சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 14 நவம்பர், 2018

ஓரிதழ்ப்பூ : அய்யனார் விஸ்வநாத் நாவல் : சுப்ரபாரதிமணியன்
நான் திருப்பத்தூரில் மத்திய அரசின் பணியில் இருந்த போது அருகிலிருக்கும் திருவண்ணாமலைக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். . பவா செல்லத்துரை, கருணாவின் குழு கலை இரவுகளில் வெற்றி நடை போட்ட பெருமிதமான காலம் அது..என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தார் ஜெயமோகன், அவர் வசித்த் ஊர்களில் எந்த வசீகரமும் இல்லாத ஊர் என்று திருப்பத்தூரைக்குறிப்பிடுவார். ஆனாலும் எனக்கும் அவருக்கும் மிகுந்த வசீகரங்களையும் கொண்ட ஊராக திருவண்ணாமலை இருந்திருக்கிறது. அவரின் மிகச்சிறந்த்த் தொகுப்புகளில் ஒன்றான திசைகள் தேடி .. அங்கு அப்படியான ஒரு கலை இரவில்தான் வெளியிடப்பட்டது. திருவண்ணாமலையை உள்வாங்கும் போது  அந்த ஊர் சார்ந்த அனுபவங்களை இந்த எழுத்தாளர்கள் எழுதாமல் இருக்கிறார்களே என்று  நினைப்பதுண்டு. ஆட்டோக்காரன் அனுபவங்களை எழுதிய பீனிக்ஸ் போன்றோரும் மறைந்து விட்டனர். ஜெயகாந்தனின் நண்பரும் திருப்பத்தூரைச்சார்ந்தவருமான  பி.சா. குப்புசாமி அவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியிருக்கும் பல ஊர்கள், ஜவ்வாது மலைப்பகுதி கிராமங்களில்  ஆசிரியப் பணி செய்த அனுபவங்களை  எழுதியிருக்கிறார். அது திருவண்ணாமலை சார்ந்த மக்களின் வாழ்வியலில் ஒருபகுதிதான். அந்த ஊரில் பிறந்து வளர்ந்து துபாயை வாழ்விடமாகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் திருவண்ணாமலை ஊர் சார்ந்த மக்களின் அனுபவங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். 20 வெள்ளைக்காரர்கள் என்றத் தொகுப்பில் அந்த அம்சங்களைக் காணலாம். திருவண்ணாமலை பற்றிய ட்ரிலாஜியின் இரண்டாவது நூல் இந்நாவல்.அகத்தியமாமுனியின் நடமாட்டம் பற்றிய ஆரம்ப அத்தியாயங்கள் தரும் சுவாரஸ்யம்  நாவலை கடவுளும் கந்தசாமிபிள்ளையும் போல் கற்பனைக்கச் செய்கிறது . ஆனால் அவரோ மனம் நிலை பிறழ்ந்தவராகவே இருக்கிறார். இது போல் தினசரி வாழ்க்கையில் கூரிய பற்களால் சிதைந்து போகிற பல தரப்பட்ட , பல வயதினரான மனிதர்களை இந்நாவலில் அறிமுக்ப்படுத்துகிறார்.சாமியார்களின் உலகம்., சோதிடர்களின் வாழ்வியல், பூக்கட்டும் பெண்களின் இயல்பு என்று நாவல் விரிகிரது.  எல்லாரும் மன நிலை பிறழ்வின் எல்லையில் இருப்பவர்கள், அமைந்த வாழ்க்கையின் திருப்தி இன்மையை உணர்ந்து கொண்டேயிருப்பவர்கள்.. அந்த பல் சக்கரங்களின் பிடியிலிருந்து விடுபட முடிபவர்கள் . சிலருக்குத் தெளிவு கிடைக்கிறது. சிலர் அப்படியே இருப்பதில் சுகம் காண முடியாவிட்டாலும் அப்படியே இருப்பதைச் சகித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்களை அந்த ஊர சார்ந்த ஆன்மீக அனுபவங்களால்,  சொந்த வாழ்க்கை தரும் தீர்வுகளால் தெளிவாகிக் கொள்கிறார்கள்.பாலியல் உணர்வுகள் பெரும்பான்யோரை அலைக்கழிப்பதை கலவியின் இன்ப உச்ச வரிகளிலேயே விளக்கிகிறார். அவரின் மொழி நவீனத்துவ அனுபவங்களோடு   இணைந்தது பலமாக இருக்கிறது. பெருங்கூட்டத்தில்  தொலைந்தவனின் தனிமை  என்று துபாய் வாழ் நாகா அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்பொன்று இருக்கிறது. அய்யனாரின் மனிதர்கள் பெருங்கூட்டத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் வாழ்வியலாக விரிந்திருக்கிறது. பெரும்பான்மையோரின் சமூகவியல் சார்ந்த விடயங்கள்  தவிர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை இன்னும் விரிந்து அவரின் படைப்புகளில் வ்சீகரமும் தீவிரமும் காட்டும்

  ( ரூ150.  கிழக்குப் பதிப்பகம் , சென்னை  )