புத்துமண் நாவல் : சுப்ரபாரதிமணியன்
பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையே
நவீன சூழலியம் ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது.
நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்ற பலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டு வளர்ச்சியைபொருளீட்டுவது என்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயே கட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறது.
முதன்மைப்பாத்திரம் அரசங்கப்பத்வியிலிருந்து ஓய்வு பெற்ற மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும் வரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவித
அச்சுறுத்தல்கள்.மனைவியும் மகளும் கூட
அவரிடமிருந்து விலகி நிற்பவர்கள் .பத்திரிக்கையில் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்ரி
எழுதுகிறார். வழக்குப் போடுகிறார். போராடுகிர்வர்களுக்கு ஆதரவு தருகிறார்.
நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனை
அடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மை அவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்
மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும் தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும் அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.
ஒரு கிராமம்..செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டது மணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாக யார்யார்காலடியிலோ உட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டது
குறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்
தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்
எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதை சமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை ச்சித்தரிக்கிறார்.
சிங்களநிறுவனமேலாளர் 'எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (கேள்வியைஎழுப்புகிறார் .
நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும் நாவலின் வடிவம்
.’
உலகம் நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவே
அதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள் திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில் சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சி வேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்கு திருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்.
இறுதியில் தனிமைப்படுகிறார். மகள் திருமணம் செய்து கொண்டு போய்விடுகிறாள். மனைவி
இறந்து போகிறார். மணீயனும் ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து
விட்டு இறந்து போகிறார்.அவருக்குத் தெரிந்த தன்னார்வக்குழு இளைஞன் அவருக்கு
அஞ்சலிக்கூட்டம் நட்த்த எண்ணுகிறான்..சுற்றுச்சூழல் பற்ரிப் பேசிய ஒருவனின் கதை
இது.
இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமே
தனி உலகம்
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள்
அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக்
கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி.
மலை வளம் மாத்திரமல்ல,
ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க
வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை.
“நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில்
இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள்
கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான
செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும்
திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால்
நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற
மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக்
காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவலின் மணியன் கதாபாத்திரம்
சொல்கிறது
இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல்
அழித்துவிட்டு,
அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட
குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது.
விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய்
குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின்
அத்துமீறல்,
அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற
செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் பற்றி இந்நாவல் பேசுகிறது
ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்
வெளியீடு; உயிர்மை 2014 பக்கங்கள்; 118
விலை; ரூ. 100.00