” கனவு இலக்கிய வட்டம் ” நூல்கள் அறிமுகம்
-----------------------------------------------------
” கனவு இலக்கிய வட்டம் “ டிசம்பர் மாதக் கூட்டம்
பாண்டியன்நகர் அம்மா உணவகம் அருகிலான சக்தி மகளிர் அறக்கட்டளை அலுவலகத்தில்
ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. செல்வம் தலைமை தாங்கினார். பாட்டாளியின் பார்வையில்..” மார்க்சீய மெஞ்ஞானம் “
ஜார்ஜார்ஜ்பொலிட்சரின் தத்துவ நூல் பற்றிய uuஉரை ஆற்றினார்
கவிஞர் ஜோதி.
போருக்குப்
பின்னதான ஈழமக்கள் வாழ்க்கை.: .இலங்கைப் பயணம் குறித்த தன் அனுபவங்களை கூட்டத்தில்
பகிர்ந்து கொண்டார் சுப்ரபாரதிமணியன் கூட்டத்தில் நூல் அறிமுகத்தில் : ஈழ
எழுத்தாளர்களின் நூல்கள் இடம்பெற்றன.1. மேமன்கவியின் கவிதைத் தொகுப்பு, 2.ஜீவகுமாரனின் நாவல் 3. கே எஸ் சிவகுமாரனின் திரைப்படக்கட்டுரைகள்
இடம்பெற்றன. கல்வியாளர் ருக்மணி, கருப்பசாமி, நடராஜன், தாய்த்தமிழ்ப்பள்ளி
நிர்வாகி மருத்துவர் முத்துசாமி
உள்ளிட்டோர் பங்குபெற்றனர்
செய்தி : ஜோதி
.கா ( கனவு இலக்கிய வட்டத்திற்காக )
சுப்ரபாரதிமணியன்:
இலங்கைப் பயணம் சில குறிப்புகள்
சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது" அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை
ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர்.
- இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக்
ஜீவா முதல் மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.
இலங்கையின் கடற்கரையும்
சுற்றுச்சூழலும் இயறகை வளமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. -
- யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்
- துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை
இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது
- துரோகத்தின் சாட்சியம் : 2
வவுனியாவிலிருந்து
யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக
இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன்
அவை மீண்டும் கட்டப்படுகின்றன
துரோகத்தின்
சாட்சியம் : 1