சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 27 மார்ச், 2024

*நீர்த்துளி* 0 நாவல் நிகழும் காலக்கட்டத்தையொட்டி திருப்பூரில் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் ஐயா. தவணை விலைப் பண்டக்காரர்கள் முதல் தவணைப் பரிவர்தகர்கள் வரை. மறுகரை தெரியாத தவிப்பில். தொழிலாளர்களும் சிறு முதலாளிகளும் ஒப்பந்தக் கம்பெணிக்கார்களும். குடிநோயும் விபத்துகளும் தப்பி ஓட முடியாது நிலத்தோடு விலங்கிட்டுக் கொண்டவர்களும். ஆறுதலைத் தவிர வேறெதையும் பங்கிட்டுக் கொள்ள முடியாத காலக்கட்டம். அதே சமயம் ஒரத்துப்பாளையமும் விவசாயமும் மாசுக்கட்டுப்பாட்டுக் கோடுகளுக்கு எதிர்ப்புறமும் உட்புறமும். சிக்கிக்கொண்டு மூச்சுப்பாடும் விளையாட்டு . எதனால் யாரால்? வரலாற்றுச் சோகம்... ஐயா. 0 *நீர்த்துளி* சாயப்பட்டறைகள் மூடப்பட்டு. அவை தொழில் மாநகரின் . நீள் சரிவுக்கட்டமாக அமைந்த காலத்தின் யதார்த்தப் பிண்ணனி யோடு. வெளியூர் தொழிலாளர்களின் அன்றாட நெருக்கடிகளையும். அத்தோடு தனித்திருக்கும். ஆண்_ பெண் தொழிலாளிகளின் சிக்கல்களையும். பாலியல் தேவைகளையும். அதை ஆற்றுப்படுத்தப் போராடும் சூழல்களும். துல்லியமான எண்ணவோட்டங்களாக நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன. கலா - லிங்கம் என்ற மையப் பாத்திரங்களின் வாழ்க்கைப் போராட்டமானது. மலரும் முள்ளும் கலந்து நகரும் பொழுதுகளைக் கொண்டது. லைன் வீடானது. வசிக்கும்வீட்டை ஒட்டிய இரண்டு தடுப்புச்சுவர்களும் இரு காதுகளைக் கொண்டது‌‌.. இரகசியங்களுக்காவும் அவசியங்களுக்காகவும் காத்திருப்பவை அவை. எவ்வளவு வேடங்களைப் போட்டுக்கொண்டாலும். அனுபவப் பார்வைகளால் அரிதாரம் கலைத்து மெய் உணரக்கூடிய வை. எதிர் வீடு பக்கத்து வீடுகளெல்லாம் காரணங்களைத் தெரிந்து கொண்டாலும் காயங்களுக்கு மருந்திடும் சொற்கள் கொண்டவை. பொதுவான வீடாக உடைமைக்குரிய வீடாக இருக்கும் போது மேற்கண்டவைகள் சாத்தியமில்லை. வாடகை வீடுகளின் பரஸ்பர புன்னகைக்குள் வஞ்சங்கள் பெரும்பாலும் தஞ்சம் கொள்வதில்லை. நிரந்தரத் தைப் போல் அந்தரத்து மனவோட்டங்கள் அங்கில்லை. அருமையான உரையாடல்களும் காட்சிகளும். லைன் வீடுகளை துல்லியமாக காட்டுகிறது. நீர்ப் பிடிப்பில் இருந்து. வெக்கைக்கு நீர்க் கொடியாக ஈரத்துணி களை இரவில் கட்டி உறங்க முயலும் பொழுதுகளும். சிறப்பான பதிவுகள். வேலை நிலைக்காது இடப்பெயர்ச்சி யாவதும். தேர்தல் சமயங்களும் விபத்துகளும். ஊர் நோக்கி பண்டங்களோடு நகரும் கெடுபொழுதுகளும். மாநகரின் வரலாற்றுத் தடயங்களாக பதிவாகியுள்ளது. குடும்பம் மீறிய உறவுச் சிக்கல்கள். அதைத் தொடர்ந்த உளவியல் சிதைவுகள். எல்லாவற்றையும் மீறி வாழத்துடிக்கின்ற கனவுகள். அந்தக் கனவுகளே காலச் சுழற்சியைக் கழற்றி அலசிக் காயப்போடும் துணிவைத் தருகிறது. கலா , கலாச்சாரங்களைத் தேடியல்ல கனவின் சாரல்களைத் தேடிப் பயணிக்கும் சக்ரவாகம். லிங்கம் மகாலிங்க கனவுகள் பலிக்க வேண்டியல்ல பலியிடப்படுவதிலிருந்து விலகிக் கொள்ளும் பீடம். நீர்த்துளி அருமையான வாழ்வென்று சொல்ல முடியாவிட்டாலும். வாழ்வெனும் பெருந்துகள் வெடிப்பின் உப்புப் பரல்களையும். மாணிக்கப் பரல்களையும் தரிசிக்க முடிந்தது. Selvaprakash N.