும் நிறைத்திருந்தது.ஏதோ கோபமாய் விவாதித்துக் கொண்டார்கள்,
“ உன்னையும் உன் குடும்பத்தையும் பிராமணர்களாக வைத்திருக்க மறுக்கிறோம். இனி நீங்கள் பறையர்கள் . உங்கள் சாதியை நாங்கள் தாழ்த்திக் கொள்கிறோம். எங்களுடன் சகவாசம் வேண்டாம், நாங்கள் என்றும் பிராமணர்கள். நீ பறையன் இனி..பறையனாகக் கடவது ”
கர்ப்பஸ்திரியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. மாமிசத்துண்டு நன்கு ருசிக்கப்பட்டு தொண்டைக்குழிக்குக் கீழ் சென்று விட்டது. இனியும் துப்ப முடியாது. வாந்தியெடுத்து அதை எடுத்து வீசியெறந்து விட்டோம். எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்க முடியாது. வலது கையை தொண்டையைப்பிடித்துக் கொண்டாள் கர்ப்பஸ்திரி. தொண்டையை நசுக்கிக் கொள்வதன் மூலம் அந்த மாமிசத்துண்டினை வெளியேற்றி விடலாம் என நினைப்பவள் போல் அழுத்தினாள்.
‘உற்சவ முறிக்கலுக்கு அவளைக்கூட்டிக்கொண்டு போடா. உனக்குத் தகுந்த இடம்தான் அது . அந்த வெறியாட்டு உனக்கு உகந்த இடமாக இருக்கும்“உற்சவ முறிக்கலுக்கு ரொம்பநாள் இருந்தது ஞாபகம் வந்த்து அவனுக்கு.
புரோகிதனான குறவன் அச்சடங்கில் ஆட்டை பலி கொடுத்து ஆட்டு ரத்த்த்தில் சோற்றைக் குழைத்து மாமிசமும் மதுவும் படைத்த் பின் சேயோனின் வேலை எடுத்து வேலனின் ஆசி பெற்று சாமியாடும்போது புரோகிதன் சொல்வதெல்லாம் வேலனின் உத்தரவாகிவிடும் பிறகு.. மலங்காவுகளில் உற்ச குருதி ஆடு, மாடு, கோழி என்று வெட்டி பலிக்கல்லில் இரத்த்த்தை ஓடச்செய்து வேடிக்கை பார்ப்பார்கள்.. அந்த விளையாட்டைத் தொடர்ந்து விடியற்காலையில் கொடிச்சிக்கல் கூடைகளில் நெல்லும் நெல்லுக்கு மேல் நாணயங்களும் வைத்துக் கோவிலுக்கு வெளியே இந்த நேர்ச்ச காழ்ச்சகள் செய்வார்கள், அப்போடு எல்லோருமாக சாதி வித்யாசம் பார்க்காமல் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிரார்த்தனை செய்த பின் தாழ்ந்த சாதியினர் மேல் சாதியினரிடமிருந்து விலகி நின்று அசுத்தம் ஏற்படாதவாறு இருக்கச் சொல்வார்கள். இநத்த் தீண்டாப்பாடு அகலத்தில் கோவில் பூசாரி சிலருடன் வந்து நெல்லையும் நாணயங்களையும் வேறு பாத்திரங்களுக்கு மாற்றிக் கொண்டு போவதுண்டு. ஒவ்வொரு கூடையிலும் கொஞ்சம் நெல்லும் சில நாணயங்களும் இருக்கும் அது ஊராளியின் பங்கு. கோவில் அதிகாரி பிராமணன் ஊராளன் .அதையெல்லாம் ஒரு பாத்திரத்தில் இட்டு ஊராளியும் மதுக்கடைக்கு வந்து மதுவை வாங்கி பாத்திரங்களில் விட்டுக் கும்பிடுகிறார்கள் இந்த உற்ச முறிக்கலுக்கு பின் குறவர்களின் உற்சவம் நடக்கும் .
“ உற்சவம் முறிக்கலில் நடக்கும் உற்சவத்திற்கு உகந்தன் நீ போய்க்கோ . இனி எங்கள் ஆளில்லை நீ”
இவ்வள்வு பெரிய தண்டனையா என்றிருந்தது அவனுக்கு.
ஒரு அம்மாவின் கதை
ஈயோய் .. ஈயோய் என்று ஏன் அம்மா நீ மெல்ல சப்தமெழுப்பிக் கொண்டிருக்கிறாய்
அப்படி சத்தம் எழுப்பினேனா மகனே.
ஆமாம் அம்மா .. ஈயோய் .. ஈயோய் என்றாய்.
அது இந்தப்பக்கம் வரும் போதெல்லாம் அப்படி சத்தம் எழுப்பி வழக்கமாகிவிட்டதால்
அப்படியா
ஆமாம் மகனே. வேறு சாதிக்காரர்கள் இந்ததப்பக்கம் செல்வதென்றால் ஈயோய் .. ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும். பிராமணன் பயணம் செய்தால் அவனுடன் வரும் ஆள் ஓய்.. ஓய் என்று சத்தமெழுப்பிச் செல்ல வேண்டும்,
வேறு சாதிக்காரன் என்றால்
நாயர் என்ற் சொல்ல்லாம்
நாம் பிராமணர்கள் இல்லையா அம்மா
ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கிறோம்.
கோவில்களுக்கு பக்கத்திலிருக்கும் கோவிலைத்தொட்டுப்போகும் வீதிகள்தான் பாதைகளாக முன்பு இருக்கும் . மேல் சாதிக்காரர்கள் வந்து போகும் இடங்களாக கோவில்கள் இருந்தன. பிராமணர்கள் வந்து போகும் வீதிகளில் எப்போதும் அவர்கள் நடமாடுவதற்கென்றே எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும் . அந்த வழியே பிற சாதிக்காரர்கள் செல்ல தடை இருந்தாலும் அவசர காலங்க்ளில் செல்வர். செல்லும்போது ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும் ..பிற சாதிக்காரர்கள் பிராமணனின் பார்வையில் படாமலிருக்கவும் எச்சில் அவர்கள் பாதையில் படாமல் இருக்கவும் அந்த ஏற்பாடு. பிற சாதிக்காரர்கள் பிராமணர்களைப் பார்ப்பது பாவம் என்றிருந்தபோது ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும் .ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லும் சிலரையும் பார்க்க வேண்டியிருக்கும்.. முட்செடிகளும் மரங்களும் வளர்ந்த காவுகளில் வாழ்ந்தவளுக்கு இந்தப் பாதைகள் புதிரானவைதான்.
நாமெல்லாம் செல்வன்கள் இல்லையா அம்மா
முன்னோர்கள் செல்வசம்பான் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்போதையப் பெயரில் மட்டும்தான் செல்வம் இருந்த்து. இப்போது செல்வன் இல்லை, பிச்சைப் பிழைப்புதான். இந்தப் பிச்சைப்பிழைப்பிற்காக உன்னோடு வரும் பையனையும் விறக்த்தான் கொண்டு செல்கிறோம்.
அந்தச் சிறுவனின் இடதுகை அவனை விடச் சிறிய ஒருவனின் தோளைப்பற்றிய படி இருந்தது. அவனின் பிடியிலிருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பவன் போல் அச்சிறுவன் இருந்தான்
இவவை விற்கத்தான் வேண்டுமாஅம்மா.. நமக்குக் கிடைக்கிற கூலி பற்றாதா.
அது சரிப்பட்டு வந்தால் இன்னொரு வீட்டுப் பிள்ளையை நாம் ஏன் விற்க வேண்டும் அ.வன் அம்மாவே கூட வந்து இதைச் செய்திருக்கலாம்..அவளுக்கு பெத்த மனம் பித்து. வர மறுக்கிறாள்.நாம் சங்ஙனாச்சேரி சந்தைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கூலியாம் கூலி..
அடிமைகள் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தாலும் ஊதியம் என்று தரப்படுதில்லை. இரவில் ஒரு வேளை உணவுக்காக நெல் மட்டுமே தரப்படும். . பகலில் பசியாற ஆண்டையில் வீட்டில் இருக்கும்போது ஏதாவது கிடைக்கும் . ஆணுக்கு மூணு நாழி நெல்தான். அவ்வப்போது போக்கஞ்சி கிடைக்கும் ஆண்டையின் வீட்டுக்கு அருகில்மண்ணில் குழி தோண்டி அந்தக் குழியில் வாழை இலையோ, பாக்கு மரத்தின் பாளையையோ வைத்து அதில் சிறிது போக்கஞ்சியும் குழம்பும் ஊற்றுவார்கள். குழிக்கு வெளியே முழங்காலிட்டு குனிந்து குடிக்க வேண்டும். . கஞ்சி கூப்பிட ஆண்டை கூப்பிடும் போதுதான் பக்கத்தில் போக வேண்டும் அதுவரைக்கும் ஆண்டைக்குத் தீட்டுப் படாமலிருக்க அடிமைகள் தூரத்தில் நிற்க வேண்டும். . அடிமை வேலைக்குப் போகாமலிருக்கக் கூடாது. அப்படி வேலைக்குப் போகாமலிருந்தால் அடி கிடைக்கும். அதுவும் மாட்டை அடிக்கப்பயன்படும் கம்பியோ, கட்டையோ அடிக்கப் பயன்பாடாகி விடும் அவர்களுக்கு.. அடி வாங்கியவன் எப்படியும் எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்க இயலாது என்றால் அவனால் முடியவில்லை என்று அங்கேயேக் கிடக்க விட்டு விடுவார்கள்.பசியால் துள்ளியப்டி கிடக்க வேண்டும்.
நானெல்லாம் அடிமையா அம்மா
பதினைந்து வயதிற்குட்பட்டவர்கள் அடிமைகள்தான்
அப்படியென்றால் என் கூட இருப்பவன்
அவன் உன்னை விடச் சிறியவந்தானே .அ னும் அடிமைதான் . அவனும் குழியந்தானே
அடிமைகள் வசித்தப் பகுதியில் குழந்தைகள் கிழிக்குள் இருப்பார்கள். குழந்தைகள் குழியிலிருந்து வெளியே ஏறி வர இயலாது. மரத்தடியால் குழியின் உட்புறங்களை அமைத்து குழந்தைகளை அதில் போட்டு விடுவார்கள். மூத்தப் பிள்ளைகள் அக்குழிகளூக்குக் காவல் இருப்பார்கள் .. பெரியவர்கள் ஆண்டிகளின் காடுகளில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குழியன்கள் என்றாகிப்போனார்கள்.
மாடம் நம்க்கில்லையா அம்மா
நம்க்கெல்லாம் தரைதான். மாடம் எங்கே வாய்த்தது .
தரவாடு கிட்டுமா அம்மா
அது நாயர்களுக்குத் தானே. அவர்களும் நம்மை ஆள்பவர்கள்தானே
வட்டச்சேரி அடிமைகள் சந்தையிலிருந்து பல பெண்கள் சமீபத்தில் அந்த ஊருக்கு விற்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாய் வந்து சேர்ந்தார்கள்.
சரியாகக் கூட சேர்ந்து வாடா
என்ன செய்கிறான் அவன்
முரண்டு பிடிப்பது போல் சிரமம் தருகிறான். வெட்டப் போடும் ஆடு போல் வர வேண்டியதுதானே அம்மா
ஆமாம். இவனுக்கு என்ன வாய்க்கப்போகிறதோ
என்னம்மா
காணம் , பாடம் என்று எது இவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ
அதென்னம்மா
ஆண்டான் எந்த உரிமையையும் மிச்சம் வைக்காமல் விற்று விடுவது ஜன்மம்.. குறிப்பிட்டத் தொகைக்கு கொடுத்து விட்டு திருப்பிக் கொடுக்கும்போது அடிமையை பழைய ஆண்டைக்கு விட்டுக் கொடுப்பது காணம் . அடிமையை மொத்தமாக குத்தகைக்கு விடுவது பாட்டம். இவனுக்குப் பாட்டம் வாய்க்கும்.
எவ்வள்வு காசுக்கு அம்மா
ஆண் என்றால் எட்டு பணம் பெண் என்றால் நான்கு கிடைக்கும் . ஆண்டைக்கு அடிமையைக் கொல்லும் அதிகாரம் இருப்பது கெட்டதுதான். கொஞ்சம் ஒதுங்கியே வா. யார் மேல் பட்டும் விடாதே
தாழ்ந்த சாதிக்காரன் ஒரு பிராமணனின் பார்வையில்பட்டால் அவனைச் சித்ரவதை செய்யலாம். பிராமணர்களின் சமீபம் செல்லக்கூடாதவன் பிராமணனிடமிருந்து தூரம் கடை பிடிக்கத்தவறினால் அவனது காலை வெட்டலாம். தொடக்கூடாத சூத்திரன் பிராமணனின் தகத்தில் அவனையும் அறியாமல் தொட நேர்ந்தால் அவனை முக்காலியில் கட்டி அடிக்க வேண்டும். ஆசனவாயில் பலமான நீண்டக் கமபை அடித்து ஊரார்கள் புழங்கக்கூடிய ஏதாவது ஒரு இடத்தில் நட்டு விட அவன் அந்தக் கம்பின் முனையில் கொஞ்சம் கொஞ்சமாய் திளைத்துச் சாக வேண்டியிருக்கும்
பாம்பு இருக்கும் குடத்துக்குள் கை விட முடியுமா அம்மா
அந்த விசப்பரிசோதனை எதற்கு. விச ஜந்துவுடன்
கேள்விப்பட்டேன் அம்மா. கிச்சு முச்சு மூட்டுமோ
விளையாட்டுப் பையனாக இருக்கிறானே என்று அவனின் முகத்தைப் பார்க்க தலையை நிமிர்த்தினாள். அவளின் குல தெயவமான் செல்வ சாம்பனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்றாள்
மகளின் கதை :
சாம்பனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்றாள். அந்த பிராமணனைக்கண்டதும் அவள் மார்பக்த்துணியை விலக்கிப் போட்டுக்கொண்டாள். இப்போது மார்பகம் திறந்த வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவளின் வலது கையை இறுக்கப்பிடித்த குழந்தை அவளின் திறந்த மார்பைப் பார்த்தது. தனக்குப் பாலூட்டும் அந்த நாட்களில் கூட ஏதாவது துணியை மார்பின் மீது போர்த்திதான் அவள் பாலூட்டுவாள். ஆனால் இது போல் கோவில்கள், வெளியிடங்களில் யாரையாவது பார்க்கிற போது அம்மாவுக்கு என்னாகிறது. மார்புத்துணியை விலக்கிக் கொள்கிறாள். ஒருதரம் கேட்டாள்.
“ உனக்கெல்லாம் இது புரிய ரொம்ப நாளாகும் பெண்ணே “
கோவில் வெகு சுத்தமாக இருந்தது. அரிசி மாவுக் கோலங்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவிக்கிடந்தன். வெயில் பளீரென்று வருகிற நேரங்களில் அரிசி மாவுக்கோலங்கள் சட்டென மறைந்து விடுவது போல் எறும்புகள் சூழந்து கொண்டு அவற்றைக்கடத்தி விடும். சிறு துளிகளை அவை ஜாக்கிரதையாகக் கடத்தி விடுவது ஆச்சர்யம் தந்தது.
சூத்திரப் பென்கள் மார்பக்த்தை மறைத்து உடை உடுத்தவும் நகை அணியவும் வரி தர வேண்டியிருந்தது. முலைக்கரம் வரி கட்டுகிற அள்வு அவள் வசதியானவள் அல்ல. சூத்திரனை, பிராமணனைக்கண்டதும் அவள் மார்பக்த்துணியை விலக்கிப் போட்டுக்கொள்ளாமலிருந்தால் மார்பிலிருந்து துணியை மாற்றாமலிருந்தால் சூத்திரப் பெண்ணீன் மார்பகம் மன்னரின் கட்டளைப்படி அறுத்து எறியப்பட்டு விடும்.
அவளைப் போன்றவர்கள் சூத்திர்ர்களிடம்கிருந்தும் தப்ப முடியவில்லை. திருமண நாளில் கூலி வாங்க ஆண்டையின் வீட்டிற்குச் செல்லும்போது அவனின் விருப்பத்திஅற்கு உடன் பட மறுத்த முதல் பெண் அவள்தான். அது எங்கு போய் முடியுமோ என்று வீட்டில் சலசலப்பு இருந்தது. அதை பிரம்மபாவமாகக் கொண்டு விதி எழுதப்பட்டிருந்தது..
அது பிரம்மபாவம் பெண்ணே
உடன்பட்டால் பாவம் தீர்ந்து விடுமா
முதல் இரவு கூட பிராமணனுக்குத்தான் அர்ப்பணம் செய்ய வேண்டும்
அய்யோ..
உடுத்த் உடையும் மேலே போர்த்ஹ்டிக் கொள்ள ஒரு மேல் முண்டும் ஒரு பெண்ணுக்குத் தரப்பட்டால் அந்தப் பெண் படுக்கைக்கு வந்து விட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது.
உடன்படா விட்டால் என்னவாகும்
கைகால்கள் வெட்டப்படலாம், காதுகளை அறுப்பார்கள், நாக்கை வெட்டுவார்கள், பல்லை அடித்து உதிர்ப்பார்கள், காளையோடு சேத்துக் கட்டி வயலி உழவுக்கு அனுப்புவது, பாமபு இருக்கும் குடத்துக்குள் கையை விடச்செய்வார்கள்.
அம்மா பாம்பு உள்ள குட்த்துக்குள் கையை விட்டால் குறுகுறுப்பாக இருக்குமே.
குறுகுறுப்பா மிஞ்சும். கடி படும். பாம்பு கொத்தும்.
எங்கும் பூரணமாய் குளிர்ச்சி வந்து விட்ட்தைப் போல் தண்ணீர் ஊற்றிக் கழுவப்பட்டிருந்தது. இதைக்கழுவினப் பெண்கள் கூட மார்பினைத் திறந்து காட்டியபடிதான் வேலையைச் செய்திருப்பார்களா. பனியாதவர்கள் வயலில்காளையோடு சேர்த்து உழப்போகியிருப்பார்களா.
அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
பூஜைத்தட்டுடன் வந்த பிராமணப்பெண் ஒருத்தி வெள்ளை உடுப்பால் அவளின் மார்பை மூடியிருந்தாள். அவளின் கையிலிருந்த பழத்தைப் பார்தாள். அது உள் நாட்டில் விளைவதல்ல. பக்கத்தில் எந்தக் காட்டிலும் கிடைக்காது.
ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்த பழம்தான். சிவப்பாய் உருண்டையாய். ஏலக்காயும் மிளகும் கொடுத்து மாற்றாகக் கூடப் பெற்றிருப்பார்கள்.
அவளின் தலைமுறை முந்நூறு ஆண்டுகளாய் சுவைக்காத பழம் அது என்று சொல்லிக்கொண்டான் . செல்வ பகவானே இதெல்லாம் என் மகளின் கண்களில் படுகிறதே .அவள் விரும்பி அதைக்கேட்டால் நான் எங்கு போவேன். எவனிடம் போய் என் மகளுக்காக நிற்பேன்.
( ஜெ. அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு
தேவி பாரதியின் நொய்யல் நாவல். / சுப்ரபாரதிமணியன்
. அதை அவர் எழுத ஆரம்பித்த எண்பதுகளின் காலகட்டம் அப்போது தேவி பாரதி அவர்கள் பொதுவுடமை இயக்கங்களின் ஆதரவாளர்.தீவிர செயல்பாட்டாளர் அவர் அப்போது அதை வெளியிட்டு இருந்தால் ஒரு யதார்த்தமாக விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை சித்திரமாக இருந்திருக்கும் இப்போது இந்த நாவல் வெளிவந்திருப்பதில் வேறு பரிமாணம் இருக்கிறது கொங்கு மண்ணின் தொன்மங்கள் சொந்தங்களும் நம்பிக்கைகளும் மரபும் என்று புது வடிவம் எடுத்து இருக்கிறது நொய்யல் நாவல்
என் உரையில் இப்படி குறிப்பிட்டேன்
0
சுப்ரபாரதிமணியன்..ஞானி..புவியரசு..சிற்பி. ஓவியங்கள்
நேற்று தூரிகை சின்ன ராஜ் அவர்கள் திருப்பூரில் ஓவியங்கள் கண்காட்சி..
” இலக்கியம் மனிதனை முன்னெடுத்துச் செல்வது.. இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் வழிகாட்டியாக இருக்கும் கலங்கரை விளக்கமாக இருக்கும்” என்று இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி திருப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் தெரிவித்தார். 7/4/24
இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது தேவி பாரதி அவர்களுக்கு நீர் வழிபடூம் என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது அதற்காக திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவரின் படைப்புகளைப் பற்றி தமிழ் கல்விக் கூட்டமைப்பின் தலைவர் மூர்த்தி, ஆசிரியை ஹேமலதா., எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், அழகு பாண்டி அரசப்பன், முத்து பாரதி, வின்சென்ட் ராஜ் உட்பட பலர் பேசினர்.
. ஏவிபி லேஅவுட் சங்க கட்டிடம், காந்திநகரில் நடைபெற்றது
தேவி பாரதி : “ நவீன மனிதர் என்பவன் பகுத்தறிவாளன் கேள்வி கேட்பவன்.., மாற்றம் இல்லாதது என்றும் இல்லை எல்லாம் மாறும் ஆனால் எந்த காலத்திற்கும் மாறாத நவீனம் அன்புதான். சக மனிதன் அன்பு என்றைக்கும் நவீனமானது தான் “ என்று குறிப்பிட்டார்
முத்து பாரதி தீர்த்தகிரி என்ற விடுதலைப் போராளி என்ற தலைப்பில் பேசினார்
வாசகர் சிந்தனை பேரவையின் தலைவர் துரை, செயலாளர் வெள்ளிங்கிரி, துணைச் செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்கு வாசகர் சிந்தனை பேரவை பாலசுப்பிரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் . வாசகர் சிந்தனை பேரவையின் 16 வது கூட்டம் இது.
0
திருப்பூரில் இருந்து விழிப்பு என்ற இடதுசாரிகள் இதழ் எழுபதுகளில் வந்தது அதில் என் சிறுகதை வந்திருக்கிறது சுப்ரபாரதிமணியனின் கதைகள் வந்திருக்கின்றன .அது ஒரு நல்ல இதழ் அந்த இதழில் வெளிவந்த ஞானபாரதியின் கதைகள் குறிப்பிடத்தக்கவை அவர் ஆசிரியர் குழுவில் இருந்தார் ஆனால் இன்றைக்கு ஞானபாரதி கதைகளை நாம் தேடி கண்டறிய முடிவதில்லை அப்படி தொலைந்து போன எழுத்தாளர்கள் பலர் உண்டு பாரதியிலிருந்து புதுப்பித்தனில் இருந்து பல எழுத்தாளர்கள் இப்படி தொலைந்து போனார்கள் .தேவி பாரதியின் உரையில்..
8
தேவி பாரதியின் நொ நொய்யல் நாவல் அது எழுத ஆரம்பித்த என்பதுகளின் காலகட்டம் அப்போது தேவி பாரதி அவர்கள் புதூர்வ இயக்கங்களின் ஆதரவாளராகவும் தீவிர செயல்பாட்டாளர் அவர் அப்போது அதை வெளியிட்டு இருந்தால் ஒரு யதார்த்தமாக விளிம்புலி மக்களின் வாழ்க்கை சித்தரமாக இருந்திருக்கும் இப்போது இந்த நாவல் வெளிவந்திருப்பதில் வேறு பரிமாணம் இருக்கிறது கொங்கு மண்ணின் சொந்தங்களும் நம்பிக்கையளும் வரவும் என்று புது வடிவம் எடுத்து இருக்கிறது முயல் நாவல் என் உரையில் இப்படி குறிப்பிட்டு
செய்தி : தங்கபூபதி - வாசகர் சிந்தனை பேரவையின் நிர்வாகி
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி திருப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில்...
” இலக்கியம் மனிதனை முன்னெடுத்துச் செல்வது.. இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் வழிகாட்டியாக இருக்கும் கலங்கரை விளக்கமாக இருக்கும்” என்று இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி திருப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் தெரிவித்தார். 7/4/24
இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது தேவி பாரதி அவர்களுக்கு நீர் வழிபடூம் என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது அதற்காக திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவரின் படைப்புகளைப் பற்றி தமிழ் கல்விக் கூட்டமைப்பின் தலைவர் மூர்த்தி, ஆசிரியை ஹேமலதா., எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், அழகு பாண்டி அரசப்பன், முத்து பாரதி, வின்சென்ட் ராஜ் உட்பட பலர் பேசினர்.
. ஏவிபி லேஅவுட் சங்க கட்டிடம், காந்திநகரில் நடைபெற்றது
தேவி பாரதி : “ நவீன மனிதர் என்பவன் பகுத்தறிவாளன் கேள்வி கேட்பவன்.., மாற்றம் இல்லாதது என்றும் இல்லை எல்லாம் மாறும் ஆனால் எந்த காலத்திற்கும் மாறாத நவீனம் அன்புதான். சக மனிதன் அன்பு என்றைக்கும் நவீனமானது தான் “ என்று குறிப்பிட்டார்
முத்து பாரதி தீர்த்தகிரி என்ற விடுதலைப் போராளி என்ற தலைப்பில் பேசினார்
வாசகர் சிந்தனை பேரவையின் தலைவர் துரை, செயலாளர் வெள்ளிங்கிரி, துணைச் செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்கு வாசகர் சிந்தனை பேரவை பாலசுப்பிரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் . வாசகர் சிந்தனை பேரவையின் 16 வது கூட்டம் இது.
செய்தி : தங்கபூபதி - வாசகர் சிந்தனை பேரவையின் நிர்வாகி
சிக்காகோ மாநாடு
சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது .இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து குறிப்பிட தகுந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று சிலர் தெரிவித்தார்கள்.
அதில் கலந்து கொண்ட சிங்கப்பூர் முனைவர் லட்சுமி அவர்கள் தமிழகக் குழு கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து செல்ல வேண்டிய குழு விசா கிடைக்காத காரணத்தினால் செல்லவில்.லை அந்தக் குழுவில் நானும் ஒருவன். அந்தக் குழுவினர் பற்றிய முழு விவரங்கள் என்னிடம் இல்லை அப்படி சிகாகோ மாநாட்டில் விசா சிக்கலால் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள், கடைசி நேரத்தில் விசா பெற முடியாதவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை என் மின்னஞ்சலில் மற்றும் முகநூல் உள்பெட்டியில் தகவல் தரவும் சுப்ரபாரதி மணியன் / subrabharathi@gmail.com / 9486101003
00000
( 12 பேரின் 6 மாத அமெரிக்கப் பயணக்கனவு
ஆறு மாதங்களுக்கு முன் சிகாகோ தமிழ்ச் சங்கம் முன்னின்று நடத்தும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு என் கட்டுரை சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வந்தது:
தலைப்பு : ” சுற்றுச்சூழல் அறமும் குறளும் “
அதன் பின் 30 பக்க முழுமையானக் கட்டுரையை எழுதி அனுப்ப மூன்று மாதம் தவணை தந்திருந்தார்கள் அதை எழுதி அனுப்பி இருந்தேன்.. மார்ச் ஒன்றாம் தேதி அந்தக் கட்டுரை ஏற்கப்பட்டதாகவும் முறையான மாநாட்டுக்கு அழைப்பிதழ் வரும் என்றும் தெரிவித்திருந்தார்கள். மாநாடு ஏப்ரல் முதல் வாரம் சிகாகோவில் நடைபெறுவதாகும். சென்ற மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்தது .ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதில் கலந்து கொண்டேன்.
பிறகு அழைப்பும் விசா பெறுவதற்கான விண்ணப்பங்களும் நடைமுறைகளும் மின்னஞ்சலில் வந்து கொண்டே இருந்தன குழு விசா என்பதால் பலரிடம் விண்ணப்பங்கள் பெற்று அவர்கள் 15 தினங்களுக்கு பின்னால் ஒப்படைத்தார்கள. விசாக்கான கட்டணம் 16 ஆயிரம் ரூபாய் அவர்களால் செலுத்தப்பட்டது. ஆனால் ஒரு வாரம் கழித்து வந்த விசா நேர்முகத் தேர்வின் தேதி சில மாதங்களுக்கு பின்னால் இருந்தது.
ஏப்ரல் முதல் வாரம் மாநாடு என்பதால் அவசர விசா நேர் முகத்திற்கு வேண்டுகோள் விடுத்து விண்ணப்பம் தரப்பட்டது ஆனால் சில நாட்களுக்கு பின்னால் அப்படி அவசர விசா நேர்முக தேதி தர இயலாது. அவசர விசா நேர் முகம் தருவதற்கான பிரிவில் தாங்கள் இல்லை என்று குறிப்பிட்டு அதை நிராகரித்து விட்டார்கள் .எனவே வழக்கமான விசாத் தேதியில் வந்து பேட்டி தருமாறு கேட்டு இருந்தார்கள். அமெரிக்காவிலிருந்து சிக்காகோ தமிழ் சங்கத்தினரும் சென்னையில் உள்ள அவர்கள் சார்பானவர்களும் முயன்றார்கள் ஆனால் அவசர விசா நேர்முக பட்டியலில் இருக்கும் வகையாளர்களில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் இல்லை என்பது போல அவர்கள் தெரிவித்து விட்டார்கள். இந்த முறை அந்த மாநாட்டின் அழைப்பிதழில் சாலமன் பாப்பையா, ஜேம்ஸ் வசந்தன் உட்பட பலர் கண்ணில் பட்டார்கள். முன்பு வேறு காரணத்திற்காக விசா பெற்ற வேறு கட்டுரையாளர்கள் சிலர் செல்கிறார்கள் புதிதாக விசா பெற வேண்டி இருந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டவர்கள் 12 பேருக்கு விசா கிடைக்கவில்லை. அதில் நானும் ஒருவன்.. ஆறு மாதமாக இது சார்ந்த மின்னஞ்சல்களும் நடவடிக்கைகளும் இருந்தன கடைசி நேரத்தில் கைகூடவில்லை. சிக்காகோ தமிழ் சங்கத்தினர் முன்னதாகவே விசா ஏற்பாட்டை செய்திருக்கலாம் அல்லது அவர்கள் நினைத்தபடி கடைசி நேரத்தில் அவசர விசா என்பது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது..)
குறும்படம் வெளியீடு
0 திருப்பூர் அர்ஜின் சரவணன் இயக்கிய “ பிரம்மாஸ்திரம் “ குறும்படம் வெளியீடு நற்பவி இசைப்பயிற்சி மையம், மிர்த்திகா நகைக்கடை மாடி, பாண்டியன் நகர் பேருந்து நிலையம், திருப்பூரில்14/4/24 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது.
.
0 0
தலைமை: அ. க. சூரியா
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் எஸ் எல் முருகேஷ் ( சதிராடு திரைப்படம் மற்றும் 20 குறும்படங்கள் இயக்கியவர்) குறும்பட்த்தை வெளியிட சின்னத்திரை நடிகை சர்மிளா பெற்றுக்கொண்டார்.
பிரம்மாஸ்திரம் படம் பள்ளிக்குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறையின்மையும் அதன் காரணமாக அவர்கள் பெறும் பாடங்களையும் சொல்கிறது
இயக்குனர் அர்ஜின் சரவணன் தன் குறும்பட திரைப்பட அனுபவங்கள் குழந்தைகளை மையமாகக் கொண்டு தொடர்ந்து அமைந்து வரும் அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.
முன்னிலை : உதவி இயக்குனர்கள், பிரபு, ராஜகோபால் , எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் . செல்வன் பாரதியின் இசை பயிற்சிக் கச்சேரியும் நடைபெற்றது.
நற்பவி வாசகர் வட்டம், பாண்டியன் நகர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்புக்கு: அ. க. சூர்யா ( 98434 33542 )
பிரம்மன் பல உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். ஆதி மனுவை ஆடை தரப் படைத்தான்.. சிவன் தேவனைப் படைத்தார் திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய தாமரை நூலை வாங்கிச் சென்று ஆடை நெய்யச் சொன்னார். சிவன். சகர நாட்டு தலைநகர் ஆமோதா அவன் ஊர் என்றார்.. திருமால் தாமரை நூலை தந்து பாதுகாப்புக்காக சக்கராயுதம் ஒன்றை கொடுத்தார். வழியில் தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்த அரக்கர்கள் நூலை பறிக்க முயல்கின்றனர். சக்கராயுதத்தை அவர் ஏவ அரக்கர்கள் நிலத்தில் விழுந்த இரத்தத்திலிருந்து ஆயிர கணக்கில் தோன்றிப் போரிட்டனர்.. சக்கராயுதம் செயலற்று போனது. தேவலர் தனக்கு உதவ தாயார் சண்டிகையை எண்ணி பிரார்த்தனை செய்தார். ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் தோன்றினாள் சவுடேஸ்வரி. சூலம், சக்கரம், கத்தி, கதாயுதம் என்ற நான்கு கைகளிலும் ஆயுதங்கள் மின்னின அரக்கர்களின் ரத்தம் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்து நிறமாக இருந்தன. தேவர் தன்னிடம் இருந்த நூலை ஐந்தாய் பிரித்து அந்த ரத்தத்தில் நனைத்துக் கொண்டார். அப்படித்தான் நிறங்கள் நூலில் சேர்ந்து சேலையில் உற்பத்தியாகி மிளிர்கின்றன.
உலக புத்தக தினத்தையொட்டி
திருப்பூரின் மூத்த எழுத்தாளருக்குப் பாராட்டு. .( 83 வயது மதுராந்தகன் )
0
திருப்பூரின் மூத்த எழுத்தாளர் 83 வயது மதுராந்தகனுக்கு உலக புத்தக தினத்தையொட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாசகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
” என் முகவரி” என்ற கவிதைத் தொகுதி,
” வாழ்வை அறிந்த மாய சூழல்” இலக்கிய விமர்சங்கள் கட்டுரை நூல் ஆகியவை வெளியாகியுள்ளன.
5 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கானக் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் நூல் வடிவம் பெறாமல் உள்ளன.
சமீபத்தில் வெளிவந்த “ கள்வன் “ திரைப்படத்தில் ( இயக்குனர் பிவிசங்கர் ) நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர்.
பல வீதி நாடகங்களிலும் நடித்தவர்.
அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர்.
இந்த வாரம் 83 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். திருப்பூர் கனவு இலக்கிய வட்ட நண்பர்கள் அவருக்கு பாராட்டைத் தெரிவித்தனர்.
0
தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 83. நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும் 27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ).
எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் இருந்தார்.. தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு . “ என் முகவரி “ இவரின் கவிதை நூல் . நிரந்தர முகவரி இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர்.
வயது : 83 ( என்பத்து மூன்று ) ( 77089 89639 )
வேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர்
படைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960
புரட்சித் தலைவி சாதனை மலர் 2005
மெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு )
எனது முகவரி ( கவிதை தொகுப்பு )
வீடு : சொந்த வீடு இல்லை., வாடகை
வீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது
முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு
தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602 ( 77089 89639 )
83 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.
திருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர்.
சமீபத்திய கள்வன், முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர்
அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர்.
( சுப்ரபாரதிமணியன் )
இணைக்கப்பட்ட புகைப்படத்தில்: தூரிகை சின்னராஜ், மதுராந்தகன், சுப்ரபாரதிமணியன்..
எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சி
கொங்கு பகுதி இலக்கிய இதழ்களின் ஆசிரியர்களை ஓவியங்களாக கொண்ட ஓவிய கண்காட்சி கோவை அவினாசி சாலையில், ,மீனாட்ட்சி மகாலில் , நவ இண்டியா பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் அரங்கம் 13 ல் இடம் பெற்றுள்ளன. மே 5 வரை இந்தக்கண்காட்சி .நடைபெறுகிறது.. மக்கள் வாசிப்பு இயக்கம் இந்த 10 நாள் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 30/4/24 எழுத்தாளர் சுப்ரபாரதிமனீயன், ஓவியர் சின்னராஜ ஆகியோர் தங்கள் படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்
இந்த ஓவிய கண்காட்சியில் சுமார் 50 ஓவியங்கள் இடம் பெற்றன. இவற்றில் 30 ஓவியங்கள் கொங்கு பகுதி சார்ந்த எழுத்தாளர்களின் ஓவியங்கள்.. இவர்களில் சாகித்தய அகடமி பரிசு பெற்ற சிற்பி பாலசுப்ரமணியம் ,கவிஞர் புவியரசு மற்றும் சுப்ரபாரதிமணியன், கோவை ஞானி, பூ அ. ரவீந்திரன் உட்பட பல எழுத்தாளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன இந்த வண்ண ஓவியங்களை கோவை சார்ந்த தூரிகை சின்னராஜ் அவர்கள் வரைந்திருந்தார்
இதைத் தவிர அமீரக எழுத்தாளர்கள் என்று முப்பது எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சி இடம் பெற்றன .சார்ஜா, அபுதாபி, துபாயில் வாழும் முப்பது இளம் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்களை தூரிகை சின்னராஜ் ஓவியங்களாகத் தீட்டி இருந்தார். அவையெல்லாம் சென்ற ஆண்டின் சார்ஜா புத்தக கண்காட்சியின் போது அங்கே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. தூரிகை சின்னராஜ் அவர்களுக்கு புக்கிஷ் என்ற விருதை இதன் காரணமாக அங்கே அவருக்குத் தந்தார்கள் அந்த ஓவியங்களும் இந்த ஓவிய கண்காட்சி இடம்பெற்றிருந்தன.
செய்தி : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 9486101003/ வீரபாலன்
0
SUBRABHARATHIMANIAN சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
NCBHRs 1200
சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல்
300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
“ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது : NCBHRs 1200
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/
subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru
(( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது::
( சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள்/ சுப்ரபாரதிமணியன்
என் ” சிலுவை “ நாவல், என் நாவல்களின் பட்டியலில்
இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது.
இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள்
பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது.
கிறிஸ்துவ பாதிரியாக இருந்த எபிரேம் என்ற முதியவரை பனிரெண்டு ஆண்டுகளூக்கு முன் சேவூர் புளியம்பட்டி சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தித்தேன். பைபிளில் வரும் பல நிகழ்ச்சிகள் அந்த தேவாலயத்தின் உள்ளேயிருந்த சுவர்களில் சித்திரங்களாக வரையபட்டும் தூண்களாக அமைக்கப்பட்டு இருந்தன. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவர் அறிமுகமானார. அவர் ஒரு ஆய்வாளர் என்று சொல்லிக் கொண்டார். அவர் சோமனூர் என்ற பகுதியைச் சார்ந்தவர் என்ற வகையில் அவருடைய ஆய்வைப் பற்றி சொன்னார்.. நான் அவரின் சொந்த ஊரான சோமனூர் பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தை சார்ந்தவன் என்ற வகையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நானும் பேசினேன். அவர் ஆய்வாளர் என்ற வகையில் சோமனூர் பற்றி செய்திருக்கிற ஆய்வுகளையும் அவை கிறிஸ்துவ பத்திரிகைகளில் வந்திருப்பது பற்றியும் நிறைய சொன்னார். எனக்கு பெரிய நாவல்கள் எழுத வேண்டிய ஆசை இருந்தது ஆனால் அதற்கான களம் என் மனதில் இல்லை. என் நாவல்கள் எல்லாம் 300 பக்கங்களுக்குள் அடங்கிப் போகும் அளவில் இருந்திருக்கின்றன. இந்த சூழலில் ஒரு பெரிய நாவலை சோமனூரைக் களனாகக் கொண்டு கடந்து போன 300 ஆண்டு சரித்திரத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நான் வாழ்ந்த மக்கள், நிலம் பற்றி நான் அதிகம் எழுதவில்லை என்னுடைய மூதாதையர்ளின் தொழில் சார்ந்தும் என்னுடைய பரம்பரை சார்ந்தும் அவர்களுடைய அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் நான் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எனவே சோமனூரை பற்றி எழுதுவது என்பது என் மூதாதையர் நிலம் சார்ந்தும், என் மூதாதியர் தொழில் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது என்று பட்டது .அந்த கிறிஸ்துவ பாதிரியார் ஏறத்தாழ ஒரு முதுமை இல்லத்தில் தான் இருந்தார். அவரிடம் இருந்து சில சேகரித்துக் கொண்ட தகவல்கள் நாவல்கள் எழுத உதவினார். பின்னால் அவர் வால்பாறைக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். வால்பாறை போன்ற இடங்களின் சீதோஷ்ணம் அவருடைய உடல்நிலை எப்படி ஒத்துவரும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஆனால் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருந்தேன் அவரை தேடி சென்ற ஒரு முறை அவர் இறந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஆனாலும் அவர் சொன்னபடி இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் தான் சென்று சேர வேண்டும் என்பதால் நான் அதை ஒரு நாவலாக்கும் பணியில் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த நாவலை நான் எழுதினேன்
இந்த நாவல் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுஅச்சிலும் புத்தகமாகவும் வருவது என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது நீண்ட நெடுங்காலமாக இதை எதிர்பார்த்து இருந்தேன். இடையில் வந்த கொரோனா காலம் இந்த தாமதத்தை அதிகப்படுத்தி விட்டது. அந்த வகையில் இந்த நாவல் என்னுடைய நூறாவது புத்தகமாகவும் அமைந்துவிட்டது.
கலாச்சார சரித்திரம் என்பது அரசியல் சரித்திரம் மற்றும் கடந்து போகும்ஆண்டுகளின் நிகழ்வுகளின் தொகுப்புகள் என்றபடி இருக்கும். இந்த கலாச்சார சரித்திர நிகழ்வுகளை ஒரு நாவலுக்குள் கொண்டு வருவது , அந்த மனிதர்கள் வாழ்க்கையை இதற்குள் வைத்துப் பார்ப்பது எனக்கு தேவையானதாக இருந்தது சோமனூர் என்ற பகுதியில் திப்பு சுல்தான் போன்றவரின் வருகை கிறிஸ்தவர்களின் முக்கிய இடமாக இருந்த சத்தியமங்கலம், கொடிவேரி போன்று சோமனூர் விளங்கிய விதம், நெசவாளர் குடும்பங்களின் நிலை, பஞ்ச காலங்கள், மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிய வித்தைகள் என்று தொடர்ந்தது, என் நாவல் பின்னால் இரண்டாவது பாகமாக சோமனூர் மற்றும் கோவை பகுதிகளில் தொழிற்சங்க வரலாற்றுப் பதிவுகளாவும் மாறிவிட்டது. இன்னொரு பகுதியாக நான் அவர்களை திருப்பூருக்கு கொண்டு போனேன்.
காரணம் 10 வயது வரை தான் அந்த செகடந்தாளி கிராமத்தில் நான் வசித்து வந்தேன், தண்ணீர் பிரச்சினை, மேல் சாதி ஆதிக்கவாதிகளின் வன்முறை காரணமாக திருப்பூருக்கு குடி பெயர்ந்த நெசவாளர் குடும்பங்களில் என் குடும்பம் ஒன்றாகிவிட்டது. எனவே என் நாவலைக்கு அங்கு நகர்த்துவதும் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்த அந்த நெசவாளி குடும்பத்தை சார்ந்த ஒருவனின் பொதுவுடமை இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளும் தலைமறை வாழ்க்கையும் என்று தொடர்ந்தது .பின்னால் திருப்பூரில் பின்னலாடை வளர்ச்சியும் நவீன யுகத்தில் மற்றும் உலகமயமாக்களில் தொழிலாளர்கள் நிலைமை என்று தொடர்ந்தது.
என் வாழ்க்கைஅனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டவற்றையும் சோமனூர், திருப்பூர். திருப்பத்தூர் என்று விரிவாக்கிக் கொண்டேன். நினைவுகளை, கலாச்சார பதிவுகளை பகிர்ந்து கொள்கிற அனுபவத்தில் இந்த நாவலை வடிவமைத்தேன், எனது பல படைப்புகளுக்குள் வந்த அமைந்திருந்த பின்னல் தொழிலும் விசைத்தறி தொழிலும் நெசவுத் தொழிலும் இயல்பாகவே இந்த நாவலுக்குள்ளும் வந்துவிட்டன சமீப காலம் வரை. நீண்ட கடல் பயணத்தில் அலைக்கடிக்கப்படுகிற படகு வாசிகள், படகு பயண வாதிகள் போல இருத்தலியல் சிக்கல்களும் வாழ்க்கை மீது மீதான நம்பிக்கையும் மாறி மாறி செயல்பட என் கதாபாத்திரங்கள் அமைந்து விட்டார்கள். அந்த வகையில் நினைவுகளையும் சரித்திரம் சொல்லும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிற வாய்ப்பும் இந்த நாவல் மூலம் ஏற்பட்டதும்
இந்த நாவல் அனுபவங்கள் போல் பல அனுபவங்களும் வாழ்க்கையை கடந்து போக செய்திருந்தாலும் ஒரு பெரிய நாவலையே பதிப்பித்தலில் இருக்கும் சிரமங்களால் இன்னும் ஒரு பெரிய நாவலை எழுதுகிற ஆசையும் இப்போதைக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கை பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டே இருக்கலாம். அது கலாச்சார இயல்புகளூம் மொழியும் மாறிக்கொண்டிருக்கும் தன்மையில் அதை செய்து கொண்டே இருக்கலாம் என்றுதான் எனக்கு இந்த நாவல் வெளியிட்டில் தோன்றுகிறது..
300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..நாவலை வெளியிட்ட
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நன்றி,
( ரூபாய் 1200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு) ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது
0
சிகாகோ தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பை ஒட்டி அமெரிக்க விசா விண்ணப்பித்தபோது அவர்கள் தந்த விசா நேர்முகம் தேதி. 13/6/2025.
நிகழ்ச்சி தேதியைக்குறிப்பிட்டு மீண்டும் கேட்டபோது எமர்னென்சி விசா நேர்முகத் தேதி தரும் பட்டியலில் தாங்கள் இல்லை என்றும்
வழக்கமான நேர்முகத்தேதியில் வருகை தருமாறும் கேட்டுக்கொண்டார்கள் மின்னஞ்சல் மூலம்.
நேர்முகத் தேதியை முன்னதாக பெற வாய்பு உள்ளதா. வழி முறை என்ன. தெரிந்தவர்கள் கருத்துக்கள் சொல்லவும். நேர்முகத்தேதி ஒரு ஆண்டுக்குப்பின் இருக்கிறது என்பதால் ..
வணக்கம். சென்ற வாரம் கேரளா அட்டப்பாடியில் நடந்த திரைப்பட விழாவில் விம்வெண்டர் படம் பார்த்தேன். நேற்று அது பற்றிய உங்கள் கட்டுரை வெகு சிறப்பு. பராட்டுகள்.
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவ தும் அதிக வெப்பம் (வெப்ப அலை) வீசி வருகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரண மாக குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுக ளுக்கு இடையே ஏற்கனவே உள்ள கல்வி கற்றல் இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இடைவெளி ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடையில் மட்டு மல்ல, நாடுகளில் உள்ள வளர்ந்த மற்றும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடையில் கூட அதிகமாகலாம் எனவும் எச்சரித்துள்ளனர். அதிக வெப்ப அலை வீசத் துவங்கிய பிறகு, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால் அவர்களுக்கு கடுமையான உடல் நலப்பிரச்ச னைகளை உருவாக்கும். வங்கதேசத்தில் மின் விசிறிகள் இல்லாத, காற்றோட்டம் இல்லாத பள்ளிகள் உள்ளன. மாணவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்ள அடிப்படை வசதிகளை கூட பள்ளிக ளில் தர முடியாத சூழல் உள்ளதை ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பின் வங்கதேச இயக்குநர் ஷுமோன் சென்குப்தா குறிப்பிட்டுள்ளார். வெயில் காலத்தில் மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது அதிக வெப்பநிலை மூளையின் அறிவாற்றல் செயல் பாடுகளை நிறுத்தி மந்தப்படுத்துகிறது. மேலும் இது மாணவர்களின் நினைவாற்றல் திறனையும் குறைக்கிறது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்க உயர் நிலைப் பள்ளி மாணவர்களிடையே அமெரிக் கன் எகனாமிக் ஜர்னல் நடத்திய ஆய்வில், அதிக வெப்பநிலை தாக்கத்தால் தேர்வுகளால் மாணவர்களின் மதிப்பெண் மிக மோசமாக குறைந்தது தெரிய வந்தது.அதாவது 0.55 டிகிரி செல்ஸியஸ் (1F) வெப்ப நிலை அதிகரித்ததால் அந்தாண்டு மாணவர்களிடையே 1 சதவிகிதம் கற்றல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் போதிய குளிரூட்டப்பட்ட காற்றோட்டம் உள்ள அந்த பள்ளிகளில் இவ் வாறான கற்றல் பாதிப்பு இல்லை என பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஜோஷ் குட்மேன் கூறியுள்ளார். பல்வேறு ஆய்வுகளின்படி, 40 முதல் 60 சத வீதம் வரையிலான அமெரிக்கப் பள்ளிகள் குறைந்தபட்சம் பகுதியளவேனும் காற்றோட்ட வசதி கொண்டதாகக் கருதப்படுகிறது. இது இல்லாத பள்ளிகள் பெரும்பாலும் அமெரிக் காவில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றம் சூடான மற்றும் குளிர் நாடுகளுக்கு இடையேயும், ஒரே நாட்டிற் குள்ளும் கற்றல் இடைவெளியை அதிகப்படுத் தும் என கூறப்படும் நிலையில் சில வளர்ந்த நாடுகள் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்கின்றன. 2026 ஆம் ஆண்டுக்குள் அதிக வெப்ப காலங்களில் மாணவர்களை பாதிக்காத வகை யில் குளிரூட்டப்பட்ட நல்ல காற்றோட்டமான வகுப்பறைகளுடன் கூடிய 30 வெப்ப - எதிர்ப்பு பள்ளிகளை ஜோர்டானில் கட்டப் போவதாக சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
0
ஹைதராபாத் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன்
அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள் மூலம்தான் ஹைதராபாத் பற்றி நான் அறிந்திருந்தேன். ” பதினெட்டாவது அட்சக்கோடு “ நாவல் மற்றும் நூறு சிறுகதைகளில் அவர் எழுதிய சித்தரிப்புகளையும் ஹைதராபாத் மக்கள் வாழ்க்கையையும் அறிந்திருந்தேன்.
இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் )
செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “.
என் முதல் நாவலை நர்மதா ராமலிங்கமும், அடுத்து வந்த பதிப்புகளை மருதாவும், டிஸ்கவரி புக் பேல்ஸ் வேடியப்பனும் வெளியிட்டார்கள்.
0அந்த நாவல் பற்றி ஜெயந்தன், ஜெயமோகன், நகுலன் போன்றோரின் கீழே உள்ள குறிப்புகள் அந்நாவல் வாசிப்பிற்கு உதவும்
1 ஜெயந்தன் :
” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )
2 ஜெயமோகன்
நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87
3. நகுலன்
சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.
இந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று.
0
என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம் ” சுடுமணல் ”நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.
0
சுடுமணல் பற்றி சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தோப்பில் மீரான் அவர்களின் குறிப்புகள் கீழே உள்ளன.
சுப்ரபாரதிமணியன் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாளி. கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து ‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர். தமிழ் இலக்கிய உலகில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள இவர் இதுவரை பதினைந்து நாவல்களையும் பதினைந்து சிறுகதைத் தொகுதிகளையும் உள்ளடக்கிச் சுமார் அய்ம்பது படைப்புகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவருடைய இலக்கிய படைப்பாக்க முயற்சி நாவல்கள், சிறுகதைகள் என்று நின்று விடாமல் கவிதையிலும், விமர்சனத்திலும் கூட விரிவடைந்து தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளன.
இந்த நாவலாசிரியருடைய ‘சாயத்திரை’ என்ற நாவல் ‘சாயம் புரண்ட திரா’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அதனுடைய வங்காள, ஆங்கில, இந்தி, கன்னட மொழிபெயர்ப்புகளும் வெளி வந்துள்ளன. ‘தேநீர் இடைவேளை’ என்ற (சாய இடவேளெ) , பிணங்களின் முகங்கள் ( பிரேதங்களின் முகங்கள்) ஆகிய இவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சுப்ரபாரதிமணியனுடைய பிறந்த ஊர் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூராக இருந்த போதிலும் தொடக்க கால நாவல்கள் இரண்டும் அய்தராபாத் பின்னணியில் எழுதப்பட்டவை. தொடக்க காலத்தில் இவர் அங்கு பணியாற்றியதன் காரணமாக அதைப் பின்புலமாக்கி இவர் எழுதியுள்ளார். அதன் பிறகு, வெளியிடப்பட்டவை திருப்பூர் என்ற தொழில் நகரத்தைப் பின்புலமாக்கி எழுதப்பட்டவை.
சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பிற இலக்கியப் படைப்புகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது சிறிதளவு திறனும், மாறுபட்டதுமாக உள்ள ஒரு பின்புலத்தில் படைக்கப்பட்ட ‘ஓடும் நதி’ விமர்சகர்களுடைய கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.. கூரிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய மிக நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது.இது என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது.
இவருடைய இலக்கியப் படைப்புகள் முழுவதும், வாழ்க்கையில் காணப்படுகின்ற மாற்றங்களையும், தகர்வுதலையும், நிராசைகளையும், அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து வருகின்ற மனிதர்களுக்குரிய நியாயங்களை முன் நிறுத்திக் கூடியவையாக உள்ளன. உலகமயமாதல் சூழ்நிலைமையில் தொழில் நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுடைய நரக வேதனை மிகுந்த வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கக் கூடியவையாக இவரது படைப்புகளின் நோக்கமாகும். தொழிலாளர்கள் கொடுமையான முறையில் சுரண்டலுக்கு உள்ளாகும் நவீன முதலாளித்துவத்திற்கு, புதிய அடிமைத் தனத்திற்கு எதிராக நின்று, தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டி உரத்த குரல் எழுப்புவது இவருடைய படைப்புகளின் வாயிலாக இவர் மக்களுக்குச் செய்யும் பணியாக உள்ளது. இந்த வகையில் இவர் ஒரு தீவிரமான இலக்கியப்படைப்பாளியாக விளங்குகிறார்.
மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள உழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படும் நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும் விதத்தில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன.நதிநீர்பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “ சுடுமணல்”. ..
0
நகரம் 90 : ஹைதராபாத் பற்றிய என் மூன்றாம் நாவல்
* சுஜாதா தேர்வு செய்து பரிசளித்தது
* குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைத் தந்த படைப்பு . அந்த அனுபவம் “ மண்புதிது “ என்ற தலைப்பில் காவ்யா பயண நூலாகவும் வந்தது.
* குமுதம் இதழில் தொடராக வந்தது
* மதவாதத்தை அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்தும் போக்கையும் மதக்கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் பற்றியுமான நாவல்.
* மதவாதத்திற்கு எதிரான முக்கிய இலக்கியப் பதிவு இந்நாவல்
இன்னும் ஞாபகமிருக்கிற அந்த “ இலக்கியச் சிந்தனைப் பொழுது…..”
------------------------------------ சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------------------------------
சென்னை “ இலக்கியச் சிந்தனை ” அமைப்பு சமீபத்தில் பொன்விழாவைக் கொண்டாடியிருப்பது ஒரு சாதனை. சிறுகதைகளின் மேன்மை சார்ந்து இவ்வளவு ஆண்டுகள் இரு அமைப்பு இயங்குவது சாதனைதான்.
சிறுகதையாளர்கள் நோபல் பரிசு போன்ற உயரிய விருதுகளில் கவனிக்கபப்டுவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு . ஆனால் அலிஸ்மன்றோவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அவர் ஒரு (பெரும்) சிறுகதையாளர்.
எனக்கு “இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்.. “ என்ற சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு கிடைத்த போது அப்படியொரு பெரும் பரிசு கிடைத்த மகிழ்ச்சி இருந்தது. எழுத்துலகின் ஆரம்பகாலம் .என்ற காரணம் நான் பெரும் குறிப்பிடத்தக்க பரிசாய் அப்போது அது அமைந்திருந்தது.
எஸ். வி. ராஜதுரை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வந்த “ இனி ..” என்ற இதழில் அக்கதை வெளிவந்தது. நான் அப்போது ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். பரிசு பெற்றதையொட்டி ஊருக்கு வர முடிந்த மகிச்சியும் கூட சேர்ந்து கொண்டது இன்னொரு காரணம்.
" இனி " இதழ் தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இதழ். அழகான அச்சமைப்பு, நேர்த்தியான வடிவம் . நலல ஓவியங்களுடன் நேர்த்தியாக் அக்கதை அச்சிடப்பட்டதை பார்த்த கணத்தில் எல்லையில்லாத ஆனந்தத்தில் திளைத்தேன் என்பதே உண்மை.
நெசவாளர் குடும்பத்துத் திருமணங்களில் டர்பன் கட்டுவதை தொழிலாளச் செய்து வந்த ஒருவர் கால மாறுதலில் நசிந்து போய் புது மாறுதல்களை மன அவஸ்தைகளுடன் பார்க்கும் அனுபவமாய் அமைந்திருந்தது. சாதாரண அனுபவங்களாய் நினைத்து நான் பதிவு செய்தது முக்கிய பண்பாட்டுக்கூறுகளாகவும் அமைந்து பெரும் வரவேற்பும் கவனிப்பும் கொண்ட கதைகளாய் அமைந்திருந்ததில் இக்கதைக்கும் " ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்கும் " என்ற கதைக்கும் இடமிருக்கிற்து.
சென்னை விழாவில் கலந்து கொள்ளப் போகிறோம் என்றப் பரபரப்பு திரு .பாரதி அவர்களின் கடிதம் வந்தது முதல் ஒட்டிக் கொண்டது.
அமரர் செ. யோகநாதனிடம் முதலில் தொலை பேசியில் இதைப் பகிர்ந்து கொண்டேன். மாலன், திகசியின் வாழ்த்து ரொம்பவும் உற்சாகமூட்டியது. ( அப்போது “ தீராநதி ‘’யில் வந்த எனது சுற்றுச்சூழல் கட்டுரைகள் பற்றி திகசி தொலை பேசியில் பேசும் போது சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில் நீங்கள் ஓர் இயக்கமாகச் செயல்படவேண்டும் என்பார். அதைத்தான் அப்போதும் அவர் சொன்னார். இயக்க ரீதியான செயல்பாடுகளில் அவருக்கு என்றைக்கும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ) ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் கலந்து கொள்ள மேடையில் இடம் கிடைத்தது பெரும் பாக்யமாகப் பட்டது. சிறுகதை படைப்புக்கான அங்கீகாரம் அது என்பதை உணர்த்தியது.
ஒடிய, ஆங்கில எழுத்தாளர் மனோஜ் தாஸ் பரிசை வழங்கினார். அவர் எழுத்துக்களை நான் ஆங்கில மொழியில் அப்போது அதிகம் படித்ததில்லை. சில மொழிபெய்ர்ப்புக்கதைகளை பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்களின் மொழிபெயர்ப்பில் படித்திருந்தேன். இலக்கியச் சிந்தனைப் பரிசு சிறுகதை படைப்புக்கான அங்கீகாரம் அது என்பதை உணர்த்தியது. வேர்த்து விருவிருத்த முகத்துடன் அவரிடமிருந்து பரிசு பெற்ற புகைப்படம் மனதிலிருக்கிறது. புகைப்படப் பதிவு என்பது அப்போது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இன்றைக்குத் தெரிந்திருக்கிறது.
( சமீபத்தில் மரணமடைந்தார். இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான மனோஜ்தாசின் சில கதைகள் மிருகங்களுடனான மனித உறவுகளை விளக்குவதற்குப் பயன்பட்டதை அவரின் சில சிறுகதைகளை படிக்கையில் உணர்ந்திருக்கிறேன்.புலியொன்றை வளர்த்து வருபவன் சுதந்திரம் என்பது அது காட்டிற்குள் திரிவது என்பதைக் கண்டு கொண்ட ஒருவன், அதை காட்டிற்குள் கொண்டு விடச் செய்கிற முயற்சிகள் தோற்றுப் போவதைக் காண்கிறான். முதலை ஒன்று ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை இழுத்துச் சென்று குடும்பம் நடத்துகிறது. அது மனித உருவாகவும் ஆகும் இயல்பு கொண்டது. அது ஊருக்குள் வந்து இருக்கும் போது ,கொல்லப்படுகிற போது அவற்றின் உறவில் ஏற்படும் அதிர்வுகளை இன்னொரு கதை பேசுகிறது. ஆந்தை பற்றிய ஒரு கதையின் சித்தரிப்பில் ஆந்தை மூடநம்பிக்கைகளின் குறியீடாகவும், கடவுளின் நேரடி பிரதிநிதியாகவும் ஊருக்கு வந்து மக்களை மிரட்டுவதை ஒரு கதையில் சித்திரித்திருக்கிறார். அதை ஜமீந்தார் ஒருவர் சுட்டுக் கொல்லும் போது அந்த ஊர் பயத்துள் மூழ்கிப் போவதை அக் கதையில் சொல்கிறார். )
.
லட்சுமணன் இனிமையாக வரவேற்றார். லட்சுமணன் அவர்கள் முந்தைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரர் என்பது அப்போது தகவலாய் கிடைத்திருக்கவில்லை எனக்கு.
அ.சா. ஞானசம்பந்தன் அவர்களின் பேரூரையைக் கேட்கும் அரிய வாய்ப்பும் ஏற்பட்டது. பழுத்த ஞானப் பழம் அவர்.
அ.முத்துலிங்கம் அவர்கள் நோபல் பரிசு பெற்ற அலீஸ்மன்றோ பற்றிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் :
அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ’உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். “ அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத்திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையை சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தை கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும். ஆனால், கதை முடிவை நோக்கிச் செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும். அதை வரவேற்பேன். ஒரு வசனம் அது சொல்ல வந்ததிலும் பார்க்க கூடச்சொல்லவேண்டும். ஆனால் பூச்சு வேலை எனக்கு பிடிக்காது.”
இலக்கியச் சிந்தனையும் பூச்சும், மினுக்கமும், வண்ணமும் சேர்க்காமல் இயல்பாக இன்னும் தன் பணியைச் செய்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் தற்போது இலக்கியச் சிந்தனை மாதக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை வருத்தமே கொள்ளச் செய்கிறது.நான் நடத்தி வரும் “ கனவு “ இலக்கிய காலாண்டிதழ் சார்ந்த மற்றும் கனவு இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் அவ்வாறே உள்ளது, ஆனாலும் இலக்கியச் சிந்தனை தொடர்ந்து வெகுஜன இதழ்களில் நசிந்து வரும் சிறுகதைக்கு ( அதே சமயம் சிற்றிதழ்களில் வரும் அதிதீவிரமான, முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள்) ஊக்கம் தருவது டானிக் ஆகவே கொள்ளலாம். இலக்கியச் சிந்தனை தன் பரிசிலனைக்கு இலக்கிய இதழ்களை பெருவாரியாக எடுத்துக் கொள்ளாததன் குறையையே சமீபத்தில் அவதானித்து இவ்வாறு சொல்கிறேன்.
பள்ளியில் பெற்ற முதல் பரிசு ஓரடி ஸ்கேல்தான். ஆனால் அது எப்போதும் பெரிய பரிசாகப்பட்டிருக்கிறது. அது போல் இலக்கியச் சிந்தனையின் பரிசும் பல அடிகள் தாவிப் பாய உதவியிருக்கிறது என்பது உண்மை.இன்னும் இலக்கியச் சிந்தனை உயிர்ப்புடன் இயங்கி வருவது ஆறுதல் .அதன் அடையாளம் ஏப்ரல் மாதப் பொன்விழாக்கூட்டமும் எழுத்தாளர்களுக்கான அங்கீகாரமும்.
500 பக்க அளவில்கடந்த 50 ஆண்டுகளின்- ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்ற 50 சிறுகதைகளைத் தொகுப்பாக்கிக் கொண்டுவந்திருப்பதும் சாதனைதான் .
சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியனின் திரைக்கதை நூல்கள் வரிசை - மதுராந்தகன்
சுப்ரபாரதிமணியனின் . திரைப்பட கட்டுரை நூல்களில் திரைப்பட ரசிகனுக்கு, இலக்கிய வாசகனுக்கு நல்ல திரைப்படம் பற்றிய வழிகாட்டியாக இருக்கும். ( காவ்யா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ” திரைப்படம் என்னும் சுவாசம் “ என்ற 400 பக்க நூல் இதற்குச் சாட்சியம் ) . திரைவெளி போன்ற நூல்களும் இதற்கு சாட்சி ( உயிர்மை, நிவேதிதா பதிப்பக வெளியீடு )
தற்போது அவரின் திரைக்கதை நூல்கள் ஏழு வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் நாவல்களையும் சிறுகதைகளையும் எடுத்து திரைக்கதைகளாக்கும் முயற்சியில் மூன்று நூல்களை வெளியிட்டு இருக்கிறார்..சுமார் 30 திரைக்கதைகள் இதில் உள்ளன.
இந்த முயற்சியில் அவரின் படைப்புகளைத்தாண்டி தொடர்ந்து ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.
.
திரைப்பட தயாரிப்பாளர்கள் கதைக்காக அலைய வேண்டியதில்லை. ஏழு பாகங்களாக வந்துள்ள அவர்களின் நூல்களை படித்தால் திரைப்படத்திற்காக கதை இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை. இவரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட பல தயாரிப்பாளர்களால் திருட்டுத்தனமாக கையாளப்பட்டுள்ளது.
ஒரு படைப்பாளியின் மூலப்படைப்பை எடுத்து திரைக்கதையாக்கம் செய்யும் போது பல சிதைவுகள் ஏற்படும். நாவலின் மையம் சிதைந்து போகும். அல்லது பல முக்கியமான, நுணுக்கமான கதாபாத்திரங்களும் விடுபட்டுப் போகும். இந்த இந்த நிலையில் எழுத்தாளனே அவனின் படைப்புக்கு திரைக்கதை எழுதும் போது இந்த சிதைவு இருக்காது. ஓரளவு படைப்பாளிக்கும் திருப்தி ஏற்படும். திரைக்கதையில் வேறு ஒரு கோணமும் கிடைக்கும். இந்த வகையில் சுப்ரபாரதி மணியன் அவரின் எல்லா நாவல்களையும் திரைக்கதைகளாக்கி விட்டார் . இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனை என்று சொல்லலாம்.
அதைத்தவிர பல புதிய களன்களில் திரைக்கதைகள் என்று மொத்தமாய் 62 திரைக்கதைகள் இந்த ஏழு நூல்களில் இடம் பெற்றுள்ளன.
படைப்பாளிகள் திரைக்கதை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தங்கள் படைப்புகளை எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்கும் முயற்சி குறைவுதான். காரணம் தயாரிப்பாளரும் இயக்குனரும் கேட்கும் விசயத்தைதான் அவர்கள் திரைக்கதையாக்குகிறார்கள். வியாபாரரீதியாக அதுதான் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை திரைக்கதைகளாக்கும் போது கூட வணிக ரீதியாக பல விசயங்களைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படித்தான் படைப்பாளிகளின் திரைக்கதையாக்க முயற்சிகள் உள்ளன. ஆனால் சுப்ரபாரதிமணியன் அவரின் படைப்புகளை எடுத்துக் கொண்டு படைப்பின் மையம் அதிகம் சிதறாமலும், வணிக அம்சங்களை அளவோடு எடுத்துக் கொடும் செய்திருக்கிறார். அவரின் நாவல்களைப் படிக்கிற வாசகன் திரைப்பட வடிவத்திற்காக அவற்றை யூகித்துக் கொள்வது சாதாரணம் . அந்த யூகிப்பின் வடிவமாக இந்த திரைக்கதைகள் உள்ளன. இந்த ஏழு தொகுப்புகளில் அவரின் வெளிவ்ந்த படைப்புகள் தவிர வெளிவராத சில படைப்புகளையும், புது மையங்களையும் திரைக்கதை வடிவத்தில் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்பட தயாரிபாளர்கள், திரைக்கதாசிரியர்கள், இயக்குனர்கள், திரைக்கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கும் ஒருமித்த வகையில் பய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)