சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 19 அக்டோபர், 2023
சிலுவை நாவல் Ra 1220
சிலுவை நாவல் ஒரு விதவையை மைய கதாபாத்திரமாக கொண்டு ஆரம்பிக்கிறது. அவள் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த குடும்பத்தினர். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டு அவளின் கிறிஸ்துவ குடும்பம் விரிவடைகிறது. பின்னால் அந்த நெசவாளர் கிறிஸ்துவத்துக்கு மாறி விடுவதால் சுமூகமாக அவருடைய வாழ்க்கை நடக்கிறது. இந்த இடத்தில் ஒரு விதவைப் பெண்ணை கதாநாயகியாகக் கொண்டு இந்த நாவல் அமைந்திருப்பதை பாராட்ட வேண்டும்
அதேசமயம் பெண்களுடைய மனது விசித்திரமாக இருக்கிறது. அந்தப் பெண் விதவையாக இருந்தாலும் தன்னுடைய மகனுக்கு திருமணம் என்று வருகிற போது மகன் ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பும் சூழ்நிலையால், அவன் விரும்புகிற போது அந்த்த் தாய் அதை மறுத்து விடுகிறாள்.. . அது விசித்திரமானது பெண்ணுடைய மனது. விசித்திரமானது. அவளே விதவையாக இருந்து திருமணம் செய்து கொண்டவள் .ஆனால் அவள் தன் மகனுக்கு ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பது விசித்திரமாக இருக்கிறது.
இந்த விஷயத்தைப் போல பெண்களின் மனதை இந்த நாவலில் பல பெண்கள் கதாபாத்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் வருகிற தொலைபேசி துறையைச் சார்ந்த ஒருவருடைய வாழ்க்கையில் துணைவியாக வருகிற பெண் அவன் தற்காலிக ஊழியர் ஆகவே இருக்கிறார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விலகி விடுகிறாள் .அதேபோல இதில் வருகிற ஒரு கிறிஸ்துவ இளைஞருடைய மனைவி அவள் விரும்புகிறதெல்லாம் கிடைக்கவில்லை என்று கணவனிடமிருந்து விலகி விடுகிறாள். மத்திய தர குடும்பத்தில் ஒரு கணவன் ஒரு பெண்ணின் விருப்பங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்பட முடியாது. பொருளாதார சிரமங்கள் உண்டு .ஆனால் அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் அந்த பெண் அவரிடம் இருந்து விலகி விடுகிறாள் .பின்னால் அவளுக்கு ஒரு சின்ன நோய் வருகிறது உடம்பில் வெள்ளைப்படுதல் என்ற நோய்.. வெள்ளையணுக்கள் குறைவாக இருப்பதால் உடம்பில் வரும் வெள்ளை தேமல்கள் போன்ற ஒரு வியாதி ..அந்த வியாதி வந்த பின்னால் அவள் இயேசு கிறிஸ்து அவளுக்கு தண்டனை தந்து விட்டதாக கருதி கணவரிடம் திரும்புகிறாள் இப்படி விசித்திரமான பல நுணுக்கமான கதாபாத்திரங்களை, பெண் கதாபாத்திரங்களை இந்த நாவலில் சந்திக்க முடிகிறது
( சே சோமசுந்தரம் தொலைபேசி உரையாடலில் )
சுப்ரபாரதி மணியன், திருப்பூர் ( 9486101003 )
---------------------------------------------------------------------------------
வணக்கம் . நலம் குறித்த விருப்பம்.
என் சி பி எச் வெளியீடான “ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும்,
நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது = NCBH Rs 1200
. 10 வருடக் கனவு. ( பதிப்பகத்தில் தந்து 6 ஆண்டுகள். அதற்கு முன் 3/4 ஆண்டுகள் தயாரிப்பும் எழுதுவதும் )
0
நானே கொஞ்சம் பிரதிகளை விற்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன்.
தாங்கள் / தாங்கள் சார்ந்த அறக்கட்டளை / நிறுவனங்கள் சார்ந்து பிரதிகள் என்னிடமே வாங்கி இந்த முயற்சிக்கு கை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Subrabharathimanian ( g pay no. 9486101003 )
A/c No; 1408522610. Central bank of india bank, ATL branch perumanallur road, Tiruppur
IFCS no: CBIN0284145 MICR no; 6410 16104
Pan no.. AOYPS 7998R
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன் 17/8/23