சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 16 செப்டம்பர், 2023
சுவர்கள் நாவல்- மாற்கு /
சுப்ர பாரதி மணியன்
கிறிஸ்தவத்தில் கல்லறைகளில் தீண்டாமை இருக்கிறது தீண்டாமை சுவர்கள் கல்லறைகளில் இருந்து மக்களை பிரிக்கின்றன. ஆதிக்க சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஓரிடத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு இடத்திலும் கல்லறை இருக்கிறது என்ற நிலைமை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை ஆனால் தீண்டாமை பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது இதை கிறிஸ்தவ தலைவர்களால் தடுக்க முடியவில்லை தீண்டாமை என்பது இந்தியாவை பொறுத்த அளவில் சமயங்களைக் கடந்த சமூக பிரச்சனையாக மாறி உள்ளது என்பது எதார்த்தம். தலித் ஒருவர் கிறிஸ்துவராக மாறினால் அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டா.ர் எனவே அவரை சமமாக மதிக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் நினைப்பதில்லை. மத மாற்றத்திற்கு முன்பு அவரை எப்படி நடத்தியதோ அப்படியே தான் நடத்துகிறது என்ற மாற்கு அவர்களுடைய எண்ணங்கள் நாவல் வடிவங்களாக கிறிஸ்துவ சமுதாயத்தில் தலித் மக்கள் படும் சிரமங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவத்தில் எந்த விதத்தில் தீண்டாமை இருந்தாலும் தவறுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலத்திற்கு காலம் புது வடிவங்களில் அது வெளிப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அவர் சொல்கிறார்.
இந்த விஷயம் சாவிலும் தொடர்கிறது ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கல்லறைகளில் பக்கத்தில் தலித் கிறிஸ்தவர்கள் புதைக்கப்படக்கூடாது என்பதற்காக சுவரைக்கட்டி பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த தீண்டாமையை பற்றி எழுதப்பட்ட நாவல் தான் சுவர்கள் என்பதாகும்.
இறந்த பின்பு கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இந்த பாகுபாடு தேவையா கல்லறையில் சமத்துவம் இருக்கிறதா என்பதை பற்றி அவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். மாற்கு அவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தைப் பற்றிய விமர்சனங்களை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவருடைய புலனாய்வு நூல்களும் தன் வரலாற்று நூல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இதில் வருகிற செல்வம் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஆகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அங்க இருக்கிற தீண்டாமையும் பாகுபாடும் அவரை அங்கிருந்து வெளியேறு செய்கிறதும் அவர் மீது காவல்துறையின் வன்முறையும் ஏவப்படுகிறது அவர் தன்னுடைய உயிரையும் இழக்க வேண்டி இருக்கிறது
இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் மூலம் அவர் சொல்லும் குரலை நாம் கேட்க வேண்டும் “ செத்த பிறகும் மேரிக்கு பக்கத்தில் வாழ முடியாத இப்ப நிலைதான் சாமி தெரியுது உயர்ந்த சாதிக்கு தனி கல்லறை. அரிசனங்களுக்கு தனி கல்லறை ..என்ன சாமி இது சாமி.. செத்த பிறகு கூட நான் என் மேரிக்கு பக்கத்தில் இருக்கக் கூடாதா ..எதற்கு சாமி இது தனித்தனி கல்லறையா நான் செத்த பிறகு என் மேரிக்கு பக்கத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று அதில் வருகிற கதாபாத்திரங்கள் ஒன்றை கதறுகிறது
ஆதிக்க சாதி கல்லறைக்கு பக்கத்தில் புதைக்க முயற்சி செய்தால் கலகம் வரும். சாதி கலவரத்திற்கு வித்திட்டதாக அமையும் என்பதை இதில் வருகின்ற பல சம்பவங்கள் சொல்கின்றன. “ என்னடா இவன் எப்படி இங்கே வந்தான்னு தானே நினைக்கிறீங்க நமது சாதியை மதிப்ப நான் சாமியாரா போயி உயர்த்துவேன்னு நினைச்சீங்க ஆனா நான் அங்கு இருந்தா நமது சாதியின் மதிப்பு அவ்வளவு உயர்த்த முடியாது வெளியே வந்தாத்தான் அதிகம் உயர்த்த முடியும் என்று நினைத்தேன் அதனால் வெளியே வந்துட்டேன் “ என்று செல்வம் என்ற ஒரு மனிதனின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் அந்த குரல் பலவீனம் ஆகிப்போகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கும் சுவற்றை இடிக்கிறார்கள். அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது. சமமான கல்லறையும் வேண்டும் தடுப்பு சுவர்கள் இருக்கக்கூடாது என்று போராடும் விடுதலை குழுக்கள் மதவாதிகளால் மற்றும் காவல்துறையால் அடக்கப்படுகிறார்கள்.” விளைச்சலில் எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சமமாக அறுவடை செய்ய வேண்டும் இருப்பதை பரிந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டு முறை விவசாயம் செய்து அதை அடுத்த தலைமுறைக்குஅறிவிக்க வேண்டும் என்ற கனவை கூட இந்த நாவல் வருகிற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. சாதிக் கொடுமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கிறிஸ்துவத்துக்குள் கருப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பு தினங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த சுவர்கள் நாவல் சொல்லுகிறது
ரூபாய் 200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு
0
ஓ கனடா
(யாவரும் கேளீர் )
பொ. முத்துக்குமரன், ம சாலமன் பெர்னாட்ஷா/
சுப்ர பாரதி மணியன்
உலகில் பெரிய நாடு என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வருகிறது கனடா. ஒரு சமூகம் அதன் முதியோரையும் நோயுற்றவரையும் அனாதைகளையும் பழங்குடிகளையும் சிறுபான்மையினரையும் ஊனமுற்றவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் எப்படி கவனித்துக் கொள்கிறது என்பதிலிருந்து தான் அந்த சமூகத்தை நாம் மதிப்பட வேண்டும் என்பதை கனடா உணர்ந்துள்ளதாக இந்த ஆசிரியர்கள் தங்களுடைய முதிய வயதின் முத்திரையாக இந்த நூலில் தெரிவிக்கிறார்கள். கண்ணால் கண்டபின் கனடா நாட்டைப் பற்றிய பரம்பரை ரீதியான பூகோள தகவல்கள் மற்றும் ஆட்சி முறை அமைப்புகள், முக்கியமான இடங்கள் ஆகியவற்றை பற்றி இந்த பயணங்கள் மூலம் கண்டு கொண்டதை சொல்கிறது இந்நூல்.என்றென்றும் கனடா ஒரு காலனிய நாடு என்றுதான் அறியப்பட்டுள்ளது. முதலில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம். பிறகு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம். தற்போது அமெரிக்க காலனி ஆதிக்கம் . அந்த நிலையில் பிரிட்டனையும் அமெரிக்க ஒன்றியத்தை எதிர்த்து எப்படி போராடியது என்பது விளக்கப்பட்டுள்ளது. ஒரு தேசமாக கனடா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உந்துதல் தேசப்பற்றின் காரணமாக பிறந்திடவில்லை அரசு நிர்வகிக்க இடையூறாக இருந்த இன்னல்கள் இருந்து விடுவதற்கான ஆயத்தங்களில் பிறந்தது என்பது பற்றிய ஆய்வுக்குறிப்புகள் இந்த நூலில் நிறைய உள்ளன
இன்றைய கனடா என்பது அமெரிக்க ஒன்றியம், அட்லாண்டிக் பெருங்கடல் பசிபிக் பெருங்கடல், அலாஸ்கா போன்றவற்றின் எல்லைகளைக் கொண்டு இருக்கிறது இந்த எல்லை பரிணாம வரலாற்றை தொடக்கம் முதல் முறை இந்த நூல் எடுத்துரைக்கிறது, சமூக நீதி நீதி சேவைகளை வழங்குதல், பொதுநிலை பாதுகாத்தல் சம வாய்ப்பு உடைய சூழலை பேண்ல் சுற்றுச்சூழலை பாதுகாக்கல் போன்ற செயல்பாடுகளில் கனடா அரசு முக்கிய பங்கு வைக்கிறது. கனடா நாட்டில் பல்வேறு இடங்களுக்கு செல்கிற போது அவை தருகிற சரித்திரம் சம்பந்தமான நினைவுகளும் சம்பவங்களும் பல விஷயங்களையும் பல போர்களையும் மக்களின் குடியேற்ற விஷயங்களிளையும் அவர்களின் வாழ்க்கையும் சொல்வதாக இருப்பதை விரிவாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. முடிந்தது பயணம் தொடங்கியது வரலாறு என்று சொல்கிறார்கள் அதேபோல ஒரு பயணம் முடிகிறபோது ஒரு பயணம் நூல் இவர்களிடமிருந்து தொடங்குவது என்பதன் அத்தாட்சியாக இந்த நூல் விளங்குகிறது பல அபூர்வமான படங்களுடன் விளங்குகிறது
ரூபாய் 900 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு சென்னை
சுவர்கள் நாவல்- மாற்கு /
சுப்ர பாரதி மணியன்
கிறிஸ்தவத்தில் கல்லறைகளில் தீண்டாமை இருக்கிறது தீண்டாமை சுவர்கள் கல்லறைகளில் இருந்து மக்களை பிரிக்கின்றன. ஆதிக்க சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஓரிடத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு இடத்திலும் கல்லறை இருக்கிறது என்ற நிலைமை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை ஆனால் தீண்டாமை பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது இதை கிறிஸ்தவ தலைவர்களால் தடுக்க முடியவில்லை தீண்டாமை என்பது இந்தியாவை பொறுத்த அளவில் சமயங்களைக் கடந்த சமூக பிரச்சனையாக மாறி உள்ளது என்பது எதார்த்தம். தலித் ஒருவர் கிறிஸ்துவராக மாறினால் அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டா.ர் எனவே அவரை சமமாக மதிக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் நினைப்பதில்லை. மத மாற்றத்திற்கு முன்பு அவரை எப்படி நடத்தியதோ அப்படியே தான் நடத்துகிறது என்ற மாற்கு அவர்களுடைய எண்ணங்கள் நாவல் வடிவங்களாக கிறிஸ்துவ சமுதாயத்தில் தலித் மக்கள் படும் சிரமங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவத்தில் எந்த விதத்தில் தீண்டாமை இருந்தாலும் தவறுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலத்திற்கு காலம் புது வடிவங்களில் அது வெளிப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அவர் சொல்கிறார்.
இந்த விஷயம் சாவிலும் தொடர்கிறது ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கல்லறைகளில் பக்கத்தில் தலித் கிறிஸ்தவர்கள் புதைக்கப்படக்கூடாது என்பதற்காக சுவரைக்கட்டி பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த தீண்டாமையை பற்றி எழுதப்பட்ட நாவல் தான் சுவர்கள் என்பதாகும்.
இறந்த பின்பு கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இந்த பாகுபாடு தேவையா கல்லறையில் சமத்துவம் இருக்கிறதா என்பதை பற்றி அவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். மாற்கு அவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தைப் பற்றிய விமர்சனங்களை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவருடைய புலனாய்வு நூல்களும் தன் வரலாற்று நூல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இதில் வருகிற செல்வம் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஆகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அங்க இருக்கிற தீண்டாமையும் பாகுபாடும் அவரை அங்கிருந்து வெளியேறு செய்கிறதும் அவர் மீது காவல்துறையின் வன்முறையும் ஏவப்படுகிறது அவர் தன்னுடைய உயிரையும் இழக்க வேண்டி இருக்கிறது
இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் மூலம் அவர் சொல்லும் குரலை நாம் கேட்க வேண்டும் “ செத்த பிறகும் மேரிக்கு பக்கத்தில் வாழ முடியாத இப்ப நிலைதான் சாமி தெரியுது உயர்ந்த சாதிக்கு தனி கல்லறை. அரிசனங்களுக்கு தனி கல்லறை ..என்ன சாமி இது சாமி.. செத்த பிறகு கூட நான் என் மேரிக்கு பக்கத்தில் இருக்கக் கூடாதா ..எதற்கு சாமி இது தனித்தனி கல்லறையா நான் செத்த பிறகு என் மேரிக்கு பக்கத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று அதில் வருகிற கதாபாத்திரங்கள் ஒன்றை கதறுகிறது
ஆதிக்க சாதி கல்லறைக்கு பக்கத்தில் புதைக்க முயற்சி செய்தால் கலகம் வரும். சாதி கலவரத்திற்கு வித்திட்டதாக அமையும் என்பதை இதில் வருகின்ற பல சம்பவங்கள் சொல்கின்றன. “ என்னடா இவன் எப்படி இங்கே வந்தான்னு தானே நினைக்கிறீங்க நமது சாதியை மதிப்ப நான் சாமியாரா போயி உயர்த்துவேன்னு நினைச்சீங்க ஆனா நான் அங்கு இருந்தா நமது சாதியின் மதிப்பு அவ்வளவு உயர்த்த முடியாது வெளியே வந்தாத்தான் அதிகம் உயர்த்த முடியும் என்று நினைத்தேன் அதனால் வெளியே வந்துட்டேன் “ என்று செல்வம் என்ற ஒரு மனிதனின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் அந்த குரல் பலவீனம் ஆகிப்போகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கும் சுவற்றை இடிக்கிறார்கள். அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது. சமமான கல்லறையும் வேண்டும் தடுப்பு சுவர்கள் இருக்கக்கூடாது என்று போராடும் விடுதலை குழுக்கள் மதவாதிகளால் மற்றும் காவல்துறையால் அடக்கப்படுகிறார்கள்.” விளைச்சலில் எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சமமாக அறுவடை செய்ய வேண்டும் இருப்பதை பரிந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டு முறை விவசாயம் செய்து அதை அடுத்த தலைமுறைக்குஅறிவிக்க வேண்டும் என்ற கனவை கூட இந்த நாவல் வருகிற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. சாதிக் கொடுமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கிறிஸ்துவத்துக்குள் கருப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பு தினங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த சுவர்கள் நாவல் சொல்லுகிறது
ரூபாய் 200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு
0
தங்க பூபதி
திருப்பூர் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களின் நூறாவது நூல் வெளியீட்டுக்கு பாராட்டு விழா
திருப்பூர் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களின் நூறாவது நூல் வெளியீட்டுக்கு பாராட்டு விழா ஞாயிறு 3/9/23 அன்று மாலை திருப்பூரில் நடைபெறுகிறது. வாசகர் சிந்தனை பேரவை இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.
திருப்பூரில் எழுத்தாளர் சுப்ரபாதி மணியன் 25 நாவல்கள் இருபதுக்கு சிறுகதை தொகுப்புகள் 30 கட்டுரை தோப்புகள் உட்பட 100 நூல்களை வெளியிட்டு இருக்கிறார் ச.மீபத்தில் அவரின் நூறாவது புத்தகமாக “ சிலுவை “என்ற நாவல் வெளி வந்திருக்கிறது.
அந்த நாவல் 900 பக்கங்கள் கொண்டது .1200 ரூபாய் விலை உள்ளது .அதை சென்னை சேர்ந்த நியூஸ் செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது
அவரின் 100 புத்தகங்கள் வெளியீட்டை ஒட்டி அவருக்கு திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை பாராட்டு விழா நடத்துகிறது .திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஒன்பதாவது நிகழ்வு ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க அலுவலக கட்ட்டத்தில் நடைபெறுகிறது
அப்போது “விடுதலை வேள்வியில் தமிழகம் “என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தும் எஸ் ஏ முத்து பாரதி அவர்கள் தென்னிந்திய புரட்சி என்ற தலைப்பில் பேசுகிறார் மற்றும் கவிதை வாசிப்பில் காயத்ரி சிவகுமார் அவர்களின் தலைமையில் கவிதை வாசிப்பு நடைபெறுகிறது . இலக்கிய எழுத்ஹ்டு அனுபவம் என்ற தலைப்பில் அழகு பாண்டி அரசப்பன் பேசுகிறார் மற்றும் சுப்ரபாரதிமணியன் சிலுவை என்ற நூறாவது நூலுக்கு பாராட்டும் அவருக்கு சமீபத்தில் திருச்சி சார்ந்த மதிப்பு மிக்க எஸ் ஆர் வி இலக்கிய விருது பெற்றதற்கு பாராட்டும் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு ஏவிபி குடியிருப்பு நல சங்கம் தலைவர் துரை அவர்களும் செயலாளர் வெள்ளிங்கிரி எவ்வளவு தூரம் ,துணைப் பொதுச் செயலாளர் பிரபு அவர்களும் பொருளாளர் விளங்கும் அவர்களும் துணைத்தலைவர் நடராஜன் அவர்களும் முன்னிலை வைக்கிறார்கள்.
மற்றும் எழுத்தாளர்கள் பங்குபெறும் புத்தகங்கள் பற்றிய கருத்துரைகள் புத்தக அறிமுக அறிமுகங்கள் நடைபெற உள்ளன
பிரதி மாதம்முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த வாசிப்பு இயக்க க் கூட்டம் நடைபெறுகிறது
அனைவரையும் இந்த விழாவிற்கு வர தங்க பூபதி அதனுடைய ஒருங்கிணைப்பாளர் தகவல் தந்திருக்கிறார் 9944570352
0
சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல்
300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
“ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/
subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru
திருநங்கையர் சிறுகதைகள் நூல் அறிமுகம் :
திருப்பூரில் வாழும் திருநங்கையினரின் வாழ்க்கையை அடைப்படையாகக் கொண்டு புனைவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள் உட்பட 19 திருநங்கையர் பற்றிய சிறுகதைகள் கொண்ட நூல் ” திருநங்கையர் சிறுகதைகள் ” அறிமுகம் மக்கள் மாமன்றத்தில் செவ்வாய் மாலை நடைபெற்றது.
மக்கள் மான்ற செயலாளர் ராஜா தலைமை வகித்தார், கவிஞர்கள் மாரிமுத்து, மாயாவி மனோகரன், மற்றும் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், வின்செண்ட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நூலில் திருப்பூரில் வாழும் திருநங்கையினரின் வாழ்க்கையை அடைப்படையாகக் கொண்டு புனைவுடன் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளை சுப்ரபாரதிமணியன் மற்றும் முத்து பாரதி எழுதியுள்ளனர். மொத்தம் 19 கதைகள் இடம்பெற்றுள்ளன. இதை சேலம் பொன் குமார் தொகுத்துள்ளார். சென்னை நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது . ரூ 200
என் ஹைதராபாத் நாவல்கள் தொகுப்பு
மற்றும் சிலர் , சுடுமணல், நகரம் 90 ( ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட 3 நாவல்கள் தொகுப்பு )
ஹைதராபாத் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன்
அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள் மூலம்தான் ஹைதராபாத் பற்றி நான் அறிந்திருந்தேன். ” பதினெட்டாவது அட்சக்கோடு “ நாவல் மற்றும் நூறு சிறுகதைகளில் அவர் எழுதிய சித்தரிப்புகளையும் ஹைதராபாத் மக்கள் வாழ்க்கையையும் அறிந்திருந்தேன்.
இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் )
செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “.
என் முதல் நாவலை நர்மதா ராமலிங்கமும், அடுத்து வந்த பதிப்புகளை மருதாவும், டிஸ்கவரி புக் பேல்ஸ் வேடியப்பனும் வெளியிட்டார்கள்.
0அந்த நாவல் பற்றி ஜெயந்தன், ஜெயமோகன், நகுலன் போன்றோரின் கீழே உள்ள குறிப்புகள் அந்நாவல் வாசிப்பிற்கு உதவும்
1 ஜெயந்தன் :
” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )
2 ஜெயமோகன்
நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87
3. நகுலன்
சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.
இந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று.
0
என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம் ” சுடுமணல் ”நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.
0
சுடுமணல் பற்றி சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தோப்பில் மீரான் அவர்களின் குறிப்புகள் கீழே உள்ளன.
சுப்ரபாரதிமணியன் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாளி. கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து ‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர். தமிழ் இலக்கிய உலகில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள இவர் இதுவரை பதினைந்து நாவல்களையும் பதினைந்து சிறுகதைத் தொகுதிகளையும் உள்ளடக்கிச் சுமார் அய்ம்பது படைப்புகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவருடைய இலக்கிய படைப்பாக்க முயற்சி நாவல்கள், சிறுகதைகள் என்று நின்று விடாமல் கவிதையிலும், விமர்சனத்திலும் கூட விரிவடைந்து தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளன.
இந்த நாவலாசிரியருடைய ‘சாயத்திரை’ என்ற நாவல் ‘சாயம் புரண்ட திரா’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அதனுடைய வங்காள, ஆங்கில, இந்தி, கன்னட மொழிபெயர்ப்புகளும் வெளி வந்துள்ளன. ‘தேநீர் இடைவேளை’ என்ற (சாய இடவேளெ) , பிணங்களின் முகங்கள் ( பிரேதங்களின் முகங்கள்) ஆகிய இவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சுப்ரபாரதிமணியனுடைய பிறந்த ஊர் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூராக இருந்த போதிலும் தொடக்க கால நாவல்கள் இரண்டும் அய்தராபாத் பின்னணியில் எழுதப்பட்டவை. தொடக்க காலத்தில் இவர் அங்கு பணியாற்றியதன் காரணமாக அதைப் பின்புலமாக்கி இவர் எழுதியுள்ளார். அதன் பிறகு, வெளியிடப்பட்டவை திருப்பூர் என்ற தொழில் நகரத்தைப் பின்புலமாக்கி எழுதப்பட்டவை.
சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பிற இலக்கியப் படைப்புகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது சிறிதளவு திறனும், மாறுபட்டதுமாக உள்ள ஒரு பின்புலத்தில் படைக்கப்பட்ட ‘ஓடும் நதி’ விமர்சகர்களுடைய கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.. கூரிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய மிக நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது.இது என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது.
இவருடைய இலக்கியப் படைப்புகள் முழுவதும், வாழ்க்கையில் காணப்படுகின்ற மாற்றங்களையும், தகர்வுதலையும், நிராசைகளையும், அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து வருகின்ற மனிதர்களுக்குரிய நியாயங்களை முன் நிறுத்திக் கூடியவையாக உள்ளன. உலகமயமாதல் சூழ்நிலைமையில் தொழில் நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுடைய நரக வேதனை மிகுந்த வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கக் கூடியவையாக இவரது படைப்புகளின் நோக்கமாகும். தொழிலாளர்கள் கொடுமையான முறையில் சுரண்டலுக்கு உள்ளாகும் நவீன முதலாளித்துவத்திற்கு, புதிய அடிமைத் தனத்திற்கு எதிராக நின்று, தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டி உரத்த குரல் எழுப்புவது இவருடைய படைப்புகளின் வாயிலாக இவர் மக்களுக்குச் செய்யும் பணியாக உள்ளது. இந்த வகையில் இவர் ஒரு தீவிரமான இலக்கியப்படைப்பாளியாக விளங்குகிறார்.
மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள உழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படும் நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும் விதத்தில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன.நதிநீர்பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “ சுடுமணல்”. ..
0
நகரம் 90 : ஹைதராபாத் பற்றிய என் மூன்றாம் நாவல்
* சுஜாதா தேர்வு செய்து பரிசளித்தது
* குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைத் தந்த படைப்பு . அந்த அனுபவம் “ மண்புதிது “ என்ற தலைப்பில் காவ்யா பயண நூலாகவும் வந்தது.
* குமுதம் இதழில் தொடராக வந்தது
* மதவாதத்தை அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்தும் போக்கையும் மதக்கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் பற்றியுமான நாவல்.
* மதவாதத்திற்கு எதிரான முக்கிய இலக்கியப் பதிவு இந்நாவல்
0
இந்த மூன்று நாவல்களையும் ஒரே தொகுப்பாக இந்த வடிவத்தில் கொண்டு வரும் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கு நன்றி
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியன் :
25 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 100 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் ..
” சாயத்திரை “ சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “., கதா விருது “ உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
இவரின் நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக “ சாயத்திரை “ என்ற திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது. 5 நாவல்கள் இந்தியிலும், 9 நாவல்கள் ஆங்கிலத்திலும் , 5 நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. 5 சிறுவர் நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அதில் 4 ஆங்கிலத்திலும் வந்துள்ளன
சென்றாண்டு இவர் பெற்ற முக்கிய விருதுகள் :
* “ அந்நியர்கள் “ என்ற நாவல் எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் பரிசு பெற்றது
* சார்ஜா புத்தகக்கண்காட்சியில் “ புக்கிஷ் “ விருது .
என் சி பி எச் வெளியீடான “ சிலுவை “ நாவல்( 2023 Rs 1200 ) சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது.
திரைப்படக்கதைகள் நூல்கள் நான்கு வெளியாகி உள்ளது. திரைப்படங்கள் குறித்த 5 நூல்களும் வெளியிட்டிருக்கிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் பிராந்திய குழு உறுப்பினராகவும்பணி புரிகிறார். கனவு என்ற திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.
புக்கோடன்
சுற்றுசூழல் சார்ந்த இயங்கிய கேரளா புக்கோடன் அவர்களை கேரள திரைப்பட விழா ஒன்றில் அவரின் அவரைப் பற்றிய ஆவணப்படம் திரையிட்ட போது சந்தித்திருக்கிறேன். “ மனிதன் என்பவன் இயற்கையின் ஒரு பகுதி. இயற்கையின் உடம்பாக இருக்கிறவன். அவன் வாழ வேண்டும் என்றால் இயற்கை கூட சமரசம் செய்து கொள்ள வேண்டும். இணைந்து போராட வேண்டும் “ என்ற மார்சின் தத்துவங்களில் அக்கறை கொண்டு பொதுவாழ்க்கையில் இணைந்தவர்
புக்கோடன் அவர்கள் கேரளாவின் பல பகுதிகளில் 500 மாங்குரோவ் காடுகளை தங்களை நட்டு பசுமை திட்டங்களுக்கு உதவியாக இருந்தவர் இப்படி மேங்குரோவ் மரங்களை நட்டதன் மூலமாக அவர் புகழ் பெற்றவராக மாறினார். ஆரம்பத்தில் பொதுவுடை இயக்கத்தில் இருந்தவர். சுற்றுச்சூழல் சார்ந்து குழந்தைகளுக்கான கல்வியை தந்தவர். தொடர்ந்து மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தவர். சாதிய பிரச்சனைகளும் சுற்றுச்சூழலும் அவரின் கவனத்திற்கு பின்னால் வந்தன
18 வயதில் பொதுவுடமை இயக்கத்துக்கு வந்தவர் . அதில் அக்கறை கொண்டு சேர்ந்து இருக்கிறார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். விவசாய தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் மற்றும் சில போராட்டங்களில் சிறை படுத்தப்பட்டிருக்கிறார் அதன் காரணமாக தலைமறை வாழ்க்கையும் கையாண்டு இருக்கிறார்
கொஞ்ச காலம் நான் அரசியல்வாதியாக இருந்தேன். கம்யூனிசம் எல்லாவற்றிற்கும் தீர்வாகும் என்று நினைத்தேன் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் உள்ள இடைவெளியை குறைக்க முடியும் என்று நினைத்தேன் ஆனால் கட்சிக்குள் இருந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எனக்கு அலுப்பாக்கி விட்டது. நான் பாடுபட்ட நோக்கில் சமூகம் வளரவில்லை என்றுதான் தோன்றியது. இடசாரிகள் பிற்பட்ட மக்களினுடைய நலனில் இன்னும் அக்கறை காட்ட வேண்டும் என்ற அக்கறையில் நான் வெளியேற நேர்ந்தது என்று ஒரு பேட்டியில்ல் குறிப்பிட்டு இருந்தார்.
எல்லா வகையான அமைப்புகளாலும் சுரண்டப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கை அவரை சிரமப்படுத்திருக்கிறது .தலித் இலக்கியத்தின் செயல்பாடுகள் என்பது ஒரு கலாச்சார நடவடிக்கை சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் என்பதில் அவர் அக்கறை கொண்டு அந்த வகையான மக்களோடு பழகுவது அவருடைய பிரச்சனை முன்வைப்பதை வாழ்க்கை முழுவதும் கையாண்டு இருக்கிறார். 2015இல் மறைந்த அவர் ஒரு தலித் போராளியாகவும் சுற்றுச்சூழல் போராளியாகவும் வழங்கினார் அதை அவருடைய சுயசரிதை நூலில் எழுதி இருக்கிறார் நதிக்கரைகளில் மரங்கள் நடுவது அவற்றை பராமரிப்பது என்பது அவர் வாழ்க்கையினுடைய முக்கியமான செயல்பாடுகளாக இருந்திருக்கிறது
கண்ணூர் மாவட்டத்தில் குன்னி என்ற ஒரு கிராமத்தில் 1937 இல் பிறந்தவர். அவருடைய வீடு என்பது ஒரு அறை கொண்ட ஓலைக் குடிசையாகும். எல்லா காலத்திற்கும் அந்த குடிசை அவருக்கு இருப்பிடமாக இருந்திருக்கிறது. புலையர் சமூகத்தின் மூட நம்பிக்கைகள் சார்ந்தும் நிறைய செயல்பாடுகளை மேற்கொள்ளதால் அந்த சமூகம் அவரை வெறுத்தது. சமூக செயல்பாடுகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து தன் போக்கில் மாற்றம் பெற்று சுற்றுச்சூழல் சார்ந்து மரம் நடுவதையும் குழந்தைகளுக்கான பசுமை இலக்கிய கல்வியையும் முன்னெடுத்தார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போக்கு கேரளத்தில் இன்று ஒரு மதமாக கடைபிடிக்கப்படுகிறது அதற்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் புக்கோடன். அவர்கள். அவர் நினைவு நாட்களில் அவர் சரியாகவே கேரளாவில் நினைக்கப்படுகிறார்
( டாக்டர் அலெக்ஸ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது )சுப்ரபாதி மணியன்
யாழினி ஸ்ரீ கவிதைகள்
யாழினி ஸ்ரீ அவர்களை பற்றி நினைக்கிற போதெல்லாம் அவருடைய திடமான மனமும் தொடர்ந்து செயல்பாடுகளும் பலருக்கு உதாரணங்களாக இருக்கும்.
பொன்வண்டின் முதுகில்
பூமிப்பந்தை சுமக்கும் ஆற்றல்
உடல் பலத்தால் வருவதல்ல
மனதிடத்தைப் பொறுத்ததே
என்பதை அவரின் உள்ளார்ந்தக் குரலாக பலர் எடுத்துக் கொள்வார்கள்.. நானும்..
தேடலை துரிதப்படுத்து என்று அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவர். அவர். எப்போதும் கவிதை உலகில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆறறை கருவறைக்குள்
அடைப்பட்டு ஒளிந்து போ என்று அவர் ஒரு கவிதையில் சொன்னாலும் அதை அவருடைய குரலாக எடுத்துக் கொள்ள முடியாது. பலர் கதைகளில் எழுதுகிற போது பல கதாபாத்திரங்கள் வருகிறார்கள், அந்த கதாபாத்திரங்களின் குரல்களாக என்று பல வெளிப்படுகின்றன. அவை எழுத்தாளர்களின் குரல்களாக எடுத்துக் கொள்ள முடியாது அப்படித்தான் கதாபாத்திரங்களின் இயல்புக்கே ஏற்ற அவர்களின் குரலாக எண்ணங்களாக பல வெளிப்படும். அப்படித்தான் இந்த அடைபட்டு ஒழிந்து போ இருக்கிறது
ஒரு கோப்பை வாழ்க்கை
ஒவ்வொரு மிடறாய்
ரசித்து ருசித்து பருகிறேன்
என்று அவர் இன்னொரு கவிதையில் சொல்கிறார். அதைத்தான் நான் அவரை சம்பந்தப்படுத்தி வெகுவாக நினைத்துக் கொள்கிறேன். காரணம் வாழ்வை ரசித்து ஒவ்வொரு கணத்தையும் கவிதையாய் நினைப்பதும் கவிதைக்குள் கொண்டு வருவதும் அவருடைய செயல்பாடுகளாக இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் அவர் தொடர்ந்து தன்னை சுற்றி உள்ளவர்களையெல்லாம் எழுத சொல்கிறார். இயங்க சொல்கிறார். இந்த மனம் தேடலை ஊக்குவிக்கும். இவர் பிறரை ஊக்குவிப்பவர் என்ற வகையில் நாம் வாழ்த்துவோம்.
சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
2 friends
வழக்கறிஞர் ஜீவன் : மாமன்னன் படத்தில் இடம்பெற்ற கவிதைகளில் இவரின் மரக்குதிரை தொகுப்பில் உள்ள ஒரு கவிதையும் முக்கியமானது
வழக்கறிஞர் ஜீவன் சமீப காலமாக திருப்பூரில் வசித்து வருகிறார் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற கவிதைகளில் இவரின் மரக்குதிரை தொகுப்பில் உள்ள ஒரு கவிதையும் முக்கியமானது மரக்குதிரை தொகுப்பு தெலுங்கு கவிஞர் நக்னம் முனி அவர்களின் கவிதையை மையமாகக் கொண்டு. ஏகதேசம் அந்த நேரடி மொழிபெயர்ப்பு வித்தியாசமானது. இதைத் தவிர ஜீவன் அவர்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற ஒரு நாவலைக் கூட எழுதியிருக்கிறார் பல மொழிபெயர்ப்புகளையும் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார் சமீப ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் சட்டரீதியான இலவச ஆலோசனை மையம் சார்ந்து ஆங்கில நூல்களையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது முக்கியமானது
நண்பர் ஹைதராபாத் முத்துசாமி அவர்கள் இந்த ஆண்டு திருப்பூர் தமிழ் சங்கத்தின் கவிதை பிரிவு பரிசு பெறுகிறார். நான் ஹைதராபாத்தில் இருந்தபோது கனவு இலக்கிய வட்ட கூட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது புத்தகத்தை எடுத்து அறிமுகப்படுத்துவார். அதை சிரத்தியோடு செய்வார். அப்போது கூட மரபுக் கவிதைகளை தான் படிப்பார் கூட்டங்களில் . பலர் கிண்டல் அடிப்பார்கள் இன்னும் மரபு பைத்தியத்தில் இருப்பதாக ஆனால் .அவர் தொடர்ந்து மரபுக் கவிதைகளை ஜீவன் உள்ளதாக ஆக்கி எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் மரபுக் கவிதைகள்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார் அவருடைய பல மரபுக் கவிதைகளை நான் வாய்விட்டு வாசித்து மகிழ்ந்திருக்கிறேன் .திருப்பூர் தமிழ்ச்சங்க கவிதை பிரிவில் ஒரு மரபுக் கவிதைக்கு பரிசளிப்பது இன்னும் பாராட்டக் கூடியதாக இருக்கிறது
சுப்ரபாரதி மணியன் கட்டுரையாளர், எழுத்தாளர். நாவல்,சிறுகதை நுால்கள், நாடக தொகுப்பு,கவிதைகள், கட்டு...
Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3424185
Thiraikathai nool 4
திரை நாவல்
திரை நாவல் என்ற வர்த்தைப்பிரயோகம் கண்ணகி நாராயணி அவர்களிடமிருந்து அவரின் பிராந்தியம் நாவலில் இருந்து கற்றுக் கொண்டேன்,
திரைக்கதை அம்சங்களை சிறு நாவல்களாக்கும் முயற்சி அது. அந்த வகையில் நானும் சிலதை சமீபத்தில் முயற்சித்து வருகிறேன்
முழு நாவல்கள் எழுத ஆண்டுகள் பிடிக்கின்றன. பிரசுரம் ஆகவும் ஆண்டுகள் ஆகின்றன. பல பதிப்பகங்கள் குறைந்த பிரதிகளே வெளியிடும் துயரம் எழுத்தாளருக்கு மரியாதைத அல்ல.
இப்போதைக்கு திரை நாவல் ஆறுதல் போலத்தான் படுகிறது
Thiraikathai nool 4
சமர்ப்பணம்
இயக்குனர், கவிஞர் பிருந்தா சாரதி அவர்களுக்கு..
0
எழுத்து என்பது தன்னையே விளையாட்டாக அடையாளப்படுத்திக் கொள்வதோடு அது தனக்கான மைதானத்தின் விதிகளை தானே கட்டமைத்துக் கொள்கிறது.-
மிஷல் பூக்கோ
( அப்படி விளையாட்டாய் சில மையங்களை எடுத்து பயிற்சி செய்த திரைக்கதைகள் இவை
0
இந்திரன் 75 விழாவில் இயக்குனர்., கவிஞர் பிருந்தாசாரதியைச் சந்தித்தபோது உங்கள் நாவல்களைச் சிதைத்து இப்படி செய்யப்படும் திரைக்கதைகள் ஒரு முயற்சி என்றாலும் உண்மையான வாசகன் அந்த நாவல்களைத் தேடிப் படித்து விடுவான் என்பது முக்கியம் என்றார். அதனால் என் நாவல்களை விடுத்து அப்படி விளையாட்டாய் சில மையங்களை எடுத்து பயிற்சி செய்த திரைக்கதைகள் இவை ).
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)