சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 16 செப்டம்பர், 2023

புக்கோடன் சுற்றுசூழல் சார்ந்த இயங்கிய கேரளா புக்கோடன் அவர்களை கேரள திரைப்பட விழா ஒன்றில் அவரின் அவரைப் பற்றிய ஆவணப்படம் திரையிட்ட போது சந்தித்திருக்கிறேன். “ மனிதன் என்பவன் இயற்கையின் ஒரு பகுதி. இயற்கையின் உடம்பாக இருக்கிறவன். அவன் வாழ வேண்டும் என்றால் இயற்கை கூட சமரசம் செய்து கொள்ள வேண்டும். இணைந்து போராட வேண்டும் “ என்ற மார்சின் தத்துவங்களில் அக்கறை கொண்டு பொதுவாழ்க்கையில் இணைந்தவர் புக்கோடன் அவர்கள் கேரளாவின் பல பகுதிகளில் 500 மாங்குரோவ் காடுகளை தங்களை நட்டு பசுமை திட்டங்களுக்கு உதவியாக இருந்தவர் இப்படி மேங்குரோவ் மரங்களை நட்டதன் மூலமாக அவர் புகழ் பெற்றவராக மாறினார். ஆரம்பத்தில் பொதுவுடை இயக்கத்தில் இருந்தவர். சுற்றுச்சூழல் சார்ந்து குழந்தைகளுக்கான கல்வியை தந்தவர். தொடர்ந்து மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தவர். சாதிய பிரச்சனைகளும் சுற்றுச்சூழலும் அவரின் கவனத்திற்கு பின்னால் வந்தன 18 வயதில் பொதுவுடமை இயக்கத்துக்கு வந்தவர் . அதில் அக்கறை கொண்டு சேர்ந்து இருக்கிறார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். விவசாய தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் மற்றும் சில போராட்டங்களில் சிறை படுத்தப்பட்டிருக்கிறார் அதன் காரணமாக தலைமறை வாழ்க்கையும் கையாண்டு இருக்கிறார் கொஞ்ச காலம் நான் அரசியல்வாதியாக இருந்தேன். கம்யூனிசம் எல்லாவற்றிற்கும் தீர்வாகும் என்று நினைத்தேன் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் உள்ள இடைவெளியை குறைக்க முடியும் என்று நினைத்தேன் ஆனால் கட்சிக்குள் இருந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எனக்கு அலுப்பாக்கி விட்டது. நான் பாடுபட்ட நோக்கில் சமூகம் வளரவில்லை என்றுதான் தோன்றியது. இடசாரிகள் பிற்பட்ட மக்களினுடைய நலனில் இன்னும் அக்கறை காட்ட வேண்டும் என்ற அக்கறையில் நான் வெளியேற நேர்ந்தது என்று ஒரு பேட்டியில்ல் குறிப்பிட்டு இருந்தார். எல்லா வகையான அமைப்புகளாலும் சுரண்டப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கை அவரை சிரமப்படுத்திருக்கிறது .தலித் இலக்கியத்தின் செயல்பாடுகள் என்பது ஒரு கலாச்சார நடவடிக்கை சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் என்பதில் அவர் அக்கறை கொண்டு அந்த வகையான மக்களோடு பழகுவது அவருடைய பிரச்சனை முன்வைப்பதை வாழ்க்கை முழுவதும் கையாண்டு இருக்கிறார். 2015இல் மறைந்த அவர் ஒரு தலித் போராளியாகவும் சுற்றுச்சூழல் போராளியாகவும் வழங்கினார் அதை அவருடைய சுயசரிதை நூலில் எழுதி இருக்கிறார் நதிக்கரைகளில் மரங்கள் நடுவது அவற்றை பராமரிப்பது என்பது அவர் வாழ்க்கையினுடைய முக்கியமான செயல்பாடுகளாக இருந்திருக்கிறது கண்ணூர் மாவட்டத்தில் குன்னி என்ற ஒரு கிராமத்தில் 1937 இல் பிறந்தவர். அவருடைய வீடு என்பது ஒரு அறை கொண்ட ஓலைக் குடிசையாகும். எல்லா காலத்திற்கும் அந்த குடிசை அவருக்கு இருப்பிடமாக இருந்திருக்கிறது. புலையர் சமூகத்தின் மூட நம்பிக்கைகள் சார்ந்தும் நிறைய செயல்பாடுகளை மேற்கொள்ளதால் அந்த சமூகம் அவரை வெறுத்தது. சமூக செயல்பாடுகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து தன் போக்கில் மாற்றம் பெற்று சுற்றுச்சூழல் சார்ந்து மரம் நடுவதையும் குழந்தைகளுக்கான பசுமை இலக்கிய கல்வியையும் முன்னெடுத்தார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போக்கு கேரளத்தில் இன்று ஒரு மதமாக கடைபிடிக்கப்படுகிறது அதற்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் புக்கோடன். அவர்கள். அவர் நினைவு நாட்களில் அவர் சரியாகவே கேரளாவில் நினைக்கப்படுகிறார் ( டாக்டர் அலெக்ஸ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது )சுப்ரபாதி மணியன்