சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 14 நவம்பர், 2020
ஒரு எழுத்தாளரின் ஒரு வேண்டுகோள் சுப்ரபாரதிமணியன்
திருப்பூர் பாண்டியன் நகர் அறிவுத்திருக்கோவிலில் சமீபத்திய உடற்பயிற்சி மற்றும் அகத்தாய்வு முதல் நிலை பயிற்சிக்குச் சென்றேன்.
அவர்களின் வழக்கில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள் தெரியவில்லை. அகத்தாய்வில் தரும் விளக்கங்களில் –பவர் பாயின் பிரசண்டேசனில் -PPpஏகப்பட்ட ஏகப்பட்டத் தமிழ்ப்பிழைகள். கொஞ்சம் ஆங்கிலப்பிழைகள்.
அதில் இடம் பெறும் படங்களில் பெரும்பாலும் காணப்படும் முகங்கள் வடநாட்டுஅய்ரோப்பிய முகங்கள். இந்திய தமிழ்நாடு முகங்கள் வெகு சொற்பம்.
சில செயலுக்கானப் படங்கள் பொருத்தமாக இல்லை.
அறிவுத்திருக்கோவிலில் ஓரளவுக்கு விஞ்ஞான முறைகள் இருந்தன என்பது ஆறுதல். இறைத்தன்மை, சடங்குகளை என்பவற்றை நிராகரித்தே பயிற்சியில் இருந்தேன். இந்த விசயங்களை நிர்வாகிகளுக்குச் சொன்னேன். தலைமை அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன் . பலவற்றில் நல்ல தமிழ்ப்பிரயோகங்கள் இருந்தன.
இவ்வளவு கலப்பாய் தமிழைக்கண்டதால் அவதியுறும் மனநிலைக்கு ஆளானேன். அறிவுத்திருக்கோவில் ஒரு சர்வதேச நிறுவனம், அதன் பாட்த்திட்டங்களில் தமிழை வளர்க்கும் முயற்சிகள், பிழையில்லாமல் தமிழில் பாடங்கள் இருந்தால் நல்லது.
இவற்றைப் பரிசீலிக்கலாம் தாங்கள், ---------
- சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
கோவை பேராசிரியர் ரமணி அவர்கள் : சுப்ரபாரதிமணியன்
ஆங்கிலப்பேராசிரியர் . ஆனால் தமிழின் பழைய இலக்கியங்களில் , குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஆடியோ புத்தகங்கள் என்று இவற்றை வாசித்து பதிவு செய்து பல சாதனைனகளைச் செய்திருக்கிறார். அண்ணாவின் கதைகள் சமீபத்தில் கேட்டேன். அண்ணா, கலைஞர் வரை ஆங்கில மொழிபெயர்ப்புகள்,ஆடியோ புத்தகங்கள் அல்லது பதிவுகள் ஏராளம் செய்திருக்கிறார் .நல்ல முயற்சி. நவீன இலக்கியங்கள் அதிகம் தொடவில்லை .தொடுவார்.
இடையில் பேராசிரியர் பணி ..ஓய்வுக்குப் பின் விவசாயமும் செய்கிறார். விவசாய அனுபவத்தை பெருங்காய டப்பா பேராசிரியர் என்று அருமையாகக் கதை சொல்லியிருக்கிறார். நினைவுக்களஞ்சியமாய் விசயங்களைக் கொட்டுகிறார். மாடு , எருமை வாங்கப்போகிற அனுபவம், விவசாயக்கலப்பை அனுபவம் என்று கலவையாக வாழ்க்கை முழுவதும் வந்து விடுகிறது . இளைய தலைமுறையோடு உரையாடுகிற உத்தியும் சிறப்பு
அவரின் குரலில் சிவாஜிகணேசனின் கம்பீரத்தை எப்போதும் கண்டிருக்கிறேன். பல் போனாலும் சிங்கம் சிங்கம்தானே . அந்த கம்பீர்ம் குரலில் எப்போதும் குறைவதில்லை. சொல்லிலும் சொல்லும் விசயத்தில் இருக்கும் அக்கறையும் அப்படித்தான். சிங்கம்தான் , கொங்கு நாட்டுச் சிங்கம்
ரமணி பெருங்காய டப்பா அல்ல பெருங்காயத்தின் சர்வரோக நிவாரணி போல அவர். அதுவும் இந்த கொரானா தொற்று காலத்தில் நம் பாரம்பரிய உணவுகள் அது சார்ந்த சுவையூட்டிகளும் உடம்புக்கு நல்ல திடமும் எதிர்ப்புச்சக்தி தருவது போல் அவரின் தொடர்ந்த பணிகள் ஆரோக்யமானவை . 50 ஆண்டுகளுக்கு முன் அவர் திருப்பூரில் அரசு கலைக்கல்லூரியில் வேலை செய்யும் போது அப்போதே ஒரு புத்தகக்கடையை முக்கிய இடத்தில் வைத்து இன்னொரு சாதனை செய்தவர். அப்போது புத்தகக் கடையெல்லாம் அபூர்வம் நான் எம் எஸ்சி கணிதம் படித்த பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் . தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வயதை மீறி அதுவும் கொரானா காலத்தில் சோர்வு பெறாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களை ரொம்பவும் பிடிக்கிறது
ஆங்கில இலக்கியம், , மேட்டிட்மை என்று இல்லாமல் தழிழோடு அவர் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கிறார்
எழுத்தில், பேச்சில் வாழ்பவர் ரமணி என்ற மணியான மனிதர்.
விடுதலையை உரத்துப் பாடும் புதுமைக் கவிதைகள்
****
சுப்ரபாரதிமணியன் அவர்களின்
**
மாயாறு - இரு நெடுங்கவிதைகள் ; க.அம்சப்ரியா
****
சுப்ரபாரதிமணியன் என்கிற பெயர் ,நாவலாசிரியராக ,சிறுகதையாளராக ,கட்டுரையாளராகவே சட்டென்று நினைவிற்கு வரும். மந்திரச் சிமிழ் என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். வாழ்தலில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் நாவலாக ,சிறுகதையாக ,கட்டுரையாக வடித்துவிட இயலாது. கவிதையாக வெளிப்படுவதற்கென்றே சில அனுபவங்கள் காத்திருக்கின்றன. கவிதையாக உருமாறிய பின்தான் அந்த அனுபவங்கள் பூர்ணத்துவம் அடைகின்றன.
சுப்ரபாரதிமணியன் அவர்களின் அனுபவங்கள் ,கவிதைகளாக வெளிப்பட்டிருக்கிற சூழலிலும் கவிதைகளில் தெறிக்கிற சமூக அக்கறை ,புதுமையின் குரலாக வெளிப்படுகின்றது.
இரு நெடுங்கவிதைகள் என்கிற தனித்துவத்துடன் " மாயாறு" வெளிவந்துள்ளது.
அவர் அனுப்பி வைத்த " பிளிறல்"சிறுகதைத் தொகுப்பினைத்தான் முதலில் வாசித்து முடித்தேன். அதை முடித்த கையோடு கவிதைக்குள் நுழைந்தேன்.
கவிதைகள் முதலில் என்னை எழுது என்கிறது.
நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரே பொருள் குறித்த குறுங்கவிதைகளாக்க் கூட இருக்கலாமே..என்ற வினாவோடுதான் கவிதைகள் துவங்குகின்றன.
ஆதிவாசிக் கவிதைகளாக ,குறைந்தது மூன்று வரிகளிலிருந்து கவிதைகள் வெடித்துள்ளன. ஒவ்வொரு கவிதையும் ,வினாக்களை உருவாக்கும் விதமாக, கூறிய விடையை விசாரிப்பதாக ,பறிக்கப்பட்ட வாழ்வாதாரம், மக்களின் மீது செலுத்தப்படும் அதிகார அத்துமீறல், காட்டு விலங்குகளின் மீதான அக்கறை என்று கவிதைகள் விரிகிறது.
சொற்களின் கட்டமைப்பு; கவிதைகளில் எழுதப்படப் போகிற கருத்திற்கென்று தனியாக வலிந்து சொற்களைத் தேடாமல் ,புதிய சொற்களின் சேர்க்கை ,கவிதையின் இயல்பிற்கேற்று தன்னைத்தானே கட்டமைத்திருக்கிறது.
கவிதைக்குள் வினாக்கள் எழுகின்றன. யாரோவின் வினாக்களுக்கு விடையாகின்றன. சில கவிதைகள் பதிலைத் தேடுகின்றன. சில கவிதைகள் ,யாரிடம் விடைகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
" வெண்மையும் கறுப்பும்; சுற்றுச் சூழல் என்கிற தலைப்பில் அமைந்துள்ள கவிதைகள் இரண்டு வரிகளில் கூட சாட்டையைக் கையில் எடுக்கின்றன. இரண்டு வரிகள் கூட பேசுகின்றன.
இவரின் கவிதையுலகம் ,புறக்கணிப்பட்ட மரங்களை, வனத்தை, அங்கேயே பிறந்து மடியும் பழக்கவழங்கங்களை எடுத்துச் சொல்கின்றன.
மாயாறு - நெடுங்கவிதைகள் ,கவிதைகளில் மாறுபட்ட குரல்..கவிதைகளிலும் முத்திரை பதிக்கிறார் கவிஞர்.
வெளியீடு; கனவு, திருப்பூர்.
9486101003
****
சில கவிதைகள்
**"
1
**
குலதெய்வத்துக்குன்னு ஒரு இடம்
காலம் காலமா இருந்துச்சு
யார் யாரோ வந்து பங்களாகட்டி எல்லாம் அடச்சாச்சு
குலதெய்வம் கோவிலுக்கும் போக முடியில.
ஒத்தை ஆளு போறமாதிரி சின்ன எடமாச்சும் குடுங்க
எங்க குலதெய்வம் நடமாடறதுக்கு
நாங்க அவன் கிட்டே நடந்து போறதுக்கு
***
2
**
சிங்கம் பூனைக் குடும்பம்
சிறுத்தை பூனைக்குடும்பம் அதனதன் புத்தி அதுக்கு
கார்ப்பரேட் கம்பனிக என்ன குடும்பம்
**
3
**
ஒரு மரம் கல்லாக
பல ஆயிரம் வருடங்கள்
ஒரு மரம் விறகாக சில நொடிகள்
**
4
**
பிறகு ஒளி இருந்தது
அவர்களுக்கு
பிறகு = டாலர். அவர்கள்= யாவரும்
***
நூல் பார்வை ; க.அம்சப்ரியா
கொரானாவும் திருப்பூரும் : யுவராஜ் சம்பத் Rs 100 kanavu kanavu
திருப்பூரை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற பலதரப்பட்ட மனிதர்களுக்கும் , என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தி பாதிப்புகளைஏற்படுத்தியிருக்கிறது இந்தப் பாழும் நோய் என்பது பற்றியும் எழுதாமல் இந்த கட்டுரை முடியாது....
அவர்களிலிருந்து, ஒரு துறைக்கு ஒருவர் என்ற அளவு கூட ( அது மிகவும் அதிகமாக
இருக்கும் என்பதால் ) இல்லாமல் ஒரு சிலரை மட்டும் நேரில் கண்டு அல்லது
தொலைபேசியி உரையாடல் மூலம் அவருடைய கருத்துகளை கேட்டு அதையும் இங்கே
பகிர்ந்து கொள்வதுதான் ஒரு நடுநிலையாலனின் செயலாக இருக்கும் என்பதால் அதயும்
...
அவரவர் , அவர்களுடைய சொந்த ஊரில்,, என்னென்ன பொருள் உற்பத்தி
செய்கிறார்களோ, அந்த பொருட்களை, அங்கிருக்கும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து
வாங்கி, அதை எப்படியாவது , யாருக்காவது விற்று , வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்... ஆனால் இது எவ்வளவு நாளைக்கு என்று யாருக்கும் தெரியாது..
புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்ல , புலம்பெயர் நிர்வாகிகளும் அதயே
செய்துகொண்டிருக்கிறார்கள்..
இவர் பெயர் அர்ஜுனன் என்று வைத்துக்கொள்ளுங்கள்... திருப்பூரில் இறக்குமதி
செய்யப்பட்ட வெளிநாட்டு பனியன் துணி உற்பத்தி இயந்திரங்கள் இல்லாத காலத்தில்
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், மிகவும் சிக்கலான வடிவமைப்பை உருவாக்கக்கூடிய
இயந்திரத்தை இறக்குமதி செய்தார் ..அன்றைய காலகட்டத்தில் அதுதான் லேட்டஸ்ட் அதி
நவீனமானது.. ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் புதிதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்
என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் மனோபாவம் கொண்ட திருப்பூர் உள்நாட்டு
தயாரிப்பாளர்கள் அதை வெற்றிகரமாக பயன் படுத்த முடியாமல் , அவர் ஒரு பெரிய
நிறுவனத்திடம் சரணடைந்து அதனால் பல லட்சங்களை இழந்தவர்... அதற்க்கு பின்னர்
ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர்... ஆனால் இன்று 6 மாத காலமாக
ஊட்டி காய்கறி வியாபாரம் செய்கிறார்... மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது
மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள இயலாத தொழில்கள் இன்று காணாமல்
போய்விட்டது.. அடுத்து என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை யூகிக்க முடியாத ஒரு
தலைமுறை திருப்பூரில் இன்னமும் இருக்கிறது .. திருப்பூர் தொழிலதிபர்கள் தங்களுடைய
பார்வையை விசாலமாக்கி கொள்ளாதவரை, கொரோனாவுக்குப் பின்னரும், ஒரு
மிகப்பெரிய மாற்றத்தை ,அவர்களால் இந்த தொழிலுக்கு ஏற்படுத்தித் தர முடியாது
என்பதே நிதர்சனமான உண்மை...
இவர் பெயர் சிவசுப்பிரமணியம்.. covid-19 முன்னாள் இவர் திருப்பூரில் உள்ள பெரிய
ஏற்றுமதி நிறுவனத்தின் மிக முக்கிய பணியில் இருந்தவர் சொந்த ஊர் நீலகிரி ..இங்கு
வந்து தன்னோடு பணிபுரிந்த சக தோழியை மணந்து இன்று சொந்த வீட்டில் வாழ்ந்து
வருபவர்...மனைவி இல்லத்தரசியாக மட்டும் இல்லாமல் அவரும் பனியில் இருக்கிறார்..
அவரின் வாழ்வாதாரமும் இந்தக் கொடிய நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது...
தற்போது வாழ்வை நகர்த்த ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார்... அதிலென்ன ஆச்சரியம
என்கிறீர்களா??
அவர் வாங்கி விற்பது ஆடைகளை அல்ல.. ஊட்டி வர்க்கியை..
இந்தத் தோழியின் பெயர் கோமதி .. திண்டுக்கல்லிலிருந்து, பொறியியல் பட்டம் பெற்று
திருப்பூர் வந்து, ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார் .. இவரும் இவர் கணவரும்
தற்பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில், திண்டுக்கல் மதுரை சேலைகளை விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்.. குடும்பம் நடக்க வேண்டுமே சார் என்கிறார்கள்..
இவர் பெயர் நாகராஜன்... ஏற்றுமதியாளர்கள் துணிக்கு சாயமிடுகிற நிறுவனத்தில்
வேலை செய்கிறார்.. தற்பொழுது தன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வழி
சாயம் ஏற்றுதல் மூலமாக
கரூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நூலில் சாயம் ஏற்றி
கொடுக்கிறார்..,அவருக்கு மாற்றம் முன்னேற்றம்...
இவர் பெயர் ஸ்ரீராம்... திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் துணை ஒப்பந்தக்காரர் ஆக
இருக்கிறார்...
தற்போதைய சூழலில் முகக் கவசம் மட்டுமே செய்து , தன்னோடு இருக்கிற மூன்று
பணியாளர்களுக்கும் வேலை கொடுத்து , அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார்...
இன்னும் சிலர் காய்கறி வியாபாரிகள் ஆகவும், நிரந்தரமில்லாத தெருவோரக் கடையில் ,
பலதரப்பட்ட பொருட்களை விற்றும், இன்னும் சிலர் வீட்டு சமையல் முறையில் சமைத்து
பிரியாணி விற்பதையும் ,,இன்னும் சிலர் நிரந்தரமில்லாத எந்தெந்த தொழில்லெம்மாவோ
செய்து கொண்டிருக்கிறார்கள் ..
இவர்கள் அனைவரும் ஒரே ஒரு கருத்தை சொல்கிறார்கள்... அது இந்த ஊரின்
அபரிமிதமான வளர்ச்சியை நிலையானது என்று எல்லோரும் நம்பி விட்டோம்.. ஆனால்
இந்த ஒரு கொடிய நோய் எங்கள் எண்ணத்தை சிதைத்து விட்டது.. இனி இந்த ஊர்
முன்னிருந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பது சந்தேகமே.. ஆனாலும் எங்களுக்கு
உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை இந்த கொடிய நோய்
தந்துள்ளது... அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்..
பார்வையற்ற ஒருவரை வழிகாட்டுபவர் என்று நம்பியதும், பொறுப்பில் இருப்பவர்கள்
பொறுப்பில்லாமல் இருப்பதையும் இயற்கை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம்...
இது எல்லோருக்கும் பொருந்தும் தானே, தோழர்களே !!!!
வங்கிக் கடனும் தனி நபர் கடன்களும் மிக தாராளமாக கிடைத்து வந்த ஊரில்
தற்பொழுது பணத்தட்டுப்பாடு..
ரொட்டேசன் நின்னு போச்சு சார்..ஒரு தெருவோர புரோட்டா கடை முதலாளியின்
புலம்பல்...
இதனால் இந்த ஊரின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்ப்படும் என்பது கண்கூடு..
உழைப்பை நம்பியே உருவான ஊர் திருப்பூர்.... உழைப்பின் பெருமையை உலகிற்கு
உணர்த்திய ஊர் திருப்பூர்.... ஆனால் சமீப காலத்திய வளர்ச்சி உழைப்பை
பின்னுக்குத்தள்ளி வேறுவிதமான உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதனால்,
பாதிப்பு அதிகமாக இருக்கிறது... அந்த உத்திகள் தற்போது தோற்று விட்டன...
தொழில்கள் வேறு பல நாடுகளுக்கும் சென்று விட்டன.. எங்களுக்கு இந்த ஊரை விட்டு
அல்ல, இந்தியாவை விட்டே வெளிநாடுகளுக்கு சென்றால்தான், எங்களுக்கு ஏற்ற
வேலை கிடைக்கும் போல் தோன்றுகிறது... ஆகவே ஆபிரிக்க நாடுகளின் பக்கம் எங்கள்
பார்வை தற்பொழுது திரும்புகிறது.. பல மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை நாங்கள்
தொடர்புகொண்டு பேசி வருகிறோம் .
இது பொதுவான குரலாக இருக்கிறது... இதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு...
நூறு வருடங்களுக்கு முன்னரே பனியன் தொழிலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய
திருப்பூர் ,, எண்பதுகளில் மிக அதிகமான வளர்ச்சியை பெற்று, இந்தியாவையே , தன்னை
நோக்கி பார்க்க வைத்த திருப்பூர் , இன்றைக்கு மிகச்சிறிய நாடுகளான வியட்னாமோடு
கூட போட்டி போட முடியாத நிலைமையில் இருப்பதற்கு காரணம் என்ன ...( கொரானாவும் திருப்பூரும் -யுவராஜ் சம்பத் ரூ 100 )
யுவராஜ் சம்பத்..
சுப்ரபாரதிமணியன்----திருப்பூர்.
நவீன நாவல் இலக்கிய ஆய்வுகள் முனைவர் அனிதா பரமசிவம் நூல்
சாகித்ய அகாடமி சம்பந்தப்பட்ட இரண்டு சமீபத்திய நூல்கள் எனக்கு கவனத்திற்கு உரியதாக பட்டன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது -யுவ புரஸ்கார் விருது பெற்ற அனைத்து படைப்பாளிகளையும் அழைத்து இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி அந்த கருத்தரங்கில் இடம்பெற்ற படைப்பாளிகளின் அனுபவங்களையும் படைப்பாளிகள் பற்றிய வேறு எழுத்தாளர்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு தொகுப்பு நூல். புரஸ்கார் பரிசு பெற்ற படைப்பாளிகளை கொண்டாடுவது அதன் நோக்கமாக இருந்தது. அந்த கருத்தரங்கத் தொகுப்பு அந்த வகையில் ஒரு முக்கிய நூலாகமும் அமைந்திருந்தது .
அதேபோல சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல் களை எடுத்துக் கொண்டு அவற்றில் ஆய்வுசெய்த ஒருவரின் ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும்.இந்த இரண்டு நூல்களும் எனக்கு வழக்கமான பாதையில் இருந்து சற்றே விலகி புது வெளிச்சம் காட்டுபவையாக இருந்தன
முனைவர் அனிதா பரமசிவம் அவர்கள் சாகித்ய அகாடமி பெற்ற சில படைப்பாளிகளின் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்த முனைவர் பட்ட ஆய்வேடு அப்படியே புத்தகம் ஆக்காமல் படைப்பிலக்கிய பார்வையில் சற்று மாறுபாடு கொண்டு இந்த தொகுப்பு நூலை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண்மணி என்ற அளவில் உளவியல் சார்ந்த கருத்துக்களையும் பெண்ணிய பார்வைகளையும் இந்த புத்தகம் கொண்டிருப்பது முக்கியமா அம்சமாக இருக்கிறது.
சிறந்த ஆய்வுகள் நூல்களாக இந்த வகையில் மாற்றம் பெறுகிற போது அது இளம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் .
இந்த நூலில் அனிதா அவர்கள் ஆறு நாவல்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் அவற்றில் விளிம்புநிலை மக்களில் உள்ள தொழிலாளர்களுடைய சிக்கல்கள், பெண்களுடைய சிக்கல்கள் ,முதியோர் சிக்கல்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விலாவாரியாக ஆய்வு செய்திருக்கிறார், நாவல்கள் கட்டமைக்கும் சிக்கல்களை விடுவித்துக் கொண்டு அதற்கு சமூக காரணங்களையும் தேடி போய் இருக்கிறார் ,சராசரி மனிதர்களும் சமூகத்தில் எந்த முக்கியத்துவம் பெறாத மனிதர்களும் இந்த நாவல்களில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம் ,அந்த நாவல்களில் பெண்களின் வாழ்க்கை முறைகள், அவளின் சிரமங்கள் போன்றவை முக்கிய பார்வையாக கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆறு நாவல்களை மின் மாதிரியாகக்கொண்டே சமுதாயச் சிக்கல்களை சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார். தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி .,சா கந்தசாமி விசாரணை கமிஷன் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், திலகவதியின் கல்மரம், நீல பத்மநாபனின் இலை உதிர் காலம் ,டி செல்வராஜின் தோல் ஆகியவை இந்த ஆய்வில் முக்கிய நாவல்களாக இடம்பெற்றிருக்கின்றன ,
இதில் ஒரு நாவல் மட்டும் பெண் எழுத்தாளர் படைப்பாக இருக்கிறது அதன் காரணமாக அது சார்ந்த கூறுகளை சரியாகவே அனிதா அவர்கள் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார் .இதுவரை சாகித்ய அகாடமியில் பரிசு பெற்ற பெண்கள் மூவர். ராஜம் கிருஷ்ணன் லட்சுமி திலகவதி. ராஜம் கிருஷ்ணன் முற்போக்கு பார்வை கொண்டவராகவும் புரட்சிகரமான கண்ணோட்டத்தைக் கொண்டவராகவும் எழுதியிருக்கிறார். ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் படைப்புகளை முன் வைத்திருக்கிறார் .லட்சுமி மரபு சார்ந்த முறையில் வாழ்க்கையைப் வேணும் பெண்களைப் பற்றி தான் நிறைய எழுதியிருக்கிறார் .அப்படி பாரம்பரிய மரபு சார்ந்த விஷயங்கள் ஒரு குடும்பச் சூழலில் எப்படி அறம் சார்ந்த விழுமியங்களை நிலை நிறுத்துகின்றன என்பதை விளக்குகிறார். அப்படித்தான் இன்னொரு எழுத்தாளர் திலகவதி அவர்கள் .கல்மரம் நாவலில் வீடு கட்ட தொடங்கிய மனிதர்கள் முதல் வீடுகள் கட்டி முடிக்க போது அந்த மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கட்டிடங்களை உருவாக்கம் தொழிலாளர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார் .கல் மரத்தை உருவாக்க தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கல்மரம் என்றால் கட்டிடங்கள். நகரங்களில் இந்த கட்டிடங்களை அதிகம் காணலாம் .அப்படி நகர வாழ்க்கையில் இம்சை படும் பெண்களை பல எழுத்து சித்திரங்கள் மூலம் தந்திருக்கிற திலகவதி அவர்கள் இந்த நாவலில் கட்டிட தொழிலாளர்கள் பக்கத்தில் சிரமப்படுகிறார்கள்.அவர்கள் பற்றிய வாழ்நிலையை விளக்கியிருக்கிறார் பெண்கள் உட்கார நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பதும் அவர்களின் உடம்பில் ஈயம் பட்டு பட்டு ரத்தத்தில் கலந்து அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதும், ஒரு நாற்காலி போடுவதற்காக ஒரு பெண் போராடுவதும் ,,,அச்சகம் சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பெண்களுக்கான பிரச்சினை பற்றிய ஒரு முக்கிய நாவலாக கூட திலகவதி அவர்கள் எழுதியிருக்கிறார் ,
இந்த ஆய்வில் பெண்கள் கதாபாத்திரங்களின் சிறப்பையும் பெண்ணெழுத்துப் பார்வையில் அவர்களுடைய வகையில் இருக்கும் பார்த்து ரசித்து வழங்கும் கூரிய தீவிரவாத பார்வையிலேயே அறிந்தவர்களை விளக்கியிருக்கிறார்,
இதுபோன்ற ஆய்வுகள் புத்தக வடிவம் பெறும்போது இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் வாசகப் பரப்பை மேலும் குறிப்பிட்ட கவனம் பெறத் தக்க வகையில் சில பகுதிகளைக் கொண்டிருக்கிறது .அப்படி ஒரு நூல்தான் அனிதா பரமசிவம் அவர்களின் இந்த நூல்
விலை ரூபாய் 250 வசந்தா பதிப்பகம் சென்னை
ReplyReply allForward
Congraulations sithurai
மரயானை: சித்துராஜ் பொன்ராஜ் நாவல்
ஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி முகப்பில் குழந்தைகளுக்கான ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பவர், இந்த மூன்று பேரும் ஒரு பூ இதழின் அடிப்படை மடிப்புகளாக இந்நாவலில் இருக்கிறார்கள் .இவர்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான சிங்கப்பூரின்கள் வெவ்வேறு விதமாக இதில் பரிணமித்து ஒரு வனப்புமிக்க பூவை வடிவமைப்பது போல இந்த நாவல் அமைந்திருக்கிறது .
பல்வேறு கலாச்சாரமும் மொழித் தன்மையும் வாழ்வியல் சூழலும் கொண்ட இவர்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி சிங்கப்பூரின் ஓரளவு சரித்திரத்தையும் சிங்கப்பூரின் ஒரு முக்கியப் பகுதியான புக்கிட் பஞ்சாங் பகுதியைப் பற்றியும் விரிவாக சொல்லப்பட்ட ஒரு நாவல் என்று சொல்லலாம் .இதில் வருகிற சுகவனம் கல்வியாளர் ....ஒரு தலைமுறைக்கு உதாரணம். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் முதலாய் உயர்கல்வியை பெற்றுக்கொண்டவர். .இதனால் அவர் அமைப்புகளின் சேவகர் ...அமைப்புகளும் அவற்றின் விதிகளும் அவரை எளிதில் பயமுறுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. சுகவனம் போன்றவர்கள் அந்த சமூகத்தை சமூக ஒழுக்கம் என்று அழைப்பார்கள் .சோமசுந்தரம் சுகவனத்தின் பள்ளியில் ஒன்றாக படித்த கணேசனின் தந்தை .கணேசன் இப்போது தாய்லாந்தில் தலைமையகத்தை கொண்டிருக்கும் அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் கணினி கட்டமைப்பு பொறியாளராக வேலை செய்பவர் .பள்ளிகளுக்காக சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் நன்கொடைகள் வாங்கி தருவதில் சோமசுந்தரம் சாமர்த்தியசாலி. பல இந்துக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பில் பொறுப்புகளில் இருந்தவர். சுகவனம் ஒருநாள் யாருடையதோ இப்படி வாழ்வதற்கும் மிரட்டலுக்கும் பயந்து அந்த நகரம் தன்னை விழுங்கி செரித்து விடக்கூடும் என்று ஆழமான நம்பிக்கையில் இருப்பவர். பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது சுகவனத்திற்கு டைகர் என்ற ரகசிய பட்டப்பெயர் இருந்தது உண்மையிலேயே தன்னை புரியாத தான பல விஷயங்கள் ஆக்கி வைத்திருக்கின்றன என்று அவர் நினைப்பவர். அவர் பின்னால் இளைஞர்களால் தாக்கப்படுகிறார் அது அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது உங்களுக்குள்ளேயே காட்டிக் கொடுப்பதை விட மோசமான குற்றம் வேறு எதுவும் இல்லை என்று அவரும் நிற்கிறார் .அந்த அடிபட்ட தருணங்கள் அவருக்கு பல விடயங்களை கொண்டுவருகின்றன. இதற்கு முன்னால் சில தமிழ் இளைஞர்களை சீனர்கள் அடிப்பது பற்றிய குறிப்புகளும் நாவலில் உள்ளன . இவ்வகை வன்முறைகள் முதியோர்ர்க்கு சங்கடமளிப்பவை..சுகவனத்திற்கு வெளிநாடு என்பது மலேசியா தான் .ஆனால் அவரின் மனைவி ஜெயக்கொடி புற்று நோய் காரணமாக இறந்து விடுகிற போது சோமசுந்தரம் அவரை ராமேஸ்வரம் சென்று சடங்குகள் செய்து வருமாறு வலியுறுத்துகிறார். ஆனால் அவர் செல்ல விரும்பினாலும் தாமதமாகிக் கொண்டிருக்கிறசூழல். இந்த நிலையில் சீனக் கிழவர் தான் செய்கிற ஐஸ் விற்கும் தொழிலில் எப்படி தன்னை திருப்தி படுத்திக் கொள்கிறார். வாழ்க்கையின் சதுர விதிகளை மீறிச் சுயநிறைவு , மனநிறைவு கொள்கிறார் என்பதை சுகவனம் அறிகிறார். எளிய மனிதன் கற்றுக்கொடுக்கும் பாடம். அவரின் அன்பான உலகம் கண்டுணர்ந்து ராமேஸ்வரம் சென்று சடங்கு செய்யும் கட்டாயத்தை விலக்கி வைக்கிறார் .. சுகவனத்தின் மனைவி ஜெயக்கொடி பற்றிய முழுமையான சித்திரம் அருமையாக வரையப்பட்டிருக்கிறது. கண்கள் வழியாக அவர் உயிர் போயிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் .டாக்டர் வந்து கண்களை மூடினால் போதும் என்று கூட யோசித்து வைத்துக் கொண்டிருக்கிறார் சுகவனம் . வேட்டி கட்டுவதில் கூட அவர் சிரமப்படுகிறா.ர் புத்தக வாசிப்பில் அக்கறை உள்ளவராக ஜெயக்கொடி இருக்கிறார் .அதேபோல இசை சார்ந்தும் நாட்டியம் சார்ந்தும் அக்கறை கொள்பவராக இருக்கிறார். ஆனாலும் இசை கூடங்களில் பணத்தை செலவழித்தால் கதை கந்தலாகி விடுமென்று அவர் கருத வேண்டியிருக்கிறது. ஜெயக்கொடி நடனத்திற்கு போவதில் பல சிரமங்கள். சுகவனமும் ஒரு மாதிரி தடை விதிக்கிறார். அப்படி இல்லாமல் அவரை செல்ல அனுமதித்திருக்கலாம் என்ற குற்றவுணர்வு ஜெயக்கொடி இறந்தபின் சுவ்வனத்தின் இதயத்தில் குறுகுறுக்கிறது. சக்திவாய்ந்த மருந்துகளை கொடுத்து கொஞ்சம் வாழ அனுமதிக்கிற சூழலில் அவரின் புற்றுநோய் நான்காவது கட்டத்தை தாண்டி இருக்கிற காரணத்தினால் சுகவனம் ஜெயக்கொடியைத் துன்புறுத்த விரும்பவில்லை.
சிங்கப்பூர் என்ற மாபெரும் நாடு பற்றிய முழுமையான சரித்திர குறிப்புகளும் சூழலும் பல இடங்களில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன .அதுவும் சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த நாகர்கோவில் கடலூர் தமிழர்களால் கட்டப்பட்டது போன்ற விவரங்கள் முதல்கொண்டு பல விஷயங்கள் இந்த நாவலில் விரிவாக சொல்லப்படுகின்றன .ஊர்ஊராக சுற்றுலாத்தலமாகப் போய் வரலாம் என்பதை அவர் மனதில் பதிந்தாலும் அவர் வெளிநாடு எல்லாம் போகும் வாய்ப்பை அமைத்துக் கொள்ளாமல் சிங்கப்பூரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இருக்கிறார் .சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து இடம் பெயர்ந்து கதையும் சிங்கப்பூர் ராணுவப்படை உருவாக்கப்பட்டு சிங்கப்பூர் குடிமக்கள் எல்லோருக்கும் அது தேசிய சேவை கட்டாயம் ஆக்கப்படுவதும் அது சார்ந்த சில கதாபாத்திரங்களும் இந்த நாவலில் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றன, உடல்நிலை மிக சரியாக இருப்பவர்கள் பாவம் செய்யாதவர்கள் தேசிய சேவை நேரத்தில் அவர்கள் முகாமிலேயே கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ராணுவத்தில் நீ என்னவாக போகிறாய் என்ற கேள்வி அங்கு பலர் எழுப்பப்படுகிறது ,சமையல்காரன் ஓட்டுநர் எழுத்தர் என்று பலருடைய கனவுகள் அல்லது விருப்பங்கள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையையின் ஒரு வகைப் பரிமாணத்தை இந்த நாவல் சொல்கிறது.
யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள முடியாது குற்ற உணர்வுக்கு ராமேஸ்வரம் தான் பதில் சொல்லக்கூடும் என்பது கூட சுகவனத்தின் கற்பனைக்குள் இருக்கிறது .பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் கலாச்சார பாதிப்பு உள்ள மக்களும் என்று எந்த ஒரு நாட்டின் தன்மையை பல கதாபாத்திரங்கள் விளக்குகின்றன உதாரணத்திற்கு சுகவனத்தின் மகளான நீலா ஒரு நைஜீரிய கணவானை மணந்து கொள்கிறாள் ஆனால் அவனுடைய நிலையும் வேலையை தக்க வைத்துக் கொள்ளாத முடிவுகளும் அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றன .இதுபோல குடும்ப உறவை சார்ந்த பல கதாபாத்திரங்கள் சிங்கப்பூர் வாழ்க்கையின் பல கலாச்சார அம்சங்கள் சார்ந்த விஷயங்களை வெளிக்கொணர பயன்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் களமாக சிங்கப்பூரின் புகிட் பஞ்சங் பகுதி இடம்பெற்று ஒரு இமாலய தன்மையுடன் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ” ரயில் கம்பியைத் தாண்டிவிட்டால் முழு பக்கம் காடுதான் .பெரும் கம்பம் .அங்க வீடு வாங்கு .இல்லைனா குழந்தை பெத்துக்கமாடேன்னு சொல்வது சுத்த முட்டாள்தனம் ” என்று கூட கட்டாயங்கள் எழுகின்றன .அப்படி இருந்த இடம் ஒரு பெரும் நகரமாக பின்னால் மாறிவிடுகிறது. அந்த மாநிலத்தின், நகரத்தின் இயல்பு பற்றி விளக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது சிங்கப்பூரின் பிரதான புக்கிட் தீமா சாலையின் பகுதிகள் உட்பட பல மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கியது சிரமப்படுவது முதற்கொண்டு அந்த பகுதியின் தன்மை உருவாக்குவது நாவலில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது ,நிலவெளி பற்றிய விஸ்தாரண்மாக அது விரிந்திருக்கிறது .
சுகவனத்தின் உரையாடல்களும் நட்பும் அவருக்கு சில வழிகளை காட்டுகிற அந்த சீன கிழவனுக்கு போட்டியாக பேரனின் பள்ளிக்கூட முகப்பிலேயே ஐஸ்கிரீம் விற்க அவருக்கு ஆசை வருகிறது .அதற்கு முன் பேரனுடன் ஒரு தடவையாவது கால்பந்து விளையாடணும் என்று கூட சொல்லிக் கொள்கிறார் .நிலம் சார்ந்த அனுபவங்கள் ஒரு மனிதனை எப்படி நிர்ணயம் செய்கின்றன என்பதை பழைய புக்கிட் பஞ்சாங் பகுதியும் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளும் அவை சார்ந்த சரித்திர குறிப்புகளும் அவற்றுடன் தொடர்புடைய மனிதர்களின் முகங்களும் கதைகளும் சுகவனதுக்குள் இருக்கிற போது அதை சுமந்து கொண்டு தெரிகிறார் ,அது அவருக்கு சுகமாக இருக்கிறது
ஒருவகையில் ஒரு சிறுகதை ஆரம்பிக்கிற இடம், அதுவே முடிகிற இடம் என்று ஒரே களத்தை வைத்துக்கொண்டு இந்த நாவல் முன்னும் பின்னுமாக நகர்கிறது அல்லது ஒரு குறுநாவல் தன்மையில் ஆரம்பமும் முடிவும் நிலை பெறுகின்றன. ஆனால் இவற்றுக்கு 300 பக்க நாவலில் நாவல் தன்மையை கொண்டு வந்திருப்பது சித்தராஜின் சித்து விளையாட்டாக இருக்கிறது .ஒரு நாவல் என்பது பெரிய கால அளவை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையை எல்லாம் இந்த நாவல் தகர்த்து கால அளவை மீறி மனிதர்கள் பற்றிய சித்தரிப்புகளும் அவர்களின் வாழ்வை முழுமையாகத் தரிசனமாகக் கொண்டு வந்துவிட முடியும் என்பதை இந்த நாவலில் சித்துராஜ் நிரூபித்து இருக்கிறார்.
ஏதோ ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டு உணர்வுகளால் நிரப்பும் எழுத்தாளன் போட்ட முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் ஏதேதோ வித்தை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வித்தையில் கொஞ்சம் மகிழ்விக்கவும் வேண்டியிருக்கிறது. அந்த முடிச்சுகள் அவிழும் பருவங்களால் இந்நாவலின் நிலம் அமைந்திருக்கிறது. எழுத்தாளனுக்குள் அமிழ்ந்து கிடக்கும் மகிழ்ச்சி, இருட்டு சோகம் என்பதெல்லாம் பிரதிபலிக்கும் பிம்பங்களாக கதாப்பாத்திரங்கள் நடமாடுகின்றன பலரின் நிழல்களாக... இதிலும் நிழலும் இருட்டும் மனித வாழ்வின் சாரம்சங்களைக் கோடிட்டுப் போகிறது.
இதற்கு முந்தின இவரின் ” விளம்பர நீளத்தில் ஒரு மரணம் ”என்ற நாவலில் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார தன்மையை அடிப்படையாகக்கொண்ட மேல்தட்டு மக்களுடைய வாழ்க்கையை சொன்ன விதத்தில் சிக்கல்களும் சிடுக்கும் நவீனத்துவமும் என்று அமைந்திருந்தது .ஆனால் இந்த நாவலில் மிக எளிமையான கதைசொல்லல் மூலமாக வேறொரு இடத்தை சித்துராஜ் அடைந்திருக்கிறார் .இது திரும்பவும் . தொடர்ச்சியாகவும் எழுதி கை சுகம் காணக்கூடிய நாவலாசிரியரின் சிறப்பான இடமாக அமைந்திருக்கிறது
300 பக்கங்கள் ரூ .280 வம்சி வெளியீடு திருவண்ணாமலை
திருப்பூரில் தமிழன்னைக்குச் சிலை ..மக்கள் மாமன்றம் முயற்சி .
திருப்பூரில் பொதுவெளியில் திருவள்ளுவர் சிலை வைக்க பல ஆண்டுகள் முயற்சி செய்து திருப்பூர் மக்கள் மாமன்றம் வெற்றி கண்டது சமீபத்தில் . மக்கள் மாமன்றம் நூலக முகப்பில் அந்த சிலை அமைந்துள்ளது ( டைமண்ட் திரையரங்கு முகப்பில் உள்ளது நூலகம் )சமீபத்தில் மக்கள் மாமன்றம் 25 என்ற நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது
அடுத்து தமிழன்னைக்குச் சிலை வைக்க முயற்சி நடக்கிறது . அதற்கு உதவலாம் .
தொடர்புக்கு சி.சுப்ரமணீயன் , அமைப்புத் தலைவர், மக்கள் மாமன்றம் 93457 20140
SUBRABHARATHIMANIAN
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur Tirupur and Subrabharathimanian Palanaisamy : : blog: www.rpsubrabharathimanian.blogspot.com
கொன்றை வாழ்த்துக்கள் :
கொன்றை அறக்கட்டளையும் குமுதமும் இணைந்து நடத்திய சங்க இலக்கிய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சங்க இலக்கியம் தமிழர்களின் பொக்கிஷம் மட்டுமல்ல. உலகமே கொண்டாட வேண்டிய ஒன்று.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிந்தனைகள், கொண்டாடப்பட்ட மனித உணர்ச்சிகள், கவிதை நயங்கள் நமக்கு கிடைத்ததே போன நூற்றாண்டில்தான்.
ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும், கம்பருக்கும் படிக்கக் கிடைத்த இந்த சங்க இலக்கியம் பாரதிக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. உ. வே. சாவின் உழைப்பால் நமக்குக் கிடைத்தது.
உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
உங்கள் பரிசுப் பணம் முழுவதும், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே வங்கியில் இருப்புத் தொகையாக செலுத்தப்பட்டு விட்டது.
ஒரு பெரிய விழா எடுத்து பரிசுகளை வழங்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது.
தை மாதத்தில் இதை நடத்த இறைவன் அருள் புரியட்டும்.
கொன்றை அறக்கட்டளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)