சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 1 மே, 2020

* அதிக மொழிபெயர்ப்புகள் மூலம் வேற்றுமொழி இலக்கிய வாசகர்களைச் சென்றடைவதே படைப்பாளிக்குப் பெருமை .பா.இரமணி உரை ( மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு ..பெருமன்றம் )-                         மெய்நிகர் சந்திப்பு 26/4/20
சுப்ரபாரதிமணியன் சமகாலப் பிரச்சினைகளை மக்களுடைய வாழ்வியலோடு சேர்த்து தொடர்ந்து படைப்புகள் மூலமாக கொடுத்துக் கொண்டிருப்பவர் .இலக்கியத்தில் சமகால விசயங்கள் தவிர்க்கப்படும் இலக்கிய அரசியல் சூழல் மீறி  அவைகொண்டுவரப்பட வேண்டும். ஆனால் தமிழில் இது குறைவாகவே உள்ளது சுப்ரபாரதிமணியனின் முதல் நாவல் மற்றும் சிலர் அவர் ஹைதராபாத் நகரில் வாழ்ந்த போது அங்கு இருந்த புலம்பெயர்ந்த தமிழர்களுடைய வாழ்வியல், தமிழர்களில் ஒரு பகுதியினர் போராட்டச் சூழல், வாழ்வின் நெருக்கடிகளை அந்த நாவல் சொன்னது ,அந்த நாவலை பிரபல எழுத்தாளர்கள் ஜெயமோகன் நகுலன் ஜெயந்தன் போன்றவர்கள் அப்போது வெகுவாக பாராட்டி இருந்தார்கள், அப்படியே முக்கியமான நாவல்களில் ஒன்று சாயத்திரை ,அமைப்புசாரா மக்களும் புலம்பெயர்ந்த மக்களும் அது அதில் இடம் பெற்றிருக்கிறார்கள், ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பாகவும் தமிழில் சுற்றுச்சூழலை பற்றி பேசிய முக்கியமான நாவலாகும். தறிநாடா நாவலில் திருப்பூரில் நடைபெற்ற நெசவாளர்கள் போராட்டத்தையும் அந்த போராட்டத்தில் இருந்து ஒரு இளைஞன் போராட்டத்தின் பாதிப்பில் பொதுவுடைமை இயக்கத்திற்கு வருகிற அனுபவத்தை சொன்னது. உலக இலக்கியத்தில்  சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு படைப்புகள் சமீபத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை அதற்கு முன்னோடியாக சொல்லலாம். எமிலி ஜோலா பிரஞ்சு நாட்டின் மக்கள் வாழ்வை சொன்னதுபோல திருப்பூர் மக்கள் வாழ்வை சொல்வதில் அவருடைய படைப்புகள் முன்னணியில் நிற்கின்றன .பாண்டிச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள் போன்றவை இன்றைக்கு பல்வேறு வடிவங்கள் எடுத்து இருக்கின்றன. அந்த காலகட்டத்தில் உடைய மக்களின் வாழ்க்கையை சொல்வதற்கு அது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது அதுபோல் திருப்பூர் வாழ்க்கையை கண்ணாடி போட்டு காட்டும் முயற்சியில் அவருடைய படைப்பிலக்கியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படித்தான் அவருடைய ரேகை வித்தியாசமான நாவல். ஒரு கிராமத்தை ஒட்டிய மக்களுடைய வாழ்வியலை சிறப்பாக சொல்வது. அந்த கிராம மக்களின் குறுக்கு வெட்டு தோற்றம் சமூக பொருளாதார நிலை போன்றவை ஜோசியம் பார்க்கும் வாழ்க்கையை முன்னெடுத்து சொல்லப்பட்டு இருக்கிறது அவருடைய நாவல்களில் வித்தியாசமான கதை கொண்ட இன்னொரு நாவல் கோமணம் .பழனிக்கு பாதயாத்திரை செல்வோரின் அனுபவங்களை மையமாக கொண்டது .அதில் வருகிற சிறுதெய்வ வழிபாடும் பெருந்தெய்வ வழிபாடு பற்றிய பல்வேறு உரையாடல்கள் கவனத்திற்குரியவை.. நாத்திக பார்வையில் எழுதப்பட்ட நாவல் என்பது அதனுடைய முக்கியத்துவம் ஆகும். முன்பெல்லாம் பழனி பாத யாத்திரை செல்வோர் வெள்ளை வேட்டி உடுத்தி செல்வர். அந்தக் குழுவின் தலைவர் காவி வேட்டி உடுத்தி அல்லது அதிலுள்ள பூசாரி காவி வேட்டி உடுத்திச் செல்வார் .பின்னர் பலர் பச்சை வேட்டி உடுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் இன்றைக்கு அனைவரும் காவி உடுத்தி அதற்கு வேறு ஒரு வடித்தை கொண்டுவந்திருக்கிறார்கள் முருக வழிபாடு என்பது தமிழ் கடவுளுடைய வழிபாடாக இருக்கிறது. ஆனால் அதில் வருகிற வழிபாட்டு பூஜையை சம்பிரதாயங்களில் சமஸ்கிருதம் கலந்து இருப்பதும் அரகரா சண்முகா என்றபடி கோஷங்கள் மாறுவதும் கலாச்சார இடைச்செருகலாக  மாறியிருக்கிறக் கதையை சொல்லியிருக்கிறார் .அந்த செல்லும் பாதை வழியில் கருப்புராயன் கோயிலில் தங்குகிறார்கள். கருப்புராயன் கோயில் பலரின் நம்பிக்கை கூடிய காவல் தெய்வம் .அதேபோல போகும் வழியில் மகாலட்சுமி கோவிலில் தங்குகிறார்கள் அங்கிருக்கிற வழிபாட்டு முறை மாற்றம் இருக்கிறது .அதி ஒருவர் வலியுறுத்தித் திணிக்கிறார்.அந்த நாவலில் வருகின்ற நாத்திக இளைஞர்களின் கதாபாத்திரங்கள் மூலமாக பழனி கோவில்  , சமயத்துறை சார்ந்த பல்வேறு விஷயங்களை கேள்வி குறியாக்கி இருக்கிறார்கள் .பக்தர்கள் தங்கிச் செல்லும் இடங்களில் குறிப்பாக விவசாய நிலங்களில் முன்பெல்லாம் யாரும் பணம் கேட்பதில்லை. ஆனால் ஆறுகள் மாசடைந்து விட்டன .சாயப்பட்டறைகள் மூலமாக கிணறுகளில் சாயம் கலந்து  விட்டன இந்த சூழலில் விவசாயம் சரியாக நடப்பதில்லை ஆகவே பாதையாத்திரையில்தங்கி செல்லும் ஒரு விவசாய நிலத்திற்கு அந்த நிலத்தை சார்ந்தவர் வாடகை கேட்கிறார். இது காலத்தின் மாற்றத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியிருக்கிறது.கேரளாவிற்கு பழனிக்கு பக்தர்கள் அதிகம் வருவதுண்டு. இந்நாவல் உடனே மலையாளத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் சாய்த்திரை, சுடுமணல், சப்பரம் போன்ற நாவல்கள் முன்பே மலையாளத்தில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அவரின் முறிவு  நாவல் ஹிந்தியில் வெளிவந்துள்ளது. முன்பே அவரின் சாயத்திரை, சப்பரம், மாலு போன்றவை ஹிந்தியில் வந்திருக்கின்றன இந்த சூழலில் முறிவு முன்பே இரு பதிப்புகள் ஆங்கிலத்திலும் தற்போது அது வும் ஹிந்தியில் வந்திருப்பது வடமாநிலங்களில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தருகிற ஒரு விஷயமாக இருக்கிறது. அதே போல தான் இவரது பல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஆறு நாவல்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவை ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளனஅந்த மொழிபெயர்ப்பு நூல்களை சென்றாண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசிய மாநாட்டில் அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. இவை  எல்லாம் வாழும் காலத்திலேயே எழுத்தாளனுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான முக்கிய உபகரணங்களாக இருக்கின்றன அவருடைய முயற்சிகள் தொடர வேண்டும் பா. ரமணி ( பொருளாளர் மாநில பொருளாளர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் )
Reply
Forward