மைசூர்
யாத்திரை: சுப்ரபாரதிமணியன்
” கல்வித்துறையில்
மதவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பொதுப் பாடத்திட்டம் சாத்யமாகிற போது பொதுப்பள்ளி ஏன்
சாத்தியமாகாது. அதற்காக நாம் போராட வேண்டும். வகுப்பு வாதத்தை
வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது. மதங்கள் பல, மொழிகள் பல என்று பின்பற்றி
வாழ்ந்து வரும் இந்திய மக்களின் வேறுபாட்டை அங்கீகரித்து வேற்றுமையில் ஒற்றுமையைக்
காணும் இந்தியப்பண்பாட்டை தாய்மொழிக்கல்வி மூலம் சரியாக அடையாளம் காண முடியும்.
பன்முகப்பண்பாட்டைக் கொண்டாடும் பாகுபாடற்ற பாதுகாப்பான கல்வி முறையை கோரும் அகில
இந்திய போராட்டப் பயணம் தொடரும்
என்றார். “ என்றார் கல்வி உரிமையே அமைப்பைச் சார்ந்த கல்வியாளர் சென்னை
கஜேந்திர பாபு அவர்கள் மைசூர் பல்கழகக்கழக வளாகக் கூட்டத்தில் பேசும் போது
குறிப்பிட்டார்.
கல்வி வணிகமயமாக்கலுகு எதிரான யாத்திரை
கன்யாகுமரியில் ஆரம்பித்து, பின்
ஒளிச்சுடர் அளிக்கும் நிகழ்வு
மைசூரில் நடைபெற்றது. இது போபால் வரை தொடரும். மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில்
நடைபெற்ற கல்வி குறித்த கருத்தரங்கில்
கன்னட எழுத்தாளர் தேவனூரு மகாதேவாவும் உரையாற்றினார். “ இந்தியாவை
கார்ப்பரேட்டுகளும் மத நிறுவனங்களுமே ஆள்கின்றன. பத்திரிக்கைத்துறை, நீதிமனறம்,
காவல் துறை எல்லாமே கார்ப்பரேட்டுகளுக்கு விலை போகின்றன.இன்னுமொரு சுதந்திரம்
குறித்த போராட்டதோடு மாற்றுக்கல்வி குறித்தும் அக்கறைப்பட வேண்டியிருக்க்கிறது ” என்றார்.
அவரின் பல நாவல்களை பாவண்ணன், தி,சு.சதாசிவம் ஆகியோர்
மொழிபெயர்த்திருக்கிறார்கள். aawthiraavaisseerwtha
aaஆந்திராவைச்சார்ந்த பேரா. ஹரகோபால் பேச்சில் அனல் தெறித்தது.. “
கார்ப்பரேட் வல்லூறுகள் எல்லாவர்றையும் விழுங்கி வருகின்றன. அரசுகள் நவதோயா, சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்தும்
போது அரசுப்பள்ளிகளை நடத்துவதில் என்ன சிரமம். ஆனால் அரசு பள்ளிகளை நடத்த விடாமல்
பல தடைகள் உள்ளன. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமானால் அரசுப்பள்ளிகளில் கல்விப்பணி தொடர வேண்டும்.
விளிம்பு நிலை மக்களுக்கும்,கிராம மக்களுக்கும் அரசுப்பள்ளிகளைத் தவிர வேறு விமோசனம்
இல்லை. pகொடிய விசம் கொண்டு எல்லாம் அழிக்கப்படுகின்றன.தனியார்மயம்,
கார்பரேட்டுகளின் ஆதிக்கம் அந்த விசம்.அதை முறியடிக்க வேண்டும். தனியார்
மயமாக்கலும், வணிக மயமாக்கலும் தொடர்ந்து கொண்டிருப்பதை எதிர்க்க வேண்டும் “
என்றார்.eeraa.. உயர்கல்வியில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்
கூடாது. முன்பருவக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை படிக்க அருகமைப்பள்ளி
அமைப்பில் பொதுப்பள்ளி முறைமையை உருவாக்க வேண்டும் என்பதை பேசிய பல
எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் வலியுறுத்தினர்.இந்தியாவில்
அனைத்துக் குழந்தைகளும் அந்தந்த மாநில மொழிகளில் மாநில அரசுகளின் கீழ் ஒன்றாக
கல்வி கற்க 86ம் சட்ட திருத்த்த்தின் பாதகமான அம்சங்களைச் சரி செய்ய இந்திய
அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு பிறப்பு முதல் 18 வய்து வரை , தொடக்க
காலக் குழந்தைப்பராமரிப்பு முதல் மேனிலைப்பள்ளி
கல்வி முடியும்வரை அனைத்துக்
குழந்தைகளுக்கும் கட்டணமிலாக் கல்வியை அரசு
தன் பொறுப்பிலும் செலவிலும் அருகமைப்பள்ளி அமிப்பில் பன்மொழி கற்கும்
வாய்ப்புடன் கூடிய தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிஅமி வழங்கிட
வலியுறுத்துகிறது.கல்வியும் சுகாதாரமும் அனைத்ஹு மக்களுக்கும் கிடைக்கக் கூடிய கட்டமிப்புகளை உருவாக்கிட மொத்த
உற்பத்தியில் இந்திய அரசு கல்விக்கு 10%, சுகாதாரத்திற்கு 5% வீதமும் ஒதுக்கிட
வேண்டுகிறது. அந்நிய முதலீட்டைத்தடுத்திட, எந்த வகையிலும் அரசு தனியார் கூட்டை
அனுமதிக்கக் கோரியது.
.திருப்பூர் மாவட்டத்திலிருந்து காங்கயம்
மூர்த்தி தலைமையில் இருபது பேர் அக்கருத்தரங்கிலும், பயணத்திலும் கலந்து
கொண்டன்ர். சத்தியமங்கலத்திலிருந்து சுடர் நடராஜன் தலைமையிலான குழுவும் எங்களுடன்
சேர்ந்து கொண்டது. சூரியா, காந்திசெல்வன் போன்ற கோவை அரசுக் கல்லூரி மாணவர்களைக்
கொண்ட பறை இசைக்குழு பயணம் முழுவதும் எதிர்ப்புக்குரலாக பறையொலியை முழக்கினர். அவர்களின்
பறையொலியை எழுச்சியுடன் மைசூர் மக்கள் அந்நகர வீதிகளீல் கேட்டனர்.
நடிகையும் முன்னாள் எம்பியுமான மாளவிகா வின் பெங்களூரில் சிறுமிகளுக்கு
எதிரான பாலியல் கொடுமைகுறித்த போராட்டம்
சில இடங்களில் போக்குவரத்தைச் ஸ்தம்பிக்கச்செய்தது, காவிரி ஆற்றின் குறுக்கே
மேகதாதுவில் மூன்று அணைகள் கட்டப்படும் முயற்சிகளைப்பற்றிய வைகோ, மு.க. உட்பட பலரின் எதிர்ப்பை கன்னடப் பத்திரிக்கைகள்
நிராகரித்திருந்தன். உள்ளூர் பதிப்பு தமிழ் தினசரிகளில் அவைமுக்கியச்
செய்திகளாக்கப்பட்டிருந்தன. கலவி யாத்திரை முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தது. மழலையர்
கல்வி முதல் பல்கலைக்கழக் உயர்கல்வி வரை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சில
கன்னட நாளிதழ்கள் தலையங்கங்களாக வெளியிட்டிருந்தன.