சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 27 மார்ச், 2024

முத்துக்கள் பத்து : சுப்ரபாரதிமணியன் கதைகள் அறிமுகம் மதுராந்தகம் சிறுகதை எழுத ஆசைப்படுபவர்கள் முதலில் முத்துக்கள் பத்து என்ற சுப்ரபாரதி மணியனின் இக்கதைகளை விருப்பத்துடன் படித்துப் பாருங்கள். 10 கதைகள் 10 மாதிரி. ஒன்று போல் ஒன்றில்லை ஒவ்வொரு கதையிலும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது முதற்கதை ; ஒவ்வொரு ராஜகுமாரி கொள்ளும் என்ற கதை கறி சாப்பிடுவதைப் பற்றிய சுவாரஸ்யம். முஸ்லிம் வீட்டுக்கறி எப்போதும் ருசியோடு தான் இருக்கும் என்பதோடு வேகம் ஆரம்பிக்கும் கதை .கறி சமைப்பது, கோழிகளை கொன்று சுத்தம் செய்து அதற்கு தேவையான பொருட்கள் எப்படி சேர்க்க வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்பதை அருமையான் பாஷையில் நாவில் நீர் சொட்ட சொட்ட சொல்லுகிறார். இந்த கதை பற்றி சுஜாதா சமையல் கதை என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதில் சமையல் மட்டுமா இருக்கிறது சாப்பிடுவது என்ற அம்சம் தாண்டி நம்முடைய கலாச்சார அம்சங்கள் இதில் இருப்பதை சுஜாதா தவற விட்டு இருக்கிறார் .சுப்ரபாரதி மணியனின் அப்பா தொகுப்பில் சுஜாதா எழுதிய நீண்ட முன்னுரையில் இந்த கதை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். இந்த கதை ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.. இரண்டாவது கதையில் ” இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் “ என்ற கதையில் டர்பன் கட்டுகிற தொழில் செய்கிற ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல் பற்றியும் எதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு எழுதி இருக்கிறார் கவனமாக எழுதி இருக்கிறார் இந்த கதை சிறந்த கதைக்கான ஆண்டின் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.. இவரின் கதைகளில் மிக முக்கியமான கதை.. இனி என்ற பத்திரிகையில் வந்தது அதன் ஆசிரியராக எஸ் வி ராஜதுரை அவர்கள் இருந்தார். மூன்றாவது கதை விமோசனம் வெளிநாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்களை, அங்கே பாஸ்போர்ட் விஷயங்கள், வேலை சம்பந்தமான விஷயங்கள் என சுவாரஸ்யமாக அந்த நிகழ்வுகளை வரிசையாக சொல்லி வருகிறார். பொதுவாக ஒரு சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறார்.லண்டனை மையமாகக் கொண்டு இந்த கதை எழுதபட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கை, லண்டன் போய் திரும்ப முடியாமல் இருக்கும் ஒரு தமிழனின் வாழ்க்கையை இந்த கதையைச் சொல்லுகிறார். நாலாவது கதை புதைந்த காற்று: இந்த கதை புற்றுநோய் பற்றியும் பட்டாசு வகையையும் தீவிரவாதிகளின் கதை போலவும் சொல்லுகிறது. ஒரு விதமான திகில் கதை போல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல்வாதிசார்ந்த நடவடிக்கைகள் உள்ளன ஐந்தாவது கதை தொலைந்து போன கோப்புகள் இது ஒரு வித்தியாசமான கதை வாசகர்களின் தோள் மீது கை போட்டு அழைத்துச் செல்லும்போது நடக்கும் கதை போல எழுத்தாளர் கூடச் செல்வார். ராணுவத்தின் கொடுமைகள் பற்றியது காஷ்மீரின் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் உள்ளன. மனித உரிமை மீறல் பற்றிய கதை . ஆறாவது கதை மிச்சம் என்ற தலைப்புக் கதை. வாசகனை பிரமிப்பில் அழ வைக்கும். இதுல உள்ள விவரங்கள் சாதாரணமாக இருக்க நினைத்தால் ஏமாந்து போவீர்கள் கோவில் விழாவிற்குள் இத்தனை விசயங்களா. நிகழ்வுகளுக்கு செல்கிறான் ஆச்சரியப்பட வைக்கும் அணுகுமுறைகைகள், அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் அளவில்லாது இத்தனை விவரங்களை கண்டு கேட்டு வரிசைப்படுத்தி சுவாரஸ்யமாக எழுத வேண்டும் இந்த கதையில் உரையாடல்களையும் சூழ்நிலையையும் கவனியுங்கள். நாகரீக உலகம் , கடவுளை மறந்த மனிதர்கள். பூசாரி கோபித்துக் கொள்வது என்றெல்லாம் சென்று முடிகிறது வாக்கு. இதுவும் பாராட்ட கதை. இந்த கதையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அவள் சமையல் செய்தே அலுத்துப்போகிறதும் மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. சிவசங்கரி தொகுத்த சிறந்த கதைகளில் இந்த கதை உள்ளது. எட்டாவது கதை நீலப்படமும் சுசித்ராவும். ஒரு குடும்பஸ்தன் நீலப்படம் பார்க்க ஆசைப்பட்டான். அதற்கு எத்தனை தண்டனைகள் போட்டி தினத்தில் இருப்பவன். நயமாக எடுத்துரைப்பார். இந்த நீலப் படத்தில் காதலர்கள் வருகிறார்கள் அவர்கள் மாறி போகிறார்கள். சில காட்சிகளுக்கு பிறகு வருகின்ற திடீர் திருப்பமாக வரும் காட்சிகள் நிஜத்தை குறைத்து சொல்லியிருக்கிறார். ஒன்பதாவது கதை கழிப்பறைகள் இந்த கதை படிக்கும் போது நமக்கு ஒரு விதமான அசீச உணர்வுகள் ஏற்படும். இதைப் பற்றி சொல்வதென்றால் இதைக் கூட நயமாக எழுதியிருப்பார் கழிப்பறை இல்லாமல் கஷ்டப்படும் சாதாரண மக்களின் பிரச்சினைகளில் இக்கதை உள்ளது. இதில் உள்ள உரையாடல் கவனித்துக் நினைவு கூறத்தக்கது பத்தாவது கதை ஈரம் இது சுற்றுப்புற சூழல் பற்றியது. சாயக் கழிவுகள் தேங்கி நிற்கும் ஒரு அணை. அங்கு பக்கத்தில் உள்ள மனித வாழ்க்கை எவ்வளவு சீரழிவுக்கு உள்ளாகிறது என்பதை சொல்லி இருக்கிறார். அவருடைய சுற்றுப்புற சூழல் சார்ந்த கதைகள் இது ஒரு முக்கியமான கதை பொதுவாக இந்த கதைகள் மற்றும் சுப்ரபாரதிமணியன் அனுபவங்கள் எதை எடுத்தாலும் சுவாரஸ்யம் சொல்கிறது படித்து பாருங்கள் 10 கதைகளும் முத்துக்கள்தான் என்று பாராட்ட தோன்றும். இதை அமிர்தா பதிப்பகம் சென்னை வெளியிட்டிருக்கிறது