சுப்ரபாரதிமணியனின் புதிய
நாவல் நைரா வெளியீடு
சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல் நைரா வெளியீடு கோவை இலக்கியச்சந்திப்பு
நிகழ்ச்சியில் நடைபெற்றது. நாவலை கோவை
மண்டல என்சிபிஎச் மேலாளர் ரங்கராஜன் வெளியிட மலையாள மொழிபெயர்ப்பாளரும் மலையாள
நாடகாசிரியருமான ஸ்டான்லி, நாவலாசிரியர்கள் இளஞ்சேரல், க.வை.பழனிச்சாமி ஆகியோர்
பெற்றுக் கொண்டனர்.சுப்ரபாரதிமணியன் நைரா
நாவல் அனுபவம் பற்றிப் பேசினார். ஸ்ரீபதி பத்மநாபா, அவைநாயகன், கோவை வானொலி
நிலையப் பொறுப்பாளர் தாமரைச்சந்திரன், நாவலாசிரியர்கள் சி.ஆர். ரவீந்திரன்,
மா.நடராசன், விஜயலட்சுமி சுந்தர்ராஜன். சின்ன சாத்தன், பேராசிரியர் ராம்ராஜ்,
அனாமிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நைரா
- சுப்ரபாரதிமணியனின் 13வது
நாவல். ( நைரா- நைஜீரிய ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை எல்லா நாடுகளுக்குமாய் திறந்து
விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள்.
புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று
நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர்
நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும்
இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது.
அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின்
பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட
இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில்
காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும் சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன..
புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும்
மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில்
குறிப்பிடத்தக்கது.
13 நாவல்கள் உட்பட 45க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். என்று பதிப்புரை
குறிப்பு தெரிவிக்கிறது. வெளியீடு : என்சிபிஎச், சென்னை பக்கங்கள் 190, ரூ 150