சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 25 மே, 2015

பெண்களின் உரத்த குரல்
                        சுப்ரபாரதிமணியன்
            திரைப்பட ஆக்கங்களில் சமூக அக்கறையும், குறைந்த செலவிலான படங்களும் 1960களில் மலையாளிகளின் யதார்த்த உலகத்தை சரியாக முன்வைத்திருக்கின்றன. திரைப்படத்திலிருந்து அவன் வெகுவாக அந்நியப்படாதவனாக சமூக வாழ்க்கையிலும், திரைப்படத்திலும் அவன் இருந்திருக்கிறான். இலக்கியப் படைப்புகளைத் திரைவடிவங்களாககும் முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. எண்பதுகளில் உலகப் பொருளாதார நெருக்கடிகளும் இந்தியத் திரைப்பட முயற்சிகளில் மலையாளிகளின் தீவிரத்தைக் குறைத்து விடவில்லை. ஆனால் உலகமயத்தின் விளைவுகளால் திறந்த சந்தையில் மலையாள வெகுஜன திரைப்பட முயற்சிகள் அவர்களின் அடையாளங்கள் இல்லாத சாதாரண மனிதனாக்கிவிட்டது. அதிலும் பெண்கள் குறித்த அக்கறை வெகு மலினமாகிவிட்டது.
சமீப ஆண்டுகளில் சித்திக் லாலின் பெரும்பான்மையான படங்களில் நான்கு ஆண்கள், ஓரிரு பெண்கள் பிரதானமாய் தென்படுவார்கள். ஆனால் பெண்கள் கேவலமான கவர்ச்சிப் பொருளாகவே இருப்பார்கள். ரஞ்சித்தின் இயக்கத்திலான படங்கள் வெகுஜன தளத்தில் தயாரிக்கப்பட்டவையென்றாலும் பெண்களைக் கேவலமாக சித்தரிப்பதைத் தவிர்த்து வந்திருக்கின்றன. ஷாஜி கைலாஸின் படங்கள் உயர்ந்த ஜாதி, நிலப்பிரபுத்துவ குடும்ப ஆண்களின் பெருமையை நிலைநாட்டுபவை. பெண்கள் ஆண்களின் பெருமையைக் காப்பாற்றுவதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் என்ற ரீதியில் காட்டப்படுவர். ரெஞ்சி பணிக்கரின் படங்கள் வன்முறைக் காட்சிகளால் நிறைந்து பெண்கள் மீதான வன்முறை சுலபமாக்கப்பட்டிருக்கும். வாணி விசுவநாத்தின் உயர்பதவி பெண் பாத்திரங்கள் இன்று வலிவிழந்து விட்டன.
            பெண்கள் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக டி.வி. சந்திரன் தென்படுகிறார். அவரின் இவ்வாண்டின் படமான ‘பூமி மலையாளம்’ கேரள சமூகத்தின் ஏழு இளம் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கிறது. ஜானகி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான கணவனைப் பற்றின பிரமைகளில் சிக்கித் தவிக்கிறாள். ஜானகியின் மகள் மீனாட்சி மனம் அரசியல் போராட்டமொன்றில் கொலை செய்யப்பட்ட மகனின் நினைவுகளால் நிரம்பி அலைக்கழிகிறது. மீனாட்சி மகள் நிர்மலா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறவள். அங்கு நிகழும் பாலியல் அத்துமீறல் அவளை நிலைகுலையச் செய்கிறது. நிர்மலாவின் அனுபவங்களைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடிக்க வரும் பௌசியா என்ற முஸ்லிம் பெண்ணின் கணவனுக்கு அவளின் தொழில் பிடிப்பதில்லை. விலக தீர்மானிக்கிறான். பௌசியாவின் பெண் சுதந்திரம் குறித்த எண்ணங்கள் தினசரி வாழ்க்கையில் வெகு சாதாரணமாக சிதைகின்றன. மீனாட்சியின் அப்பா தீவிரமான பொதுவுடைமைக் கட்சிக்காரராக இருக்கிறார். நிலப்பிரபுக்களை எதிர்க்கிறார். கடத்தப்படும் நெல்மூட்டைகளை மீட்க மனைவியின் கழுத்து நகைகளைத் தியாகம் செய்கிறார். மக்களுக்கு அந்த நெல்லை விநியோகம் செய்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்து அலறுகிறவளாக இருக்கிறாள். இன்னொரு நிலப்பிரபு அப்பாவிற்கு முந்திரி தொழிற்சாலை இருக்கிறது. அவளின் மகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், பெண்களின் போராட்டங்களையும் புத்தக வாசிப்பின் மூலம் அறிந்து கொள்கிறாள். வாசிப்பும், அனுபவமும் ஒரு நிலப்பிரபு தந்தையின் அடையாளத்தை அவளுக்குக் காட்டுகிறது. காதல் கனவுகளில் மூழ்கியிருக்கும் இன்னும் ஒரு பெண்ணின் கனவு ராணுவத்தில் இருக்கும் காதலனின் மரணத்தால் சிதைகிறது. விளையாட்டில் அக்கறை கொண்ட இளம் பெண்ணின் வாழ்க்கை விவசாயி அண்ணனின் தற்கொலையால் சிதைகிறது. வாங்கிய கடனைக் கட்டமுடியாததால் அண்ணன் தற்கொலை செய்து கொள்கிறார். தங்கை விளையாட்டு ஆர்வத்தை விட்டு திருமணம் செய்துகொண்டு சாதாரணமானவளாகிறாள்.
            திடுமென வந்து சேரும் அரசின் விளையாட்டு சார்ந்த உதவிகள் அவளை மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக்குகிறது. இந்த ஏழு பெண்களில் விளையாட்டு வீராங்கனை பெண் மட்டுமே இதிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறாள். பௌசியா என்ற தொலைக்காட்சி பெண்ணிற்கு விளையாட்டு வீராங்கனையின் வெற்றி ஆறுதலாக, நம்பிக்கை தருவதாக இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் நாற்பத்தெட்டுகளில் கேரள சமூகத்தில் நிகழ்ந்த பெண்கள் மீதான வன்முறைகள் காரணமான சாவுகள், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்களில் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த சில குடும்பங்களின் பெண்கள் நிலைமையையும், இன்றைய நவீன யுவதிகளை மையமாகக் கொண்டு பின்னோக்கிப் பார்த்திருக்கிறார் டி.வி.சந்திரன்.
மது கைதபுரத்தின் இயக்கத்திலான ‘மதியவேனல்’ படத்து நாயகி சரோஜினி தன் மகளின் வாழ்க்கையைச் சீரழிக்க முயல்கிற ஒரு யுவனை எதிர்க்கிற குறியீடாகிறாள். சரோஜினியின் கணவர் பொதுவுடைமைவாதி. கணினி, தனியார் வங்கிகள் கிராமங்களில் நுழைவதை எதிர்த்துப் போராடும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவன். ஆனால் இயக்கம் அவனிடமிருந்து ‘காலடியில் இருக்கும் மண்’ நழுவுவது போல நழுவுகிறது. அவனின் கேள்விகளை நிராகரித்து, சாதாரண தொழிலாளிகளின் நலனை இரண்டாம் பட்சமாக்கி அவனையும் கட்சியிலிருந்து வெளியேற்றுகிறது. தோட்டக் கூலியாக வேலை செய்து பணம் கொண்டு வருகிற ஒரு நாளில் மரணமடைகிறான். செங்கொடி போர்த்தின சடலம் வீட்டில் கிடக்கிறது. மகள் அப்பாவையும், அம்மாவையும் நிகழ்காலத்திற்கு ஒத்து வராதவர்களாகப் பார்க்கிறாள். தனியார் வங்கி கடன், வங்கி மேலாளரின் தந்திர நட்பால் அலைக்கழிக்கப்படுகிறாள். சரோஜினி கைத்தறி சேலை நெய்யும் பெண். காந்தியவாதி அம்மாவால் வளர்க்கப்பட்டவள். காதி நிறுவன ஊழல்களை எதிர்ப்பவள். மகளின் கனவுக்கு எதிராக உறுதியாக நிற்கிறாள்.
            பொதுவுடைமை இயக்கம் பற்றிய விரிவான நிகழ்கால விமர்சனமாகவும், இளைய தலைமுறையின் நிராகரிப்பும், துல்லியமாக இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. திருப்பூர் பற்றிய குறிப்புகள் நாலைந்து இடங்களில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு காதி அலுவலக மேலாளராக நடித்திருக்கிறார்.
பொதுவுடைமைவாதி கணவனின் நேர்மை, காந்தியவாதியான அம்மாவின் அர்ப்பணிப்பு இவை மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுபவளாக சரோஜினியை மாற்றிவிடுகிறது. தனியார் மயத்தின் அலட்சியக் குறியீடான யுவனை புறம் தள்ளும் வலிமைமிக்க குரலாகவும் வெளிப்படுத்துகிறது. சரோஜினியின் வாழ்க்கை எதிர்ப்புணர்வின் குறியீடாகி விசுவரூபித்திருக்கிறது.

(இந்தப் படத்தில் இன்னும் நினைவு நிற்கும் சிலவை: பீடியும், தேனீருமான பொதுவுடைமை இயக்கத் தோழனின் வாழ்க்கை, அவசரநிலை காலத்தில் தலைமறைவு வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை இறந்த சோகத்தால் தறிக்குழிக்கு வராமல் சோர்ந்து போயிருக்கும் பெண்ணை ஆறுதல்படுத்தி சரோஜினி கூட்டிவரல், விதைகள் பாதுகாப்பு, நக்சலைட்டுகளின் ஊர்வலம், தனியார் வங்கிகள் கிராமத்தில் ஊடுருவி சாதாரண தேனீர் கடைக்காரனை ‘பாஸ்ட் புட்’ கடையாக்கு என்று சொல்லிக் கடன் கொடுத்து பின் வட்டி கேட்டு மிரட்டல், ஏ.கே.ஜி.யின் அமராவதி நில மீட்புப் போராட்டம், கேரளாவில் முன்பு 43,000 பீடித் தொழிலாளர்கள்- இப்போது 3000 மட்டும், பீடித் தொழில் நசிவு, கால் அடியில் இருக்கும் மண் நழுவுவது போல பொதுவுடைமைக் கட்சி தொண்டனிடம் இருந்து அந்நியப்பட்டுப் போவது, சாவின்போது ஏழைத் தொழிலாளி தரும் இறுதிச் சடங்கு வணக்கம் ‘எல்லாம் நல்காம், ஜென்மம் நல்காம், பால்யம் தருமோ’ பாடல், உதவிகள் எலிப்பொறிக்கு சமம் என்று சில).