குப்பை உலகம் நூல் தற்போது மறுபதிப்பில் :
சூழல் அறம் என்ற தலைப்பில் என்சிபிஎச் வெளியீடு
சுப்ரபாரதிமணியனின் “ குப்பை உலகம் “ நூல் பற்றி
” தினமணி” ஆசிரியர் வைத்திய நாதன் தினமணியின் “ தமிழ் மணி “ யில்::
சுப்ரபாரதிமணியன்
திருப்பூரில் இருந்து கொண்டு தமிழ் கூறு நல்லுலகைத் திரும்பிப் பார்க்க
வைத்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம்
அவரது அறச்சீற்றம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அவர் எழுப்பும் குரல் ஓங்கி
ஒலிக்கிறது. ஆனால், செவிட்டு உலகம்
அதைக்கேட்க மறுக்கிறது. அதனாலென்ன.. அவர் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டுதான்
இருக்கிறார். இருப்பார்.
சுற்றுச்சூழல்
பிரச்சினைகள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பை “குப்பை உலகம்” என்கிற தலைப்பில் புத்தகமாக
வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுற்றுச்சூழலை
மாசுபடுத்தும் எல்லாப்
பிரச்சனைகளையுமே இந்தக் கட்டுரைத் தொகுப்பு தொட்டுக்காட்டுகிறது.. தொட்டுக்
காட்டுகிறது என்றா சொன்னேன், இல்லை. நம்து மூளையில் உரைப்பது போல சுட்டிக்
காட்டுகிறது.
“பாதரசத்தின் உற்பத்தியில்
பாதி அளவு மின்னணு பொருட்களின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. பாதரசம்
நிலத்தடி நீரில் கலந்து குடிநீராக சுலபமாக
வீட்டுக்குள் வந்து சேருகிறது. இரத்தத்தில்
சிறுகச்சிறுக சேர்கிறது.மூளை , சிறுநீரகம், , கல்லீரல் போன்றவற்றை மெல்ல
மெல்ல பாதிக்கிறது. மனிதனின் நினைவுகளை பாதிக்கிறது. கருவுறுதல், இனப்பெருக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்துகிறது” . இப்படி
மின்குப்பைகளால் பாதிப்பு, பிளாஸ்டிக்குகளால் பாதிப்பு, துரித உணவால் பாதிப்பு என்று ஏற்படுவதுடன் உலகம்
குப்பையாகிக் கொண்டே வருகிறது.
சுப்ரபாரதிமணியனின் இந்தப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலராகி
விடுவார்கள். நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை செலுத்துபவரா. ஒரே ஒரு உதவி
செய்யுங்கள். அய்ந்து இளைஞர்களுக்கு இந்தப் புத்தக்த்தை வாங்கிப் பரிசளியுங்கள்.
அவர்களை இந்தப் பிரச்சினை பாதிக்குமேயானால்
அய்ந்து பேருக்கு அதேபோல் வாங்கிப் பரிசளிக்க பணியுங்கள். சுற்றுச் சூழல்
பாதுகாப்பு பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை நாம் தமிழகத்தில் செய்து விடலாம்,( ரூ 50 , வெளியீடு : சேவ்
அமைப்பு, 5 அய்ஸ்வர்யா நக்ர், கே என்பி காலனி, தாராபுரம் சாலை, திருப்பூர் 98422
13011 )