தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்.
திருப்பூர் மாவட்டம்
* அக்டோபர் மாதக்கூட்டம் .1/10/17 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர்
இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது
தலைமை : வங்கி சண்முகம்
சிறப்புரை : தோழர் ஜீவ பாரதி ( மேன்மை
இலக்கிய இதழின் ஆசிரியர் –திரைப்பட பாடலாசிரியர்
சென்னை ) ” வாழ்வும் இலக்கியமும் “ என்றத்
தலைப்பில் உரையாற்றினார்.
ஜீவபாரதி உரையில்: பாடல்கள் மனிதனின் ஆன்மாவின் வெளிப்பாடுகள்.குடும்பத்தில் உள்ளோர்களுடன்
பாடல்கள், விடுகதைகள், உரையாடல்கள் தொடரும்போது மன நெகிழ்வு ஏற்படும் வாய்ப்புகள்
இன்று குறைந்து விட்டன. பாடல்களை வணிகம், திரைப்பட நோக்கமின்றி பாடும், பயிற்சி
செய்யும் இளைஞர்கள் குறைந்து விட்டார்கள். பாடல்கள் மூலம் மக்களின் மனதை
படைப்பாளிகள் விரைவில் சென்றடையலாம்.
* நூல் அறிமுகம்..: . காரல்மார்க்ஸ் 200- ” காரல்மார்க்ஸ் வாழ்வும் பணியும் ” தா.பாண்டியன் எழுதிய நூல் – அறிமுகம் எம். இரவி ( திருப்பூர் மாவட்ட இந்திய
கம்யூ. கட்சித்தலைவர் ) செய்து விரிவான உரை நிகழ்த்தினார் *
பெண் படைப்பு குறித்து சிவகாமி, கனல்மதி, ஆகியோர்
உரைகள் நிகழ்த்தினர் *
மற்றும்
கவிஞர் ஜோதியின் கவிதைகள் வாசிப்பும்
நடந்தது.பங்கேற்பாளர்கள் .கருத்துரைகள் வழங்கினர். தொழிற்சங்கத்தலைவர்கள், இலக்கிய
வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கே.கோவிந்தசாமி நன்றி கூறினார்...
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்.திருப்பூர் 2202488