” கனவு இலக்கிய வட்டம் ”
---------------------------------------------------------------------
நூல்கள் வெளியீடு
/ அறிமுகம்
” கனவு இலக்கிய வட்டம் “ அக்டோபர் மாதக் கூட்டம் பாண்டியன்நகர் அம்மா உணவகம் அருகிலான
அலுவலகத்தில் வியாழன் அன்று மாலை நடைபெற்றது. தலைவர் கலாமணி கணேசன் தலைமை
தாங்கினார்
” சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல் “ என்ற நூலை தமிழறிஞர் சொக்கலிங்கம்
வெளியிட சமூக ஆர்வலர் மோகன்குமார்
பெற்றுக்கொண்டார்.இந்த நூலை பேரா. முனைவர்
த .தமிழரசி எழுதியுள்ளார். இவர் கோவை அவனாசிலிங்கம் மகளிர் கல்லூரியில்
பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மற்றும் சென்னையிலிருந்து வெளிவரும் “
இலக்கியச் சோலை “ மாத இதழ் வெளியிட்டுள்ள திருப்பூர் சிறப்பிதழ் அறிமுகம்
செய்யப்பட்டது. இதில் திருப்பூரைச் சார்ந்த பல்வேறு எழுத்தாளர்கள்,
தொழிலதிபர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
” சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல் “ என்ற நூலை தஞ்சை அம்மா
வெளியீட்டகம் .வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 210 விலை ரூ 200.
இக்கூட்டத்தில் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் : “ படைப்பிலக்கியம்
என்றைக்கும் குறிப்பிட்டவர்களாலேயே வாசிக்கப்படுவது. அதிலும் மொழி
சார்ந்த இலக்கியத் துறைமாணவர்களால்அதிகம் வாசிக்கப்படுகிறது. அதை மீறிய பொது எழுத்து வாசிப்பு சாதாரண எழுத்துக்களாக உள்ளன. பரபரப்பு உலகத்தில் சரியான தீனி அது. இப்போதைய தீனி மசாலா கலந்த உடனடி சுவை கொண்டது. இலக்கிய வாசிப்பிற்கு ஆட்களைக் கண்டடைவது குதிரைக்கொம்புதான் . ஆனால் இலக்கியம் எப்போதும்
காலத்தின் கண்ணாடியாக விளங்குவது என்றார். விஜயா நன்றி கூறினார்..