சாகித்ய
அகாதமி கருத்தரங்கில் படித்தது>>
இடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும் : சுப்ரபாரதிமணீயன்
நானும் இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் )
செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும்.
வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும்.
ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “.
என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம் ” சுடுமணல் ”நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன்.
அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.
என் ” நீர்த்துளி “ நாவலில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு சம்பந்தமாக நீதிமன்றம் தந்த ஒரு தீர்ப்பை ஒட்டி சுமார் 700 சாயப்பட்டறைகள் மூடியபோது அந்த சாயப்பட்டறைகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியர் அல்லது சேர்ந்து வாழும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த பொருளாதார சிரமத்தினால் பெரும் அலைச்சலுக்குள்ளாக்குவது தங்களை வேறுபடுத்திக் கொள்வதும் என்றானது .அதை அந்த நாவலில் பதிவு செய்திருந்தேன்.
உலகமயமாக்களில் வியாபாரம் என்பது பொதுவாக விட்டது .உலகமே ஒரு சந்தை என்றாகிவிட்டது இந்த சூழலில் வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டிற்கு வரும் போதும் அல்லது அவரவர் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும் சாதாரணமாகிவிட்டது அப்படித்தான் வியாபாரம் பொருட்டு எண்பதுகளில் வடமாநிலத்தில் இருந்து முதலீடு செய்வதற்காக வட இந்தியர்கள், மார்வாடிகள் திருப்பூருக்கு வந்தார்கள் தங்களின் பொருளாதார முதலீடு காரணமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். பனியன் தொழிலில் வேரூன்றிய மரபான பல சாதி சார்ந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு பொருளாதாரரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள். இந்த அம்சங்களை நான் ” சாயத்திரை “ நாவலில் சொல்லியிருக்கிறேன். உலகமயமாக்கலில் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சூழல் சகஜமாகிவிட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நைஜீரியர்கள் திருப்பூருக்கு வந்து செல்கிறார்கள். திருப்பூருக்கு வந்து பனியன். பிற பின்னலாடைகளை எடுத்துச் செல்வது, வியாபாரம் செய்வது என்ற ரீதியில் சுற்றுலா விசாவில் வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இங்கிருக்கும் விடுதிகளில் தங்குவார்கள் சில நாட்கள் தங்கியிருந்து தங்கள் வியாபாரத்தை பார்த்து விட்டு செல்வார்கள் ,இவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல கூட ஆரம்பிக்கும்போது இவர்கள் விடுதிகளில் மட்டுமல்ல வாடகை வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார்கள்
,அதுவும் சாதாரண விளிம்புநிலை மக்கள் உள்ள பகுதிகளில் வீடு எடுத்து தங்கும் போது அந்த பகுதி இளம் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதும் அதிக வாடகை கொடுத்து உள்ளூர்காரர்கள் கவர்வதும் என்பதும் சாதாரணமாகிவிட்டது .இவர்களுடைய நடமாட்டமும் கலாச்சார பின்னணிகளும் உணவு பழக்கவழக்கங்களும் உள்ளூர் மக்களுக்கு பல வகைகளில் அதிர்ச்சியை தந்தன. இந்த அனுபவங்கள் பாரம்பரிய மதம் சாதி சார்ந்த உள்ளூர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை நகரின் மத்திய பகுதியில் இருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களுக்கு வீடு தரக்கூடாது என்ற கட்டாயங்கள் பலரை நகரைவிட்டு திருப்பூருக்கு அருகில் இருந்த பல கிராமங்களுக்கு இடம்பெயரச் செய்தது. அவர்களில் பலர் தமிழ் பெண்களையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .காதலித்து தமிழ் பெண்களை கவர்ந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய குணம் இயல்பில் இருந்த நல்ல விஷயங்களை தமிழ் பெண்கள் புரிந்து கொண்டு அவர்களை காதலித்திருக்கிறார்கள். காத்திருந்திருக்கிறார்கள் இந்த அம்சங்கள் உள்ளூர் கலாச்சாரத்தில் மிகுந்த பாதிப்புகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த பாதிப்புகளை நான் ” நைரா “ என்ற நாவலில் பதிவு செய்திருக்கிறேன்
.அதேபோல் தேனீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து சுமங்கலி திட்டம் என்ற வகையில் வேலை செய்யும் இளம் பெண்களின் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறேன்
,ஆரம்பத்தில் கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்து இதுபோல் இளம் பெண்கள் வேலைக்கு வந்தார்கள் பின்னர் இப்போது பீகார் ஒரிசா வங்காளம் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து கூட பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்துவந்திருக்கிறார்கள் திருப்பூருக்கு வந்திருக்கிற இடம் பெயர்ந்த மக்களின் தொகை சில லட்சங்களைத் தாண்டும்.. இந்தக் இடம்பெயர்வு பொருளாதாரரீதியாக அவர்கள் மனதில் வரவேற்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது அந்த மாநிலங்களில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு என்பதை மீறி சாதிய ரீதியாக அவர்கள் அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு இருப்பதை இன்னொரு முகமாய் காட்டுகிறது எனலாம் . என் முதல் நாவலில் இடம்பெயர்வு என்பது ஒரு வகையில் மாநில அரசுகளின் ஒரு தாக்கமாக இருந்தது .பின்னால் என் நாவலில் இடம் பெற்ற இடம்பெயர்ந்த மக்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தங்கள் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை இழந்து விவசாயம் போன்ற சிறு தொழில்களில் நிலைத்திருக்க முடியாமல் திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அடைக்கலமாகிறார்கள்
. இந்தத் தன்மையை காட்டியிருக்கின்றனஅந்நாவல்கள்.
மாலு நாவலில் சுற்றுலா விசாவில் மலேசியா செல்லும் தமிழர்கள் அங்கேயே தங்கி சட்டவிரோதமாக விடுதிகளில், தோட்டக்காடுகளில் வேலை செய்வதும் அங்கு அவர்களின் இடம் பெயர்பு அவர்களை அந்நியர்களாக்குவதையும் அனுபவமாக்கியிருக்கிறேன்
பேராசிரியர் ஆனந்தகுமார், தலைவர் , தமிழ்த்துறை ( காந்தி கிராம பல்கலைக் கழகம் திண்டுக்கல் மதுரை ) ்
அவர்களின் ஒரு குறிப்பை கீழே தந்துள்ளேன்
”
நைரா “ : திருப்பூரில் நைஜீரிரியர்களின் வருகையும் தாக்கமும் பற்றிப் பேசுகிறது . தமிழ் சமூக மாற்றம் எப்படி இருக்கிறது.உலகில் பல்வேறு மாறுதல்கள் எப்படி உள்ளன .தேசியம் கூட அர்த்தமில்லாமல் போவது எப்படி. சர்வதேசத்தில் குழும முதலாளித்துவம் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அவர் கூறுகிறார் .இன்றைக்கு திருப்பூர் யார் கையில் இருக்கிறது.பூர்வீகமாக பருத்தி, நெசவுத் தொழிலின் நகரமாக இருந்திருக்கிறது ,பிறகு விசைத்தறிக்கு மாறி பனியன் நகரமாகபரிணமித்து விட்டது. அந்த பனியப் நகரத்தில் தொண்ணூறுகளில் பல்வேறு வட இந்தியர்கள் வருகை வியாபாரத்திற்கு என்றுவந்தனர்.அது . முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது . 2000ம் ஆண்டில் தென் மாவட்ட மக்களும் பக்கத்தில் உள்ள மாநிலமக்களும் குறிப்பாய் கேரள மக்களும் அங்கு இடம் பெயர்ந்தனர் தொழிலுக்காக, அது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. பத்துஆண்டுகளுக்கு முன்னால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குடிபெயர ஆரம்பித்து இன்றை