சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 9 செப்டம்பர், 2009
காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
===============================
காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.
அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்..அன்று தான் வாய்த்தது.ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும், திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறோரு கதையை , அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் ( நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம். கதையின் மையம் முடிவானது.3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துள் 30 சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக பட்டு என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார்.தேவைப்படும் போது கூப்பிடுவதாகச் சொன்னார். பலரிடம் அந்த திரைக்கதை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார்.தயாரிப்பில் நிச்சயம் ஈடுப்டுவேன் என்றார்.
வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன.சில ஆண்டுகளுக்குப் பின்.. கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார். பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்து விட்டு அவரிடம் தொடர்பு கொண்ட போது, தனக்கு பார்க்க கிடைக்கவில்லை, செய்தி தெரியவிலை என்றார்.
கேரளா சர்வதேச திரைப்படவிழாவிற்கு தொடர்ச்சியாகச் செல்ப்வன் நான்.சென்ற டிசம்பரில் திருவனந்தபுரத்திற்கு சென்ற போது காஞ்சீவரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாண பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன்.திருமணக்கனவு நிறைவேறாதபோது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார்.நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ் நாட்டு நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும். பிறகு தமிழ் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். தளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும்.
முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுகு முன் ஏற்பட்டது இது போலத்தான்.
=சுப்ரபாரதிமணியன்