சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 9 செப்டம்பர், 2009

காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்





காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
===============================

காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.சென்றாண்டு  கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.
அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்..அன்று தான் வாய்த்தது.ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும், திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறோரு கதையை , அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் ( நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம். கதையின் மையம் முடிவானது.3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துள் 30  சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக பட்டு என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார்.தேவைப்படும் போது கூப்பிடுவதாகச் சொன்னார். பலரிடம் அந்த திரைக்கதை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார்.தயாரிப்பில் நிச்சயம் ஈடுப்டுவேன் என்றார்.‌

வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன.சில ஆண்டுகளுக்குப் பின்.. கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார். பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்து விட்டு அவரிடம் தொடர்பு கொண்ட போது, தனக்கு பார்க்க கிடைக்கவில்லை, செய்தி தெரியவிலை என்றார்.
கேர‌ளா சர்வதேச திரைப்ப‌ட‌விழாவிற்கு தொட‌ர்ச்சியாக‌ச் செல்ப்வ‌ன் நான்.சென்ற‌ டிச‌ம்ப‌ரில் திருவ‌ன‌ந்த‌புர‌த்திற்கு சென்ற‌ போது காஞ்சீவ‌ரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று‌ பார்த்தேன். அதிர்ச்சியாக‌ இருந்தது.எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாண பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன்.திருமணக்கனவு நிறைவேறாதபோது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார்.நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ் நாட்டு  நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும். பிறகு தமிழ் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். த‌ளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும்.


முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுகு முன் ஏற்பட்டது இது போலத்தான். ‌



=சுப்ரபாரதிமணியன்

 

கனவு






The Hindu

புதன், 2 செப்டம்பர், 2009

உடுமலைவாசியாகிவிட்டேன்...

1. உடுமலைவாசியாகிவிட்டேன்
================

15 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூரில் வசித்து வந்த நான் உடுமலைக்கு மாற்ற‌லாகி ஒரு வருடம் ஆகி விட்டது. வீடு பார்த்து குடி வந்தும் விட்டேன். திருப்பூரைப் பிரிவது சிரமமாக இருந்த‌து. இங்கு வந்த பின்பு " பதியம் " நடத்திய ஒரு கவிஞர்கள் சந்திப்புக்காக திருப்பூர் சென்றபோது அந்நிகழ்ச்சியில் 'பாரதிவாசன்' 'இடம்பெயர்வு' என்ற தலைப்பில் அவர் வீடு மாற்றியது பற்றி வாசித்த கவிதை என் அனுபவமாகவும் இருந்தது.கவிஞர்கள் கார்த்திகேயன், சுரேஸ்வரன், தமிழவன், யாழ்மதி, இளஞ்சேரல், ஆகியோரையும் சந்திக்க முடிந்துது.
( சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கவிஞர்கள் சந்திப்பில் நாஞ்சில் நாடன் கவிஞர்கள் சந்திப்பு என்பதே குடிப்பதற்காகவே என்று குற்றம் சாட்டியதைக் குறிப்பிட்டபோது சுரேஸ்வரன் ஆமாம் அதுக்குந்தான் என்றார்.)



2. சமீபத்திய இரண்டு சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகள்:


அ. அஸ்மிதா நிகழ்ச்சி

பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் வாசிப்பு
சென்னை கன்னிமேரா நூலகம்

பங்கு பெற்றோர்: பாமா, ராஜலட்சுமி, பாரதி


ஆ. மலையின மக்கள் இலக்கியம்:‌சேல‌ம்

பங்கு பெற்றோர்:சீ பக்தவச்சலபாரதி, சிற்பி, தமிழ் நாடன்,
ஆ செல்லபெருமாள், பெ.மதையன்,இந்திரன்
நசிமுதீன், கரு அழ குண‌சேகரன்
============================================================
அடுத்த‌ இரு நிக‌ழ்ச்சிக‌ள்;

1. த‌ங்க‌ம் மூர்த்தியின் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டையில் கவிஞர்கள் ச‌ந்திப்பு

‌‌
2. சுப்ர‌பார‌திம‌ணிய‌ணின் ஒருங்கிணைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு
திருப்பூரில்:
" த‌மிழ் நாட‌க‌ இய‌க்க‌ங்க‌ளும், ந‌வீன‌ போக்கும்

=============================================================

சாகித்திய அகாதமியின் : Writers in Residence
=========================================

சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது.

சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு Writers in Residence என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ரூ 25,000/ வீதம் இலக்கியப் பணிக்காக உதவி வழங்கியுள்ளது .தோப்பில் முகமது மீரான் , சா கந்தசாமி, பொன்னீலன், ஈரோடு தமிழன்பன்,, பிரபஞ்சன், ஆகியோர் அவ‌ர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழான இலக்கிய நிகழ்ச்சியொன்றை தோப்பில் முகமது மீரான் திருநல்வேலியில் இந்து கல்லூரியில் நடத்தினார். நானும் கலந்து கொண்டேன். புதுமைப்பித்தன், பாரதியார், தொமுசி ரகுநாதன், திகசிவசங்கரன்,, போன்ற இலக்கிய
முன்னோடிகள் படித்த பழமையானக் கல்லூரி என்பதால் நானும் புளங்காகிதம் அடைந்தேன்.கல்லூரி வளாகத்துக்குள் தென்பட்ட புது விநாயகர் கோவில் கும்பவிசேக இரைச்சல் தொந்தரவு தந்த‌து. மாணவர்களிடம் பேசுவது கொஞ்சம் சங்கடமானது. நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வது கொடுமைதான்.நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பில் பேசினேன். கவிஞர் கிருசி இலக்கிய போக்குகள் என்ற தலைப்பில் பேசியவர் திருநல்வேலி , கோவில்பட்டி எழுத்தாளர்களை மட்டும் அடையாளம் காட்டி குசும்பு செய்தார்,. வழக்கமான திருநல்வேலி குசும்புதான் அது.

தோப்பில் மீரானின் சமீபத்திய மிக முக்கியமான நாவலான "அஞ்சு வண்ணம் தெரு" பற்றித்தான் பேச விரும்பி கட்டுரை தயாரித்திருந்தேன். அந்த அரங்கில் கிருசியைத் தவிர வேறு யாரும் அந்த நாவலைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று பட்டது அக்கட்டுரையை இந்த இதழ் "தீராநதி:"யில் வாசியுங்கள். நித்தில், கருப்பையா போன்ற நவீன இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்ட ஆசிரியர்களைக் காண முடிந்தது. குற்றாலத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும் கூட்டம் இல்லை. திருநல்வேலி கதிர், தாமிரபரணி கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது பற்றி படம் எடுத்து சிரமப்பட்டவர் இப்போது அதை யாரும் கண்டு கொள்வதில்லை.சுலபமாக சுரண்டல் நடக்கிறது என்கிறார். பிளச்சிமடா ஞாபகம் வந்நது. அங்கேயே முன்பு மாதிரி கோக்காகோலா தொழிற்சாலை இயங்குகிறது.பிளாச்சிமடாவில் நடைபெற்ற ஒரு சுற்றுசூழ‌ல் போராட்ட நிகழ்ச்சிக்கு நானும் , மகுடேசுவரனும் கலந்து கொண்டு எதிர்ப்பு கவிதைகள் படித்தோம்.வநதனா சிவா, அருந்ததி ராய் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.மலையாள கவிஞர் விஜயகுமார் குனிசேரி அக்கறையுடன் கலந்து கொண்டிருந்தார்.


தாமிரபரணி இன்னும் திருப்பூரின் நொய்யலாகி விடவில்லை என்பதுதான் சற்று ஆறுதல்.



= சுப்ரபாரதிமணியன்

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி

சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
==========================================


சதாவதானி செய்குத‌ம்பி பாவ‌ல‌ர் ப‌ற்றிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் நாக‌ர்கோவில் இந்து
இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று சர்ச்சையில் இருந்தவர். அவரின் படைப்புகள் பல் வேறு கோணங்களில் அமைந்திருந்தன.அவரின் குடும்பத்தைச் சார்ந்தவரிகள் பல‌ர் கலந்து கொண்டார்கள்.பொன்னீலன், தோப்பில் முகமது மீரான்,சிரிகுமார் ஆகியோரின் பேச்சுகள் கவனத்திற்குரியவை.சா அ. தென்னிந்திய செயலாளர் இளங்கோவனின் பேச்சு விரிவாக இருந்தது. பலரின் பேச்சு தயாரிப்பை வீணாக்கி விட்டது என்று சில கவலை கொண்டனர். என் பேச்சு பாவலரின் புலமையும், வறுமையும் என்பதாகும். சதாவதானத்தில் ஒரு அங்கமான சீட்டாட்டத்தில் அவரின் புலமை வறுமையோடு விளையாடியது என்பது என் மையமாக இருந்தது. சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெறவில்லை.

================================================================================

சிற்பி ரஸ்ய பயணம்
====================

சாகித்திய அகாதமியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்ரமணியன் ரஸ்யப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார்.பயணத்தில் பங்கு பெற்றிருக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் பாமா ஆவார்.

=========================================================== ====================

எனது நூல்கள் மொழிபெயர்ப்பில்:
=============================
1. என் சாயத்திரை நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு " சாயம் புரண்ட திர" திருவனந்தபுரம் "சிந்தா " பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரூ 85
. மொழிபெயர்த்த‌வர்: கோவையைச் சார்ந்த ஸ்டான்லி அவர்கள்.சாயத்திரையின் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகள் முன்பு வெளியாகி இருக்கின்றன.

2. என‌து நாவ‌ல் " பிண‌ங்க‌ளின் முக‌ங்க‌ள் " ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பில் " The faces of the dead " என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. 220 பக்கங்கள். மொழிபெயர்த்தவர்: ஆர் பால கிருஸ்ணன், கோவை

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010

15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010
=================================

* க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது ரூ 15,000

* சிற்பி இலக்கியப் பரிசு ரூ 5,000


கவிதைப் படைப்புகளை, தொகுப்புகளை அனுப்ப வேண்டிய‌
முகவரி:



க‌விஞ‌ர் சிற்பி அற‌க்க‌ட்ட‌ளை,

106 ( 50 ) அழ‌க‌ப்பா குடிய‌மைப்பு,

பொள்ளாச்சி : 642 001.

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா
========================================================


சாகித்திய அகாதமி மூன்று நாள் நிகழ்ச்சிகளை புதுவையில் நடத்தியதி.


முதல் நாள் நிகழ்ச்சி: புதுவை சிவம் பற்றியது. ஒரு நெசவாளியாக வாழ்ந்தவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்ககையை பிரதிபலிப்பதை கவிஞர் சிற்பி பால சுப்ரம்ணியன் விளக்கினார். அ மார்க்சின் உரை அவரின் அரசியல் போராட்டத்தில் இலக்கியம் ஒரு ஆயுதமாகப் பயன் பட்டதை விளக்கியது முக்கிய கோணமாக இருந்தது.ராம குருநாதன் தலைமை உரை, இளங்கோவனின் அறிமுக‌ உரை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு கலந்து கொள்ளாதது குறை.
சிவ இளங்கோவின் குடுப்பத்தினர் சரியான வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் நினைவு நாள் நிகழ்ச்சி. பிரபஞ்சனின் உரையில் ஆனநத்ம் பிள்ளை டைரிக் குறிப்புகளை முன் வைத்து புதுவை கலாச்சாரம் பற்றிய ஆழமான ஆய்வாக இருந்தது. இரா மோகன், இந்திரனின் மே சு ராசுகுமார் கட்டுரைகளில் பிரஞ்சு கலாச்சாரம் தந்த பாதிப்புகளைப் பற்றிய நிறைய தகவல்கள் அமைந்திருந்தன. ஆனந்தம் ரங்கம் பிள்ளை பற்றி செல்வராசுவின் சாகித்திய அக்காதமி நூல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள்: ஆரோவில்லில் சிறப்பாக நடை பெற்றது. சிற்பியின் உரை வ வே சு அய்யர், அரவிந்தர், பாரதியின் சிந்தைகள் தமிழில் நவீன கவிதைக்கு உரம் சேர்த்ததை விள்க்கியது. அரவிந்தரின் Future Poetry உண‌ர்வுகளை மறுத்து, ஏகாந்த‌த்த்தை விள்க்குவத்யும்,உரத்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விள‌க்கினார்.கே எஸ் சுப்ரமணியத்தின் கட்டுரை விளிம்பு நிலை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கவிதகளை அடையாளப் படுத்தும் விதமாய், இருந்ததையும், சபல்ட்ரான் ஆராச்சியின் அம்சங்களையும் கொண்ட ஒரு சிறந்த் கட்டுரையாக அமைந்திருந்தது,



கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இல தங்கப்பா தலைமை தாங்கினார். மாலதி மைதிரி, தங்கம் மூர்த்தி, பழமலை, விழி பா இதய வேந்தன், அன்பாதவன், சுப்ரபாரதிமணியன், மகரந்தன், மீனாட்சி, சேதுபதி , சிற்பி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சிற்பியின் கவிதைகள் ஈழத்தின் நிலைமைகளை படிமமாக்கியிருந்தன‌. பழ‌மலையின் ஒரு கவிதை "சவரம் ' பற்றியதாக இருந்த‌த்தால் பல் பெண்கள் வெளி நடப்பு செய்தனர். ஆன்மீகக் கவிஞர் தலை குனிந்திருந்தார்.ராஜ்ஜாவும் சவரத்தைத் தொடர்ந்து ம‌யிர் கவிதைகளை வாசித்தார். அரவிந்தரின் சாவித்திரியிலிருந்து ஒரு பகுதி அன்னையிஅன்னையின் குரலில் ஒலிபரப்பட்டது வித்தியாசமான அனுபவ‌மாக இருந்து. இளம் பாரதி, பாரதி வசந்தன், புதுவை ரஜினி, குணவதி மைந்தன் , தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா
========================================================


சாகித்திய அகாதமி மூன்று நாள் நிகழ்ச்சிகளை புதுவையில் நடத்தியதி.


முதல் நாள் நிகழ்ச்சி: புதுவை சிவம் பற்றியது. ஒரு நெசவாளியாக வாழ்ந்தவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்ககையை பிரதிபலிப்பதை கவிஞர் சிற்பி பால சுப்ரம்ணியன் விளக்கினார். அ மார்க்சின் உரை அவரின் அரசியல் போராட்டத்தில் இலக்கியம் ஒரு ஆயுதமாகப் பயன் பட்டதை விளக்கியது முக்கிய கோணமாக இருந்தது.ராம குருநாதன் தலைமை உரை, இளங்கோவனின் அறிமுக‌ உரை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு கலந்து கொள்ளாதது குறை.
சிவ இளங்கோவின் குடுப்பத்தினர் சரியான வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் நினைவு நாள் நிகழ்ச்சி. பிரபஞ்சனின் உரையில் ஆனநத்ம் பிள்ளை டைரிக் குறிப்புகளை முன் வைத்து புதுவை கலாச்சாரம் பற்றிய ஆழமான ஆய்வாக இருந்தது. இரா மோகன், இந்திரனின் மே சு ராசுகுமார் கட்டுரைகளில் பிரஞ்சு கலாச்சாரம் தந்த பாதிப்புகளைப் பற்றிய நிறைய தகவல்கள் அமைந்திருந்தன. ஆனந்தம் ரங்கம் பிள்ளை பற்றி செல்வராசுவின் சாகித்திய அக்காதமி நூல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள்: ஆரோவில்லில் சிறப்பாக நடை பெற்றது. சிற்பியின் உரை வ வே சு அய்யர், அரவிந்தர், பாரதியின் சிந்தைகள் தமிழில் நவீன கவிதைக்கு உரம் சேர்த்ததை விள்க்கியது. அரவிந்தரின் Future Poetry உண‌ர்வுகளை மறுத்து, ஏகாந்த‌த்த்தை விள்க்குவத்யும்,உரத்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விள‌க்கினார்.கே எஸ் சுப்ரமணியத்தின் கட்டுரை விளிம்பு நிலை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கவிதகளை அடையாளப் படுத்தும் விதமாய், இருந்ததையும், சபல்ட்ரான் ஆராச்சியின் அம்சங்களையும் கொண்ட ஒரு சிறந்த் கட்டுரையாக அமைந்திருந்தது,



கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இல தங்கப்பா தலைமை தாங்கினார். மாலதி மைதிரி, தங்கம் மூர்த்தி, பழமலை, விழி பா இதய வேந்தன், அன்பாதவன், சுப்ரபாரதிமணியன், மகரந்தன், மீனாட்சி, சேதுபதி , சிற்பி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சிற்பியின் கவிதைகள் ஈழத்தின் நிலைமைகளை படிமமாக்கியிருந்தன‌. பழ‌மலையின் ஒரு கவிதை "சவரம் ' பற்றியதாக இருந்த‌த்தால் பல் பெண்கள் வெளி நடப்பு செய்தனர். ஆன்மீகக் கவிஞர் தலை குனிந்திருந்தார்.ராஜ்ஜாவும் சவரத்தைத் தொடர்ந்து ம‌யிர் கவிதைகளை வாசித்தார். அரவிந்தரின் சாவித்திரியிலிருந்து ஒரு பகுதி அன்னையிஅன்னையின் குரலில் ஒலிபரப்பட்டது வித்தியாசமான அனுபவ‌மாக இருந்து. இளம் பாரதி, பாரதி வசந்தன், புதுவை ரஜினி, குணவதி மைந்தன் , தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

சாகித்திய அகாதமி

கவிதை குழாம்; வத்தலகுண்டு
=============================

வ‌த்தலகுண்டு சி சு செல்லப்பா, ராஜம் அய்யர், ராமையா போன்ற இலக்கிய முன்னோடிகளையும், சுப்ரமணிய சிவா போன்ற சுதந்திர தியாகிகளையும் நினைவு கொள்ளச் செய்யும் ஊராகும். சிறப்பு தன்மை வாய்ந்த ஊரில் சாகித்ய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சுப்ரமணிய சிவா வீட்டைத் தேடிப்போனால் யாரும் அடையாள‌ம் காட்ட மறுக்கிறார்கள். நினவிடம் என்று எதுவும் இல்லை. புது வீடு முளைத்திருக்கிறது. செல்லப்பா வீட்டை நினைவு கொள்ளும் அவரின் உறவினர்கள் ஆறுதல் தந்தார்கள். ராஜம் அய்யரின் நினைவாய் ஒரு கல்வெட்டு இருந்தது. இலக்கிய முன்னோடிகளின் ஊரில் அவர்களை அடையாளம் காட்ட ஆளில்லை. வருத்தமாக இருந்தது.
சுப்ரபாரதிமணியன் நவீன தமிழ்க் கவிதையை அடையாளப்படுத்தும் வகையில் இரு கவிஞர்களைப் பற்றிய கட்டுரையை வாசித்தார்.1 சிற்பி பாலசுப்ரமணியன். மூத்த கவிழஞர் என்ற வகையில் மரபும், புதுமையும் இணைந்த முயற்சிகளை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைதொகுப்பை முன் வைத்து விளக்கினார். இளைய கவிஞர் என்ற முறையில் சூரிய நிலாவின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து நவீன அம்சங்களை எடுத்துரைத்தார்.தென்மண்டல செயலாளர் இளங்கோவன் சாகித்திய அக்கதமியின் ஒருமைப்பாட்டு பணியை பல் வேறு நிகழ்ச்சிகளை முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார்.தங்கம் மூர்த்தி நவீன கவிதையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றி பேசினார். ஆனைவாரி ஆன்நதன் மரபுக் கவிதயின் பலம் பற்றி எடுத்துரைத்தார்.


கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை காவல் துறை அதிகாரியும் கவிஞருமான சின்னசாமி துவக்கிவைத்தார்.... 2000 ஆண்டு கால் மரபு கொண்ட தமிழ்க் கவிதையின் செழுமை பற்றி விள‌க்கினார். பழ‌மலை கவிஞ‌ர்களை அறிமுகப்படுத்தியும், தமிழ் சூழ‌லில் அரசியல் செலுத்தும் செல்வாக்கு பற்றியும் எடுத்துரைத்தார்.கவிஞர்கள் ரசூல், சக்தி ஜோதி, ரத்திகா, சுபமுகி, மயூரா ரத்தினசாமி. அம்சப்பிரியா,பழமலை,சாஜகான்,தங்கம் மூர்த்தி, யவனிகா சிரிராம்,அமிர்தம் சூர்யா , சுதிர் செந்தில் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.மனுஸ்யபுத்திரன் உடல் நல‌க் குறைவு காரணமாக கலந்து கொள்ள முடியவிலலை.கவிஞ‌ர்கள் சந்திப்பு மற்றும் கலந்திரையாடலுக்கான நல்ல களமாக வத்தலகுண்டு கவிஞர்கள் சந்திப்பு அமைந்திருந்தது.எழுத்தாளர்கள் காமுத்துரை, ஸ‌பி, வதிலை பிரபா, அல்லி உதயன், தாரகை போன்ற கவிஞர்களும் கலந்து கொண்டனர்.