சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 14 நவம்பர், 2018

பெருங்கூட்டத்தில்  தொலைந்தவனின்  தனிமை : நாகாவின் கவிதை நூல்..
--சுப்ரபாரதிமணீயன்

வானொலியில் மேஸ்ட்ராலிஜி “ நிகழ்ச்சியில் எழுத்தாளர்களின் சந்திப்புக்கென்று பெயர் வாங்கியவர் நாகா. அவரின் இக்கவிதைத் தொகுப்பு முழுக்க நாஸ்டாலாஜியா “  கவிதைகளால் நிரம்பியிருக்கிறது. எல்லாக்கவிதைகளிலும் நினைவுகள் சார்ந்த அனுபவங்கள் அந்த அனுபவங்களை இன்றைய வாழ்வியல், விஞ்ஞானம், வளர்ச்சி, மாறுதலோடு பொருத்திப் பார்க்கும் ஏக்கமான முத்தாய்ப்பு வரிகள் அல்லது முத்துக்குளித்து எடுத்த முத்துக்கள்  என்று வடிவமைத்திருக்கிறார். அத்தனையும் முத்தான அனுபவங்கள்., சொந்த அனுபவங்களை மட்டுமில்லாமல் பிறரின் அனுபவங்களை தன் அனுபவங்கள் போல் வரித்துக் கொண்டு எழுதுகிறவனே நிறைய எழுத முடியும், விசாலப் பரப்பைச் சென்றடைய முடியும்.அது நாகாவிடம் சாத்தியமாயிருக்கிறது. எல்லாவகைக் களங்களிலும் இவ்வகை அனுபவங்கள் நாகாவுக்கு வாயத்திருக்குமா என்ற   சந்தேகம் எனக்கு வந்த போது சிறுகதைத் தன்மையைக் கொண்டுவர அவர் எடுத்துக் கொள்ளும் அனுபவங்கள் கற்றதும் பெற்றதுமாக இருப்பது மகிழ்ச்சி தந்தது.. நதிகள் பற்றியக் கவிதைகள் குறிப்பாக எங்களூர் நொய்யல் பற்றியக் கவிதையைப் படித்த போது இந்த ஆச்சர்யம் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நொய்யல் பற்றிய கவிதையில் அவரின் கேட்டறிந்த அனுபவம் அந்தக்கவிதைக்குள் ஊடாடியிருப்பது தெரிந்தது.. மகிழ்ந்தேன்.  இவ்வகையில் நிறையப் படைப்புகளை சவால் தன்மையுடன் நாகாவால் தொடர்ந்து தருவதற்கான வாசல்களை இக்கவிதைகள் எனக்குச் சொல்லின. இந்நூலின் முன்னுரையில் சீ.அஞ்சுகம் மேற்கோள் காட்டும் நீண்ட பட்டியலான வரிகளை நானும் ஆமோதித்து திரும்பச் சொல்ல விழைகிறேன். தனிமையை நிராகரிக்கும் மனம் கொண்ட அனுபவங்கள் இக்கவிதைகள். பெரும்பாலும் அதிக மக்கள் திரளைச் சென்றடையும் வானொலி, சின்னத்திரை,திரைப்பட, சமூக ஊடங்களில் பணிபுரிகிறவர்கள்  குறைந்த வாசகர்களைக் கொண்ட புத்தக முயற்சிகள், படைப்பாக்க முயற்சிகளில் அதிக் அக்கறை காட்டமாட்டார்கள். ஆனால்  துபாய் வானொலியில் பணிபுரியும் நாகாவின் தொடர்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் அவரின் மூலவேர் படைப்பிலக்கியத்தளத்தில் ஆழமாய் சென்றிருப்பதைக் காட்டுகிறது.அதைத்தொடர்ந்து படைப்பிலக்கியமுயற்சிகளில் வெளிப்படுத்தி வருகிறார்.

( ரூ 100, டிஸ்கவ்ரி புக் பேலஸ் சென்னை வெளியீடு   )