சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 27 மார்ச், 2024

திரைப்பட விழா பற்றிய நாவலும் சில திரைப்பட விழா அனுபவங்களும் : சுப்ரபாரதிமணியன் திருப்பூர் வீ ட்டி. சுப்ரமணியன் தென்னிந்திய திரைப்பட சங்கங்களில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருந்தார் அவருடன் நான் முதன் முதலாக பம்பாய் திரைப்பட விழாவிற்கு சென்றேன் .அப்போது எம்.கோபாலகிருஷ்ணன் கூட வந்திருந்தார் அது 92 ஆக இருக்கும். அப்போதெல்லாம் திரைப்பட விழா படங்கள் பார்ப்பது என்பது மிக முக்கியமான அபூர்வமான விஷயமாக இருந்தது. குறுந்தகடுகள் கூட கிடைக்காத காலம். ஆனாலும் இப்போது இருக்கிற அளவில் பிரதிநிதிகள் வரமாட்டார்கள் .பம்பாய் திரைப்பட விழாவில் நான் கலந்து கொண்ட போது கிஸ் லோஸ்கியின் த்ரி கலர்ஸ் படம் ஒரு நாள் திரையிடப்பட்டது அப்போது பால்கனியில் எங்களுடைய வரிசையில் கமல்ஹாசன் அவர்கள் இருந்தார். ஒரு படம் முடிந்த பின்னால் ( த்ரி கலர்ஸ்ல் ஒரு படம் )அடுத்த படத்திற்கு எடுத்து சென்றால் இருக்கை கிடைக்காது என்பதால் இருக்கையை விட்டு நகராமல் உட்கார்ந்து இருப்போம். அப்படித்தான் கிஸ் லோஸ்கியின் இரண்டாவது படம் தொடங்கின போது அந்த இருக்கை கையை விட்டு போய்விடக்கூடாது என்று கமலஹாசன் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஞாபகம் வருகிறது. வி ட்டி சுப்பிரமணியம் அவர்கள் அரசு பணியில் இருந்ததால் அவர் பதவி காலத்தில் இலக்கிய விழாக்கள், திரைப்பட விழாக்கள், மற்றும் மாதந்தோறும் திரைப்பட காட்சிகளை சிறப்பாக நடத்தினார். என் சாயத்திரை நாவலுக்கு ஜெயகாந்தன் திலகவதி போன்றவரை வைத்துக்கொண்டு வெளியீட்டு விழா நடத்தினார் பல திரைப்பட விழாக்களை நடத்தினார் அதில் ஒரு திரைப்பட விழாவில் பாலு மகேந்திரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எங்களுடன் நிறைய பேசினார். நியூலுக்ஸ் பிலிம் சொசைட்டி என்பதை அவர் தொடர்ந்து நடத்தினார் அது சார்பாக ஒரு மாத இதழும் கொண்டு வந்தார். அவர் தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பில் சிறப்பாக பணியாற்றினார் இப்போது அந்த கூட்டமைப்பின் பிராந்தியைக் குழு உறுப்பினராக நானும் இருக்கிறேன். அவர் தொடர்ந்து பல திரைப்பட விழாக்களுக்கு செல்வார் செல்கிறபோது திருப்பூர் பனியன், டீசர்ட் பலவற்றை கையில் கொண்டு செல்வார். திரைப்பட விழாவில் பார்க்கிற முக்கிய பிரபலங்களுக்கு டி ஷர்ட், பனியன் இவற்றை அன்பளிப்பாக வழங்குவார். அவரிடம் திரைப்பட விழாக்களின் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். அவருக்கு பின்னால் கனவு திரைப்பட இயக்கம் திருப்பூரில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பில் கனவு திரைப்பட இயக்கமும் உள்ளது 0 இந்த திரைக்கதைகள் நூல் வெளியாவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் . அவர் உலக சினிமா பாஸ்கரன் அவர்கள் உலக சினிமா பாஸ்கரன். பல திரைப்பட விழாக்களில் இவருடன் கலந்து கொண்டிருக்கிறேன் கோவா திரைப்பட விழாக்களில் ஒரே அறையை பல வருடங்கள் நானும் அவரும், பகிர்ந்து கொண்டிருக்கிறோம் முன்பு கோவையில் குறுந்தகடுகள் நிற்கிற கடையை வைத்திருந்தார் திரைப்பட. விழாக்களை நிறைய நடத்தினார். பிறகு சென்னைக்கு கிளம்பிவிட்டார். இன்ஷா அல்லா என்ற திரைப்படத்தையும் பல குறும்படங்களையும் இயக்கித் தயாரித்தார். நான் திரைக்கதைகள் நூல் எழுதுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் பாஸ்கரன் அவர்கள் ஒருமுறை வெளிநாட்டை மையமாக வைத்து ஒரு திரைக்கதை உருவாக்க படைப்பு தேவை என்றார். நான் மலேசிய பின்னணியில் எழுதி உள்ள என் நாவல்கள் கடவுச்சீட்டு, மாலு ஆகிய நாவல்களை தந்தேன். அவர் அந்த தயாரிப்பாளர் லண்டனைச் சார்ந்தவர் என்பதால் லண்டன் மையமான ஏதாவது கதை இருந்தால் நல்லது என்றார். லண்டன் கதை என்றால் அங்கு நிறைய வசதிகள் உண்டு நிதி வசதியும் கிடைக்கும் என்றார் அப்படித்தான் நான் விமோசனம் என்ற என் லண்டன் அனுபவ கதையை முழுக்கதையாக்கி அவரிடம் கொடுத்தேன் பிறகு அவர் தொடர்ந்து விரிவாக்கிக் கொடுக்கச் சொன்னார் அதையும் செய்தேன். ஆனால் அந்த லண்டன் தயாரிப்பாளர் அவருடன் ஒத்து வரவில்லை. இந்தத் திரைக்கதையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன் அப்போதுதான் அந்த திரைக்கதையும் இன்னும் நாலைந்து நாவல்களை அடிப்படையாகக் கொண்டு நான் அதன் பின்னால் தயாரித்த திரைக்கதைகளும் சேர்ந்து ஆறு திரைக்கதைகள் என்ற பெயரில் என் முதல் நூலை கொண்டு வந்தேன் இப்போது ஏழு திரைக்கதை நூல்கள் வந்துவிட்டன அவற்றில் 55 திரைக்கதைகள் அமைந்துள்ளன. இந்த திரைக்கதைகள் நூல் வெளியாவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் . அவர் உலக சினிமா பாஸ்கரன் அவர்கள் 0 திரைப்பட விழா 3 ஹைதராபாத்தில் இருக்கும் போது ஒரு முறை நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசோகமித்திரன் அவர்களை ராமோஜீராவ் என்ற பத்திரிகையாளர் அழைத்து இருந்தார் அவர் அப்போது வெற்றிகரமாக ஈநாடு பத்திரிகையை தெலுங்கில் நடத்திக் கொண்டிருந்தார். நியூஸ் டைம் என்ற பத்திரிகையை ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.. சர்வதேச திரைப்பட விழாவில் தினமும் ஒரு இலவச இணைப்பாக 8 பக்கங்களில் திரைப்பட விழாக்கள் பற்றிய கட்டுரைகள் கொண்டு வந்தார். அதில் எழுதுவதற்கு தான் அசோகமித்திரன் அவர்களை அழைத்து இருந்தார். அவருக்கு நட்சத்திர விடுதி தரப்பட்டது. அவர் அதை பார்த்து கொஞ்சம் பதறிவிட்டார். இவ்வளவு செலவு செய்து அறையை ஒதுக்கி இருப்பதற்கு பதிலாக இந்த பணத்தை எனக்கு கொடுத்தால் கூட சௌரியமாக இருக்கும் என்று சொல்ல ஆரம்பித்தார். அந்த சமயத்தில் அவருடைய அப்பாவின் இறந்தநாள் வந்தது. அப்போது அவருக்கு திவசம் செய்ய வேண்டும். ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் செகந்திராபாத் ராஷ்டிரபதி பவன் சாலையில் பிராமணர்கள் இதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவரை அழைத்தேன். செகந்திராபாத் அருகில் உள்ள ரயில் நிலையம் பிள்ளையார் கோவிலில் அந்த திவச பூஜையை அவர் நடத்தினார் நடுங்கும் குளிர். அசோகமித்திரனின் மெல்லிய பூஞ்சையான உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது குளிரால் .அந்த திவசக்காரியங்களை செய்தார். திருப்தியாக இருப்பதாக சொன்னார். இதை செய்யாமல் போயிருந்தால் மிகுந்த சிரமத்திற்கு உண்டாகி இருப்பேன். உறுத்தலாக இருக்கும் என்றார். பின்னால் சென்னையில் அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் மனைவியிடம் என்னை இவர் தான் செகந்திராபாத்தில் என் அப்பாவின் திவச காரியத்துக்கு உதவியவர் என்று அறிமுகப்படுத்தினார். எழுத்தாளர் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தபின் எழுத்தாளர் என்று சொல்லி இருக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தையை சொன்னார் ஹைதராபாத் திரைப்பட விழா தினமும் ஐந்தாறு காட்சிகள் நடக்கும். ஆனால் அவர் ஒரு திரைப்படத்தை மட்டும் தான் பார்த்துவிட்டு எழுதுவா.ர் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று ஓய்வு எடுத்தார். அந்த கட்டுரைகள் பெருத்த வரவேற்பை பெற்றன என்பதை அந்த பத்திரிகையில் பின்னால் வந்த கடிதங்கள் நிரூபித்தன. திரைப்பட விழாக்கள் பற்றிய பல கட்டுரைகளை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நான் செகந்திராபாத்தில் இருந்த போது தமிழ்ப்புத்தக்கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்தினேன். சுஜாதா, நா.பார்த்தசாரதி., சுபா உட்பட பலரும் வந்து பேசியிருக்கிறார்கள். அதை ஆரம்பித்து வைத்தவர் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள். முதல் ஆண்டு நான்கு பேருடனும் புத்தகமூட்டைகளுடனும் வந்து புத்தகக்கண்காட்சியை துவக்கினார். இரண்டாம் ஆண்டிலிருந்து நாங்களே பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் பெற்று நடத்தினோம் ஆந்திர மாநிலத் தமிழ்ப் பேரவை நண்பர்களுடன். ஒரு முறை அப்படித்தான் அசோக மித்திரன் அவர்கள் வந்தபோது அவர் படித்த மெகபூப் கல்லூரியில் அந்தக்கண்காட்சியில் நடந்ததால், அக்கல்லூரியில் அவர் படித்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் ரொம்ப நேரம் பேசினார். அசோக மித்திரன் ரொம்ப நேரம் பேசினார் என்பது பலருக்கு ஆச்சர்யமான தகவலாய் இருக்கலாம். அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பால்ய காலத்தை செகந்திரபாத்தில் கழித்தவர் . அவருக்கு ஏதாவது வாங்கித்தரலாம் என்று கேட்டபோது அவர் சொன்னது: "எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி வாங்கித் தந்தா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மேண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “ ஜெயமோகனும் நானும் தயாரித்த கனவு ” அசோகமித்திரன் சிறப்பிதழினை” கொண்டு வந்தோம் . அந்த இதழ் பின்னால் அவரின் 77 ம் வயதில் “அசோகமித்திரன் 77 “ என்ற பெயரில் இன்னும் சில கட்டுரைகளை இணைத்து அம்ருதா பதிப்பகம் மூலம் ஒரு தொகுப்பாக திருமதி திலகவதி அவர்கள் கொண்டு வந்தார். -சுப்ரபாரதி மணியன் .. Thirai novel..Subrabharathimanian .,Rs 300 Zero degree publication , Chennai ..Page 198 0 திரை நாவல் : யுவராஜ்சம்பத் பொதுவா உங்க நாவல் எல்லாமே ஏதாவது ஒரு பொது பிரச்சனையே மையமாக வைத்து அதை சுற்றி பின்னப்பட்டிருக்கும்.. ஆனா இது கொஞ்சம் அப்படி இல்லையோ? எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது கந்துவட்டி கொடுமை பொருந்தாக் காதல் இந்த இரண்டைப் பற்றியும் ஒரு சின்ன லீடு இருந்தது. நான் கூட அதை விவரித்து பின்னாடி நாவல் பயணிக்கும் அப்படீன்னு நினைச்சேன் ஆனா நீங்க செய்யல. ஏன்? போதும் அப்படிங்கிற ஒரு மனநிலையா? எவ்வளவு சொன்னாலும் இந்த சமுதாயம் கேட்காது அப்படிங்கிற ஒரு வெறுப்புணர்வா?? .. உங்க நாவலை படிக்கிற எல்லாருக்கும் இந்த வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாகவே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன்... கதை இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டு இடங்களில்.. திருவனந்தபுரத்திலும் கோவாவிலும். சாதாரண மனிதன் திரைப்பட திருவிழாக்களை எப்படிப் பார்க்கிறான் என்கிற ஒரு மாறுபட்ட பார்வை. திரைப்பட விழாக்களுக்கு தவறாமல் செல்கிற அறிவுஜீவிகளின் பார்வையில் இந்தியத் திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன ,சர்வதேச திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் தரத்தில், கதையில், காட்சிகளில், ஒப்பு நோக்குதல் போன்றவை மிக சிறப்பாகவே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். சினிமாத்துறையில் திருப்பூரைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு கடந்த 50 வருடங்களாக சிறப்பாகவே இருக்கிறது என்பதை உங்கள் நாவலைப் படித்து ,அதற்குப்பின்னால் தெரிந்துகொண்டேன். எனக்கெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது .நாமும் ஏதாவது ஒரு நாள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று அந்த விழாக்களை ஏன் அறிவு ஜீவிகள் பெரிதாக கொண்டாடுகிறார்கள், அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது . ஆனால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்லும்பொழுது எப்படியெல்லம் சிரமப்பட வேண்டும். பயணம் முதல் உணவு வரை 4,5 தியேட்டர்களுக்கு நடுவே ஓடுகிற ஓட்டம். இந்த திரைப்படத்தை பார்க்க முடியுமா முடியாதா என்கிற ஏக்கம் .அதை பார்ப்பதற்கு இரவு 12 மணிக்கு எழுந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவலம். இதையெல்லாம் மீறி மொழி தெரியாத சக மனிதர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த நாவல் . வெறுமனே திரைப்பட விழாக்களை மட்டும் முன்னிறுத்தாமல் அந்தப் பகுதி மக்களின் உணவு வகைகள்,, கலாச்சாரம் ,மொழி ,சிறப்பு போன்ற எல்லாவற்றையும் உங்களுடைய பாணியிலேயே மிக அழகாக, இயல்பாக, நாவலைப் படிக்க வாசகனின் மனதில் பதியும்படி எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள். இது உங்களுடைய வழமையான உத்தி என்றாலும்கூட, முழு நாவலையும் படித்து முடித்த பிறகு எத்தனையோ புது வித உணவுகளையும் ,அந்த மாநில மக்களின் கலை ,பண்பாடு போன்றவற்றயும், சினிமா சம்மந்தபட்ட தொழில்நுட்ப வார்த்தைகளையும் தெரிந்து கொண்டேன். அந்த விழாவிற்கு நானே சென்று வந்து அவதிப்பட்ட, பிரபுவாக என்னை உணர்ந்து கொண்டேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இது. உங்களின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வாசகனுக்கும் உலக சினிமா பற்றி பொது அறிவு கொடுத்து இருக்கிறீர்கள். * தமிழ் நாவல் களத்தில் புதிது இது.நாவல்களின் வகைமைகளில், களங்களில் புதிது புதிதாக எடுத்துக் கொள்ளும் உங்களின் முயற்சியில் திரைப்படவிழாக்களின் கோலாகலம் இதில் Thirai novel..Subrabharathimanian .,Rs 300 Zero degree publication , Chennai ..Page 198 0