சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 26 செப்டம்பர், 2019

அண்டை வீடு : பயண அனுபவம் :
        திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த இலக்கு 2020இல் சாத்தியமாகும் என்று 5 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது .( 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்ற கன்வைப்பற்றி அப்துல் கலாம் அப்போது பேசிக் கொண்டிருந்தார் )ஆனால் தற்போது அடைந்துள்ள சில பின்னடைவுகளால் அது இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி போய் உள்ளது.திருப்பூர் நிச்சயம் அதை எட்டும்.
 சமீப ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்கு சவாலாக இருந்து வரும் நாடு வங்கதேசம் .அந்த நாட்டில் மேம்பட்டுள்ள  பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு சில ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பூரிலிருந்து வங்கதேசம் சென்றது. அந்த குழுவில் தொழிற்சங்க பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தன்னார்வ குழுவினர் என்று இருந்தனர் .அந்தக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன் .அந்த பயண அனுபவம் தான் இந்த நூல்.
திருப்பூருக்கு போட்டியாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக இருந்திருக்கிறது  வங்கதேசம். இந்த ஆண்டில் சில பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. அதற்கு காரணம் வங்கதேசத்தின் அதிவிரைவு முன்னேற்றம் அதிகப் பெண்களின் உழைப்பிலான பின்னலாடை ஏற்றுமதியில் என்பதால் உலக நாடுகளின் கவனத்திற்கு அந்த நாடு சென்றது .ஆனால் உலக நாடுகள் நியாய வணிகம், கார்ப்ரேட் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றை கருத்தில்  கொண்டு பல கேள்விகளை எழுப்புகின்றன. சமீபத்தில் நடந்த சில பின்னலாடை தொழில் விபத்துகள் அவர்களின் கவனத்திற்கு சென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில்  ஐந்து பின்னலாடை தொழிலகங்களைக் கொண்ட ராணா பிளாசா கட்டிடம் விபத்தில் இடிந்து போனது.  1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதே ஆண்டில் டாக்காவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஆடைத் தொழிலில் பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனார்கள். இந்த இரண்டு விபத்துகளுக்கு பின்னால் அங்குள்ள தொழிலாளர் நிலை குறித்து உலக நாடுகள் தங்கள் கவனத்தை எடுத்துக் கொண்டன.  தொழிலாளர் நலன் பாதுகாப்புதொழில் பாதுகாப்பு , பின்னலாடை தொழில் துறை இடப்பாதுகாப்பு , தொழில் இடம் ,தொழிலாளர்கள் வாழ இணக்கமானச் சூழல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு தயாராக வங்க தேசம் இல்லை.  தொழில், தொழிலாளர் பாதுகாப்புத்தன்மை ஆகியவற்றில் வங்கதேசம் பின்னடைந்து இருப்பதை உலக நாடுகள் கண்டறிந்தனர். அந்த வகையில் ஆடை ஏற்றுமதியில் வங்கதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது வங்கதேசம் ஆடை தொழில்துறை 84 சதவீத பங்கு வகிக்கிறது. ஆனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பதில் ( ஜிடிபி ) அதன் பங்களிப்பு குறைந்திருப்பது ஆரோக்கியமான நிலையல்ல  என்றும் கருதப்படுகிறது. காரணம் அங்கு உள்ள தொழிலாளர்கள் குறித்தத் தீவிரமான முறையிலான  அக்கறையின்மை, நதிகளின் சீரழிவு, சாயப்பட்டறைகளின் நிலத்தடி நீர் மாசு போன்றவை புதிய முதலீடு போடுவதற்கு உலகநாடுகள் தயங்கும்படி செய்தன. மற்றும் சர்வதேச நிறுவனங்களால் பின்னல் ஆடை  சார்ந்த விலை குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி வருவாயில் அங்கு குறைவு ஏற்பட்டு இருக்கிறது .தீவிபத்துகள் மற்றும் கட்டட பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு அளவுகோல்கள் அவ்வளவு தீவிரமாக  இல்லை என்றும் சொல்லப்படுகிறது. .நெருக்கடிமிக்க துறைமுகம்அது சார்ந்த தொழில் கட்டமைப்பு வசதி குறைபாடுகள் அங்கே நிறைய இருக்கின்றன. ஆகவே ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை கொண்டு சேர்க்கிற விதத்தில் பல வகை பின்னடைவுகளும் உள்ளன.தொழிலாளர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி மைய செயல்பாடுகள் தீவிரமாக இல்லாமல் அந்நிய முதலீட்டை குறைத்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசம் ஏதோ ஒரு வகையில் திருப்பூருக்கு போட்டியாக இருந்தது .ஆனால் சமீப ஆண்டுகளில் திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு அம்சங்கள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை ஒப்பிடுகையில்  அப்படி வங்கதேசத்தில் இல்லாததால் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சரிவை  வரும் ஆண்டுகளில் திருப்பூர் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .அந்த வங்கதேசத்துப் பயணம் பின்னலாடைத் தொழில் சார்ந்த பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆதாரமாக  இருந்தது.
சுப்ரபாரதிமணியன், திருப்பூர். ( காவ்யா பதிப்பகம்  வெளியீடு, சென்னை ரூ100 )