சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 18 அக்டோபர், 2019

தகழியின் கயிறு  நாவல் திரைப்படவடிவில்.. ( பயணகம் ) :Bhayanakam
                           சுப்ரபாரதிமணியன்

தகழியின் கயிறு”  நாவலின் இரு அத்தியாயங்கள் மட்டுமே இதில் முழு நீளத் திரைப்படமாகியிருக்கிறது. இயக்கம் ஜெயராஜ். நவரசப்படங்கள் என்ற வகையில் அவர் எடுத்திருக்கும் ஆறாவது படம் இது. இது இந்தாண்டின் சிற்ந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
 இரண்டாம் உலக யுத்தthhத்தின் பின்னணியில் இதன் கதை இயங்குகிறது. ராணுவத்தில் பணி புரிந்து முடமானதால் தபால் காரர் பணி செய்யும் ஒருவரின் கிராமிய குட்டநாட்டுச்சூழலை இப்படம் விவரிக்கிறது. ராணுவத்தில் இருந்து வரும் பணத்தை  ஆவலுடன் வாங்கிக்கொள்ளும் மக்கள் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபின்பு அப்பகுதியைச் சார்ந்த  ராணுவ வீரர்களின்  மரணச் செய்தியைத் தாங்கி வரும் தந்திகளை விநியோகிக்கும்போது  கிராம மனிதர்களின் அதிர்ச்சியும் மனநிலையும் பெறுவதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரின் இரு மகன்கள் பாதுகாப்பாகவே இருப்பர் என்ற நம்பிக்கையை அவர் மனைவி சொல்லிக்கொண்டே யிருக்கிறாள். ஆனால் அவர்களின் மரண செய்தியைத் தாங்கியத் தந்திகளை தபால்காரர் சொல்லாமல் மறைத்து வைத்து வேதனையை தனதாக்கிக்கொள்கிறார்.
கேரள குட்டநாட்டு கிராமப்பகுதிகளில்  ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் படலத்தின்  போதே தபால் காரரின் முணுமுணுப்பு ஆரம்பிக்கிறது. ராணுவ வாழ்க்கை தந்த கசப்பு அவரில் மிகுந்து கிடக்கிறது. விவசாயம் விட்டும், வீட்டிற்குப் பயந்து பலர்  ராணுவத்தில் சேருகிறார்கள். பலருக்கு வறுமை சூழல். முதல் மலையாளப்படம் மாடர்ன் தியேட்டர்சால் தயாரிக்கப்பட்டு பாலன் என்ற பெயரில் வெளியாகிறது. பட்டம் விட்டு பொழுதைக்கழிக்கும் குழந்தைகளுக்கு திரைப்படச்செய்திகள் சுவாரஸ்யம் தருகின்றன.தபால்காரரை அன்போடு பார்ப்பவர்கள்  தந்தி கொண்டு வருகிற அவரை பின்னால் மோசமான சகுனமாக்கி விலகி ஓடுகிறார்கள். சாதாரணத் தந்தி வந்தால் கூட அழுகிறார்கள். மழைக்கு தபால்காரர் ஒதுங்கினாலும் தந்தி வந்து விட்டதே என்று அழுகிறார்கள். ஒரு திருமண நாளில் ஒரு குடும்பத்திற்கு  வரும் தந்தியை அவர் மறைப்பது போல் அவரின் இரு மகன்களின் மரணம் பற்றிய தந்தியையும் மறைக்கிறார். மனைவி கோவில் சென்று மகன்களின் பாதுகாப்பிற்கு வழிபாடு செய்து பால்பாயாசம்  செய்து  ஆறுதல் கொள்கிறாள் .மகன்களின் மரணத் தந்திகளை காகிதக் கப்பலாக்கி  ஆற்றில் விட்டு மறைக்கிறார், இரண்டாம் உலக் யுத்தத்தில் குட்ட நாட்டுப்பகுதியின் 600 ராணுவவீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தைற்காக  மரணித்திருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்தம் அன்றைய உலக மக்கள் தொகையில்  3 சதம் பேரை காவு வாங்கியிருக்கிறது. ஒரு லட்சம் பேர் இந்தியாவில் ராணுவப்பணியில்  மரணமடைந்திருக்கிறார்கள். குட்டநாட்டின் எப்போதும் மழை பொழியும் சூழல், இயறகை வளங்களை முழுப்பூரணமாக ஜெயராஜ் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.ஜெயராஜ் முன்பு கயிறு நாவலின் ஒரு சிறுபகுதியை எடுத்து ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். தலித் சிறுவன் ஒருவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள பிணைப்பைப் பற்றியது அந்தக்குறும்படம். கயிறு நாவலை மலையாள திரைப்பட மேதைகள் ஒரு நாள் முழு நீள்ப்படமாக்கி விடுவர். பொன்னியின் செல்வன் கூட தமிழில் அவ்வகையில் நம்மை வந்துச் சேராது. கயிறு நாவல் 1984ல் ஞானபீடப்பரிசு பெற்ற படைப்பாகும்.
அந்நாவல் பற்றி தகழியே சொல்கிறார்:
 'கயிறு நீண்டதொரு காலகட்டத்தின் வரலாறு குட்டநாடு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வந்த கதை. என்னுடைய பார்வையில் தேசத்தின் வரலாறு என்பது மனிதன் எப்படி மண்ணுடன் உறவுகொண்டு வாழ்ந்தான் என்பதுதான். இந்த நாவலின் படைப்பில் கதை சொல்ல நான் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறது. மகாபாரதத்தின் கதை நிகழ்ச்சிதான் எனக்குத் தூண்டுதலாக அமைந்தது. அத்துடன் என்னுடைய கிராமத்திற்கே உபரிய கதை சொல்லும் சம்பிரதாயங்களும உண்டு. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இநத நாவலின் சுருக்கப் பதிப்பை வெளியிடத் தீர்மானித்தபோது அது வெற்றி பெறுமா என்று நான் சந்தேகப்பட்டேன், காரணம, சுருக்கி எழுத முடிவதான ஒரு நாவல் அல்ல இது. அதை விரிவுபடுத்தி எழுதவும் முடியாது. அதற்கென்று தனித்ததோர் உருவமைப்பு உண்டு. அந்த உருவமைப்பின் போககில்தான நாவல் முன்னோக்கிச் செல்கிறது.. கயிறு நாவலிலிருந்து ஒரு சுயசரிதை நாவலை எழுதியது போலிருக்கிறது. – ( தகழி சிவசங்கரப்பிள்ளை )