சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 7 பிப்ரவரி, 2022

இங்கு தமிழே இல்லை தமிழன்னைக்குச் சிலையா என்று கேட்பார் உளர் நொய்யலில் சுத்தமான தண்ணீர் வரட்டும் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகாமல் இருக்கட்டும் அல்லது அதிக மழையால் துயரப்படாமல் இருக்கட்டும் நெசவாளன் சுபிட்சம் பெறட்டும் சகல தொழிலாளர்களும் உரிமையோடு வாழட்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும் அதன்பின் தமின்னை சிலை வருக என்று சொல்வோரும் உண்டு நான்கு கைகளுடன்…. ..தாமரை பீடம் இருக்கையாய்… வலது கையில் சுடரும். ..இடது கையில் யாழும் ருத்திராட்ச மாலையும் சுவடியும் திருவடிகளில் வில் புலி மீன் சின்னங்கள் இதெல்லாம் மரபான சிலையில்….. நம் தமிழன்னை எளிமையின் சிகரம் ஏந்திய கையில் ஓலை ஏடுகள் வடநாட்டு மொழி ஆண் ஆதிக்கத்தின் படையெடுப்பு மீறி அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல் தமிழுக்கென்று தமிழன்னைக்கு சிலை தமிழ் அமுதென்று பேர் சொல்லவும் தமிழன்னை சிலை தேவை மொழி நம் வாழ்வு என்று அடையாளம் காட்ட தமிழன்னைக்கு சிலை தேவை எங்கும். = சுப்ரபாரதிமணியன்
மலர்க ஹைக்கூ ... மு முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் படைப்பாளிக்கு பிற மொழிகளில் தன் படைப்பு வெளிவருவது மகிழ்ச்சி தரக்கூடியதே. ஹைக்கூ போன்ற எளிமையான படைப்புகள் ( அளவில் சிறியவை என்பதாலும் ) எளிதில் வேற்று மொழிகளுக்குச் சென்று வாசகர்களைச் சென்றடையும். அவற்றுக்கான வாசிப்பாளர்கள் எல்லா மொழிகளிலும் உள்ளார்கள். மு முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் மூன்று மொழிகளில் இவ்வடிவம் பெற்றுள்ளன. இது வித்யாசமான முயற்சி .தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று மொழிகளிலும் மூவர் இக்கவிதைகள் பற்றி எழுதியிருப்பது சிறப்பு. திருவாளர்கள் ஈரோடு தமிழன்பன், அமரன், நாணற்காடன் என அவர்களின் கட்டுரைகள் மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளன. இதில் இடம் பெற்றிருக்கும் ஓவியங்கள் பெரிய பலம்.. கவிதைச்சூழலைச் சரியாகக் கொண்டு வந்துள்ளன இத்தொகுப்பின் பல கவிதைகள் இய்றகையோடிணைந்த வாழ்க்கையைச் சொல்லுபவை.எல்லோருக்குமியற்கை பொருத்தமிக்கதாகவே விளங்கிகுறது. “இயற்கையோடு சேர்ந்து வாழப் பழகிவிட்டால் சுற்றுச்சூழல் ஆரோக்யமானதாகவே இருக்கும். இயற்கையின் ஆரோக்யமான வெளிப்பாடே நம் சுற்றுச்சூழல். அது உயிருள்ளதும், உயிரற்றதுமான எல்லாவற்றின் தொகுப்புமாக இருக்கிறது. மகிழ்ச்சிகரமான ஆரோக்யமான வாழ்விற்கு இந்தப் பாதுகாப்பான சுற்றுச்சூழல் தேவையாக உள்ளது. அதில் கலாச்சாரம், கலை இவற்றின் பங்கும் உள்ளது” என்பதை முருகேஷ் அவர்களும் தன் படைப்புகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அதை இதில் உள்ள பல கவிதைகள் வலியுறுத்துகின்றன.அதில் இரண்டு உதாரணத்திற்கு.. மழை எச்சரிக்கை எப்படியாவது சொல்ல வருவான் என் தும்பி நண்பன் * மழையில் தலை சாயந்த பயிர்கள் தோள் தொட்டு எழுப்பும் சூரியக்கதிர்கள் * குழந்தைகளோடு எப்போதும் இயைந்து வாழ்ந்து வருபவர் .அவரின் எல்லா வகைப்படைப்புகளிலும் குழந்தைகளின் உலகமும் கல்வி சார்ந்த சிந்தனைகளும் இடம்பெற்றிருக்கும். அபூர்வமாகவே சிறுகதைகள் எழுதினாலும் அவற்றிலும் இந்த அக்கறை இருக்கும் . வெகுளியான குழந்தைகளின் உலகம் ஒருபுறம், கல்வி எனு வன்முறைத் தரும் சீண்டல்கள் என்று மறுபுறத்தையும் காட்டுபவர். தூங்கும் குழந்தை அனிச்சையாய் அசையும் விரல்கள் எழுதாத வீட்டுப் பாடம் * எல்லாமிருந்த வீட்டில் எதுவுமேயில்லை இப்போது ஊருக்குப் போய் விட்ட குழந்தைகள் * மேலே கண்ட்து போல் குழந்தைகளின் உலகத்தை காட்டும் பல கவிதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன சமூக உறவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் அவை சுட்டிக்காட்டி தனித்துவமாய் நிற்கின்றன மு முருகேஷின் புதிய முயற்சி. பல மொழிகளில் ஒரே புத்தகத்தில் சில படைப்புகள் ...இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அவருக்கு வாழ்த்துக்கள் ரூ80 , அகநி வெளியீடு வந்தவாசி.. = சுப்ரபாரதிமணியன்
SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , .. 09486101003 * Got “ katha award “ fro best short story writer from President of India-1993. * The novel “ Chayathirai “ got best novel award for 1998 year from Tamil nadu Govt. It has been transalated in English, Hindi, Malayalam, Kannada. And now in Bengal. It is an environment novel on our Tiruppur Town of earning 25,000 crores foreign currency on garment exports. Initially baninan garment machines were taken from Calcutta and our town baninan manufacturers learnt the technology form Calcutta people only. Chayathirai means – coloured or dyed curtain and it talks on environmental pollution and life of our small town peoples. It is transalated in Bengal by late Krishnamoorthy ( Sahitya akademi winner for transalation ) . He died on last year leaving 80 books on transalation works and creative works . The Bengal transalaion of Chayathiriai is a homage to Late Krishnamoorthy. * The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, New delhi * Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum * Pannathiraa - Kannada Translation of Chayathirai -Tamilselvi – Navayuga, Bangalore * Reng Rengli Sadar Mehili - Hindi Translation of Chayathirai - Meenakshi Puri, Subrabharathimanian: * Published 70 books including 15 novels , 16 short story collections, essays , drama etc * Age 61 / MSc Maths /Sub Divisional Engineer , BSNL , Telecommunication ( Rtd ) * Awards : - Katha award from President of India for best short story writer 1994 - Best novel award by Tamil Nadu government for Chayathirai 1998, and Tamil semmal award from Govt of Tamilnadu - Winner of Air India –Kumudam Literary award for novelette City 90 1995 and visit to England, European countries. - Coimbatore Kasturi Srinivasan Award for Best Novel “ Pinankalin Mugankal “2003 _ Coimbatore Lilly Deva sigamani award for Best short story writer andVarious State awards And various awards. * Translations: ============ * The Last symphony - Selected poems of Subrabharathimanian; Translated by R Balakrishnan. Published by SAVE, Tiruppur * The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, Newdelhi * The Unwritten letters – Theenneer Idaivelai Novel’s Engish Translation, Tr. By Prema Nanda kumar SAVE, Tiruppur * The Faces of Dead _ English Translation of Novel Pinainkalin Mugankal Tr. By R Balakrishnan Published y Kanavu, Central Institute of Indian Languages , Mysore * Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum * Pannathiraa - Kannada Translation of Chayathirai -Tamilselvi – Navayuga, Bangalore * Reng Rengli Sadar Mehili - Hindi Translation of Chayathirai - Meenakshi Puri, Neelakant Prakashan, New delhi * 1098 – Authours press , New Delhi * Notch novel . Authours press , New Delhi * சப்பரம் :Sapparam novel in Hindi Swargrath : Hastaksaran Prakasam Newdelhi 110 094 :ரூ 300 * மாலு : Maalu . novel in Hindi Lekehan : Radharani Hastaksaran Prakasam New delhi 110 032 : ரூ 300 * Editor: KANAVU Tamil Quarterly = since 1987 : 30 years * Central Sahitya Akademy Advisory Board Member ( 2007-12 ) * Visited Engalad, Paris , Germany, Malasya, Singapore, Bangla Desh < indonisiya, Thailand முகவரி : 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 தொலைபேசி : 09486101003 / 0421 2350199 மின்னஞ்சல் : subrabharathi@gmail.com /www.rpsubrabharathimanian.blogspot.com --------------------------------------------------------- சுப்ரபாரதிமணியன் : 18 நாவல்கள், 17 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 75 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் .. ” சாயத்திரை “ ன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “., கதா விருது “ உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். இவரின் நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக “ சாயத்திரை “ என்ற திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது. மூன்று நாவல்கள் இந்தியிலும், 5 நாவல்கள் ஆங்கிலத்திலும் , 5 நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. 5 சிறுவர் நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அதில் 4 ஆங்கிலத்திலும் வந்துள்ளன இவ்வாண்டு இவரின் “ அந்நியர்கள் “ என்ற நாவல் எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் பரிசு பெற்றது பெயர் :சுப்ரபாரதிமணியன் முகவரி : 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 தொலைபேசி : 09486101003 / 0421 2350199 மின்னஞ்சல் : subrabharathi@gmail.com /www.rpsubrabharathimanian.blogspot.com பிறந்த தேதி : 25/10/1955 : வயது 62 கல்வி/பணி : எம்.எஸ். ஸி ( கணிதம் ) பொறியாளர் தொலைபேசித்தொடர்புத் துறை ( Rtd ) விருதுகள் : * கதா பரிசு – இந்திய ஜனாதிபதி வழங்கியது, சிறந்த சிறுகதையாளருக்கானது. 1994 * தமிழ அரசு சிறந்த நாவல் பரிசு சாயத்திரை நாவலுக்காக. * குசின்னப்பபாரதி அறக்கட்டளை விருது சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலுக்காக * குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் குறுநாவலுக்காக பரிசு பெற்று இங்கிலாந்து, அய்ரோப்பியா நாடுகளுக்குப் பயணம். * கோவைகஸ்தூரிசீனிவாசன் அறக்கட்டளை பரிசு ” பிணங்களின் முகங்கள் “ நாவலுக்காக. .ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * ஓடும் நதி ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது ஓடும் நதி) * நீர்த்துளி ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு. ஓடும் நதி ) *. கி.ரா.வின் கரிசில் விருது “ கனவு “ சிற்றிதழுக்காக. * சேலம் “ எழுத்துக்களம்” விருது “ கனவு “ சிற்றிதழுக்காக- 25 ஆண்டுகள் நிறைவிற்காக. * கோவை லில்லி தேவசிகாமணி விருது சிறந்த சிறுகதையாளருக்காக * திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் கலைமாமணி விருது * திருப்பூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிறந்த நூல்கள் பரிசுகள் * ” கனவு “ இலக்கியக் காலாண்டிதழ் : ஆசிரியர்: 25 ஆண்டுகளாக வெளிவருகிறது. ( கனவு 25 பற்றிய தகவல்கள் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்ப்ட்ட படைப்புகள் காவ்யா பதிப்பகம் 700 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் ========================================== * மற்றும் சிலர் 1987 * சுடுமணல் 1990 ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது ) * சாயத்திரை 1998 ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கிறது ) * பிணங்களின் முகங்கள் 2003 ( கோவை கஸ்தூரி சீனிவாசன் பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * சமையலறைக் கலயங்கள் - 2005 * தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது ) * ஓடும் நதி 2007 ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது) * நீர்த்துளி 2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு ) * தறிநாடா ( என்சிபிஎச்) * புத்துமண் ( உயிர்மை , என்சிபிஎச் ) * நைரா ( என்சிபிஎச் ) * கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம் ) * முறிவு - 2017 ( உயிர்மை, நிவேதிதா –இலங்கை உதயணன் இலக்கியப் பரிசு பெற்றது ) * கடவுச்சீட்டு ( முன்னேற்றப்பதிப்பகம், பழனியப்பா ) * அந்நியர்கள் ( எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றது ) * ரேகை ( பொன்னுலகம் பதிப்பகம்) வணக்கம்.
*சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்புகள்: *பூமியின் பாடல்கள் ( சாகித்ய அகாதமி, சென்னை வெளியீடு 2013 வடகிழக்கு இந்தியக்கதைகள் ஆங்கிலத்திலிருந்து ரூ 250) * பின்னலின் பின்னல் ( 2008, சாலிடாரிட்ட் அமைப்பு,திருப்பூர் பின்னாலாடை தொழில் பற்றிய நூல் ஆங்கிலத்திலிருந்து. 320 பக்கங்கள் ரூ 600) * உயில் மற்றும் பிற கதைகள் ( சாகித்ய அகாதமி சென்னை வெளியீடு , 2012 சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜெ.பி.தாஸின் ஒரியக்கதைகள் ஆங்கிலத்திலிருந்து ரூ 250 ) * அகதிமுகாமில் ஓர் இரவு ( ஒடியக்கவிதைகள். மூலம் சுப்னபெஹேரா. பெண் கவிஞர் ..ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2018 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2018 ) * கான்சிபூரின் நிலவு ( ஒடியக்கவிதைகள். மூலம் சங்ராம் ஜெனே ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2017 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2017 ) * பன்னாட்டுக்கவிதைகள் 2016 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2018 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2018 ) * பன்னாட்டுக்கவிதைகள் 2017 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2017 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2017 ) *போப் சூழலியல் மற்றும் கட்டுரைகள் பன்னாட்டுக்கட்டுரைகள் சூழலியல் சார்ந்தவை 2017 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2017 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2017 ) இந்தியக் கவிதைகள் ( ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, 2015 கனவு பதிப்பகம் ,திருப்பூர் 2015 ) *. பேசாத.. லாமியா அஞ்சும் ( ஆங்கிலத்திலிருந்து கவிதைகள் ) –கவிநிலா பதிப்பகம், திருப்பூர் * அரசியல்வாதிவும் புறாவும் – இந்தியக்கவிதைகள் மற்றும் வெளிநாட்டுக்கவிதைகள் ( கவிநிலா பதிப்பகம், திருப்பூர் ) * பெண்களும் தொழிற்சங்கங்களும் ( சேவ் திருப்பூர் வெளியீடு ) * *புலிகள் ( மொழிபெயர்ப்புக்கவிதைகள் ) கனவு திருப்பூர் 2021 *பேசாத ( அஞ்ஞிம் கவிதைகள்-சார்ஜா வாழ் இளம் பெண் கவிதைகள் ) கவிதைகள் கனவு திருப்பூர் 2021 ( ஆங்கிலத்திலிருந்து ) * புலம்பெயர் மணல் துகள் கள்(சார்ஜா வாழ் கவிஞர் கவிதைகள் ) கனவு திருப்பூர் 2022 ( ஆங்கிலத்திலிருந்து ) மொழிபெயர்ப்பாகி உள்ள படைப்புகள்: * The Last symphony - Selected poems of Subrabharathimanian; Translated by R Balakrishnan. Published by SAVE, Tiruppur * The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, Newdelhi * The Unwritten letters – Theenneer Idaivelai Novel’s Engish Translation, Tr. By Prema Nanda kumar SAVE, Tiruppur * The Faces of Dead _ English Translation of Novel Pinainkalin Mugankal Tr. By R Balakrishnan Published y Kanavu, Central Institute of Indian Languages , Mysore * Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum * Pannathiraa - Kannada Translation of Chayathirai -Tamilselvi – Navayuga, Bangalore * Reng Rengli Sadar Mehili - Hindi Translation of Chayathirai - Meenakshi Puri, * oh.. Hyderabad –articles * Malu –novel –Notch * Novels Published Translations in Malyalam : 1.* Sappara manjam – Malayal trans. Of Saparam novel in print ( saikatham Publication) * 2. Harao hara haro hara - Malayal trans. Of komanam novel ( yuvamela) 3. Sayam puranda thira ( sayathirai - ) Chintha 4. Sudumanal – Chintha 5. Reekai –Novel 6. Oh.. Hyderabad
புதுவை கவிஞர் மீனாட்சி அவர்கள் அவரின் ஆரோவில்- சமீபத்திய இதழில் இதைக்குறிப்பிட்டு அது எந்த அளவில் உள்ளது என்று கேட்டிருந்தார். ஒற்றைத் திருக்குறளோடு நிற்கிறது : திருப்பூரிலிருந்து 30 கி மீ தூரத்தில் இருக்கும் மலையப்பாளையம் குன்று மேல் இருக்கும் முருகன் கோவிலிலைச் சுற்றியுள்ள பெரும்பரப்புப் பாறைகள் விசேசமானவை.அங்கு பாறைகளில் திருக்குறளை செதுக்கி வைக்கும் பணி சில ஆண்டுகள் முன்னால் அரசு ஆரம்பித்தது. அரசு பெரும் தொகையை அதற்கு அறிவித்தது. ஆனால் ஒற்றைத்திருக்குறளோடு அப்படியே நிற்பதை நேற்று அங்கு சென்ற போது அறிந்தேன். புதிய அரசு இது குறித்து ஏதாவது செய்யலாம். புதுவை கவிஞர் மீனாட்சி அவர்கள் அவரின் ஆரோவில்- சமீபத்திய இதழில் இதைக்குறிப்பிட்டு அது எந்த அளவில் உள்ளது என்று கேட்டிருந்தார். ஆங்கில நூல்கள் என் இளையமகள் சுபமுகி ஆங்கில இலக்கியம் பயின்று ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பணிபுரிந்தார். திருமணமான பின் குவைத் சென்று விட்டார். அவர் 8 ஆண்டுகளுக்கு முன் படிக்கையில் வாங்கிய எம். ஏ ஆங்கில இலக்கிய நூல்கள், உரைநூல்கள், கூடுதலாக துணைப்பாட நூல்கள் என்னிடம் உள்ளன. அவை வேண்டுவோர் – எம். ஏ ஆங்கில இலக்கிய மாணவமாணவியர் என்னைத் தொடர்பு கொள்ளலாம் உள் பெட்டியில் .( அல்லது புலனம் எண்ணிலும் 9486101003). இலவசமாகத் தரத்தான் கேட்கிறேன் .
திருவள்ளுவர் தின விழா நிகழ்ச்சி: மக்கள் மாமன்ற நூலகத்தில் என் சாயத்திரை நாவல் எழுப்பிய வளர்ச்சியா சுற்றுச்சூழலா சார்ந்த கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் இருப்பதை பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரும் நிட்மா அமைப்பின் தலைவருமான அகில் ரத்தினசாமி அவர்களிடம் முன் வைத்தேன் * நொய்யல் நதியை சாயக்கழிவுகளால் நாங்கள் கெடுத்ததை கடந்த 5 ஆண்டுகளாக சரி செய்து வருகிறோம். 2023 ல் நொய்யல் மீண்டும் ஜீவநதி யாக மாறும்.. ஏற்றுமதி யாளர்கள் சங்க த் தலைவர் களில் ஒருவரான அகில் ரத்தின சாமி ௨ரை.இன்று மக்கள் மாமன்ற நூலகத்தில். திருவள்ளூர் தின நாள். தமிழன் னை சிலைக்கு பெரும் நிதியுதவி வழங்கினார் * சுப்ரபாரதிமணியன் 1.பிறந்த ஊர் செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம் 2 பிறந்த ஆண்டு, தேதி : 25/10/1955 3 பெற்றோர் பெயர் “ : பழனிச்சாமி ,பழனியம்மாள் ( நெசவாளர்குடும்பம் ) 4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள். ஆரம்பக்கல்வி : செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம் உயர்நிலைப்பள்ளி: திருப்பூர் பி எஸ் சி கணிதம் : திருப்பூர் அரசு கலைக்கல்லூரி எம் எஸ் சி கணிதம் : கோவை பூ சா கோ கலைகல்லூரி 5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்” சுகந்தி செப்டம்பர்11 , 1984 சுகந்தி மறைவிற்குப் பின் இரண்டாம் திருமணம் : கிரிஜா 6.குழந்தைகள் பெயர்: ஸ்ரீமுகி, சுபமுகி 7 தொழில்: தொலைத்தொடர்புத்துறை ( 2014ல் ஓய்வு) 30 ஆண்டுகள் பணி 8.முதல் படைப்பு. ” திருப்பூர் விழிப்பு இடது சாரி இதழ் “1977 சிறுகதை சுதந்திர வீதிகள் ( இந்தியாவின் அவசரகால கட்டம் சார்ந்த சிறுகதை ) 9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு - 1977 10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்- ஜெயகாந்தன், கிரா, ஜெயந்தன் 11.விருதுகள் : பட்டியல் இணைப்பு 12. நூல்பட்டியல் - [முடிந்தால்] இணைப்பு 13 கலை இலக்கியப் பெருமன்றம். உறுப்பினர் அரசியல் செயல்பாடுகள் இல்லை. 14: கனவு இலக்கிய இதழ் 36ம் ஆண்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது ( ஹைதராபாத்தில் ஆரம்பித்த இதழ் ) 14 உங்கள் இணையதளம் பற்றி,. அதன் வெளியீட்டு நாள் www.rpsubrabharathimanian.blogspot.com 2000
தினம் ஒரு புத்தகம் பள்ளி மறுதிறப்பு சுப்ரபாரதிமணியன் செங்கை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகம். யுரேகா வெளியீடு. நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன் தொலைபேசித் துறையில் பணிபுரியும் திருப்பூர் வாசி. அந்நகரின் பிரச்சனைகளை தன் படைப்புகளின் வழியாக பதிவு செய்து வருபவர். இவருடைய நாவல் சாயத்திரை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பள்ளி மறு திறப்பு, பிறந்த தினம் ஆகிய இரண்டு கதைகளிலும் குழந்தைகளின் மன உலகை சிறப்பாக சொல்லியிருக்கிறார். கல்வி, அன்பு, கருணை இம்மூன்றும் குழந்தைப் பிராயத்தில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நற்பேறுகள். அவற்றை இந்த இரு கதைகளும் எளிய நடையில் பேசுகின்றன . விடுமுறை நாளில் வேலைக்குச் செல்லும் குழந்தை தொழிலாளியின் மன உணர்வை பிரதிபலிக்கும் கதை பள்ளி மறு திறப்பு. குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளின் மன உணர்வை பிரதிபலிப்பது பிறந்தநாள் கதை. இத்தொகுப்பில் உள்ள இந்த இரண்டு கதைகளிலும் குழந்தைகளின் மன உலகில் ஆசிரியர் ஆழ்ந்து சஞ்சரித்து இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது. தோழமையுடன் சீனி.சந்திரசேகரன்
மீள் பதிவு பேட்டி: பிரண்ட் லைன் Subrabharathi Manian. His writings espouse the cause of the poor. “THE greatest tragedy of Tirupur, the erstwhile bastion of the leftist and trade union movements in western Tamil Nadu, is that the class consciousness of the workers, more particularly the migrant labour in the garment industry, has been blunted and they are being pushed into the drudgery of a monotonous, dull and mechanical life,” says Subrabharathi Manian, a member of the Sahitya Akademi Advisory Board, who in his writings espouses the cause of the poor and the marginalised, particularly the migrant labourers in the garment industry. Talking to Frontline, he expressed anguish at reports on suicides and attempts to commit suicide by migrant workers and their family members. “Many migrant workers in the garment industry, who alienate themselves from the trade unions in a bid to earn more through hard work, ultimately slip into depression the moment they realise that they have been drawn into an illusory world of prosperity,” he said. According to him, the worst hit among the migrants are single parents and their children. He recalled how he, along with his parents, migrated to Tirupur five decades ago, when he was hardly 10 years old, from his native Segadanthaazhi village. For hundreds of families in Segadanthaazhi and a few other villages in the area, Tirupur's fledgling hosiery industry offered hope . Manian learnt a lot about the travails of migrant labourers when he was an employee of the Telecom Department in Hyderabad for eight years, until 1993. The labourers, most of them from southern Tamil Nadu looking for work in Andhra Pradesh, inspired his first novel, Matrum Silar (And a Few Others), in 1989. Issues such as inter-State river water disputes, which posed a formidable challenge to national integration, provoked him to pen Sudu Manal (Hot Sand) in 1992. When he returned to Tirupur in 1994 he was stunned by the growth of the knitwear industry, which had started earning foreign exchange to the tune of Rs.10,000 crore. But soon he was able to see the other side of the “Dollar City”, with 30,000 children employed in the hosiery industry. Beside, the release of untreated effluents into the Noyyal river, the lifeline of Tirupur, by dyeing units added to the agony of the farming community. As a socially conscious writer committed to socialism and democracy, Manian wielded his pen against the evil practice of child labour and the pollution of the Noyyal. His novel Saayathirai (The Coloured Curtain), published in 1994, described the devastating effect of effluents from dyeing factories on the cultural and economic life of the people. Translated into English, Hindi, Malayalam and Kannada, the novel won the appreciation of the literary world. A recipient of the “katha” award for the ‘best short story writer' and the Tamil Nadu government's award for ‘best novel', he has authored 30 works, including seven novels, 13 short story collections and a travelogue. It was a sad reality that activists of different political parties in Tirupur were prepared to discuss everything under the sun but carefully skirted issues such as child labour, labour rights and protection of the environment. Marxism helped him to see things from a different perspective. Along with a few NGOs, he and his friends in the progressive literary circles launched an awareness campaign on child labour and environment protection. However, he made it clear that they were not opposed to industrial development or science and technology. They were disheartened by the lukewarm response from the people and the industry but saw light at the end of the tunnel in the form of pressure on the exporters from buyers. This forced the exporters to adopt mechanisms such as social audits, including ISO 9000 and Social Accountability 8000, to ensure labour standards and eco-friendly garments, he said. The media forced the government to intervene, he added. Though child labour was no longer in vogue in the big export units, it was still practised at the sub-contract level and by some of the units producing knitwear for the domestic market, said Manian. Exporters now responded to issues relating to pollution, and corporate social responsibility and fair trade practices were among the issues that were widely discussed in the town, said Manian. Large-scale influx of migrant workers added a new dimension to Tirupur's problems. These first-generation workers are mostly single men or women and they tire themselves out when still young. Manian said government agencies, exporters, trade unions, political parties and intellectuals should put their heads together to evolve a strategy to ensure that the garment labourers were treated humanely. Writers had a key role to play in this regard, he concluded. S. Dorairaj நன்றி
இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்டறை .... கவிதைப்பட்டறை கவிதைப்பட்டறை 2022 13/2/2022 ஞாயிறு அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் ( காலை 10 மணி முதல் )நடக்கவிருக்கும் கவிதைப்பட்டறையில் பங்கு பெற விரும்புகிறவர்களை வரவேற்கிறோம் . தமிழ்க்கவிதை வரலாறு, வகைகள், கவிதை எழுதும் அடிப்படைகள் உட்பட பலதலைப்புகளில் உரைகளும் கவிதை எழுதப் பயிற்சியும் இடம்பெறும். கட்டணம் எதுவுமில்லை பயிற்சியாளர்கள்: சுப்ரபாரதிமணியன், து சோ பிரபாகர், அழகுபாண்டி அரசப்பன் கவிதைப்பட்டறை 2022 நடக்குமிடம் : திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம்சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம் .திருப்பூர் 641 604 தொடர்புக்கும் முன்பதிவுக்கும் : சி. சுப்ரமணியம் 93457 20140 )) கவிதை2022/ ஏதாவது பொதுத்தலைப்பிலும் கவிதை2022 தொகுப்புக்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது வணக்கம் . வருகிற சித்திரை முதல்நாள் (14-4-2022) திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழன்னைக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும். அவ்வமயம் ஒரு தமிழ்க் கவிதை நூல் கவிதை2022 வெளியிடப்படுகிறது. தலைப்பு: "தமிழே! அமுதே! செம்மொழியே!" அல்லது ஏதாவது பொதுத்தலைப்பிலும் 24 வரிகள் , 2 நகல், ஒரு புகைப்படம், பங்குத் தொகை உரூபாய் 200/. பணமாக,காசோலை, அல்லது MO மூலம். கடைசிநாள் 3-3-2-22.படைப்பாளர்களுக்கு ஒரு புத்தகம் வழங்கப்படும். அரசியல் சாதி மதம் இனம் மொழி வேற்றுமை இல்லாத படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும். சிறந்த படைப்பாளர்கள் பாராட்டப்படுவார்கள்மற்ற விபரங்களுக்கு 9345720140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் மக்கள் மாமன்றம். : முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம், டைமண்ட் (திரையரங்கம் அருகில்) மங்கலம் சாலை, திருப்பூர் 641604. ReplyForward

சனி, 18 டிசம்பர், 2021

மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன் சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்... கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார். வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது. ( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )