கொட்டும் தேனீ
: நியூட்ரினோ
சுப்ரபாரதிமணியன்
அருவியில் குளிக்கும் போது திடீரென்று நியூட்ரினோ ஞாபகம்
வந்து திக்கென்றது.பக்கத்தில் பொட்டிப்புரம் அருகே அமையயுள்ள நியூட்ரினோ
ஆய்வுக்கூடத்திற்கு மத்திய அரசு ஜனவரியில்
அங்கீகாரம் அளித்து ரூ 1500 கேடு நிதியையும்
வெளியிட்டுவிட்டது. உலக் அளவில்
அய்ந்தாவது நியூட்ரினோ திட்டம் அது. முன்பு நீலகிரி மாவட்டம் சிங்காரா பகுதியில்
அமைக்கப்படுவதாக இருந்த்து. நீலகிரி மக்களின் எதிர்ப்பால் இடம்பெயர்ந்து விட்டது.
சுருளி அருவியில்
குளித்து விட்டு வெளியே வந்த பின்புதான் குளித்தது கொஞ்சம் அருவிநீரில், கொஞ்சம்
மழைத்தூறலில் என்பது தெரிந்தது.( முதல்நாள் குற்றாலத்தில் 45 நிமிடம் வரிசையில் நின்று
குளித்த அனுபவத்திற்கு மாறாக சுருளி
அருவியில் 20 நிமிட ஆனந்தக் குளியல்
) நனைந்து கொண்டே நடந்து பேருந்து
நிலையம் வந்தோம். ஏகப்பட்ட போலிச்சாமியார்கள். மவுன சாமியார், அழுக்குச் சாமியார்,
சாக்கடைசாமியார் என்று. ஆயிரம் லிங்கங்கள் வைத்து வேடிக்கை காட்டுகிறார்கள். சாமியார்கள்
தரும் வரங்களை விட மக்களின் பேச்சு வெகு நம்பிக்கை தரக்கூடியது. சுருளி அருவியில்
90 நாட்கள் குளித்தால் குஷ்டரோகம் கூட
குணமாகும். சுருளி தீர்த்த நீரில் விழுகிற குச்சிகள், இலைகள், எலும்புகள் எல்லாம்
கல்லாகும். இலைகள் அழுகாமல் பொரித்த அப்பளம் மாதிரி இருக்கும்
அரக்கர்களுக்குப்பயந்து முப்பது
முக்கோடித்தேவர்களும் இங்குதான் ஒளிந்து வாழ்ந்தார்களாம். 1008 குகைகள்
உள்ளன.சீதையைத் தூக்கிச் செல்லும்போது இராவணனை எதிர்த்த ஜடாயுவின் சிறகு
வெட்டப்பட்டு வீழ்ந்த் இடம், இராமாயண கால்த்தில் வரும் கதை மாந்தர்கள் யார் யார்
அவதரிப்பது என்று முடிவு செய்த இடம், சனிபகவான் சூரபத்மனை வதம் செய்ய வந்த போது இன்று போய் நாளை வா என்று விநாயகர்
ஏமாற்றிய இடம். வீரபத்திர்ர் சாபத்தால்
கல்லாகிப் போன காமதேனு பசு சாப விமோசனம் பெற்ற இடம்.கைலாசநாதர் குகை
வாசலில் மகாதேவன் காட்சி தந்து “ திருமுருகன் உதயமாவான் “ எனத் தேவர்களுக்கு
வாக்கு தந்த் இடம் என்று பல வாய் மொழிக்கதைகள் சுருளி அருவிக்கு உண்டு.
கம்பம்
பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதெல்லாம் இந்த பசுமையை விட்டு விட்டு எதற்கு
திருப்பூர் பனியன் கம்பனிக்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள் என்று தோன்றும்.
கூலிகள் என்ன செய்வார்கள். எங்கிருந்தாலும் கூலிதான். முந்திரி, திராட்சை, வாழை
என்று பணப்பயிர்கள் ஏற்றுமதியில். கடவுள் பூமி கேரளாவிலிருந்து கழிவுகளைக் கொண்டு
வந்து கொட்டும் பூமியாக தேனி மாவட்டம் மாறி விட்டது ( பொள்ளாச்சி, கோவை பகுதிகளிலும் இதே போல் தான்
கேரளாவிலிருந்து கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் ) கேரளாவில்
சுற்றித்திரியும் நாய்களை இங்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். ( மன நோயாளிகள்
எந்த மாநிலமானாலும் எங்காவது கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.
சுமங்கலித்திட்டம் என்று இளம் பெண்களை பஞ்சாலைகள், பனியன் தொழிற்சாலைகளில் கொண்டு
வந்து விட்டு விடுகிறார்கள்). தேனி மாவட்டத்தில்
பஞ்சாலைகள் ஏக்தேசம் மூடப்பட்டு
விட்டன.தேனியின் தென்கிழக்குப் பகுதியில் வள்ளல் நதியின் மீது கண்டமனாயக்கர்களால்
உருவாக்கப்பட்ட கண்டமனூர் அழகு ஊர்தான். மிருகங்கள் அதிகம் வசித்த வருசநாடு மனிதர்களின் பூமியாக
மாறி , மிருகங்கள் துரத்தப்ப்பட்டு விட்டன.பென்னிகுக் பெயரால் தேனியின் பேருந்து
நிலையம், பல பாலங்கள், கடைகள், சலூன்கள் என்று விரவிகிடக்கின்றன. பென்னிக்குக்
நினைவு மண்டபம் அதிகம் கவனிக்கப்படாமல்
அழுக்கடைந்திருக்கிறது., மரக்கா மலையின் அழகு பூஞ்சோலைகளால் மிளிர்கிறது.மரக்கா
என்றால் பூஞ்சோலை என்று அர்த்தமாம்.வளம் கொழிக்கும் சின்னமனூர் காசு போட்டால் காசு விளையும் பூமிதான்
எப்போதும்.சிவகாமி அம்மன் கோவில் நாகலிங்கப்பூ அதிசயம் போல் படும் . ஒரு நாகம்
படம் எடுத்து ஆட அதன் நிழலில் லிங்கம் இருப்பது போல் தோன்றுவது பலரை வசீகரப்படுத்துவது.
முல்லைப் பெரியார் அணை 142 அடிகளாக உயர்த்தப்பட்ட ஆணையை
ஒட்டி பிரமாண்டமான விழாக்கள் நடைபெற்றன.முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் 100
ஏக்கர் பரப்பில் ஆய்வு மாளிகை, பொதுப்பணித்துறையினர் தங்க 15 குடியிருப்புகளைக்
கட்டியது தமிழக அரசு.இப்போது அவை சிதிலமடைந்து கிடக்கின்றன. முன்பு கேரள அரசு அக்குடியிருப்புகளுக்கும் மின்சாரம் தந்தது.
மின்சாரம் தாக்கி யானைகள் இறந்த்தால் அதைக்காரணமாக வைத்து மின்சார இணைப்பைத்
துண்டித்து விட்டார்கள்.இரவில் விலங்குகள் தொல்லை. பகலில் கேரள அதிகாரிகள் தொல்லை.
1995லிருந்து ஒவ்வொரு குடும்பமாக வெளியே எல்லாம் காலியாகிவிட தமிழக அதிகாரிகள்
படகுகளில் சென்று அணைப்பகுதிகளை பார்வையிட்டுதிரும்புகிறார்கள். பெரியார் அணையில் மின்சாரம் இல்லாத்தால் மாலையிலும்,
இரவிலும் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளைக் காரணம் காட்டி இரவில்
ஜெனரேட்டர் பயன்படுத்த அனுமதி இல்லை.
அரிக்கன் லைட் வெளிச்சமே தமிழக அதிகாரிகளுக்கு கதி. சோலார் விளக்கு கூட
கிடைக்கவில்லை,
தேனி
மாவட்டமே நியுட்ரினோ பயத்தில் சிக்கித் தவிர்க்கிறது. தகவல் அறியும் சட்டத்தின்
மூலம் தற்போது பெறப்பட்டிருக்கும் தகவல் : ” அங்கு அணுமின்
உற்பத்தி நிலையம், அணு எரிபொருள் செயல்பாட்டு மையம், அணுக்கழிவு மேலாண்மை மையம்
என்ற மூன்று இனங்கள் அடிப்படையில் அனுமதி
பெறப்பட்டுள்ளது. அங்கு அமைய இருப்பது
நியுட்ரினோ ஆய்வு மையம் அல்ல.
அணுக்கழிவுகளைக்கொட்டுவதற்கான பாதள சுரங்கம்தான். ” சற்று
தாண்டினால் கேரள எல்லை. கேரளா இதற்கு ஆதரவு இல்லை . கடுமையான எதிர்ப்பு
தெரிவிக்கிறது.நியுட்ரினோ, அணுக்கழிவு
எல்லாம் சேர்ந்து பிசாசுத் துகள்களின் இருப்பிடமாக தேனியை மாற்றி வருகிறார்கள்.பொட்டுப்புரம்
அம்பரப்பர் மலையில் முள் வேலிகள், தண்ணீர் தொட்டிகள், காவல் அரண்கள் சாதாரண
மக்களையும் அவர்கள் மேய்க்கும் ஆடு மாடுகளையும் பயமுறுத்திக்
கொண்டிருக்கின்றன.
நியூட்ரினோ கூடம்
பிரபஞ்சத்தை முழுமையாக அறியவும் இயற்கை சீற்றங்களை முன்னதாக அறியவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அம்பரப்பர்
மலையை குடையவும், வெடிவைத்ஹ்டு தகர்க்கவும், துளையிடவும் வேண்டியிருப்பதால்
சுற்றுசூழல் கேடு நிச்சய்ம் ஏற்படும். அணுக்கழிவுகளின் சேமிப்புத் திட்டமாகவும்
இது பின்னால் மாறும். இதனால் விவசாய
நிலங்கள் பயனற்று போகும் என்பது பயம் கொள்ள வைக்கிறது. எதிர்ப்பும் போராட்டமும்
தருமிடமிடமாக தேனி மாறி விட்ட்து.