முதுமை
வரமா சாபமா.
விஜயலட்சுமி
சுந்தர்ராஜனின் “ வானப்பிரஸ்தம் “ நூல்
சுப்ரபாரதிமணியன்
தள்ளாத வயது...
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும் நடையும்...
எதை நோக்கியது
இந்த நடை...
நடந்தால் மட்டுமே
நாட்கள் தன்னைக்
கடந்துப் போகுமென்றா?
நடக்காத நாட்களை
தன்னால்
கடக்க முடியாதென்றா?
உயிரிருக்கும் கூட்டை
உறுதி செய்யவா?
இறுதியின் நிலையை
உலகுக்கு
பிரகடனப்படுத்தவா?
எதை நோக்கியது
இந்த நடை,
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும்
வயதுடன்... ( கோவை அகிலாவின் கவிதை )l
முதுமை வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகம் தள்ளாட வைக்கிறது. முதியோர் இல்லங்களும்
வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகம் இருக்கிறது. முதியோர் இல்லங்களில் முதியோருக்கு
விதிக்கப்பட்ட தனிமை பயமுறுத்துவது. ஆனால் அவை வரமாக எப்படி அமைந்துள்ளன என்பதை
விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் இந்நூல் விளக்குகிறது.
விஜயலட்சுமி
சுந்தர்ராஜனின் இதற்கு முந்தைய நூல் ஆலமரம். 1000 பக்க நாவலாகும். நான்கு தலைமுறைக்குடுமபத்தின்
100 வருட வாழ்க்கையை விவரித்தது. வைணவ குடும்பம் சார்ந்த வாழ்க்கையின்
நீரோட்டமும், திருமண , குழந்தை பேறு, சாவு உடபட பல சடங்குகளும் சிறப்பாக விவரிக்கப்படிருந்தன.இருபதற்கும்
மேற்பட்ட கதாபாத்திரங்களின் வாழக்கையை விவரிப்பதன் மூலம் வெவ்வேறு தலைமுறைகளின்
வாழ்நிலை வேறுபாட்டையும் விவரித்த நாவலாகும்
விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் “ வானப்பிரஸ்தம் “ நூல் முதியோர் இல்லங்கள்
வரமாக அமைந்து அவர்களை ஆசுவாசப்படுத்துவதைச் சொல்கிறது . நாவல் தன்மையில் பல்வேறு
மனிதர்கள் கதா பாத்திரங்களாக உருக்கொள்கிறார்கள்.வாழ்க்கையின்
இறுதி கட்டத்தில் சொந்த பந்தங்களைத் துறந்து தனிமையை நாடி வனவாசம் சென்று கிடைததை
உண்டு அந்திம காலத்தினை கடத்திட வேண்டும் என்று அர்த்தம் கொள்வதற்கு மாறாக கார்ப்பரேட்டுகள்,
வசதி கொண்டவர்களுக்கான் நவீன முதியோர் இல்லங்கள் அவர்களுக்கு ஆசுவாசம் கொள்ளும்
வகையில் அமைந்திருப்பதை இந்நூல் விளக்குகிறது.செல்லம்மாள் குடிகாரக்கணவனிடம்
இருந்து தப்பிப்பதற்காக மு.இ. வந்தவள். கணவன் இறந்த பின் தனிமையாக்கப்பட்டவள். பிள்ளைகளுக்கு
தொந்தரவு வேண்டாம் என்று கிளம்பி விட்டவர் . கோவிந்தராசு பாமரன். கமலம்மா அடிக்கடி
நோய் வாய்ப்படுபவள். “ சம்சார சங்கீதம்தான் தட்டு , கரண்டிதான் பக்க
வாத்யம் இதுகளோடு நித்தியம் பாடறேன் “ என்று ஒதுங்கிக் கொண்டவள். அப்பாசாமி
மனைவிக்கு ஞாபகமறதி. அவர்களுக்கு புது இடம், புது அனுபவமாய் எல்லாம் அமைந்து
விடுகின்றன. பொய் உயிலால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து சேர்கிறார்கள். முதுமை தவிர்க்க முடியாத ஒரு கால நிலை, மனித
வாழ்வில் ஏற்படும் இயறகையான மாற்றம். இதை வரவேற்று ஒத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும்
முதுமையில் தயாராக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறவள் சாரதா. இப்படி பல
மனிதர்களின் வாழ்க்கை புனைவுத்தன்மையிலாமல் தரப்பட்டிருக்கிறது. பல்ரின் வாழ்க்கை
கடிதங்கள் மூலமும் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த கடித வகைப்படுத்தல் ஒரே மாதிரியான
வாசிப்பிலிருந்து வேறு பாதைக்கு வழிகாட்டுகிறது.
சமையலறை சம்பவங்களும், வெவ்வேறு வகை மனிதர்களின் நடவடிக்கைகள் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருகின்றன. முதியோர்
இல்ல நிர்வாகங்களும் அவற்றில் வசிப்பவர்களும் பங்கும் ஜனநாயகத்தன்மையோடு இருப்பதை
காட்டுகிரார். . பொருளாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு இந்த மூன்று “ப “ வுக்கும்
ஒரே விடை முதியோர் இல்லம என்பதை நிரூபிக்கும் பல நெகிழ்ச்சியான சம்பாவங்கள் இதில்
உள்ளன.அங்கு நிகழும் சாவுகளும், உரையாடல்களும்
., பகிர்வும் நெகிழ்ச்சியாகத் தரப்பட்டிருக்கிறது . முதியோர் இல்லப் புகைப்படங்கள்
அவர்கள் வாழும் சூழலைக் காட்டுகின்றன. அங்கு வாழ்வதை ரசித்துக் கொண்டு
ஒதுங்கியிராமல் பல முதியோர் இல்லங்களுக்கு வது சேர சிபாரிசு செய்கிறது.
குழப்பங்களும் தீர்வு காண இயலாத பலருக்கு தெளிவைக் கொடுக்கிறது. வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகங்களூக்கு
மத்தியில் வரம் என்று தீர்ப்பு வழங்கி
விடுகிறது. படைப்பிலக்கிய வாதி என்ற வகையில்
ஒரு எழுத்தாளர் மு.இ. இருந்து அந்த அனுப்வங்களை வாரி வழங்கியிருக்கிறார்.
பலருக்கும் பயன் படும் ” வானப்பிரஸ்த
அருமருந்து “ இது. .( kaavya Publn)