சுப்ரபாரதிமணியன் படைப்புகள்
சுப்ரபாரதிமணியன் படைப்புகள்
கருத்தரங்கம் காந்தி கிராமப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்லில் 27/2/18 நடைபெற்றது.
துவக்க
உரை : டி.செல்வராஜ் (சாகிதய் அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ); நெசவாளர்
சமூகத்தைப் பற்றி தமிழின் முதல் முற்போக்கு நாவல் தொமுசி ரகுநாதனின் பஞ்சும்
பசியும், அதன் பின் எம் வி வெங்கட்ராமின் நாவல்கள் இடம்பெற்றுள்ளன.
சுப்ரபாரதிமணியனின் தறிநாடா, சப்பரம் போன்ற நாவல்களில் நெசவாளர் சமூகத்தைப் பற்றி நுணுக்கமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய
உலகமயமாக்கல்,மத வாத சூழலில் அவரின் படைப்புகள் சாதாரண மக்களின் துயரங்களை
சரியாகச் சொல்கிறது.
சுப்ரபாரதிமணியன் நாவல்கள் பற்றி உரை : முருகேசபாண்டியன்: சமூகப்
போராளியாக அவரின் 15 நாவல்கள் இன்றைய சூழலின் விமர்சன்ங்களாக வெளிப்பட்டுள்ளன, சமகாலப்பிரதிபலிப்பு, உலகமயமாக்கலின் நாசம் , விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை
என்று வெவ்வேறு தளப் பரிமாணங்களில் கலைத்தன்மையுடன் எழுதி வெற்றி கண்டிருக்கிறார்.இவரின்
குரல் கார்ப்பரேட் உலகின் வன்முறைக்கு எதிரான முக்கியமான குரல்.
சிறுகதைகள் பற்றி உரை :, சு.வேணு கோபால் ,
250 சிறுகதைகளுக்கு மேல்
எழுதியிருக்கும். பலவகை அனுபவங்கள், பெண்களின் இயல்புகள், பிரச்சினைகள்.
சுற்றுச்சூழல், சாதாரண மக்களின் இயல்புகள், நிலத்தோடு தொடர்புடைய அனுபவங்கள்.,
மனிதர்களின் தன் வெறுப்பு, வன்மம் என்று விரிவான தளங்களில் உளவியலோடு ஊடாடி
இருக்கிறார். அவரின் சில சிறந்த சிறுகதைகள்:
ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும்,
மிச்சம், எதிப்பதியம், கை குலுக்க சில சந்தர்ப்பங்கள்,விமோசம், வாக்கு.., தொலைந்து
போனக் கோப்புகள்......
சுற்றுச்சூழல் படைப்புகள் பற்றி ஓசை
காளிதாஸ்; உணர்வுகளை மையமாகக் கொண்ட சுப்ரபாரதிமணீயனின்
படைப்பிலக்கியங்கள் தாண்டி 10 சுற்றுச்சூழல் கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.அவை
அறிவு சார்ந்த பல கேள்விகளை முன் வைப்பவை அவை. சாயத்திரை, புத்துமண் இரண்டும்
சுற்றுச்சூழல் சார்ந்த தீவிரமானப் நாவல் படைப்புகள் . நான் அவரை படைப்பாளி என்பதை
மீறி சுற்றுசுசூழல்வாதியாகவே அடையாளம் காண்கிறேன்.
32
ஆண்டுகள் கனவு இதழ் செயல்பாடுகள் பற்றி கோவை இளஞ்சேரல்:
பேரா . ஆனந்தகுமார் : இரட்டை
நகரங்களின் கதை சொல்லி அவர் . செகந்திராபாத், திருப்பூர் என....கலைத்தன்மையுடன் படைப்புகளை எழுதியிருப்பவர்,
தலைமை
வகித்தார் : சு. நடராசன்( துணை வேந்தர் , காந்தி கிராமப் பல்கலைக்கழகம், திண்டுக்கல். ஏற்புரை நிகழ்த்தினார் சுப்ரபாரதிமணியன்
உலகத் தாய் மொழி
தினம்
பாண்டியன் நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளியில் உலகத் தாய் மொழி தினம் வியாழன் அன்று ஒரு நாள் நிகழ்ச்சியாக
நடைபெற்றது.
மருத்துவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். காலை
நிகழ்ச்சியில் கதை இன்பம் என்ற தலைப்பில் கீதா சச்சின் ( குழந்தைகள் நல ஆலோசகர்),
சாவித்ரி ( சமூக செயல்பாட்டாளர் ) ஆகியோர் பேசினர்.
மாலை நிகழ்ச்சியில் மொழி இன்பம் என்றத் தலைப்பில் பெரும்புலவர்
சொக்கலிங்கனார், கவிஞர் ஜோதி ஆகியோர் பேசினர் .
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்,
நிறைவுரையாற்றினார் . .பெற்றோர் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்
( செய்தி: கி .கிருஷ்ணகுமாரி,
தலைமையாசிரியை
பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )
வாசிப்பு முகாம் :இடம் பெற்ற
நூல்கள்
1. கடலும் கிழவனும் –ஹெமிங்வே ( நோபல்
பரிசு நாவல்)
2. பாடம்படித்த குருவி – லீஸ்யா
உக்ரென்கா ( மொழிபெயர்ப்பு )
3. சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள் –சுப்ரபாரதிமணீயன்
கல்வியாளர்கள் ரூபா, கற்பகவல்லி ஆகியோர்
வழி நடத்தினர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன், மருத்துவர் முத்துச்சாமி உள்ளிட்டோர்
பங்கு பெற்றனர்
( செய்தி: கி .கிருஷ்ணகுமாரி,
தலைமையாசிரியை
பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )
வாசிப்பு முகாம்