சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 26 செப்டம்பர், 2022

எக்காலத்திற்குமான நீதியின்போக்கு தீவாந்தரம் ( நாவல் ) அண்டனூர் சுரா - சுப்ரபாரதிமணியன் தீவாந்தரம் நாவலின் வடிவத்தைக் கூர்ந்து பார்க்கிறபோது என் நாவல் 1098 ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறுமி சார்ந்த கைதும் நடவடிக்கையும் பின்னால் அது சார்ந்த நீதிமன்ற விசாரணைகளும் பிறகு முடிவான தீர்ப்புகளும் அந்தச் சிறுமியின் வாழ்வு போக்குகளும் கொண்டதாக அந்த நாவலின் வடிவம் இருக்கும். அதுபோன்ற ஒரு வடிவத்தைத் தீவாந்தரம் நாவலில் கண்டேன். இதில் வ உ சி அவர்களின் கைது நடவடிக்கை, அதன்பிறகு அவர் சார்ந்த விசாரணைகள், இறுதியாக அவர் மீது எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள், தீர்ப்பின் விளக்கங்கள் என்று நாவலின் போக்கு அமைந்து, என் நாவலின் வடிவ அம்சங்களைத் தீவாந்தரம் ஞாபகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. வ உ சி அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது நாவல். தீவாந்தரம் என்ற தலைப்பே ஒரு வகையான தண்டனையை காண்பித்துவிடுகிறது. அந்தத் தண்டனை கைதுக்குப் பின்னால் அவர் மீது அமல்படுத்தப்படும் போதும் அதன் இடையில் ஏற்பட்ட இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள் உரையாடலும் அல்லது நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் உரையாடலுமாக நாவல் நின்று பேசுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வழக்கு விசாரணை அம்சங்கள் இந்த நாவலில் பல இடங்களில் ஒத்துப்போய் இந்த நாவலின் போக்கை ஒரு சமகால தன்மை உள்ளதாக கூட மாற்றி விடுகிறது அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சரித்திர விஷயத்தைச் சமீபத்திய சரித்திர அம்சங்களுடன் கலந்து தருவதில் நம்பகத்தன்மை என்பது பற்றிய ஒரு குழப்பமும் ஏற்படுகிறது. முந்தைய சரித்திர விஷயத்தை இது தேவையில்லாமல் குறுக்கிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்பது விதியாக இருக்கிறது. சமீபத்திய தூத்துக்குடி வழக்கு விசாரணையின் அம்சங்கள் பல இடங்களில் இழையோடியிருப்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. அப்படியாக கண்டுகொள்ள முயலும்போது இந்த நாவல் ஒரு சமகாலத் தன்மையுடன் செல்ல முயலும் அக்கறையைத் தருகிறது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அந்தச் சம்பவங்களை மனதில் கொண்டு பார்க்கிறபோது ஒருவகையில் அதை நிறுவுவதுமாகவும் அமைந்துவிடுகிறது. இவ்வகை விஷயங்களை அதாவது பழைய சரித்திர விஷயங்களையும் சமீப விஷயங்களையும் ஒன்றிணைக்கும் வடிவத்தை இவரின் அப்பல்லோ போன்ற நாவல்களிலும் பார்க்க முடிகிறது. இந்த வகையான வடிவத்தைச் சரித்திர சம்பவமும் சமகால சமூக இணைந்த போராட்டத்தைக் கொண்ட வடிவத்தை அவர் பல படைப்புகளில் கைக்கொண்டு இருக்கிறார். அது அவரின் தனித்துவமான போக்காக நின்றுவிடாமல் இந்த வகை விஷயத்திலிருந்து மாறுபட்டு வேறு வடிவங்களுக்குள் புகுவதன் மூலம் எதார்த்தத்தின் பல சிறப்புகளைக் கொள்ள வைக்கும். அந்த வகையில் தூத்துக்குடியில் முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டையும் இப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டையும் நினைவு கொள்ளும் விதமாய் அமைந்துள்ள விசாரணைக் காட்சிகள் இந்த நாவலின் முக்கிய பங்காற்றுகின்றன. இது நாவலின் சுவாரஸ்யமானத் தளமாகவும் அமைந்து விடுகிறது. வ உ சி அவர்களின் குடும்ப நண்பர்களுடன் உரையாடல் மற்றும் நீதி விசாரணை பதில்கள் போன்றவை கூர்மையாக சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டு சிறுவர்-சிறுமியர் சார்ந்த விசாரணை குறுக்கீடுகள் மட்டும் புனைவுத் தன்மையுடன் வார்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. மற்ற கதாபாத்திரங்கள் வ உ சி யின் குடும்ப நண்பர்களோடும் அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறார்கள். இந்த நாவலை கதையாகச் சொல்லுகிற அம்சங்களில் பல இடங்கள் கவித்துவ அம்சங்களாக நிறைந்திருக்கின்றன. தூய்மைப்படுத்திய குடிநீரை போல நீதி இருக்க வேண்டும் என்ற அக்கறையில் கொடுக்கப்படும் செய்திகளில் தரம் உயர்ந்ததாக இருக்கிறது. முகத்தில் சிலந்திகள் மீசையாகத் துருத்தி இருப்பது போல இந்த நாவலில் வ உ சி படும் துன்பங்கள் நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்தத் துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கிற நீதிமன்றத் தீர்ப்பு சாதிகளின் அடிப்படையில் அமைந்திருப்பதை நாவல் முழுக்க பல இடங்களில் அவர் அலசுகிறார். வ உ சி குடும்பத்தினர் மிகுந்த சிரமங்களுக்கு உண்டாகி இருப்பது அறத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. மனு நீதிதான் தீர்ப்பாக வழங்கப்படுகிறது, அந்தத் தீர்ப்பு இன்று சாதிரீதியான தீர்ப்பாக அளக்கப்படுகிறது, என்பதை நாவல் குறிப்பிடுகிறது. மனு நீதியின் தாக்கங்கள் எந்த காலத்திலும் இந்திய சமூகத்தில் இருந்து கொண்டிருப்பதில் அத்தாட்சியாக அந்த வகை கூற்றுகள் அமைந்துவிடுகின்றன. வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதையொட்டி அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பின்னால் திருநெல்வேலியில் கலவரம் நடக்கிறது. துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. அதன் பின்னால் வருகிற வழக்கு விசாரணை ஆகியவை இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்ட போதிலும் சமகால தன்மையையும் ஞாபகத்தில் கொண்டு எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பும் பின்னால் மேல்முறையீட்டு காரணமாக உயர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் விரிவாக உள்ளன. அவற்றின் இடையில் நடக்கும் விசாரணை சார்ந்த விஷயங்களும் வ உ சி குடும்பத்தினரின் சிரமங்களும் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு காலகட்டத்திய சரித்திர சம்பவங்களைச் சமகால தன்மையை இணைத்து சொல்லப்பட்டிருப்பதை தமிழக அரசியலைக் கூர்ந்து பார்க்கிறவர்கள் உணர்வார்கள். இந்தவகையில் எப்படியோ அவருடைய படைப்புகளில் அரசியல் தன்மை இடம் பெற்றுவிடும், அதை இந்த நாவலிலும் காட்டியிருக்கிறார். தொடர்ந்து இவர் அரசியல் தன்மையைத் தன்னுடைய படைப்புகளில் அடையாளம் காண தகுந்த வகையில் எழுதி வருகிறார். இந்த அரசியல் தன்மையை வேறு படைப்பாளிகளிடம் அபூர்வமாகவே காணக் கிடைக்கும். ஆனால் அண்டனூர் சுரா தொடர்ந்து சிறுகதைகளிலும் நாவல்களிலும் இந்த அம்சங்கள் ஊடகவும் படிமமாகவும் நிறைந்திருப்பதை தேர்ந்த வாசகன் உணர்வான். இந்த அரசியல் தன்மையைப் படைப்புகள் கொண்டிருப்பது வேறுவகை படைப்பாளிகள் கைக்கொள்ள வேண்டிய மாதிரி படைப்புக்கு உதாரணமாக சுராவின் படைப்புகளை சொல்ல வைப்பது அவரின் தொடர்ந்த முயற்சிகளில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. எக்காலத்திற்குமான நீதியின் போக்கு, தீவாந்தரம். தீவாந்தரம் ( நாவல் ) சந்தியா பதிப்பகம், சென்னை ரூபாய் 230
ப க பொன்னுசாமியின் படைப்புலகம் ஏன், எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும் அடங்கும். கொங்கு வாழ்வியலின் அறம் சார்ந்த கேள்விகளை பூடகமாய் கொங்கு பேச்சுப் படிமங்களின் மூலம் பல பதிவுகள் செய்த திரு ப.க.பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமானப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது. ஒரு படைப்பாளியின் சில படைப்புகள் சிலரை சென்றடைந்திருக்கும். படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள இது போன்ற தொகுப்புகள் தேவை .அவை கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் பயன்படக்கூடியவை அந்த வகையில் “ ரீடர் “ எனும் வகையில் இத்தொகுப்பை எடுத்துக் கொள்ளலாம். திரு பொன்னுசாமி அவர்களின் பல்வேறு படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலரும் தங்கள் அபிப்பிராயங்களை கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை இத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகள், வட்டார இலக்கியம், தொழில்நுட்ப சாதனைகள் , இசைக்கூறுகள் என்று திரு பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் சார்ந்து எல்லாவிதப்படைப்புகளின் ஆய்வு சார்ந்த கட்டுரைகளாக இவை அமைந்திருக்கின்றன. இலக்கியப்படைப்புகள் பற்றி பெரும்பான்மை பேசினாலும் விஞ்ஞானக்கூறுகளும் அறிவியலும் முதன்மை பெறும் இடத்தில் இருக்கிறது.. மீரா, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் எளிமையானக் கட்டுரைகள் ஒரு புறம்.இன்னொரு புறம் விஞ்ஞானச்சிந்தனைகள் சார்ந்த வியப்புகள் கூடி நிற்கின்றன.. பிரேமாந்ந்தகுமார், மருதநாயகம், மாலன் , திருப்பூர் கிருஷ்ணன் என்று பலர் பல்கோணங்களில் எழுதியுள்ளனர்நாவலின் சில பகுதிகள் பெரும் மலையின் துணுக்கை காட்டுகின்றன. அவற்றை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கல்லூரிக்காலக்கவிதைகள், நாடகங்கள் என்பவை ஆரம்பகாலப்படைப்புகளின் தன்மையைக்காட்டுகின்றன.சுமார் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இவர் இருந்து வருவதின் அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம் ஒரு இலக்கியப் படைப்பாளியின் மொத்தப் படைப்புகள் பற்றிய ஒரு பருந்துப்பார்வைக்கானத் தளமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. சி பி எச் நிறுவனத்திற்கும் நன்றி. ப க பொன்னுசாமி அவர்கள் மதுரை , சென்னைப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிட்த்தக்கது . தமிழில் 10 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியவர் . மூன்று நாவல்களும் அவரின் பங்களிப்பாக வரவேற்பைப் பெற்றுள்ளன rs 350 NCBH Chennai -சுப்ரபாரதிமணியன்
தேவை படைப்பாளிகளின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள தொகுப்பு நூல்கள் 0 ஒரு படைப்பாளியின் சில படைப்புகள் சிலரை சென்றடைந்திருக்கும். படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள தொகுப்புகள் தேவை .அவை கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் பயன்படக்கூடியவை அந்த வகையில் “ ரீடர் “ எனும் வகையில் இந்த மூன்று தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். 1 இந்திர ஜாலம் -அந்த வகையில் கவிஞர் இந்திரனின் கவிதைகள் பற்றிய ஒரு நூலை நா. வே அருள் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்திரனின் கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களைத் தரும் கட்டுரைகளை அவரே எழுதியுள்ளார். இந்திரனின் உலகப்பார்வை கட்டுரை கவிதை நூலுக்குள் நுழையும் வாசலாக இருக்கிறது. உலகக் கவிதைகளின் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மூலமாக அவர் தமிழ் கவிதை உலகிற்குக் கொடுத்துள்ள கொடை பற்றி கட்டுரைகளில் மொழிபெயர்ப்புக்கவிதைகளில் அவரின் பங்கைப்பற்றி அலசும் முதல் பகுதி அது. இலக்கியக் கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லாத நிலையில் அபிப்ராயங்களையும் சுய விருப்பு வெறுப்புகளையுமே விமர்சனம் என்ற பெயரில் உதிர்த்துக் கொண்டிருக்கும் குழுமாச்சர்ய தமிழிலக்கியச் சூழலில் அக்கறை மிகுந்த ஒரு செயல்பாட்டினுடைய தேவையற்ற ஒரு நிழலாகத்தான் இருக்கிறது விமர்சனம் என்ற இந்திரனின் அபிரப்ராயங்கள் முக்கியமானவை . இரண்டாம் பகுதி அவரின் அந்நியன் முதல் மிக அருகில் கடல் வரை அவரின் பல கவிதைத் தொகுப்புகள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் . மூன்றாம் பகுதி இருபதற்கும் மேற்பட்ட உதிரிக்கவிதைகளை எடுத்துக் கொண்டு நடத்தப்படும் அலசலில் நவீன கவிதையின் பல்வேறு முகங்களைக் காண முடிகிறது. ( ரூ 180 யாளி சென்னை வெளியீடு ) 2. ப.க பொன்னுசாமியின் படைப்புலகம்: தொகுப்பாசிரியர் : சுப்ரபாரதிமணியன், ஏன், எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும் அடங்கும். கொங்கு வாழ்வியலின் அறம் சார்ந்த கேள்விகளை பூடகமாய் கொங்கு பேச்சுப் படிமங்களின் மூலம் பல பதிவுகள் செய்த திரு ப.க.பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமானப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது. திரு பொன்னுசாமி அவர்களின் பல்வேறு படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலரும் தங்கள் அபிப்பிராயங்களை கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை இத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகள், வட்டார இலக்கியம், தொழில்நுட்ப சாதனைகள் , இசைக்கூறுகள் என்று திரு பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் சார்ந்து எல்லாவிதப்படைப்புகளின் ஆய்வு சார்ந்த கட்டுரைகளாக இவை அமைந்திருக்கின்றன. இலக்கியப்படைப்புகள் பற்றி பெரும்பான்மை பேசினாலும் விஞ்ஞானக்கூறுகளும் அறிவியலும் முதன்மை பெறும் இடத்தில் இருக்கிறது.. மீரா, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் எளிமையானக் கட்டுரைகள் ஒரு புறம்.இன்னொரு புறம் விஞ்ஞானச்சிந்தனைகள் சார்ந்த வியப்புகள் கூடி நிற்கின்றன.. பிரேமாந்ந்தகுமார், மருதநாயகம், மாலன் , திருப்பூர் கிருஷ்ணன் என்று பலர் பல்கோணங்களில் எழுதியுள்ளனர்நாவலின் சில பகுதிகள் பெரும் மலையின் துணுக்கை காட்டுகின்றன. அவற்றை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கல்லூரிக்காலக்கவிதைகள், நாடகங்கள் என்பவை ஆரம்பகாலப்படைப்புகளின் தன்மையைக்காட்டுகின்றன.சுமார் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இவர் இருந்து வருவதின் அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம் ஒரு இலக்கியப் படைப்பாளியின் மொத்தப் படைப்புகள் பற்றிய ஒரு பருந்துப்பார்வைக்கானத் தளமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. ( ரூ 350 என் சி பி எச் வெளியீடு ) 3. சுப்ரபாரதிமணியன் என்ற பன்முக எழுத்தாளர் இந்த நூலை சென்னையைச் சார்ந்த கண்ணையா அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார். இது மற்ற இரு நூல்களிலிருந்து வித்தியாசமானது. இதில் தொகுப்பாளர் ஒருவர் இருந்தால் கூட கட்டுரையாளர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர். ஆர். நல்லக்கண்ணு, பிரபஞ்சன், ஜெயமோகன், முதல் தமிழில் பல படைப்பாளிகள் சுப்ரபாரதிமணியனின் பல நூல்கள் பற்றி எழுதியக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுப்ரபாரதிமணீயனின் நாவல்கள், பயண இலக்கியம், சிறுகதைத்தொகுப்புகள் என்று பல வகை இலக்கியப்படைப்புகள் பற்றி பொதுவான வாசகர்களும் இலக்கிய மாணவர்களும் அறிந்து கொள்ள உதவும் வகையில் அக்கட்டுரைகள் மைந்துள்ளன. இந்த மூன்று நூல்களும் மூன்று முக்கியப் படைப்பாளிகளைப் பற்றிய ஏறத்தாழ முழு விபரங்களையும் அறிந்து கொள்ள உதவுபவை. இது போன்ற தொகுப்பு நூல்கள் தமிழ்ச்சூழலில அவசியமானவை. ( ரூ200 , மார்க்ஸ் ஏங்கல்ஸ். லெனின் படிப்பகம், கோவை, நண்பர்கள் நற்பணி மன்றம் சென்னை வெளியீடு ) - நா. தினேஷ் - ( கட்டுரை : நா. தினேஷ் , திருப்பூர் இலக்கிய வாசகர் ) - ------------ -
Novel 1189 / சுப்ரபாரதிமணியன் 0 இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல். குறுகிய காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். பலவகை விளிம்பு நிலை மனிதர்கள்.. வீட்டு வேலை செய்கிற பெண்மணிகள், சாராயம் விற்பவர்கள் கூலி வேலை செய்கிறவர்கள் நெசவாளர்கள் என்று பல்வேறு வகையான மனிதர்களை தொடர்ந்து காட்டிக் கொண்டே போகிறார். நாவலில் ராஜாஜியும் காந்தியடிகளும் அந்த ஊருக்கு வரும் ஒரு நிகழ்ச்சி அறிவிப்போடு தூங்குகிறது பின்னால் பல காலகட்டங்களை தாண்டி போய்விடுகிறது அதேபோல பல கதாபாத்திரங்களைத் தாண்டி போய்க் கொண்டே இருக்கிறது இந்த கதாபாத்திரங்கள் தங்களுடைய வாழ்க்கையின் சிரமங்களையும் மன எழுச்சிகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் காலகட்டத்தை பிரிக்கிற அத்தியாயம் முறைகள் எதுவும் இல்லை. அதே போல கதாபாத்திரங்களின் வெவ்வேறு தன்மையை சொல்லக்கூடிய அத்தியாயப் பிரிப்பு முறையில்லை தொடர்ந்து விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு எழுத்து முறையில் உருவாக்கி இருக்கிறது இந்த நாவல் .இந்த மனிதர்களில் குடும்பங்களை காலி செய்யச் சொல்லி அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது ஒரு விரிவாக்க திட்டத்திற்காக .குறைந்த காலம் .அவர்கள் வெளியேற வேண்டி இருக்கிறது அவர்களின் மன அவஸ்தைகளை இந்த நாவல் சொல்கிறது. தொடர்ந்து எழுத்துமுறைகளில் அக்கறை கொண்டு தன் படைப்புகளை உருவாக்கி இருக்கும் சிந்து சீனுவினுடைய எழுத்து முறையில் வேகமும் இயல்பும் எதார்த்தமும் கூடியிருக்கிறது. பொதுவான அவருடைய படைப்புகளில் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த ஒரு அழகியலும் உருவாகி இருக்கிறது இந்த நாவலின் தலைப்பில் 1189 வீடுகள் காலி செய்யப்பட வேண்டும் என்பதைக் கூட அவர் சாதாரண யூகப் பகிர்வில் சொல்லிக் கொண்டு போகிறார் அவர் சொல்லிக் கொண்டு போவதற்காக நிறைய விஷயங்கள் இருப்பதில் இந்த விஷயம் ஒன்றாகிறது .அவர் எடுக்கிற நாவல்களின் மையம் சிறப்பாக இருப்பதை தொடர்ந்து கவனித்து வரையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . விளிம்புநிலை வாழ்வியலை கூர்ந்து கவனிப்பவர்களில் ஒருவராக சிந்து சீனு மாறி இருக்கிறார் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம் 1189 வேலூர் லாவண்யா பதிப்பக வெளியீடு ரூபாய் 180
Adivasi poems The songs of an aboriginal tribe/ subrabharathimanian Mayaru The songs of an aboriginal tribe The kiluvai fence can be moved by anyone Crushed by anyone So gentle The line of my determination Can never be moved by any hero Does chastity depend on a mere line. ** Kiluvai – a wild bushy tree used for fencing To prevent fire from spreading In the forest There is the fire line. We have drawn our own lines Around us To protect our dignity. for eight children I am the mother I am Bommakka In number eight I am at the head In number eight inside the tail is my husband However lustfully your eyes feed on me Stand far away you supervisor *** Among the wild animals Grazing in our forest is the mouse deer But what kind of deer you are? Your are only commodities Goods to be traded Liquor Greed are you. I am sitting with a few gooseberries Guavas spread on an old tray in front of me That youth runs off teasing me Touching my head The king cobra will rise three feet to the thigh Any snake will sting the foot. I rise like a cobra and thrash my hands. You have escaped A snake does not take revenge Will not forget so easily The Game Hut Princes and Englishmen Used to stay after hunting Stands majestically still. Nobody goes near it Nobody goes as it is feared ghosts haunt it Did they hunt only deer tiger other animals How many tribal women Like Bommakka Numerous - Subrabaratimanian - Translated by Pro Vincent , Madurai
0 4/40 கொண்டை ஊசி வளைவு: சுப்ரபாரதிமணியன் நாவல் மாயத்தைப் பின்வைத்து, .ஆசைகளை முன் வைத்து உள் மனநிலை வெளிப்பாட்டின் எண்ணத்தொகுப்பு மு.கவியரசன் மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான் சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது. கூற்று முறை என்பது கதைக்குள் பலவாறாக அமைகிறது. கதை சொல்லியோ அல்லது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தை வைத்தோ அல்லது கதைக்குள் இடம்பெறும் எல்லா பாத்திரங்களின் மனநிலைப் பதிவுகளை உதிரியாக விவரிக்கும் பாணியும், இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து இடம்பெறலாம். அவ்வகையில் மூன்றாவது பாணியை முன்வைத்து நகர்ந்தாலும், இக்கதை பெயர் சொல்லப்படாத ஒரு பெண்ணைச் சுற்றி, அவளின் வாழ்க்கையை மையமிட்டு அமைகிறது. இந்நாவலின் கதையளவு நான்கு நாட்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. நேர்கோட்டு உத்தி அமைப்பில் எழுதப்பட்டாலும், இறுதியில் காட்சிப்படுத்தப்படும் களன் நான்காவது நாள். ஆகவே கடந்தகாலம், நிகழ்காலம் என்கிற வகையில் அமைகிறது. பரளியாறு தேவரிஷி அலுவலகம் கதையில் வெளி சார்ந்த இடச்சூழலாக வருகிறது. அமைதி மண்டபம், உணவு விடுதி, தங்கும் அறை இறுதியில் மலைக்காட்சிகள் என்று கதைக்குள் காட்சிப்படுத்தப்படும் இடங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனித வாழ்க்கையில் ஆசைகள் தான் அவனை எந்த இடத்தில் வைக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்கிறது. அவ்வகையில் நகர வாழ்க்கையில் இருந்து பிதுங்கி வந்த மனங்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக மன அமைதியை தேடிவரும் நிலை என்பது, ஏதோவொரு வகையில் அவர்களுக்கான மன ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என நம்புகிறார்கள். அதனடிப்படையில் முதல் நிலைப் பாத்திரமாக வரும் இராஜகுமாரன், இரண்டாம் நிலைப் பாத்திரமாக வரும் பெயர் சொல்லப்படாத ஒரு பெண் பாத்திரம். இவ்விரு பாத்திரங்களின் போக்காகவே கதை நகர்த்தப்படுகிறது. அப்பயிற்சி வகுப்புக்காக கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே காணக்கிடைக்கிறார்கள். அதில் ஒருவளாக அப்பெண் வருகிறாள். தான் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாதவளாக அவள் தன்னை மற்றவர்களிடத்தில் காட்டிக்கொள்கிறாள். இராஜகுமாரன் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்படுகிறான். அது இறுதி வரையிலும் கிட்டாமலே செல்கிறது. அப்பெண்ணின் பின்புல வாழ்க்கை, துயரம் மிகுந்ததாக காட்சிப்படுத்தப் படுகிறது. “அவன் காதலிப்பதாகச் சொன்னான். பிறகு பல மாதங்கள் கடந்து பின்னால் இப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டான். அவளுக்குத் துயரமாக இருந்தது”(ப.43). “தன் உடம்மைப் பயன்படுத்திச் சம்பாத்தித்தவர்கள் மத்தியில் அவள் அகப்பட்டு விட்டது ஒரு பெரிய கதை. அந்தத் தளத்தில் பல பெண்கள் இருந்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் எப்படியாவது அங்கிருந்து தப்பிப் போய்விடுவது என்ற வகையில் அவர்கள் யோசித்தார்கள். பரஸ்பரம் உதவி செய்வதும்தான், தப்பிப்பதுதான் திட்டமாக இருந்தது”(ப.42). “அங்கிருந்து நயன்தாரா தப்பித்து வந்தபோது கூட அவளின் மனதில் எந்த மாற்று திட்டமும் இருக்கவில்லை. இன்னொரு ஆணிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம். அவனும் ஏமாற்றப் போகிறான் என்பது மட்டும்தான் தெரிந்தது. இப்படி ஆண்களிடம் மாட்டிக்கொள்வதை விட அவர்களைப் பின்தொடர வைப்பதுதான் சாகசம் என்று நினைத்தாள். அந்த சாகச விளையாட்டில் பல அபாயங்கள் காத்திருந்தன. எப்படியோ அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு அவள் தப்பிச் செல்கிறாள். அதெல்லாம் தவிர்க்கிறபோது இப்படி பரளியாறு வந்து உடற்பயிற்சி, தியானம் என்று நான்கு நாட்கள் இருந்து விட்டு சென்று விடுவாள். அதுதான் ஆறுதலாக இருக்கிறது”(ப.43). இவ்வாறான அப்பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் துயரம் நிறைந்ததாக அறியப்பட்டாலும், ஏமாறுவதும் - ஏமாற்றப்படுவதும், அதனின் பின்விளைவுகள் மனம் சார்;ந்த சிக்கலில் அகப்பட்டு கொள்ளுமே தவிர வேறு வடிவங்களில் பெரிதாக அமையப் போவதில்லை. தன்னை ஒரு வட்டத்திற்கு கொண்டு வருகிறாள். ஆண் மீதான வெறுப்பு ஒருபுறமிருந்தாலும், அவற்றிலிருந்து விடுபடவே பரளியாறு தியானப் பயிற்சிக்கு வந்து செல்கிறாள். இவ்வந்து செல்லுதலில் ஒருமுகமாக இராஜகுமாரனின் நட்பும், அந்நட்பு காமம் சார்;ந்த ஒரு பார்வையாய் வெளிப்படுகிறது. இந்தப் பார்வை கதையின் கடைசி இலைவரினும் தொடர்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அப்பெண் உடன்படாதவளாகவே இராஜகுமாரனோடு பயணிக்கிறாள். தனக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அவ்வலைதல் அவனுக்குப் பிடிபடாததாகவே இருக்கிறது. கொரானா லாக்டவுண், அடுத்து எப்போது சந்திக்க போகிறோம் என்கிற அச்சம், அதனாலயே எப்படியாவது அவளோடு தனிமையில் இருக்க வேண்டும் என்கிற ஆசை அவனைத் துரத்துகிறது. ஆனால் இறுதி வரையிலும் ஆசை என்பது கானல் நீராகவே செல்கிறது. அவளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் கொண்டாலும், அதற்கெல்லாம் அவள் முட்டுக்கட்டை இடுகிறாள். முக்கியமாக, “நான் கிளம்புறேன். மாயமாகப் போறன். அரை நேரத்துக்கு முன்னால காணாமல் போனதா சொல்லித் தேடுனீங்க. இப்போ உண்மையாகவே காணாமல் போக போறேன். மாயமா போகப்போறன். என் பெயர் பொய். நீங்க வெச்ச பேரும் பொய்தாம். நான் உங்ககிட்ட நடந்துகிட்ட எல்லாம் பொய். நான் வேற ஒரு ஆளு.. வரட்டுமா”(ப.105). “வரட்டுமா நாம சந்திக்கிறது இனிமேல் இருக்காது. எல்லாம் மாயை”(ப.106). இவ்வாறாக காட்சிப்படுத்தப்படும் ஒரு பெண்ணின் அகவாழ்க்கை, எந்தளவிற்கு அவள் துயரத்தை உள்வாங்கியிருப்பாள் என்பதை யூகிக்க முடிகிறது. மனிதனின் ஆகப்பெரும் பிரச்சனையாக இந்த உடல் இருப்பது தெரிய வருகிறது. என்னதான் திருமணம் ஆனாலும், வயது மூப்பாகயிருந்தாலும் காமம் எனும் வளைக்குள் சிக்குவது மனித மனம் இயல்பாகவே அதில் மாட்டிக்கொள்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறாள் அப்பெண். தன்னுடைய அனுபவம் அவளுக்கு அதிகமாகவே கற்றுக்கொடுத்திருக்கிறது. எண்ணங்களும், அதனினூடாக வரும் ஆசைகளுமே மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் தங்களின் மன அழுக்குகளைக் கழுவுவதற்காக வருகிறார்கள். பல பெண்கள் தங்களின் அடையாளங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. அரசன், இனியன், காசிநாதன், நமச்சிவாயம் போன்ற பாத்திரங்கள் இடம்பெற்றாலும், அவர்களின் எண்ணவோட்ட பதிவுகளும் பக்கங்களை நிரப்புகின்றன. ஆனால் முழுமையான கதைச்சூழல் என்பது காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் வலைக்குள் சிக்கி, அதிலிருந்து தப்பித்து நிம்மதியைத் தேடிச்செல்லும் ஒரு பெண்ணின் அவலநிலையை அலை அலையாக வெளிப்படுத்துகிறது. அவ்வெளிப்படுத்துதலுக்குள் உடல் எனும் பண்டம் நிலையாக இருக்கிறது. மனித எண்ணத்தில் உடல் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனின் இந்நாவலும், இராஜகுமாரனும் அதற்கு விதிவிலக்கல்ல. (Rs 135 uyirmmei publication / (( மு.கவியரசன் திருநெல்வேலி. ) mkavi2491@gmail.com )) ReplyForward 0 திரைப்பட ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தமிழக அரசுக்குப் பாராட்டு திரைப்படக்கல்வியை அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இணைத்தும் நடைமுறைப்படுத்தியும் இருப்பதற்குப் பாராட்டு தெரிவித்தனர் 0 MALA ( Madras Library Association) மாலா) - மெட்ராஸ் லைப்ரரி அசோசியேசன், நடவு பதிப்பகம் மற்றும் முத்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய பாராட்டு விழா. 25 வாரமாக புதன்கிழமை தோறும் மாலை இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சியில் ( வாசிப்பு ஒரு வரம்) பங்கேற்ற. மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 11-9-2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு திருப்பூர் மங்கலம் சாலையில் ( டைமண்ட் திரையரங்கம் அருகில்) அமைந்துள்ள திருப்பூர் மக்கள் மாமன்றம் நூலகத்தில் மேற்படி பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் தமிழன்னை சிலை ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. திருமதி. N. ஜெயபாரதி ..செயலாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திருமதி. K. அனுராதா மாலா அமைப்பி ..தலைவர் .தலைமை உரை நிகழ்த்தினார். நூலக வாசகர் வட்டம் தலைவர் புருஷோத்தமன் அவர்கள் முன்னிலை உரை நிகழ்த்தினார். திருப்பூர் கனவு திரைப்பட இயக்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் " திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சார்பாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், திரைப்படம் கல்வியை அரசு பள்ளிகளில் ஆரம்பித்து அது சம்பந்தமான வகுப்புகள் நடத்துதல், உலகத் திரைப்படங்களை திரையிடல் ஆகியவற்றை தமிழக அரசு முன்னெடுத்து இருப்பதை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். கல்லூரி மாணவ மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் இது போன்ற இணைய வழி நூல் அறிமுகம் நிகழ்ச்சி தொடர வேண்டும் என வாழ்த்தினார். மனிதனின் சிந்தனை வளர்க்கும் நூல் வாசிப்பு இயக்கமாக தொடங்கப்பட வேண்டும் என்றார். அவரவர் தங்கள் ஊர்களில் உள்ள நூலகங்களில் கட்டாயம் உறுப்பினராக வேண்டும் என்றார். நூலகம் என்பது தாய்மடியைப் போன்றது என்றார். ஆறு சிறுவர் திரைப்பட நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவை உலகத்திரைப்படங்களின் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை முத்தமிழ் சங்கத்தின் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார் . செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவி ஷெரின் மேஹா அவர்கள் நூல் அறிமுகம் மாதிரி உரை நிகழ்த்தினார் . பாராட்டு பெற்ற மாணவிகள் சார்பாக. மாணவி பிரித்திகா அவர்கள் ஏற்புரை வழங்கினார். விழாவில் மாலா அமைப்பின் நிர்வாகிகள் திருமதி. சுசிலா தேவி, மணிமேகலை, கவிதா, வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். மாலா அமைப்பின் துணைத்தலைவர் முத்துபாரதி அவர்கள் நன்றி தெரிவித்தார். தேசிய கீதம் பாடப்பட்ட விழா இனிதே நிறைவு பெற்றது. ReplyForward 0
உள் மனநிலை வெளிப்பாட்டின் எண்ணத்தொகுப்பு மு.கவியரசன் மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான் சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது. கூற்று முறை என்பது கதைக்குள் பலவாறாக அமைகிறது. கதை சொல்லியோ அல்லது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தை வைத்தோ அல்லது கதைக்குள் இடம்பெறும் எல்லா பாத்திரங்களின் மனநிலைப் பதிவுகளை உதிரியாக விவரிக்கும் பாணியும், இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து இடம்பெறலாம். அவ்வகையில் மூன்றாவது பாணியை முன்வைத்து நகர்ந்தாலும், இக்கதை பெயர் சொல்லப்படாத ஒரு பெண்ணைச் சுற்றி, அவளின் வாழ்க்கையை மையமிட்டு அமைகிறது. இந்நாவலின் கதையளவு நான்கு நாட்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. நேர்கோட்டு உத்தி அமைப்பில் எழுதப்பட்டாலும், இறுதியில் காட்சிப்படுத்தப்படும் களன் நான்காவது நாள். ஆகவே கடந்தகாலம், நிகழ்காலம் என்கிற வகையில் அமைகிறது. பரளியாறு தேவரிஷி அலுவலகம் கதையில் வெளி சார்ந்த இடச்சூழலாக வருகிறது. அமைதி மண்டபம், உணவு விடுதி, தங்கும் அறை இறுதியில் மலைக்காட்சிகள் என்று கதைக்குள் காட்சிப்படுத்தப்படும் இடங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனித வாழ்க்கையில் ஆசைகள் தான் அவனை எந்த இடத்தில் வைக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்கிறது. அவ்வகையில் நகர வாழ்க்கையில் இருந்து பிதுங்கி வந்த மனங்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக மன அமைதியை தேடிவரும் நிலை என்பது, ஏதோவொரு வகையில் அவர்களுக்கான மன ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என நம்புகிறார்கள். அதனடிப்படையில் முதல் நிலைப் பாத்திரமாக வரும் இராஜகுமாரன், இரண்டாம் நிலைப் பாத்திரமாக வரும் பெயர் சொல்லப்படாத ஒரு பெண் பாத்திரம். இவ்விரு பாத்திரங்களின் போக்காகவே கதை நகர்த்தப்படுகிறது. அப்பயிற்சி வகுப்புக்காக கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே காணக்கிடைக்கிறார்கள். அதில் ஒருவளாக அப்பெண் வருகிறாள். தான் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாதவளாக அவள் தன்னை மற்றவர்களிடத்தில் காட்டிக்கொள்கிறாள். இராஜகுமாரன் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்படுகிறான். அது இறுதி வரையிலும் கிட்டாமலே செல்கிறது. அப்பெண்ணின் பின்புல வாழ்க்கை, துயரம் மிகுந்ததாக காட்சிப்படுத்தப் படுகிறது. “அவன் காதலிப்பதாகச் சொன்னான். பிறகு பல மாதங்கள் கடந்து பின்னால் இப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டான். அவளுக்குத் துயரமாக இருந்தது”(ப.43). “தன் உடம்மைப் பயன்படுத்திச் சம்பாத்தித்தவர்கள் மத்தியில் அவள் அகப்பட்டு விட்டது ஒரு பெரிய கதை. அந்தத் தளத்தில் பல பெண்கள் இருந்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் எப்படியாவது அங்கிருந்து தப்பிப் போய்விடுவது என்ற வகையில் அவர்கள் யோசித்தார்கள். பரஸ்பரம் உதவி செய்வதும்தான், தப்பிப்பதுதான் திட்டமாக இருந்தது”(ப.42). “அங்கிருந்து நயன்தாரா தப்பித்து வந்தபோது கூட அவளின் மனதில் எந்த மாற்று திட்டமும் இருக்கவில்லை. இன்னொரு ஆணிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம். அவனும் ஏமாற்றப் போகிறான் என்பது மட்டும்தான் தெரிந்தது. இப்படி ஆண்களிடம் மாட்டிக்கொள்வதை விட அவர்களைப் பின்தொடர வைப்பதுதான் சாகசம் என்று நினைத்தாள். அந்த சாகச விளையாட்டில் பல அபாயங்கள் காத்திருந்தன. எப்படியோ அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு அவள் தப்பிச் செல்கிறாள். அதெல்லாம் தவிர்க்கிறபோது இப்படி பரளியாறு வந்து உடற்பயிற்சி, தியானம் என்று நான்கு நாட்கள் இருந்து விட்டு சென்று விடுவாள். அதுதான் ஆறுதலாக இருக்கிறது”(ப.43). இவ்வாறான அப்பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் துயரம் நிறைந்ததாக அறியப்பட்டாலும், ஏமாறுவதும் - ஏமாற்றப்படுவதும், அதனின் பின்விளைவுகள் மனம் சார்;ந்த சிக்கலில் அகப்பட்டு கொள்ளுமே தவிர வேறு வடிவங்களில் பெரிதாக அமையப் போவதில்லை. தன்னை ஒரு வட்டத்திற்கு கொண்டு வருகிறாள். ஆண் மீதான வெறுப்பு ஒருபுறமிருந்தாலும், அவற்றிலிருந்து விடுபடவே பரளியாறு தியானப் பயிற்சிக்கு வந்து செல்கிறாள். இவ்வந்து செல்லுதலில் ஒருமுகமாக இராஜகுமாரனின் நட்பும், அந்நட்பு காமம் சார்;ந்த ஒரு பார்வையாய் வெளிப்படுகிறது. இந்தப் பார்வை கதையின் கடைசி இலைவரினும் தொடர்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அப்பெண் உடன்படாதவளாகவே இராஜகுமாரனோடு பயணிக்கிறாள். தனக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அவ்வலைதல் அவனுக்குப் பிடிபடாததாகவே இருக்கிறது. கொரானா லாக்டவுண், அடுத்து எப்போது சந்திக்க போகிறோம் என்கிற அச்சம், அதனாலயே எப்படியாவது அவளோடு தனிமையில் இருக்க வேண்டும் என்கிற ஆசை அவனைத் துரத்துகிறது. ஆனால் இறுதி வரையிலும் ஆசை என்பது கானல் நீராகவே செல்கிறது. அவளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் கொண்டாலும், அதற்கெல்லாம் அவள் முட்டுக்கட்டை இடுகிறாள். முக்கியமாக, “நான் கிளம்புறேன். மாயமாகப் போறன். அரை நேரத்துக்கு முன்னால காணாமல் போனதா சொல்லித் தேடுனீங்க. இப்போ உண்மையாகவே காணாமல் போக போறேன். மாயமா போகப்போறன். என் பெயர் பொய். நீங்க வெச்ச பேரும் பொய்தாம். நான் உங்ககிட்ட நடந்துகிட்ட எல்லாம் பொய். நான் வேற ஒரு ஆளு.. வரட்டுமா”(ப.105). “வரட்டுமா நாம சந்திக்கிறது இனிமேல் இருக்காது. எல்லாம் மாயை”(ப.106). இவ்வாறாக காட்சிப்படுத்தப்படும் ஒரு பெண்ணின் அகவாழ்க்கை, எந்தளவிற்கு அவள் துயரத்தை உள்வாங்கியிருப்பாள் என்பதை யூகிக்க முடிகிறது. மனிதனின் ஆகப்பெரும் பிரச்சனையாக இந்த உடல் இருப்பது தெரிய வருகிறது. என்னதான் திருமணம் ஆனாலும், வயது மூப்பாகயிருந்தாலும் காமம் எனும் வளைக்குள் சிக்குவது மனித மனம் இயல்பாகவே அதில் மாட்டிக்கொள்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறாள் அப்பெண். தன்னுடைய அனுபவம் அவளுக்கு அதிகமாகவே கற்றுக்கொடுத்திருக்கிறது. எண்ணங்களும், அதனினூடாக வரும் ஆசைகளுமே மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் தங்களின் மன அழுக்குகளைக் கழுவுவதற்காக வருகிறார்கள். பல பெண்கள் தங்களின் அடையாளங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. அரசன், இனியன், காசிநாதன், நமச்சிவாயம் போன்ற பாத்திரங்கள் இடம்பெற்றாலும், அவர்களின் எண்ணவோட்ட பதிவுகளும் பக்கங்களை நிரப்புகின்றன. ஆனால் முழுமையான கதைச்சூழல் என்பது காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் வலைக்குள் சிக்கி, அதிலிருந்து தப்பித்து நிம்மதியைத் தேடிச்செல்லும் ஒரு பெண்ணின் அவலநிலையை அலை அலையாக வெளிப்படுத்துகிறது. அவ்வெளிப்படுத்துதலுக்குள் உடல் எனும் பண்டம் நிலையாக இருக்கிறது. மனித எண்ணத்தில் உடல் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனின் இந்நாவலும், இராஜகுமாரனும் அதற்கு விதிவிலக்கல்ல. (Rs 135 uyirmmei publication / (( மு.கவியரசன் திருநெல்வேலி. ) mkavi2491@gmail.com ))
உடுமலை வரலாறு வெளியீடு வரலாற்று ஆய்வு மையம் உடுமலைபேட்டை 0 ஊரை நினைத்தாலே இனிக்கும் என்பார்கள் அப்படி தனது சொந்த ஊரை பற்றி மிகுந்த சிரமங்கள் உடன் வரலாற்று ஆய்வு மைய உடுமலை நண்பர்கள் இந்த நூலை சிறப்பாக தயாரித்திருக்கிறார்கள் இந்த வரலாற்று நூல் அமைய காரணமாக பல ஆளுமைகள் இருந்தாலும் இந்த சூழல் உருவாக காரணமாக இருந்த பல முக்கிய நபர்கள் பற்றிய அறிமுகங்கள் சிறப்பாகவே செய்யப்பட்டிருக்கின்றன அதில் திவான்பகதூர் பிரசாத் பெண் கல்வி தந்தை கோவிந்தசாமி சாதி சமய நல்லிணக்கத்தை போற்றி பாதுகாத்த சோடிய கவுண்டர் சமூக சேவையில் அக்கறை கொண்டு உடுமலையை அடுத்த காமாட்சி கவுண்டர் பழனி கவுண்டர் குடும்பத்தினர் அந்த நகருக்கு தண்ணீர் தந்து தாகம் தீர்த்த வித்யாசாகர் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் மூலமாக உடுமலை நகரத்துக்கு ஒரு புதிய முகத்தை ஏற்படுத்திய கெங்குசாமி நாயுடு போன்றவர்களோடு எழுதுவதற்கான வித்தாக இருந்திருக்கிறார்கள் உடுமலை வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த மறைந்த இந்தர்ஜித் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி உடுமலைப்பேட்டை நூறு ஆண்டு நகராட்சி அளவில் முழுமை பெற்றது ஒட்டி கொண்டுவரப்பட்டது என்று கூட சொல்லலாம் உடுமலை நகரத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பல உள்ளங்களை இந்த தொகுப்பு முழுக்க கலாம் நினைவு கூறப்படுகிறார்கள் இந்த அமைப்பினர் முன்பே உடுமலைப்பேட்டை நகராட்சி நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி உடுமலை 100 என்ற நூலை கொண்டு வந்திருக்கிறார்கள் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளில் இறங்கி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் பல கலை இலக்கியவாதிகளை அவர்கள் அடைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு நவீன இலக்கியவாதிகள் சிலரும் நாம் குறிப்பிடலாம் உடுமலை நகராட்சி வரிவிதிப்பு செய்து அதை அரசுக்கு செலுத்தி உடுமலைப்பேட்டை என்ற சிற்றூரை நகராட்சி அங்கீகாரம் செய்த மனிதர்கள் பலர் உழைப்பில் நகரம் செல்வி பெற்றிருப்பது போலவே ஆன்மீக செயல்கள் சமூக சேவை மூலம் பலர் இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் நகரை நகரத்தில் இருக்கும் பல சிலைகளை பார்க்கிற போதெல்லாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள மனம் ஆவலாய் தேடும் அப்படித்தான் இங்கு உள்ள சேர்மன் கண்ணதாசன் போன்றோர் பற்றிய தகவல்கள் மிக முக்கியமாக சிலைவடிவில் மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் உருவாகியுள்ளன அதேபோல் சாய்ந்த தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த பல்வேறு விஷயங்களை தொகுத்துக் கொடுத்து உடுமலை நகரம் பழமையான தொல்பொருள் பொருட்களில் கிடங்காக இருப்பதை காட்டுகிறார் என்று யாரும் இந்த பணியை செய்ய முன்வராததால் நான் என் தோளில் போட்டு செய்கிறேன் என்று தந்தை பெரியார் ஒவ்வொரு பணியும் தானே எடுத்துக் கொண்டு செய்வது போல இந்த வரலாற்றை உருவாக்குவதில் அரசியலும் உட்பட பல உடுமலை மையம் சார்ந்த பலர் ஈடுபட்டிருந்தார்கள் சரபம் முத்துசாமிக் கவிராயர் உடுமலை நாராயணகவி பெரும்புலவர் நயினார் முகமது போன்ற எழுத்துலக சிற்பிகள் வாழ்ந்த ஊரை அவரைப் பற்றி நல்ல அறிமுகம் கிடைக்கிறது ஆனால் நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது பெரிய பலவீனமாக இருக்கிறது மைக்ரோ ஹிஸ்டரி நடப்படும் முன் வரலாற்றை எழுதுவது ஒவ்வொரு நகரத்திலுள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உடைய முக்கியமான படியாக மாறி இருக்கிறது அந்தப் பணியில் உடைய அடையாளம்தான் இந்த நூல் கரிசல்மண் வெயிலுக்கு ஏற்றதாகும் வியாபாரத்திற்கு ஏற்றதாகவும் இருந்ததால் நூற்றுக்கு மேற்பட்ட பஞ்சாலையில் இங்கே வந்த செய்திகளை பார்க்கும்போது திருப்பூர் பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கு உடுமலை பெரும்பங்காற்றி இருப்பது போல தெரிகிறது தன் பெருமை நினைக்காமல் தான் வாழும் மண்ணின் பெருமையை காக்கும் உள்ளங்களை இந்த வரலாற்று மையம் அடையாளம் அம்சமாக இருக்கிறது அந்த வகையில் இதில் விடுபடும் விடுபட்டு உள்ள நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் மற்றும் சரித்திர பூர்வமான செய்திகளை சேர்த்து அடுத்த பதிப்பு கொண்டுவரும் என்று நம்பலாம் மணிமேகலைப் பிரசுரம் சென்னை இதை வெளியிட்டிருக்கிறது பிரதிகளை வரலாற்று ஆய்வு நடுவம் உடுமலைப்பேட்டை அமைப்பில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் சுப்ரபாரதிமணியன் 0
வாழ்த்துரை 0 மேட்டுப்பாளையம் பெ. மணிவண்ணன் அவர்கள் தொடர்ந்து படைப்பிலக்கிய துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர். அவர் மனதில் எழுகின்ற எழுச்சிகளையும் சிந்தனைகளையும் பல்வேறு வடிவங்களில் படைப்புகளாக ஆக்கிக் கொண்டிருப்பவர். அந்த வகையில் கவிதைகள், சிறுகதைகள் ,நாடகம், குறுநாவல், குறும்படங்கள் என்று தன்னுடைய படைப்புகளை விரித்துக் கொண்டே போகிறவர்.தபால்- தொலைபேசித்துறை பல அருமையான படைப்பாளிகளை தமிழுக்கு தந்திருக்கிறது. அந்த வகையில் ஜெயமோகன், பாவண்ணன் ,சங்கரநாராயணன், விட்டல் ராவ், நா.விஸ்வநாதன். சிஎம் முத்து மற்றும் நான் உட்பட ஒரு பெரிய பட்டியலே அதில் இருக்கிறது. அந்தப் பட்டியலில் சேர்கிறவர் தான் மணிவண்ணன் அவர்கள் .இவருடைய முந்தைய நூல்கள் திருவாளர்கள் குமரி அனந்தன், வைரமுத்து, கோவை ஞானி போன்றவர்களால் வெளியிடப்பட்டும் பாராட்டுகளும் பெற்றிருக்கிறது. மணிவண்ணன் அவர்கள் தன் மனதில் தோன்றுவதை ஏதாவது ஒரு இலக்கிய வடிவத்தில் வெளிப்படுத்துபவர். அந்த வடிவத்திற்கு கவிதை என்ற பெயருடன் தேவையில்லை, ஹைகோ என்ற பெயர்கூட தேவையில்லை, ஆனால் படைப்பு என்ற ரீதியில் அவை மனதின் எழுச்சி வடிவங்களாக இருக்கின்றன. அந்த எழுச்சி வடிவங்களை தன் மனதில் கொண்டு இன்னும் அவர் தீவிரமாக இயங்க வேண்டும். அதற்கான தீக்கொழுந்து அவரிடம் இருந்து கொண்டே இருக்கிறது. அதை அவர் அணையாமல் காப்பாற்ற வேண்டும். அந்த வகையில் அவருடைய முயற்சிகளுக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் சுப்ரபாதி மணியன்
நாமக்கல்நாதன் 75 ( நாமக்கல்நாதன் அவர்கள் திருப்பூர்வாசி. 40 நூல்கள் வெளியிட்டிருப்பவர். பல இலக்கிய விருதுகள் பெற்றவர்) * நாமக்கல்நாதன் படைப்புலகம் : கருத்தரங்கு * 02/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம் மங்கலம் சாலை, திருப்பூர் * உரையாளர்கள்: சுப்ரபாரதிமணியன்/ சாமக்கோடாங்கி ரவி அ. மு. ஜெகந்நாதன்/ வெ. செந்தில்குமார் வின்சென்ட் ராஜ்/ க.தங்கவேல் முத்துபாரதி/ தினேஷ்குமார் தலைமை: சி. சுப்ரமணியம் ( நிறுவனத்தலைவர், மக்கள் மாமன்றம்) முன்னிலை: சத்ருக்கன், ராஜா மற்றும் மக்கள் மாமன்ற நிர்வாகிகள் வருக.. * கனவு / திருப்பூர் மக்கள் மாமன்றம்