சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 24 செப்டம்பர், 2015

மேக வெடிப்பு
சுப்ரபாரதிமணியன்
---------------------

     340 மி.மீ மழைக்கு உத்தரகாண்ட் தாங்கவில்லை. 40க்கே தமிழ்நாடு தாங்கவில்லை.கடந்த மே மாதம் (2014) பெய்த மழை சில உயிர்களை பலிவாங்கியது. வேலூரில் கூட ஒரு சிறுமி மழையால் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனாள். மேகம் வெடித்து கொட்டியது போல் நான்கு நாட்கள் மழை பெய்து ஓய்ந்தது. சென்றாண்டு ஜீன் 14ல் உத்தரகாண்ட்டில் நிகழ்ந்த கொடுமையான மேகவெடிப்பு பல உயிர்களை பலி வாங்கியது. ஓராண்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகமே.
            ஒரு நாளில் 340 மி.மீ மழை கொட்டி எல்லாவற்றையும் சீர் குலைத்து விட்டது. 340 எண்ணுக்குள் அப்படியொரு அபாய எச்சரிக்கை . மேக வெடிப்பு என்று வானம் மக்கள் மேல் தகர்ந்து விழுந்து விட்டதைப் போன்று மழை கொட்டித் தீர்த்து கொண்டது. இயற்கை சார்ந்த பேரழிவு என்று சொல்லிக் கொண்டாலும் மனிதனின் தொடர்ந்த பேரழிவு நடவடிக்கைகளால் வந்த விதைதான் அந்த 340.
தேவர்களின் பூமி, பூலோக சொர்க்கம்  என்று சுற்றுலாவாசிகளாலும், பக்தர்களாலும் வர்ணித்து பூசிக்கப்பட்டது உத்தரகாண்ட் பிரதேசம். வடக்கில் திபெத், கிழக்கில் நேபாளம். அதன் எல்லைகள். மலை ஏறுதல், சிகரம் ஏறுதல், படகு சவாரிகள், இயற்கை எழில் என்று சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பிரதேசம். நிறைய ஏரிகளைக் கொண்ட நைனிடாலும், மலைகளின் ராணியான மசூரியும் இங்குள்ளது. ஜீன் 14ல் தங்கு பெய்த பெருமழை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
மனிதப் பிணங்களும், கால்நடைகள் பிணங்களாயும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. சிவபெருமானின் சிலை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டேயிருந்து விட்டு மெல்ல அடித்துச் செல்லப்பட்டது. நெடியக் கட்டிடங்கள் உருக்குலைந்து சிவபெருமானுடன் அடித்துச் செல்லப்பட்டன. எங்கும் வெள்ளம். தொடர்ந்த நிலச்சரிவுகள் . டேராடூன் வானிலை மையம் தந்த எச்சரிக்கையை பற்றி யாரும் பெரிதாய் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. கேதார்நாத், பத்ரிநாத்தில் மேகவெடிப்பு நிகழப் போகிற அபாயமும், வானிலை அறிக்கைகளும் யாத்ரிகர்களையும், சுற்றுலாவாசிகளையும் உத்ரகாண்ட் பொது மக்களையும் அவ்வளவாக பாதிக்கவில்லை. இன்னொரு பெருமழை என்றே நினைத்திருந்தனர். ஆனால் நிகழ்ந்த பெருமழையின் பாதிப்பு பல லட்சக்கணக்கான மக்களின் வீடுகளைக் காணாமல் போயும், தங்களின் சுவடு தெரியாமல் இறப்பு மூலம் காணாமல் ஆக்கி விட்டது. நதிக்கரை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் கட்டிடங்கள் மக்களின் மனதைப் போல் நொறுங்கின இடிபாட்டுக் கட்டிடங்களை ஒரு சேர குவித்து வைத்திருப்பது போன்ற உத்தரகாண்ட் பகுதி கட்டிட அமைப்புகள் சுலபமாக சரிந்து விழுந்து மறைந்து போயின. தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள், தொடர்ந்த பயணங்களால் நில அதிர்வு, பிடிப்பு இல்லாமல் போன மண்ணின் தன்மை, தொடர்ந்த இயற்கை சார்ந்த நிராகரிப்புகள் பல லட்சக் கணக்கான மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. உயிரிந்தோர் ஆயிரம். காணாமல் போனோர் பல ஆயிரம். உயிர் வாதையிலிருந்து மீட்கப்பட்டோர் பல லட்சம் பேர். “சாம் தாம்கள்என்றழைக்கப்டும். நான்கு புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத, கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பிணக்காடாக மாறின. பல மடங்களும், ஆசிரமங்களும் நீரில் மூழ்கின. ரிஷிகளும் தாங்கள் கைவிடப் பட்டதை எண்ணிக் கதறினர். ரிஷிகேஷ் வழியாகப் பாயும் கங்கை நதியின் கரையோரப் பகுதியும் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பவில்லை.
2004ல் வந்த சுனாமி தேசத்தையே உலுக்கியது. இதற்குஇமாலய சுனாமிஎன்று பெயர் சூட்டிக் கொண்டார்கள். இயற்கை விபரீதம் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கியது இமயமலையின் ஆன்மீக சாரத்தையும் உலுக்கிவிட்டது. உத்தரகாண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக காடழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவும் நில அபகரிப்பும் தொட்ர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்த யாத்திரிகர்களின் வருகையும் போக்குவரத்தும் இமாலயத் தவறுகளாய் படிக்கட்டமைத்து இமாலய சுனாமியை உருவாக்கிவிட்டது. யாத்திரை பருவம்  எனப்படும் யாத்ரீகள் அதிகம் காணப்படும் காலத்தில் நடந்ததால் மட்டுமே இது பேரழிவாகத் தெரிகிறது.  மற்றபடி அவ்வப்போது பெய்யும் பேய் மழைதான் ஜீனிலும் அங்கு பெய்தது. மலைப் பகுதிகளின் காடுகள் மழை நீரை கணிசமாக தம்மிடம் இருத்திக் கொள்கின்றன. வெள்ளம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன. மரங்களும், தாவரங்களும் இல்லாத வெறும் மண் நிரம்பிய மலைச்சரிவு மழைக்கு சிரமப்படும். மண்ணைக் கரைத்து நிர்மூலமாக்கும். அதே வகையான மலைச் சரிவுகளின் காடுகள் ஒரு வகையில் மழைக்கு பாதுகாப்பையும் தருவதாகும். மரங்களின் மீது மழை துளி விழும் போது  மழையின் வேகம் குறையும். மரங்களின் கீழே விழுந்து கிடக்கும் குப்பைகள் தண்ணீர் வேகமாக ஓடாமல் சற்றே வேகத்தைக் குறைக்கிறது. மழை நீரும் மெல்ல மெல்ல மண்ணுக்குள் இறங்குகிறதுமரங்களின் வேர்களும் நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்படாமல் அவை காக்கும். எனவே மரங்கள் பெரு மழையின் போக்கையும் மாற்றக் கூடியதுதான். மண் அரிப்பும் பெருமழையுடன் சேர்ந்து கட்டிடங்கள் நிலை குலைய வைத்துவிட்டது. 9000 கி.மீ உயரம் கொண்ட மிகப் பெரிய மலையான இமயமலை மேக வெடிப்பால் அதிர்ந்து விட்டது.
 இமயமலை உருகி வருவது இன்னும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.  பூமிவெப்பமடைதலில்  துருவங்களில் உள்ள பனிப்படிவங்க்ள் உருகுகின்றன.கடல் நீர்மட்டம் உயர்கிறது.  கடல் அரிப்புகளும், கடல் நீர் ஊருக்குள் புகுவது நிகழ்கிறது.  தமிழ்நாட்டில் வடசென்னையைச் சார்ந்த பல மீனவர் குப்பங்கள் கடல் அரிப்பால் சேதம்டைந்து காணாமல் போய் விட்டது. பல கடல் மத்தியிலான திட்டுகளும் காணாமல் போய் விட்டன.  மேற்கு வங்கத்தில் பல தீவுகள் காணாமல் போய் விட்டன.. கடற்கரையோர நக்ரங்களும், கிராமங்களும் , புராதனச் சின்னங்களும் இவ்வகை கடல் மட்ட உயர்வால் அழிந்து போகாமல் இருக்க  அய்.நா. சபை இவ்வாண்டினை( 2014) “ சிறு தீவுகளும் கால மாற்றங்களும் “ என்றத் தலைப்பில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்கிறது. குரல் உயர்த்துங்கள்- கடல் மட்டத்தை உயர்த்தாதீர்கள் “ என்ற குரல் தீவிரமாய் முன் வைக்க வேண்டிய காலம் இது.
உத்தராயண் காலத்தில் உச்சமான ஒரு நாளில் சூரியன் இமயமலையின் தலை உச்சியில் சஞ்சரித்துகோடை சந்தியை உலகுக்குக் காட்டி வியப்பளித்தது. தொடர்ந்து வந்த நாட்களின் மேக வெடிப்பு மழை இயற்கையை நாம் நிராகரித்து வருவதன் எச்சரிக்கையைகோடை வெடிப்பாக்கிஅதிரவைத்து விட்டது.




வியாழன், 17 செப்டம்பர், 2015

அரிமா விருதுகள் 2015 :  ரூ 25,000 பரிசு
-------------------------------------------------------------------
* குறும்பட விருது 
---------------------------------------------------------------------
கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.

* சக்தி விருது
----------------------
கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம்.
கடைசி தேதி:30-10-2015.
==============================================================================
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்:
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
34,ஸ்டேட் பாங்க் காலனி,       
காந்தி நகர், திருப்பூர்.641 603
தொடர்புக்கு : 9443559215., 



சனி, 5 செப்டம்பர், 2015

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் இரவிக்குமார் இயக்குனர் இயக்கிய
சதுரங்க மனிதர்கள்  :  குறும்படம்        ; சுப்ரபாரதிமணியன்

திருப்பூர் இளம் குறும்படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. இளம் படைப்பாளிகளில் மிகவும் இளையவர் ரவிக்குமார். லீவு, எட்டாம்வகுப்பு, கழல், எதிர்வினை, சுமங்கலி ஆகிய குறும்படங்களுக்குப் பின்பு இவர் இயக்கி வந்திருக்கும் 15 நிமிடக் குறும்படம் "கண்ணாமூச்சி".தொடர்ச்சியாக அக்கரையுடனான செயல்பாட்டினால் "கண்ணாமூச்சி"யை வந்தடைந்திருக்கிறார் ரவிக்குமார். அவர் சார்ந்த பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள் சமூகவியல் சார்ந்த முழு அழுத்தத்தைத் தரும் விஷயங்களையே இதுவரை அவரின் படைப்புகளாக்கியிருக்கிறது. விடுமுறைகூடக் கிடைக்காமல் பனியன் கம்பனியில் உழலும் சிறுவனைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். சரியான கல்வி வசதியும், உதவியும் இல்லாத ஒரு சிறுவன் தொழிற்சாலைக்குள் தள்ளப்படுவதைக் குறும்படமாக்கியிருக்கிறார். பல ஆசைகளில் உடம்பை நிர்மூலமாக்கும் மதுவின் தன்மை பற்றி ஒரு நிமிடக் குறும்படத்தில் காட்டியிருக்கிறார். பின்னலாடை, நூற்பாலைகளில் பதின்பருவப் பெண்கள் கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை பற்றி 'சுமங்கலி’ பேசுகிறது. ’தழலில்’ சின்னச் சின்ன ஆசைகள் தலைமுறைகளைத் தாண்டி கடந்து போவதாக இருக்கிறது. 'கண்ணாமூச்சியில் தலைமுறை இடைவெளி கடந்த தாத்தா பேரன் உறவு பற்றிய அழுத்தம் இருக்கிறது.சிறந்த சிறுகதைத் தன்மையை 'கண்ணாமூச்சி’ அதன் திரைக்கதையாகப் பெற்றிருக்கிறது. திருப்பம் தரும் எதிர்வினை முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தாத்தா பேரனிடம் கதை சொல்லும்போது யதார்த்த உண்மைகளை மீறி தனது வீரச்செயல்களுக்கான முத்திரையை நிறையச் சொல்லுவார். தனது ஆளுமையை நிலைநிறுத்த அது தேவையானது என்றிருப்பவர். நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் பற்றி பேரனிடம் கதை சொல்கிறார். கதை கேட்டு பேரன் தாத்தாவுடன் நெருங்கியிருக்கிறான். அவனது நண்பன் செஸ்-ஸில் வெல்ல முடியாதவனாக இருப்பதாகக் காட்டி அவனைத் தாத்தா வெல்ல வேண்டும் என்கிறான். "நீங்க செஸ் சேம்பியன் ஆச்சே தாத்தா" ... தலையாட்டிவிடும் தாத்தா வேறு வழியின்றி செஸ் கற்றுக்கொள்கிறார்.தனது பழைய நண்பன் ஒருவனை தேடிச்சென்று செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்டும் செஸ் பற்றிய புத்தகங்களை வாசித்தும் ஒருவார இடைவெளியில் பையனை ஞாயிறில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொள்கிறார். வீட்டில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிறார். "பேரன் கேட்டிருக்கிறான், என்ன செய்ய"? ஞாயிறில் அந்த செஸ் பையன் வருவதில்லை. பேரனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போகிறார் தாத்தா. கையில் பேட்டுடன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வருகிறான் பேரன்.
" இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. செஸ் போட்டி உன் பிரண்டோட இருக்கே. எங்கடா அவன் பயந்து போயிட்டனா?"
"அதிருக்கட்டும் தாத்தா." என்று கிரிக்கெட்டில் வீரனான அவனின் நண்பனான ஒருவனைக் குறிப்பிட்டு அவ்னைத் தாத்தா தோற்கடிக்க வேண்டும் என்கிறான்.
"தாத்தாதான் கிரிக்கெட்டிலும் சாம்பியனாச்சே"
"ஆமாமா"
காலச்சூழலுக்கேற்ப தன் நண்பர்களையே சக நடிகர்களாக்கி அந்த அனுபவங்களுக்குள் அமிழ்ந்திருக்கிற அவர்களை கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுதுவதாய் தனக்கு நெருக்கமானவர்களை நடிக்க வைத்திருக்கும் ரவிக்குமார், அந்த நெருக்கமானவர்களின் பலவீனஙகளை கடந்து திரையில் வெளிப்படுத்த சிரமஙகள் பட்டிருந்தாலும் அவர்களின் அனுபவங்களை நடிப்பிற்கும் உரமாக்கிக் கொள்கிறார். சக மனிதர்களால் வெளிப்படும் படைப்பிற்கான தன்மை யதார்தத்திற்கு வெகு அருகாமையில் இருக்கிற்து. அந்த வகையில்  கே.பொன்னுசாமி, நந்தகோபால், சபரி ஆகியோர் நடிப்பை சொல்லலாம். உயர்ந்த தொழில் நுட்பக் காமிராவைப் பயன்படுத்தியிருந்தால் இப்படத்தின் தரம் வெகுவாகக் கூடியிருக்கும். சதுரங்கபலகைக் காட்சிகள், பலருடன் விளையாடுவதைக் காட்டியிருப்பது, சூழலை சரியாகக் காட்சிக்குள் கொண்டுவருவதில் நேர்ந்த அக்கறை இருக்கிறது. அக்கறை கொண்ட தலைமுறை குதிரைப்பாய்சசலாய் விரைந்துகொண்டிருக்கிற்து.




திருப்பூர் மக்கள் மாமன்றம் :           
இலக்கிய விழா



திருப்பூர் மக்கள் மாமன்றம்  ஏற்பாடு செய்திருந்த  இலக்கிய விழா ஞாயிறு அன்று  திருப்பூர் நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  திருப்பூர் மக்கள் மாமன்றம் தலைவர் முனைவர் சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

விழாவில் சென்னை “ இலக்கியச் சோலை “ மாத இதழ் தயாரித்த திருப்பூர்  சிறப்பிதழை  பத்மஸ்ரீ டாக்டர்  ஏ. சக்திவேல் ( தலைவர் , திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் )  வெளியிட்டார்.

ஜெய்ஸ்ரீ ராம் கல்விக்குழுமம், சேர்மன் கே.எம். தங்கராஜ்  தமிழறிஞர்களுக்கும் பல்துறை சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார். அவர் சார்ந்த கல்வி நிறுவனங்கள் ஏழை மக்களுக்கு செய்து வரும் கல்வி உதவியை விவரித்தார்.

 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ( எழுத்துப்பணி ) , ஆனந்தகுமார் ( மக்கள் மாமன்றம்)   ,   கேபிகே செல்வராஜ்            ( கல்விச்சேவை )  , ஞானவேல் ( சமூக சேவை)    என்.சிதம்பரம்( முயற்சி ) உட்பட பலர் விருது பெற்றனர்.


 பத்மஸ்ரீ சக்தி வேல் பேசியது:
 நேற்றைய தொழிலாளர்கள் இன்றைய முதலாளிகள் “  என்பதை திருப்பூரை பின்னலாடைத் தொழிலைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து உள்ளூர் தொழிலில் நிருபித்து வருகிறார்கள். வியாபாரம் சார்ந்த ஒரு நகரில் நடப்பவை  பெரும்பாலும் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளாக இருக்கின்றன. ஆனால் நம்மை மேம்படுத்தும் இலக்கிய நடவடிக்கை சார்ந்த செயல்பாடுகள் தொடர வேண்டும். வாசிப்பு என்பது சகமனிதனுக்கு, தொழிலாளர் அனைவருக்கும் தேவை. அத்தகைய வேலைப்பளுவில் இருக்கிறோம். அதிலிருந்து விடுபட வாசிப்பும், வணிக நோக்கமற்ற நடவடிக்கைகளும் மிகவும் தேவை.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது:

பல்துறை சார்ந்த இதழ்களும் நூல்களூம் நிறைய வெளிவரும் காலம் இது. பல்துறை சார்ந்த வாசிப்பும் பெருகியுள்ளது. ஆனால்  இலக்கிய வாசிப்பு குறைந்திருக்கிறது. இலக்கிய வாசிப்பை மேம்படுத்தும்  நடவடிக்கைகள் நமக்குத் தேவை. நடைமுறைக் கல்வியிலிருந்து வேறுபட்டு மாற்றுக்கல்வியையும் அதன் மூலமான மாற்றுச் சிந்தனைகளையும்   உருவாக்க இலக்கிய வாசிப்பு அவசியம். அதை பள்ளிகளிலிருந்தே இன்னும் தீவிர முயற்சிகளில்  ஏற்படுத்தவேண்டும். அதற்குத் தாய்வழிக்கல்வியும், பகுத்தறிவும் அடிப்படைகளாக இருக்கும்.


முன்னதாக கோவை கோகுலம் தலைமையில் நடந்த கவியரங்கில் நம்ம ஊர் கோவிநாத், து.மு.சாமி, சிவதாசன், நவநீதன், சு.வேலுச்சாமி, மு.மணிமேகலை  பங்கேற்றனர்.

 “ பெரியார் அண்ணா “ என்ற தலைப்பில் பாண்டி மு. வேலு கருத்துரையாற்றினார். இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் ஏற்புரை ஆற்றினார்.

 “ இலக்கியச் சோலை “ மாத இதழ் தயாரித்த திருப்பூர்  சிறப்பிதழில்  திருப்பூரைச் சார்ந்த 25 படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. 

சாகித்ய அகாதமி : இலக்கிய நிகழ்ச்சி

16/9/15 புதன் காலை 10 மணி
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர்

உரையாளர்கள்:
* சுப்ரபாரதிமணியன்
* குழந்தைவேலு ( 5 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் )
* தாண்டவக்கோன் ( 10 குறும்படங்கள், 30 சிறுகதைகள் )

புதன், 2 செப்டம்பர், 2015

மைசூர் யாத்திரை:                       சுப்ரபாரதிமணியன்
             கல்வித்துறையில் மதவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பொதுப் பாடத்திட்டம்  சாத்யமாகிற போது பொதுப்பள்ளி ஏன் சாத்தியமாகாது. அதற்காக நாம் போராட வேண்டும். வகுப்பு வாதத்தை வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது. மதங்கள் பல, மொழிகள் பல என்று பின்பற்றி வாழ்ந்து வரும் இந்திய மக்களின் வேறுபாட்டை அங்கீகரித்து வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் இந்தியப்பண்பாட்டை தாய்மொழிக்கல்வி மூலம் சரியாக அடையாளம் காண முடியும். பன்முகப்பண்பாட்டைக் கொண்டாடும் பாகுபாடற்ற பாதுகாப்பான கல்வி முறையை கோரும் அகில இந்திய போராட்டப் பயணம் தொடரும்  என்றார். “ என்றார் கல்வி உரிமையே அமைப்பைச் சார்ந்த கல்வியாளர் சென்னை கஜேந்திர பாபு அவர்கள் மைசூர் பல்கழகக்கழக வளாகக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
கல்வி வணிகமயமாக்கலுகு எதிரான யாத்திரை கன்யாகுமரியில் ஆரம்பித்து, பின்  ஒளிச்சுடர் அளிக்கும்  நிகழ்வு மைசூரில் நடைபெற்றது. இது போபால் வரை தொடரும். மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கல்வி குறித்த கருத்தரங்கில்   கன்னட எழுத்தாளர் தேவனூரு மகாதேவாவும் உரையாற்றினார். “ இந்தியாவை கார்ப்பரேட்டுகளும் மத நிறுவனங்களுமே ஆள்கின்றன. பத்திரிக்கைத்துறை, நீதிமனறம், காவல் துறை எல்லாமே கார்ப்பரேட்டுகளுக்கு விலை போகின்றன.இன்னுமொரு சுதந்திரம் குறித்த போராட்டதோடு மாற்றுக்கல்வி குறித்தும் அக்கறைப்பட வேண்டியிருக்க்கிறது என்றார். அவரின் பல நாவல்களை பாவண்ணன், தி,சு.சதாசிவம் ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  aawthiraavaisseerwtha aaஆந்திராவைச்சார்ந்த பேரா. ஹரகோபால் பேச்சில் அனல் தெறித்தது..     “ கார்ப்பரேட் வல்லூறுகள் எல்லாவர்றையும் விழுங்கி வருகின்றன.  அரசுகள் நவதோயா, சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்தும் போது அரசுப்பள்ளிகளை நடத்துவதில் என்ன சிரமம். ஆனால் அரசு பள்ளிகளை நடத்த விடாமல் பல தடைகள் உள்ளன. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமானால்  அரசுப்பள்ளிகளில் கல்விப்பணி தொடர வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கும்,கிராம மக்களுக்கும் அரசுப்பள்ளிகளைத் தவிர வேறு விமோசனம் இல்லை. pகொடிய விசம் கொண்டு எல்லாம் அழிக்கப்படுகின்றன.தனியார்மயம், கார்பரேட்டுகளின் ஆதிக்கம் அந்த விசம்.அதை முறியடிக்க வேண்டும். தனியார் மயமாக்கலும், வணிக மயமாக்கலும் தொடர்ந்து கொண்டிருப்பதை எதிர்க்க வேண்டும் “ என்றார்.eeraa..     உயர்கல்வியில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. முன்பருவக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை படிக்க அருகமைப்பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறைமையை உருவாக்க வேண்டும் என்பதை பேசிய பல எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் வலியுறுத்தினர்.இந்தியாவில் அனைத்துக் குழந்தைகளும் அந்தந்த மாநில மொழிகளில் மாநில அரசுகளின் கீழ் ஒன்றாக கல்வி கற்க 86ம் சட்ட திருத்த்த்தின் பாதகமான அம்சங்களைச் சரி செய்ய இந்திய அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு பிறப்பு முதல் 18 வய்து வரை , தொடக்க காலக் குழந்தைப்பராமரிப்பு முதல் மேனிலைப்பள்ளி  கல்வி முடியும்வரை  அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமிலாக் கல்வியை அரசு  தன் பொறுப்பிலும் செலவிலும் அருகமைப்பள்ளி அமிப்பில் பன்மொழி கற்கும் வாய்ப்புடன் கூடிய தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிஅமி வழங்கிட வலியுறுத்துகிறது.கல்வியும் சுகாதாரமும் அனைத்ஹு மக்களுக்கும் கிடைக்கக்  கூடிய கட்டமிப்புகளை உருவாக்கிட மொத்த உற்பத்தியில் இந்திய அரசு கல்விக்கு 10%, சுகாதாரத்திற்கு 5% வீதமும் ஒதுக்கிட வேண்டுகிறது. அந்நிய முதலீட்டைத்தடுத்திட, எந்த வகையிலும் அரசு தனியார் கூட்டை அனுமதிக்கக் கோரியது.
.திருப்பூர் மாவட்டத்திலிருந்து காங்கயம் மூர்த்தி தலைமையில் இருபது பேர் அக்கருத்தரங்கிலும், பயணத்திலும் கலந்து கொண்டன்ர். சத்தியமங்கலத்திலிருந்து சுடர் நடராஜன் தலைமையிலான குழுவும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. சூரியா, காந்திசெல்வன் போன்ற கோவை அரசுக் கல்லூரி மாணவர்களைக் கொண்ட பறை இசைக்குழு பயணம் முழுவதும் எதிர்ப்புக்குரலாக பறையொலியை முழக்கினர். அவர்களின் பறையொலியை எழுச்சியுடன் மைசூர் மக்கள் அந்நகர வீதிகளீல் கேட்டனர்.
  நடிகையும் முன்னாள் எம்பியுமான மாளவிகா வின் பெங்களூரில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகுறித்த  போராட்டம் சில இடங்களில் போக்குவரத்தைச் ஸ்தம்பிக்கச்செய்தது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் மூன்று அணைகள் கட்டப்படும் முயற்சிகளைப்பற்றிய வைகோ, மு.க. உட்பட  பலரின் எதிர்ப்பை கன்னடப் பத்திரிக்கைகள் நிராகரித்திருந்தன். உள்ளூர் பதிப்பு தமிழ் தினசரிகளில் அவைமுக்கியச் செய்திகளாக்கப்பட்டிருந்தன. கலவி யாத்திரை முக்கியச்செய்திகளில் இடம்பிடித்தது. மழலையர் கல்வி முதல் பல்கலைக்கழக் உயர்கல்வி வரை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சில கன்னட நாளிதழ்கள் தலையங்கங்களாக வெளியிட்டிருந்தன.

   கல்வி உரிமைக்கான் அகில இந்தியக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கல்விக்கான இந்த  அகில இந்தியப் போராட்டபப்யணம்  போபாலில் அகில இந்திய அளவிலான ஒரு �து “ இது. .
முதுமை வரமா சாபமா.
    விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் “ வானப்பிரஸ்தம் “ நூல்
                      சுப்ரபாரதிமணியன்
தள்ளாத வயது...
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும் நடையும்...

எதை நோக்கியது
இந்த நடை...

நடந்தால் மட்டுமே
நாட்கள் தன்னைக்
கடந்துப் போகுமென்றா?

நடக்காத நாட்களை
தன்னால்
கடக்க முடியாதென்றா?

உயிரிருக்கும் கூட்டை
உறுதி செய்யவா?

இறுதியின் நிலையை
உலகுக்கு பிரகடனப்படுத்தவா?

எதை நோக்கியது
இந்த நடை,
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும்
வயதுடன்... (  கோவை அகிலாவின் கவிதை )l
      முதுமை வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகம் தள்ளாட வைக்கிறது. முதியோர் இல்லங்களும் வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகம் இருக்கிறது. முதியோர் இல்லங்களில் முதியோருக்கு விதிக்கப்பட்ட தனிமை பயமுறுத்துவது. ஆனால் அவை வரமாக எப்படி அமைந்துள்ளன என்பதை விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் இந்நூல் விளக்குகிறது.
            விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் இதற்கு முந்தைய நூல்  ஆலமரம். 1000 பக்க நாவலாகும்.  நான்கு தலைமுறைக்குடுமபத்தின் 100 வருட வாழ்க்கையை விவரித்தது. வைணவ குடும்பம் சார்ந்த வாழ்க்கையின் நீரோட்டமும், திருமண , குழந்தை பேறு, சாவு உடபட பல சடங்குகளும் சிறப்பாக  விவரிக்கப்படிருந்தன.இருபதற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் வாழக்கையை விவரிப்பதன் மூலம் வெவ்வேறு தலைமுறைகளின் வாழ்நிலை வேறுபாட்டையும் விவரித்த நாவலாகும் 

      விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் “ வானப்பிரஸ்தம் “ நூல் முதியோர் இல்லங்கள் வரமாக அமைந்து அவர்களை ஆசுவாசப்படுத்துவதைச் சொல்கிறது . நாவல் தன்மையில் பல்வேறு மனிதர்கள் கதா  பாத்திரங்களாக உருக்கொள்கிறார்கள்.வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சொந்த பந்தங்களைத் துறந்து தனிமையை நாடி வனவாசம் சென்று கிடைததை உண்டு அந்திம காலத்தினை கடத்திட வேண்டும் என்று அர்த்தம் கொள்வதற்கு மாறாக கார்ப்பரேட்டுகள், வசதி கொண்டவர்களுக்கான் நவீன முதியோர் இல்லங்கள் அவர்களுக்கு ஆசுவாசம் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதை இந்நூல் விளக்குகிறது.செல்லம்மாள் குடிகாரக்கணவனிடம் இருந்து தப்பிப்பதற்காக மு.இ. வந்தவள். கணவன் இறந்த பின் தனிமையாக்கப்பட்டவள். பிள்ளைகளுக்கு தொந்தரவு வேண்டாம் என்று கிளம்பி விட்டவர் . கோவிந்தராசு பாமரன். கமலம்மா அடிக்கடி நோய் வாய்ப்படுபவள்.        “ சம்சார சங்கீதம்தான் தட்டு , கரண்டிதான் பக்க வாத்யம் இதுகளோடு நித்தியம் பாடறேன் “ என்று ஒதுங்கிக் கொண்டவள். அப்பாசாமி மனைவிக்கு ஞாபகமறதி. அவர்களுக்கு புது இடம், புது அனுபவமாய் எல்லாம் அமைந்து விடுகின்றன. பொய் உயிலால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து சேர்கிறார்கள்.  முதுமை தவிர்க்க முடியாத ஒரு கால நிலை, மனித வாழ்வில் ஏற்படும் இயறகையான மாற்றம். இதை வரவேற்று ஒத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் முதுமையில் தயாராக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறவள் சாரதா. இப்படி பல மனிதர்களின் வாழ்க்கை புனைவுத்தன்மையிலாமல் தரப்பட்டிருக்கிறது. பல்ரின் வாழ்க்கை கடிதங்கள் மூலமும் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த கடித வகைப்படுத்தல் ஒரே மாதிரியான வாசிப்பிலிருந்து வேறு பாதைக்கு வழிகாட்டுகிறது.  சமையலறை சம்பவங்களும், வெவ்வேறு வகை மனிதர்களின் நடவடிக்கைகள்  நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருகின்றன. முதியோர் இல்ல நிர்வாகங்களும் அவற்றில் வசிப்பவர்களும் பங்கும் ஜனநாயகத்தன்மையோடு இருப்பதை காட்டுகிரார். . பொருளாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு இந்த மூன்று “ப “ வுக்கும் ஒரே விடை முதியோர் இல்லம என்பதை நிரூபிக்கும் பல நெகிழ்ச்சியான சம்பாவங்கள் இதில் உள்ளன.அங்கு நிகழும் சாவுகளும்,  உரையாடல்களும் ., பகிர்வும் நெகிழ்ச்சியாகத் தரப்பட்டிருக்கிறது . முதியோர் இல்லப் புகைப்படங்கள் அவர்கள் வாழும் சூழலைக் காட்டுகின்றன. அங்கு வாழ்வதை ரசித்துக் கொண்டு ஒதுங்கியிராமல் பல முதியோர் இல்லங்களுக்கு வது சேர சிபாரிசு செய்கிறது. குழப்பங்களும் தீர்வு காண இயலாத பலருக்கு தெளிவைக் கொடுக்கிறது.  வரமா சாபமா என சர்ச்சை, சந்தேகங்களூக்கு மத்தியில்  வரம் என்று தீர்ப்பு வழங்கி விடுகிறது. படைப்பிலக்கிய வாதி என்ற வகையில்  ஒரு எழுத்தாளர் மு.இ. இருந்து அந்த அனுப்வங்களை வாரி வழங்கியிருக்கிறார். பலருக்கும் பயன் படும்  வானப்பிரஸ்த அருமருந்து “ இது. .( kaavya Publn)