* புவியரசு
89 வயதில்.....வாழ்த்துவோம்
கண்மணி சோபியா :
நாவல் புவியரசு
யதார்த்தத்
களத்திலிருந்து அறிவியலுக்கு நாவல்
சென்றடைவது இந்நாவலின் சிறப்பம்சம். நவீன யுகத்தை அது கொண்டு வந்துக்காட்டி
அதிர்சியடையவும் செய்கிறது.
ஒரு பெண்ணின்
பழிவாங்கல் நடவடிக்கை என்ற அளவில் ஆரம்பப் பக்கங்கள் நகரும் போது ஏற்படும் அலுப்பு
அது விஞ்ஞானம் சார்ந்த நாவலுக்கான தன்மையுடன் மாறும் போதும்
தவளைப்பாய்ச்சலில் வேறு தளத்தை எட்டி
சுவாரஸ்யமாகிவிடுகிறது .குறைந்த கதாபாத்திரங்கள் மற்றும் . மரபு நாவல் மொழிக்கான இறுக்கம் போன்றவை
தாண்டி விஞ்ஞான நாவலுக்கான எளிமையான மொழியுடன் செல்கிறது .கதை சொல்லலில் வெகுஜனத்
தன்மை வந்து விடுவது எல்லோரின் வாசிப்பிற்கும் உகந்ததாக்கிவிடுகிறது.. அறம் , பொது
நீதி பற்றிய பல விவாதங்களை கதாபாத்திரங்கள் மூலம் முன்வக்கிற நேரத்தில் அதே
விவாதங்களை வாசகர்கள் மத்தியிலும் கிளப்புவது வெற்றியாகும். இயந்திரம் வெற்றி
கொள்வதோ, மனிதம் மனிதனிடம் மிஞ்சுவதோ சிறப்பசம்.
அதிஷா புவியரசை
பெருமளவில் பாதித்திருப்பதை பல கூட்டங்களில் புவியரசின் பேச்சிலிருந்து தெரிந்து
கொண்டேன்.அதை இந்நாவலிலும் கண்டேன் .. கவிஞர் உரைநடையாளராக மாறும் போது
ஏற்படும் அதீத கவித்துவம் என்பதெல்லாம் இதில் இல்லாமல் இருப்பது புவியரசு
நல்ல உரைநடைக்காரர் கூட என்பதையும் சொல்கிறது.அவரின் மொழிபெயர்ப்புப் பணிகள்,
உரைநடையில் தொடர்ந்த வாசிப்பு என்பதெல்லாம்
அதற்கு முக்கிய காரணிகள் எனலாம். நாவல், வெகு இறுக்கம், நீளமானது என்று தள்ளிபோகும் புதிய தலைமுறையையும்
ஈர்க்கும் உரைநடையில் ஒரு நாவல் என்பது
பலம் . இது போன்ற அறிவியல் எழுத்து புது பலம்.
படைப்பிலக்கியம்,
மொழிபெயர்ப்பு என் இரு முறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர் புவியரசு அவர்கள். இப்போது
அவருக்கு வயது 89 .அவரின் மொத்த நூல்களின் எண்ணிக்கை 100 யைத்தாண்டிவிட்டது 5
ஆண்டுகளுக்கு முன்பே . - ( சுப்ரபாரதிமணியன்
) (
ரூ150 நந்தினி , கோவை 9942232135)