பெண்ணுரிமை என்பது
கேட்டுப்பெறுவதல்ல
“ பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல..
ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும்
வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல்
காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல
துறைகளில் முன்னேறி வளர்கிறோம் “ என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர்
உமாமகேஸ்வரி அவருக்கும் . மற்றும் 21 பேர்களுக்கு இலக்கியம், கல்வித்துறை,ஓவியம் ,
.சமூகப்பணி சார்ந்த பெண்களுக்கு சக்தி விருதுகள் ஞாயிறில் வழங்கப்பட்டன .
“இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல்
படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில்
வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப்பதிப்பும் இன்றைய சூழலில்
பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில் புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக்
கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும் இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன “ என்றார்
விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், சென்னை அவர்கள்.
திருப்பூர் சக்தி விருது 2019
-
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 20 20 ஆண்டுகளாக வழங்கி வருவதன்
தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19 அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை.. விழா நடைபெற்றது .
இவ்வாண்டு திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெற்றோர் : உமா மகேசுவரி கோவை
, தனசக்தி நாமக்கல்
, நா.
நளினிதேவி மதுரை,
பரிமளாதேவி திண்டுக்கல்,
செல்வகுமாரி புதுவை ,
தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர், இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் , கமலதேவி உறையூர் ,
தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி, வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன்
சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்
தலைமை : தோழர் பி ஆர். நடராஜன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம் )வகித்தார், வழக்கறிஞர் இரவி பரிசு பெற்றப்படைப்பாளிகளின் படைப்புகளை
அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் திருப்பூர் சக்தி விருதுகளை வழங்கினார் . * ஓவியக்கண்காட்சி: இயற்கை
ஓவியங்கள் “ மரம் அறிய..” .என்றத் தலைப்பில் ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி, ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.
* நூல் வெளியீடு :சுப்ரபாரதிமணியன் “ திருப்பூர் “ ( திருப்பூரை மையமாகக் கொண்ட
சிறுகதைகள் தொகுப்பு - நிவேதா பதிப்பகம்
சென்னை வெளியீடு , ரூ125 ) நூலினை
கல்வியாளர் ஜெயா மோகன் வெளியிட பேரா. செல்வகுமாரி, கவிஞர் அம்பிகா குமரன் பெற்றுக்கொண்டனர். : பாரதி வாசன், அம்பிகா,கனல் , அருணாசலம்,
துருவன் பாலா, துசோபிரபாகர் கவிதைகள் வாசித்தனர்
தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை வழங்கினார்