சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 23 அக்டோபர், 2019

கே.சுப்பராயன்(பாரளுமன்ற உறுப்பினர்  “ திருப்பூர் -100 “
            திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. விடி நைட் என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
                             “ தீதும் நன்றும் நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன.
                       இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி

தங்களன்புள்ள
கே.சுப்பராயன்
(பாரளுமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
Rs 100 திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு.

திருப்பூர் -100 “--திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு

 திருப்பூருக்கு இது நூறாவது ஆண்டு. இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன . கடந்த ஆண்டுகளில் திருப்பூரைப்பற்றி –கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம், தொழிலாளர்களின் பிரச்சினைகள், இலக்கிய கலாச்சார நிகழ்வுகள் பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியவற்றில் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு  இந்நூலாக வெளிவந்துள்ளது.  இதை தமிழ்நாடு கலை இலக்க்கியப்பெருமன்றம், திருப்பூர் மாவட்டம் வெளியிட்டுள்ளது.
ஒரு எழுத்தாளரின் பார்வையில் பொருளாதார அம்சஙகளை மீறி அங்கு வசிக்கும் மனிதர்களின் வாழ்வும் மானுடம் தழுவிய எண்ணங்களும் மேலோங்கியிருப்பதை இத்தொகுப்பு காட்டுகிறது.எழுத்தாளனின் எண்ணமெல்லாம் சகமனிதனின் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். சுதந்திர உலகில் பொருளாதாரம் மீறிய செய்ல்பாடுகளால் அவன் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஆசை மேலிடுகிறது. வெகு நெருக்கமாக உணரும் பல பிரச்சினைகளை வெளிக்காட்டியிருக்கிறார். இடம்பெயர்ந்து வந்த அகதி நிலையிலான தொழிலாளர்கள் முதல் கார்ப்பரேட்டுகளின் நோக்கங்கள் வரை பல தலைப்புகள் உலக மயமாதலில் சிக்கி இருக்கும் நகரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சியால் உடம்பின் ஒரு பாகம் மட்டுமே வீங்கியமாதிரி இருக்கும் நிலையையும் மறுபுறம் இலக்கிய கலாச்சார நடவடிக்கைகள்  பற்றிய அக்கறையையும் இந்நூல் சொல்கிறது. இந்நூலின் முன்னுரை தந்திருருக்கும்      கே.சுப்பராயன் ( முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மாநிலத் துணைச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ) அவர்களின் கீழ்க்கண்ட கருத்து மணிமகுடமாக விளங்கிகிறது.
        திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன. அதிகாலை முதல் இரவு வரை ஜனசந்தடி”  நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. விடி நைட் என்று விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக     திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.                              “ தீதும் நன்றும் நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டது திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள். கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி விட்டன. இவற்றிற்கானக் காரணங்கள் கண்டுணரப்படவேண்டும்
( Rs 100 திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு )
- சா. கலைச்செல்வி



சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொள்ள இரு படங்கள் : சுப்ரபாரதிமணியன்

1. புதிய கிரகம் காட்டும்  இன்டர்ஸ்டெல்லர் :திரைப்படம்
உலகம் சூடாகிக் கொண்டிருப்பது பருவநிலை மாற்றங்களால் வசிக்க இயலாத இடம் ஆகிக்கொண்டு இருக்கிறது .மனிதன் வாழத் தகுதியான வேறு கிரகத்தை கண்டு பிடிக்கும் முயற்சி  அவ்வப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது .
சுற்றுச்சூழல் கேடால் சாயம் தோல் பதனிடுதல் அணுசக்தி வீச்சு விவரங்களை மனதில் கொண்டு ஊட்டி கொடைக்கானல் கேரளா என்று பணக்காரர்கள் வீடுகள் தோட்டங்கள் வாங்கிப் போட்டு தப்பித்துக் கொள்வது போலத்தான் இந்த பூமி வாழத் தகுதியில்லாததாக இருக்கிறது என்கிற போது வேறு கிரகத்தைத் தேடிப் போவதும் .
ஜோசப்  காப்பர் நாசாவில் வேலை செய்தவர். அவரின் படுக்கையறையில் பல அசாதாரண மாற்றங்களைச் செய்து  கொள்வது அதிர்ச்சி தருகிறது.  ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் மனிதன் வாழ இடம் தேடும் முயற்சியில்  ஒருவகையில் வெற்றி பெறுகிறார் .அதில் 12 பேர் பயணம் செய்து அதை அங்கீகரிக்கிறார்கள் . புது கிரகத்தில் ஒரு மணி நேரம் என்பது பூமியின் ஏழு  ஆண்டுகள் இந்த ஆராய்ச்சியில் 23 ஆண்டுகள்  பூமியில் கடந்து போய்விடுகிறது. பலருக்கு வயதாகி ஆர்வம் இல்லாமல் போகிறது . வார்ட் ஹோல், பிளாக் கோள்,   ஐந்தாம் பரிமாணம் விண்வெளி நேரம் போன்ற இயற்பியல் கோட்பாடுகள் தரும்  முரண்கள்  காரணமாக வேக மயக்கம் தவிர்க்க முடியாதது ஆகிறது இந்த வேறுபாட்டைக் கடந்து புது  கிரகம் உருவாகிறது
இதில்  விண்வெளி கலங்கள் பழுதாகி சிரமம் தருவது இன்னொரு வகைப் படமாக விரிந்திருக்கிறது
..இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மனிதர் வாழும் பூமியை லாயக்கற்றதாக்க  பல பயிர்கள் , மனிதர்களின் தொந்தரவான நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
இந்த சமயத்தில் கிராவிட்டி என்ற படமும் ஞாபகம் வருகிறது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராதவிதமாக விண்வெளிக் கழிவுகள் ஏற்படுத்திய விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்து விடுகிறது . இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவை பழுதடைந்து விடுகின்றன.  சாண்ரா புல்லட் என்பவர் தவிர மற்ற அனைவரும் இறந்து விடுகின்றனர் .சார்க் க்லூனி என்ற பெண்மணி உலகைக் காப்பாற்றும் பொருட்டு தன்னை விடுவித்துக்கொண்டு விண்வெளியில் பின் தொடர்பின்றி செல்கிறார் இறுதியில் சாண்ட்ரா புல்லட் தற்கொலை முயற்சிக் முயன்று  பின்னர் கடினப் போராட்டத்திற்கு பிறகு பூமிக்குத் திரும்புகிறார் .வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள பூமிக்கு தான் வர வேண்டி இருக்கிறது அவர்களுக்கு.
   பூமி பாதுகாப்பான இடம் தான் இதைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொள்ள வைக்கும்
2. வெள்ளத்திற்கு முன் :ஆவணப்படம் 
சென்னை என்றால் வெள்ளத்திற்கு பின்புதான் பேச வேண்டி இருக்கிறது அபரிமித வெள்ளத்திற்கு முன் நிகழும்  எச்சரிக்கைகள் என்று பலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள் இதெல்லாம் அபாயம். இது மீறினால் அபரிதமாக வெள்ளம் புயல் என்று ஆருடம் சொல்வார்கள் .
அமெரிக்காவைச் சார்ந்த இயக்குனர் அப்படி ஒரு பிரளய  காலத்திற்கு முன் உலகம் எப்படி இருக்கிறது என்று சொல்ல மூன்றாண்டுகள் சிரமப்பட்டு இத்தலைப்பில் ஒரு படமெடுத்திருக்கிறார் இயக்குனர் பிஷ்சர் ஸ்ட்வன்ஸ்..
 மூன்றாண்டுகளுக்கு முன் ஐக்கிய நாட்டு சபை பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ  டிகாப்ரியாவை அமைதித் தூதுவராக உலக அமைதி குறித்து சில விஷயங்களைப் பரப்பச் சொன்னார்கள் அவர் அந்த படத்தில் பல இடங்களுக்கு போகிறார்.  பலரைச் சந்திக்கிறார் அதுவே இப்படமாக  விரிந்திருக்கிறது
இந்த தூதுவர் பதவியை பெற சில முன் தகுதிகள் உள்ளன .உலகம் வெப்பமாவது குறித்து  லெவந்த் ஹவர்  என்றொரு படம் எடுத்திருக்கிறார்.  10 ஆண்டுகளுக்கு முன் பூமிநாளில்  அவர் சுற்றுச்சூழல் சார்ந்து  ஆற்றிய உரையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 டிகாப்ரியோ உலகின் பல பகுதிகளுக்கு இந்த ஆவணப்படம் பொருட்டு செல்கிறார் வட இந்தியாவிற்கு வந்து போகும் பெண்களை பார்க்கிறார் சாணி மராட்டியர் பொருளாகி புகையாகும் வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார் பெண்கள் குடும்பத்தில் தூண்களாக இருப்பதையும் தெரிந்து கொள்கிறார் பிரதேசத்திற்கு சென்று பணிபுரிய நதியாய்ப் பெருக்கெடுப்பது பற்றி பேசி தெரிந்து கொள்கிறார் கனடாவில் எண்ணை,  மணல் பாகங்களைத் தெரிந்து கொள்கிறார் சுமத்ரா காடுகளில் நடக்கும் சம்பவங்களில் இருந்து உற்பத்தியாகும் பாமாயில் குறைந்த விலைக்குத் தரப்படும் ரகசியம் பற்றி தெரிந்து கொள்கிறார் பல்வேறு நாடுகளில் நுகர்வு கலாசார அம்சங்கள் உலகை சூடாக்கி வருவதை கண்டு கொள்கிறார் இதைப்பற்றி சிலருடன் பேசி விவாதித்து பல விஷயங்களை தெரிந்து கொள்கிறார் மனிதன் வாழ்வில் உண்டாயிருக்கும் உலகைச் சூடு பற்றி தெரிந்து கொண்டு உரையாற்றுகிறார் தன் குழந்தை வயது நினைவுகளுடன் சூழல் மற்றும் பற்றுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் .இவர் பயணங்களில் விஞ்ஞானிகளைச் சந்தித்து தன் கவலையை தெரிவிக்கிறார் அவர்களும் இப்படியே போனால் பெரும் கவலை கொள்ள வேண்டும் என்கிறார்கள் சகல துறைகளிலும் சகலவிதமான ஆளுமைகளைச் சந்திக்கிறார் அமெரிக்கா ஒபாமா சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நாராயண் உள்பட ஜல்லிக்கட்டு எரிமலையின் உச்சம் என்று கமலஹாசன் சொல்லும்போது அதற்கான அர்த்தம் கிடைக்கிறது டிகாப்ரியோ சூடு பெரும் கேடு என்று மெல்லியக் குரலில் அமெரிக்காவின் சூப்பர் ஸ்டார் சொல்லும்போது இன்னும் உண்மை தெளிவு பெறுகிறது வெகுஜன தளத்தில்.


வெள்ளி, 18 அக்டோபர், 2019

தகழியின் கயிறு  நாவல் திரைப்படவடிவில்.. ( பயணகம் ) :Bhayanakam
                           சுப்ரபாரதிமணியன்

தகழியின் கயிறு”  நாவலின் இரு அத்தியாயங்கள் மட்டுமே இதில் முழு நீளத் திரைப்படமாகியிருக்கிறது. இயக்கம் ஜெயராஜ். நவரசப்படங்கள் என்ற வகையில் அவர் எடுத்திருக்கும் ஆறாவது படம் இது. இது இந்தாண்டின் சிற்ந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
 இரண்டாம் உலக யுத்தthhத்தின் பின்னணியில் இதன் கதை இயங்குகிறது. ராணுவத்தில் பணி புரிந்து முடமானதால் தபால் காரர் பணி செய்யும் ஒருவரின் கிராமிய குட்டநாட்டுச்சூழலை இப்படம் விவரிக்கிறது. ராணுவத்தில் இருந்து வரும் பணத்தை  ஆவலுடன் வாங்கிக்கொள்ளும் மக்கள் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபின்பு அப்பகுதியைச் சார்ந்த  ராணுவ வீரர்களின்  மரணச் செய்தியைத் தாங்கி வரும் தந்திகளை விநியோகிக்கும்போது  கிராம மனிதர்களின் அதிர்ச்சியும் மனநிலையும் பெறுவதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரின் இரு மகன்கள் பாதுகாப்பாகவே இருப்பர் என்ற நம்பிக்கையை அவர் மனைவி சொல்லிக்கொண்டே யிருக்கிறாள். ஆனால் அவர்களின் மரண செய்தியைத் தாங்கியத் தந்திகளை தபால்காரர் சொல்லாமல் மறைத்து வைத்து வேதனையை தனதாக்கிக்கொள்கிறார்.
கேரள குட்டநாட்டு கிராமப்பகுதிகளில்  ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் படலத்தின்  போதே தபால் காரரின் முணுமுணுப்பு ஆரம்பிக்கிறது. ராணுவ வாழ்க்கை தந்த கசப்பு அவரில் மிகுந்து கிடக்கிறது. விவசாயம் விட்டும், வீட்டிற்குப் பயந்து பலர்  ராணுவத்தில் சேருகிறார்கள். பலருக்கு வறுமை சூழல். முதல் மலையாளப்படம் மாடர்ன் தியேட்டர்சால் தயாரிக்கப்பட்டு பாலன் என்ற பெயரில் வெளியாகிறது. பட்டம் விட்டு பொழுதைக்கழிக்கும் குழந்தைகளுக்கு திரைப்படச்செய்திகள் சுவாரஸ்யம் தருகின்றன.தபால்காரரை அன்போடு பார்ப்பவர்கள்  தந்தி கொண்டு வருகிற அவரை பின்னால் மோசமான சகுனமாக்கி விலகி ஓடுகிறார்கள். சாதாரணத் தந்தி வந்தால் கூட அழுகிறார்கள். மழைக்கு தபால்காரர் ஒதுங்கினாலும் தந்தி வந்து விட்டதே என்று அழுகிறார்கள். ஒரு திருமண நாளில் ஒரு குடும்பத்திற்கு  வரும் தந்தியை அவர் மறைப்பது போல் அவரின் இரு மகன்களின் மரணம் பற்றிய தந்தியையும் மறைக்கிறார். மனைவி கோவில் சென்று மகன்களின் பாதுகாப்பிற்கு வழிபாடு செய்து பால்பாயாசம்  செய்து  ஆறுதல் கொள்கிறாள் .மகன்களின் மரணத் தந்திகளை காகிதக் கப்பலாக்கி  ஆற்றில் விட்டு மறைக்கிறார், இரண்டாம் உலக் யுத்தத்தில் குட்ட நாட்டுப்பகுதியின் 600 ராணுவவீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தைற்காக  மரணித்திருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்தம் அன்றைய உலக மக்கள் தொகையில்  3 சதம் பேரை காவு வாங்கியிருக்கிறது. ஒரு லட்சம் பேர் இந்தியாவில் ராணுவப்பணியில்  மரணமடைந்திருக்கிறார்கள். குட்டநாட்டின் எப்போதும் மழை பொழியும் சூழல், இயறகை வளங்களை முழுப்பூரணமாக ஜெயராஜ் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.ஜெயராஜ் முன்பு கயிறு நாவலின் ஒரு சிறுபகுதியை எடுத்து ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். தலித் சிறுவன் ஒருவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள பிணைப்பைப் பற்றியது அந்தக்குறும்படம். கயிறு நாவலை மலையாள திரைப்பட மேதைகள் ஒரு நாள் முழு நீள்ப்படமாக்கி விடுவர். பொன்னியின் செல்வன் கூட தமிழில் அவ்வகையில் நம்மை வந்துச் சேராது. கயிறு நாவல் 1984ல் ஞானபீடப்பரிசு பெற்ற படைப்பாகும்.
அந்நாவல் பற்றி தகழியே சொல்கிறார்:
 'கயிறு நீண்டதொரு காலகட்டத்தின் வரலாறு குட்டநாடு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வந்த கதை. என்னுடைய பார்வையில் தேசத்தின் வரலாறு என்பது மனிதன் எப்படி மண்ணுடன் உறவுகொண்டு வாழ்ந்தான் என்பதுதான். இந்த நாவலின் படைப்பில் கதை சொல்ல நான் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறது. மகாபாரதத்தின் கதை நிகழ்ச்சிதான் எனக்குத் தூண்டுதலாக அமைந்தது. அத்துடன் என்னுடைய கிராமத்திற்கே உபரிய கதை சொல்லும் சம்பிரதாயங்களும உண்டு. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இநத நாவலின் சுருக்கப் பதிப்பை வெளியிடத் தீர்மானித்தபோது அது வெற்றி பெறுமா என்று நான் சந்தேகப்பட்டேன், காரணம, சுருக்கி எழுத முடிவதான ஒரு நாவல் அல்ல இது. அதை விரிவுபடுத்தி எழுதவும் முடியாது. அதற்கென்று தனித்ததோர் உருவமைப்பு உண்டு. அந்த உருவமைப்பின் போககில்தான நாவல் முன்னோக்கிச் செல்கிறது.. கயிறு நாவலிலிருந்து ஒரு சுயசரிதை நாவலை எழுதியது போலிருக்கிறது. – ( தகழி சிவசங்கரப்பிள்ளை )

தகழியின் கயிறு  நாவல் திரைப்படவடிவில்.. ( பயணகம் ) :Bhayanakam
                           சுப்ரபாரதிமணியன்

தகழியின் கயிறு”  நாவலின் இரு அத்தியாயங்கள் மட்டுமே இதில் முழு நீளத் திரைப்படமாகியிருக்கிறது. இயக்கம் ஜெயராஜ். நவரசப்படங்கள் என்ற வகையில் அவர் எடுத்திருக்கும் ஆறாவது படம் இது. இது இந்தாண்டின் சிற்ந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
 இரண்டாம் உலக யுத்தthhத்தின் பின்னணியில் இதன் கதை இயங்குகிறது. ராணுவத்தில் பணி புரிந்து முடமானதால் தபால் காரர் பணி செய்யும் ஒருவரின் கிராமிய குட்டநாட்டுச்சூழலை இப்படம் விவரிக்கிறது. ராணுவத்தில் இருந்து வரும் பணத்தை  ஆவலுடன் வாங்கிக்கொள்ளும் மக்கள் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபின்பு அப்பகுதியைச் சார்ந்த  ராணுவ வீரர்களின்  மரணச் செய்தியைத் தாங்கி வரும் தந்திகளை விநியோகிக்கும்போது  கிராம மனிதர்களின் அதிர்ச்சியும் மனநிலையும் பெறுவதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவரின் இரு மகன்கள் பாதுகாப்பாகவே இருப்பர் என்ற நம்பிக்கையை அவர் மனைவி சொல்லிக்கொண்டே யிருக்கிறாள். ஆனால் அவர்களின் மரண செய்தியைத் தாங்கியத் தந்திகளை தபால்காரர் சொல்லாமல் மறைத்து வைத்து வேதனையை தனதாக்கிக்கொள்கிறார்.
கேரள குட்டநாட்டு கிராமப்பகுதிகளில்  ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் படலத்தின்  போதே தபால் காரரின் முணுமுணுப்பு ஆரம்பிக்கிறது. ராணுவ வாழ்க்கை தந்த கசப்பு அவரில் மிகுந்து கிடக்கிறது. விவசாயம் விட்டும், வீட்டிற்குப் பயந்து பலர்  ராணுவத்தில் சேருகிறார்கள். பலருக்கு வறுமை சூழல். முதல் மலையாளப்படம் மாடர்ன் தியேட்டர்சால் தயாரிக்கப்பட்டு பாலன் என்ற பெயரில் வெளியாகிறது. பட்டம் விட்டு பொழுதைக்கழிக்கும் குழந்தைகளுக்கு திரைப்படச்செய்திகள் சுவாரஸ்யம் தருகின்றன.தபால்காரரை அன்போடு பார்ப்பவர்கள்  தந்தி கொண்டு வருகிற அவரை பின்னால் மோசமான சகுனமாக்கி விலகி ஓடுகிறார்கள். சாதாரணத் தந்தி வந்தால் கூட அழுகிறார்கள். மழைக்கு தபால்காரர் ஒதுங்கினாலும் தந்தி வந்து விட்டதே என்று அழுகிறார்கள். ஒரு திருமண நாளில் ஒரு குடும்பத்திற்கு  வரும் தந்தியை அவர் மறைப்பது போல் அவரின் இரு மகன்களின் மரணம் பற்றிய தந்தியையும் மறைக்கிறார். மனைவி கோவில் சென்று மகன்களின் பாதுகாப்பிற்கு வழிபாடு செய்து பால்பாயாசம்  செய்து  ஆறுதல் கொள்கிறாள் .மகன்களின் மரணத் தந்திகளை காகிதக் கப்பலாக்கி  ஆற்றில் விட்டு மறைக்கிறார், இரண்டாம் உலக் யுத்தத்தில் குட்ட நாட்டுப்பகுதியின் 600 ராணுவவீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தைற்காக  மரணித்திருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்தம் அன்றைய உலக மக்கள் தொகையில்  3 சதம் பேரை காவு வாங்கியிருக்கிறது. ஒரு லட்சம் பேர் இந்தியாவில் ராணுவப்பணியில்  மரணமடைந்திருக்கிறார்கள். குட்டநாட்டின் எப்போதும் மழை பொழியும் சூழல், இயறகை வளங்களை முழுப்பூரணமாக ஜெயராஜ் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.ஜெயராஜ் முன்பு கயிறு நாவலின் ஒரு சிறுபகுதியை எடுத்து ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். தலித் சிறுவன் ஒருவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள பிணைப்பைப் பற்றியது அந்தக்குறும்படம். கயிறு நாவலை மலையாள திரைப்பட மேதைகள் ஒரு நாள் முழு நீள்ப்படமாக்கி விடுவர். பொன்னியின் செல்வன் கூட தமிழில் அவ்வகையில் நம்மை வந்துச் சேராது. கயிறு நாவல் 1984ல் ஞானபீடப்பரிசு பெற்ற படைப்பாகும்.
அந்நாவல் பற்றி தகழியே சொல்கிறார்:
 'கயிறு நீண்டதொரு காலகட்டத்தின் வரலாறு குட்டநாடு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வந்த கதை. என்னுடைய பார்வையில் தேசத்தின் வரலாறு என்பது மனிதன் எப்படி மண்ணுடன் உறவுகொண்டு வாழ்ந்தான் என்பதுதான். இந்த நாவலின் படைப்பில் கதை சொல்ல நான் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறது. மகாபாரதத்தின் கதை நிகழ்ச்சிதான் எனக்குத் தூண்டுதலாக அமைந்தது. அத்துடன் என்னுடைய கிராமத்திற்கே உபரிய கதை சொல்லும் சம்பிரதாயங்களும உண்டு. நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இநத நாவலின் சுருக்கப் பதிப்பை வெளியிடத் தீர்மானித்தபோது அது வெற்றி பெறுமா என்று நான் சந்தேகப்பட்டேன், காரணம, சுருக்கி எழுத முடிவதான ஒரு நாவல் அல்ல இது. அதை விரிவுபடுத்தி எழுதவும் முடியாது. அதற்கென்று தனித்ததோர் உருவமைப்பு உண்டு. அந்த உருவமைப்பின் போககில்தான நாவல் முன்னோக்கிச் செல்கிறது.. கயிறு நாவலிலிருந்து ஒரு சுயசரிதை நாவலை எழுதியது போலிருக்கிறது. – ( தகழி சிவசங்கரப்பிள்ளை )

தடை செய்யப்பட்ட பலூன்கள்
 சுப்ரபாரதிமணியன் : சிறுகதை

வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன அந்த இரண்டு பலூன்கள். நீலநிற பலூன் வானத்தின் நீல நிறத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. சிவப்பு பலூன் நான் தனியாளாக்கும் என்று சொல்வது போல் ஆகாசத்தில் நின்றது. பப்லு வானம் பார்த்தபடி இருந்தாள்.நடந்து கொண்டே வானம் பார்ப்பது ஒரு சாகசம் என்பது போல் அம்மா எப்போதும் அவளைத் திட்டுவாள். சட்டெனக் காதுகளை அதிர வைத்த மோட்டார் பைக் சப்தம் அவள் உடம்பை உலுக்கியது.

கிரிஜா அவளை இறுக  அணைத்துக் கொண்ட போது பப்லுவின் தலை அவளின் உடம்போடு சேர்ந்துகொண்டது. அவளின் கைகளிலிருந்த பலூன்களின் இணைப்பு நூல்கள் கைகளிலிருந்து விடுபட்டு பலூன்கள் காற்றில் தவழ்ந்தன.. மோட்டர் பைக் சப்தம் கிரிஜாவின் உடம்பை ஊடுருவதாக இருந்தது. அது இரண்டு பைக்குகளின் இயக்கச் சப்தமாக இருந்தது.புர்புர் என்ற சப்தம் ஓங்காரமிட்டு சேர்ந்து அலைந்தது. 
    அந்தக்குறுக்குச் சந்திலிருந்து அந்த பைக்குகள் வந்திருக்க வேண்டும். நஞ்சப்பா வீதி முக்கு அடைவதற்கு அய்நூறு மீட்டர்களாவது இருக்கும். அதற்கப்புறம் கொஞ்சம் நடமாட்டம் இருக்கும். ஆளற்ற அந்த குறுக்குச் சந்து அவளை நுழைகையிலேயே பயமுறுத்திக் கொண்டிருந்தது.பயப்பட்டது போலவே ஏதோ நிகழ்ப்போவது மாதிரி  புர்புர் சப்தம் வேறு வந்து விட்டது.பைக்குகள் அவர்களைச் சுற்றிக்கொண்டிருந்தன. கிண்டலா, விளையாட்டா,  ஏதாவது பறிக்கும் கும்பலா .. அதிர்ச்சியாக இருந்த்து அவளுக்கு.

            மாலை நேர ஓய்வென்று வெளியே வந்திருந்தார்கள் அவர்கள்.டவுன் ஹால் பொருட்காட்சியில் மணல் சிற்பங்கள் பப்லுவுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. பாட்டி கண்கொட்டாமல் அதைப்பார்த்துக் கொண்டிருந்தாள். சுனாமியில் செத்துப்போனவர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களின் உருவங்கள் மணலின் சூடாய் அவர்களின் உடம்பில் இறங்கின. டவுன்ஹால் எப்போதும் தனியிடமாக நின்று கொண்டிருக்கும். அங்கிருந்து பேருந்து பிடிக்க நஞ்சப்பா சாலையை கடந்தாக வேண்டும்.

பைக்குகள் அவர்களைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.புர்புர் சப்தம் உச்சத்தில் இருந்தது. பப்லுவின் அலறலும் உச்சத்திலிருந்தது.பாட்டி”  கிரிஜா அப்போதுதான் இடது புறம் பார்த்தாள். அவள் அம்மா அழுகையான முகத்துடன் தாறுமாறாய் உடம்பை அசைத்தபடி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
மூன்று பேராய் சேர்ந்து ஒன்றாய் கட்டிக் கொண்ட மாதிரிதான் இருந்தது. ஒன்றாய் இணைந்து கொண்டார்கள். காற்று புகாதபடி இறுக்கிக் கொணடார்கள்.புர்புர் சப்தத்தைத் சகித்துக் கொள்ளாதவர்கள் போல் அவர்களின் முகங்கள் இறுகியிருந்தன.புர்புர் என்று மோட்டர்பைக்குகள் அவர்களைச் சுற்றி சுற்றி வந்தன. அவற்றை அசுரவேகத்தில் ஏறத்தாழ வட்டமாய் ஓட்டிய அவர்களின் தலை மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டால் குண்டுச் சட்டியாகியிருந்தது.
மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி உடம்புகளைக் குறுக்கிக் கொண்டனர்.  பப்லுவின் வீறிடல் மட்டும் உச்சத்தில் இருந்து கொண்டே இருந்தது. இரு பக்கமும் மனிதர்கள் அற்றதாக் கறுப்புத் தார்ச் சாலை விரிந்து கிடந்தது. இந்த மாலை நேரத்தில் மனிதர்கள் எங்கே போய் விட்டார்கள். ஏதோ துயர நிகழ்ச்சி  நடக்க ஒத்திகையை வேடிக்கை பார்க்க ஒளிந்து கொண்டிருக்கிறார்களா. மூன்று பைக்குகள், அவர்கள் மூன்று பேர். அவளுள் தவிப்பு உடம்பை தடுமாறச் செய்தது. இன்னும் சீக்கிரம் உடம்பு நடுங்க ஆரம்பித்ஹ்டு விடும் போலிருந்தது. 
     பப்லுவின் காதுகளில் இன்னொரு பைக் சப்தம் போல் ஏதோ விழ ஆரம்பித்தது.   அதன் தனி உறுமல் சட்டென நின்றிருந்தபோது கண்களைத் திறந்தாள்.

வந்தவனின் சட்டை நீலமும் சிவப்பும் கலந்த கோடுகள் நிரம்பியதாக இருந்தது. அது பப்லுவின்  கண்களில் பளிச்சென்று பட்டது. அவன் விரைசலாய் வந்து பைக்கில் உட்கார்ந்தபடி அவர்களருகில் நின்றான்.எதிரிலிருந்த அந்த மூன்று பைக்காரர்களைப் பார்த்தான்.ஏய்.. ஏய்ய் என்று பரபரப்பாய் குரல் எழுப்பினான். அதில் எரிச்சல் மிகுந்திருந்தது. கைகளை பரபரப்பாய் வீசிய போது பைக்குகள் சுற்றடிக்கும் வட்டம் நீண்டு சற்றே பெரிதானது. பைக்காரர்கள் தங்கள் வட்டப்பாதையை விரிவாக்கிக் கொண்டது போல் சற்றே விலகியபடி வண்டிகளை ஓட்டினர். ப்பலுவின் குரல் சற்றே ஓய்ந்து அவளின் பார்வை வந்தவனின் மேல் நிலைத்தது.
“ பயப்படாதீங்க “ சொல்லியபடி அவன் கைகளைத் தாறுமாறாய் வீசினான். அவன் உடல் பரபரத்து எல்லா  திசைகளிலும் சுழன்றாடியது. அந்த மூன்று பைக்காரர்களின் வட்டம் சற்றே விரிவடைந்திருந்தாலும் பைக்குகளின் ஓட்டம் இன்னும் இருந்து கொண்டே இருந்தது. வந்தவன் சட்டையை விறுவிறுவென்று கழட்டினான்.கறுப்பு பேண்ட்டும், வெள்ளை பனியனுமாக அவன் உடல் மீண்டும் கழற்றிய சட்டையுடன் சுழன்றாடியது. நீல சிவப்பு கலந்தசட்டையை அவன் அசைத்த்து  கொடியை கைகளில் வைத்து சுழற்றுவது போலிருந்தது பப்லுவுக்கு.
     மூன்று பைக்காரர்களின் வட்டம் மெல்ல விரிவடைந்தது. வட்டப்பாதையிலிருந்து அவர்களின் இயக்கம் சிதைந்து பைக்களின் உறுமல் சப்தம் குறைய ஆரம்பித்தது. சட்டையை சுழற்றியவன் ஒரு பைக்காரனை துரத்தியபடி ஓடினான். இன்னுமொரு பைக்காரன் விரைந்து ராயபுரம் பக்கம் அதிவிரைவாய் மறைந்து போயிருந்தான்.
    அவனின் சட்டை சுழன்று மீதமிருந்த பைக்காரனின் தலை ஹெல்மெட்டினைத் தாக்கியது. அடுத்த சுழற்சி அவனின் உடம்பின் மீது பட்டது. பைக்பின்னால் துரத்தி சென்றவனின் சட்டை வீச்சு இன்னுமொருமுறை  அவன் உடம்பைத் தாக்கியது.அவன் நிலை தடுமாறுவது தெரிந்தது.ஒரு பைக்காரன் கீழே விழ ஆயத்தமானான்.
அவன் வசத்திலிருந்து பைக் நழுவி கிரிச்சிட்ட சப்தத்துடன் நஞ்சப்பா பள்ளி சுவற்றில் மோதி உடம்பைப் பரத்திக் கொண்டு கிடக்க வைத்தது. பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தவனின் உடம்பும் தாறுமாறாய் சுவற்றில் பட்டு அவனின் அலறல் சப்தத்துடன் தூரப்போய் விழுந்தது. விழுந்தவனின் கழுத்தைச்சுற்றி நீலசிவப்பு கோடு சட்டை பாம்பாய்  சுற்றியிருந்தது.பப்லுவும் அவள் அம்மாவும் பாட்டியும் அதைப் பார்த்தவாறே தங்களின் பிடியை மெல்ல நழுவ விட்டனர். அவர்களின் கண்கள் பள்ளி சுவற்றோரம் கிடந்தவனின் உடம்பைக் கூர்ந்து நோக்கின. அவனின் உடம்பிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.

    சட்டையில்லாமல் மேல் பனியனோடு  இருந்தவன் விழுந்து கிடந்த  பைக்காரனின் உடம்புப் பக்கம் போய் நின்று உடம்பைக் குனிய வைத்து மூக்கருகில் வலது கையை வைத்தான்.அவனின் பைக் தூரத்தில் அனாதையாக நின்றிருந்தது.


     *  அந்த சிறைச்சாலை முகப்பு ரொம்ப நேரம் பப்லுவைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது.உள்ளே வந்து உட்கார்ந்த பின்னும் எதிரில் இருந்த கம்பி வேலியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். பப்லு இன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை போட்டிருந்தாள். அம்மா அவள் விடுமுறை போடுவதை அவ்வளவாய் விரும்பமாட்டாள். இன்றைக்கு  கட்டாயப்படுத்தி  விடுமுறை போடச்சொல்லியிருந்தாள். :
 “ நாம அந்த அங்கிளைப் பாக்கப் போறம்
“ அந்த  அங்கிள்தா
“எந்த அங்கிள் “
“ அன்னிக்கு .. “
“ அன்னிக்கு பைக்காரனோட சண்டை போட்டாரே அவரா.
“ அவர்தா..
“ எதுக்கு ஜெயிலுக்கு அவர் வந்தார்
  இவர்கள் மூவரையும் காப்பாற்ற, அல்லது பைக்க்காரர்களின் துன்பத்திலிருந்து         காப்பாற்றச் சட்டையை கழற்றிச் சுழற்றியபோது ஒரு பைக்காரன் நிலைகுலைந்து  விழுந்து இறந்து போனான்.  வழக்கு நீதிமன்றத்துக்கும்  சிறைச்சாலைக்குமாக நீண்டு விட்டது.
“ நீலமும் சிவப்பும் கலந்த கட்டங்கள் போட்ட சர்ட்காரர்’ “
“ ஆமாம் “
“ எங்க போறம்
“ஜெயிலுக்கு..
      கம்பித்தடுப்பிற்கு அந்தப்புறம் வந்து நின்றவனை உடனே அடையாளம் கண்டு கொண்டாள். “ அய்.. நீல சிவப்பு சட்டைக்காரர்
“ அங்கிள் “
“ ஆமா. நீல சிவப்பு சட்டைக்கார  அங்கிள் “
     பப்லு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் . முகத்தில் கறுப்பு தாடி அப்பியிருந்தது. கன்னங்கள் ஒடுங்கியிருந்தன. அம்மாவும் பாட்டியும்  எதுவும் பேச இல்லாதவர்கள் போல நின்றிருந்தார்கள். அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். இளைத்துப் போயிருந்தான்.
ஞாபகம் வந்திருச்சு அங்கிள் உங்களை. அன்னிக்கு நீலமும். சிவப்பும்ன்னு ரெண்டு பலூன் வாங்கியிருந்தேன். ரொம்ப நேரம் ஒண்ணும் அதுகள வெச்சுட்டு வெளையாட முடியலே. ரெண்டும்  பைக்காரங்க பண்ணுன சண்டையிலே கையிலிருந்து நழுவிருச்சு.. இன்னிக்கும் அதே மாதிரி நீலமும் சிவப்பும் ரெண்டு பலூன் வாங்கிட்டுதா வந்தேன். ஜெயில் வாசல்லியே புடுங்கிட்டாங்க “
அம்மாவும் பாட்டியும் பப்லுவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தனர்.
“ ஜெயில்லெ பலூன் வெச்சுக்கக் கூடாதா’ அங்கிள் “
அவர்கள் எதுவும் பேச முடியாதவர்கள் போல் மீண்டும் பப்லுவைப் பார்த்தார்கள்.
“ நீலத்துக்கும், சிவப்புக்கும் ஆகாதுன்னு ஏதாச்சிம் இருக்கா  அங்கிள் “
( சுப்ரபாரதிமணியன்.,           8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602.                9486101003 ) www.rpsubrabharathimanian.blogspot.com
Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602
094861 01003/ subrabharathi@gmail.com. www.rpsubrabharathimanian.blogspot.com