சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 16 நவம்பர், 2018

Review of The novel Rekai by the Tirupur- Subrabarathimanian
When Astrologers Failed to Foresee their Future

The novel Rekai by the Tirupur-based popular novelist Subrabarathimanian is a portrait of the contemporary society, which has almost lost its tradition and culture as a victim to the widespread globalization and privatization. Set in a village on the banks of a river called ‘ Muruga Nadhi’ ( Could be Shanmuga Nadhi) near Palani, the southern border of the ancient Kongunadu, the Tamil novel brings to light the uncertain lives of the people, particularly, the Valluvars – a community, whose traditional occupation is palmistry and astrology. 
At a time when the invention of computer is working wonders in science and technology, the features in the machine in Tamil Nadu are used even  to predict one’s future by ‘ scientifically’ analyzing horoscopes in the name ‘Computer Jathagam’
The book, which reveals the reality of  modern life through its characters Amalam, Parameshwari, Gopal, Rathinavelu, Ganapathy, Subbaiah and many others, reflects a society, which is devoid of its moral values with the impact of socio-economic changes.
“My husband became a habitual drinker and was of no use to the family. So I drove him out of my home” says the character Amalam, who ekes out a living by selling flowers at the foothills of Palani.
However, Subrabarathimanian has portrayed the Amalam as the one, who again looks for her husband in the temples of Thiruvannnamalai and Perur.
Subbaiah, a playwright and cinema buff, who, once, staged a number of plays of artistic interest in the village, is  eking out a living by staging street plays and composing songs on awareness on HIV, child labour and so on as directed by the NGOs, which make big money from foreign funds. On the other hand, Gopal, who hails from a traditional astrologers family, realizes that survival was hardly possible without giving a ‘scientific character’ to traditional astrology. Hence, he sets up his ‘astrology offices’ at Tirupur and Chennai – the two wealthy towns of Tamil Nadu. Interestingly, he also self styles himself wearing a kurda and smearing sacred ash with sandal paste on his forehead and  calling him as ‘Cinema Jothidar ‘(Cinema astrologer). By doing so, he attracts many clients from the tinsel town, as they are believers in the omen, which is sure to bring fortunes and misfortunes in their venture.
The village near Palani still has a handful of traditional astrologers, who ‘predict’ one’s future by analyzing the person’s horoscope. Nevertheless, in the contemporary commercial world, a parrot astrologer has set up his stall at the Muniappan Temple in the village. When a man in the novel questions him of doing business by interfering the profession of traditional astrologers, the parrot astrologer says:
“Parrot astrology is like ‘fast food’ and it helps people know their fortunes at once. You are a bachelor. Aren’t you? Why don’t you know your marriage prospects from a card picked by my parrot? “

B. Meenakshi Sundaram

புதன், 14 நவம்பர், 2018

திருப்பூர் துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன்

குறும்படங்களுக்கென்று கால அளவு உண்டு. ஆனால் அந்தக்கால அளவைக்கடந்தவையாக திருப்பூர் துசோபிரபாகரின்  பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மணி நேரத்தைக் கடந்தவையாகவும் அவரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. அவை முழுத்திரைப்பட முயற்சியின் பயிற்சியாகவும் முயற்சியாகவும் இருந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவரின் கண்டாங்கி திரைப்படத்தில் அதன் தன்மையைக் காணலாம்.அவரின் நீண்ட குறும்படங்களில் காமிரா மொழி ஒரு நாவலாசிரியரின் உரைநடை மொழியை ஒத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இவருக்கு நாவல் வடிவம் சிறப்பாக வரும் என்ற எண்ணத்தை அந்தப்படங்கள்  எழுப்பியிருக்கின்றன. ஆனால் அவர் கவிதைகள், மேடைப்பாடல்களில் அதிகம் கவனம் செலுத்துவதைக்கண்டிருக்கிறேன். ஒரு திரைப்பட முயற்சியாளனுக்கு திரைக்கதை உட்பட பலவற்றைக்கையாளுவதில் தேர்ந்த வாசிப்பும் உரை நடையின் தேர்ச்சியும்  பயனளிக்கும் என்பதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். கவிதைகள், மேடைப்பாடல்கள் முயற்சியை  மீறி சமீபமாய் நாவல்கள் எழுதுவதிலும் அக்கறை எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காமிரா மொழிக்கு இணையான நிதானமான விவரிப்பும்  கூர்மையும் இவரின் நாவல்களின் பாத்திரப்படைப்புகளிலும், விவரிப்பிலும் காணமுடிகிறது. இந்நாவலில் அவர் படித்த காந்தி கிராமப்பல்கலைக்கழக்த்தின் சூழலும் மாணவர்களின் உலகமும்  சூழலை ஒட்டிய மக்களின் வாழ்வியலும் குறிப்பாக சிறுமலை சார்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கையும் , சாதாரண மக்களின் பிரதிநிதிகளான ஏழை மாணவர்களின் இயல்பும் ஆசையும்  நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன .. அவரின் கவிதைகள் , மேடைப்பாடல்களின் தன்மை போல் பல மையங்களையும் பிரச்சினைகளையும் ஒரு மலரின் வெவ்வேறு இதழ்களின் அடுக்குகள் போல் துசோபிரபாகர் இந்நாவலின் களங்களை வடிவமைத்திருப்பது நாவல் வடிவத்தையும் அவர் சிறப்பாக்க் கைக்கொள்ளும் வித்தையைச் சொல்கிறது.

திருப்பூர் துசோபிரபாகரின் மேடைப்பாடல்கள்: சுப்ரபாரதிமணியன்
துசோபிரபாகரின் மேடைப்பாடல்களைக் கேட்கும்போது பல சமயங்களில் புரட்சிப்பாடகர் கத்தார் ஞாபகம் வருவார்... மெல்லக்குரல் எழும்பி உச்சஸ்தாயில் உணர்ச்சிப்பெருக்கில் வெடித்துக்கிளம்பும்  துசோபிரபாகரின் குரல். புரட்சிப்பாடகர் கத்தார் அவர்களை நான் செகந்திராபாத்தில் 8 ஆண்டுகள் இருந்த போது பல முறை சந்தித்திருக்கிறேன்.அவரின் வீடு செகந்திராபாத்தின் புறநகரில்தான் இருந்த்து . காலில் சலங்கை, கையில் தடி , வெற்று மார்பில் போர்வையுடன் அவர் பாடும் போது உணர்ச்சிக்கொந்தளிப்பில் மக்கள் திளைப்பர். அவரின் மேடைப்பாடல்களுக்கென்று நிஜாம் கல்லூரி மைதானம் லட்சக்கணக்காண மக்களால் நிரம்பி வழியும்.அது போல் துசோபிரபாகரின் மேடைப்பாடல்கள் சென்றடையும். சாதாரணப்பேச்சின் போது பிரபாகரின் குரல் மென்மையானது. அது மேடை பாடலின் போது உச்சஸ்தாயில்  அவர் வெடிப்பதைக்காணலாம். சாதாரண மக்களின் , விளிம்பு நிலை மக்களின் குரலாக அது ஒலிக்கும். பொதுச்சோகம், அவ்வப்போதைய உச்சபட்ச பிரச்சினைகளின் போது அவர் தன் கருத்தையும் உணர்வையும் உடனடியாக மேடைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்த்த் தவறியதில்லை. ஒரு உரை நடை ஆசிரியர்  தன்னை பாதிக்கும் விசயத்தை படைப்பில் வெளிப்படுத்திக் கொள்ள  கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு உரை நடை ஆசிரியரை விட   தன்னை பாதிக்கும் விசயத்தை படைப்பில்  கவிஞர்கள், மேடைப்பாடலாசிரியர்கள்  உடனே வெளிப்படுத்தி விடுவதை பிரபாகரும் பின்பற்றுவார். உடனடி எதிர் விளைவுகளையும் காண இயலும். மலையாளக்கவிஞர்கள் போல பிரபாகர் தான் எழுதிய கவிதைகளை மேடைப்பாடலாக்கியோ, அல்லது அப்படியேவோ பாடுவது எனக்குபிடித்த விசயங்களில் ஒன்று. சமீபத்தில் அவர் பாடும்           மண்ணெணெய் தீப்பெட்டி போலே புத்தகங்களும் வாங்கப்பட வேண்டும் “  என்ற பாரதியின் ஆசையை போல் பிரபாகரின் படைப்புகளும் மக்கள் திரளில் சென்றடைய வேண்டும் என்பதும் என் ஆசையும்  கூட .

திருப்பூர் துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன்

குறும்படங்களுக்கென்று கால அளவு உண்டு. ஆனால் அந்தக்கால அளவைக்கடந்தவையாக திருப்பூர் துசோபிரபாகரின்  பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மணி நேரத்தைக் கடந்தவையாகவும் அவரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. அவை முழுத்திரைப்பட முயற்சியின் பயிற்சியாகவும் முயற்சியாகவும் இருந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவரின் கண்டாங்கி திரைப்படத்தில் அதன் தன்மையைக் காணலாம்.அவரின் நீண்ட குறும்படங்களில் காமிரா மொழி ஒரு நாவலாசிரியரின் உரைநடை மொழியை ஒத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இவருக்கு நாவல் வடிவம் சிறப்பாக வரும் என்ற எண்ணத்தை அந்தப்படங்கள்  எழுப்பியிருக்கின்றன. ஆனால் அவர் கவிதைகள், மேடைப்பாடல்களில் அதிகம் கவனம் செலுத்துவதைக்கண்டிருக்கிறேன். ஒரு திரைப்பட முயற்சியாளனுக்கு திரைக்கதை உட்பட பலவற்றைக்கையாளுவதில் தேர்ந்த வாசிப்பும் உரை நடையின் தேர்ச்சியும்  பயனளிக்கும் என்பதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். கவிதைகள், மேடைப்பாடல்கள் முயற்சியை  மீறி சமீபமாய் நாவல்கள் எழுதுவதிலும் அக்கறை எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காமிரா மொழிக்கு இணையான நிதானமான விவரிப்பும்  கூர்மையும் இவரின் நாவல்களின் பாத்திரப்படைப்புகளிலும், விவரிப்பிலும் காணமுடிகிறது. இந்நாவலில் அவர் படித்த காந்தி கிராமப்பல்கலைக்கழக்த்தின் சூழலும் மாணவர்களின் உலகமும்  சூழலை ஒட்டிய மக்களின் வாழ்வியலும் குறிப்பாக சிறுமலை சார்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கையும் , சாதாரண மக்களின் பிரதிநிதிகளான ஏழை மாணவர்களின் இயல்பும் ஆசையும்  நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன .. அவரின் கவிதைகள் , மேடைப்பாடல்களின் தன்மை போல் பல மையங்களையும் பிரச்சினைகளையும் ஒரு மலரின் வெவ்வேறு இதழ்களின் அடுக்குகள் போல் துசோபிரபாகர் இந்நாவலின் களங்களை வடிவமைத்திருப்பது நாவல் வடிவத்தையும் அவர் சிறப்பாக்க் கைக்கொள்ளும் வித்தையைச் சொல்கிறது.
Review of The novel Rekai by the Tirupur- Subrabarathimanian
When Astrologers Failed to Foresee their Future

The novel Rekai by the Tirupur-based popular novelist Subrabarathimanian is a portrait of the contemporary society, which has almost lost its tradition and culture as a victim to the widespread globalization and privatization. Set in a village on the banks of a river called ‘ Muruga Nadhi’ ( Could be Shanmuga Nadhi) near Palani, the southern border of the ancient Kongunadu, the Tamil novel brings to light the uncertain lives of the people, particularly, the Valluvars – a community, whose traditional occupation is palmistry and astrology. 
At a time when the invention of computer is working wonders in science and technology, the features in the machine in Tamil Nadu are used even  to predict one’s future by ‘ scientifically’ analyzing horoscopes in the name ‘Computer Jathagam’
The book, which reveals the reality of  modern life through its characters Amalam, Parameshwari, Gopal, Rathinavelu, Ganapathy, Subbaiah and many others, reflects a society, which is devoid of its moral values with the impact of socio-economic changes.
“My husband became a habitual drinker and was of no use to the family. So I drove him out of my home” says the character Amalam, who ekes out a living by selling flowers at the foothills of Palani.
However, Subrabarathimanian has portrayed the Amalam as the one, who again looks for her husband in the temples of Thiruvannnamalai and Perur.
Subbaiah, a playwright and cinema buff, who, once, staged a number of plays of artistic interest in the village, is  eking out a living by staging street plays and composing songs on awareness on HIV, child labour and so on as directed by the NGOs, which make big money from foreign funds. On the other hand, Gopal, who hails from a traditional astrologers family, realizes that survival was hardly possible without giving a ‘scientific character’ to traditional astrology. Hence, he sets up his ‘astrology offices’ at Tirupur and Chennai – the two wealthy towns of Tamil Nadu. Interestingly, he also self styles himself wearing a kurda and smearing sacred ash with sandal paste on his forehead and  calling him as ‘Cinema Jothidar ‘(Cinema astrologer). By doing so, he attracts many clients from the tinsel town, as they are believers in the omen, which is sure to bring fortunes and misfortunes in their venture.
The village near Palani still has a handful of traditional astrologers, who ‘predict’ one’s future by analyzing the person’s horoscope. Nevertheless, in the contemporary commercial world, a parrot astrologer has set up his stall at the Muniappan Temple in the village. When a man in the novel questions him of doing business by interfering the profession of traditional astrologers, the parrot astrologer says:
“Parrot astrology is like ‘fast food’ and it helps people know their fortunes at once. You are a bachelor. Aren’t you? Why don’t you know your marriage prospects from a card picked by my parrot? “

B. Meenakshi Sundaram
ஓரிதழ்ப்பூ : அய்யனார் விஸ்வநாத் நாவல் : சுப்ரபாரதிமணியன்
நான் திருப்பத்தூரில் மத்திய அரசின் பணியில் இருந்த போது அருகிலிருக்கும் திருவண்ணாமலைக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். . பவா செல்லத்துரை, கருணாவின் குழு கலை இரவுகளில் வெற்றி நடை போட்ட பெருமிதமான காலம் அது..என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தார் ஜெயமோகன், அவர் வசித்த் ஊர்களில் எந்த வசீகரமும் இல்லாத ஊர் என்று திருப்பத்தூரைக்குறிப்பிடுவார். ஆனாலும் எனக்கும் அவருக்கும் மிகுந்த வசீகரங்களையும் கொண்ட ஊராக திருவண்ணாமலை இருந்திருக்கிறது. அவரின் மிகச்சிறந்த்த் தொகுப்புகளில் ஒன்றான திசைகள் தேடி .. அங்கு அப்படியான ஒரு கலை இரவில்தான் வெளியிடப்பட்டது. திருவண்ணாமலையை உள்வாங்கும் போது  அந்த ஊர் சார்ந்த அனுபவங்களை இந்த எழுத்தாளர்கள் எழுதாமல் இருக்கிறார்களே என்று  நினைப்பதுண்டு. ஆட்டோக்காரன் அனுபவங்களை எழுதிய பீனிக்ஸ் போன்றோரும் மறைந்து விட்டனர். ஜெயகாந்தனின் நண்பரும் திருப்பத்தூரைச்சார்ந்தவருமான  பி.சா. குப்புசாமி அவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியிருக்கும் பல ஊர்கள், ஜவ்வாது மலைப்பகுதி கிராமங்களில்  ஆசிரியப் பணி செய்த அனுபவங்களை  எழுதியிருக்கிறார். அது திருவண்ணாமலை சார்ந்த மக்களின் வாழ்வியலில் ஒருபகுதிதான். அந்த ஊரில் பிறந்து வளர்ந்து துபாயை வாழ்விடமாகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் திருவண்ணாமலை ஊர் சார்ந்த மக்களின் அனுபவங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். 20 வெள்ளைக்காரர்கள் என்றத் தொகுப்பில் அந்த அம்சங்களைக் காணலாம். திருவண்ணாமலை பற்றிய ட்ரிலாஜியின் இரண்டாவது நூல் இந்நாவல்.அகத்தியமாமுனியின் நடமாட்டம் பற்றிய ஆரம்ப அத்தியாயங்கள் தரும் சுவாரஸ்யம்  நாவலை கடவுளும் கந்தசாமிபிள்ளையும் போல் கற்பனைக்கச் செய்கிறது . ஆனால் அவரோ மனம் நிலை பிறழ்ந்தவராகவே இருக்கிறார். இது போல் தினசரி வாழ்க்கையில் கூரிய பற்களால் சிதைந்து போகிற பல தரப்பட்ட , பல வயதினரான மனிதர்களை இந்நாவலில் அறிமுக்ப்படுத்துகிறார்.சாமியார்களின் உலகம்., சோதிடர்களின் வாழ்வியல், பூக்கட்டும் பெண்களின் இயல்பு என்று நாவல் விரிகிரது.  எல்லாரும் மன நிலை பிறழ்வின் எல்லையில் இருப்பவர்கள், அமைந்த வாழ்க்கையின் திருப்தி இன்மையை உணர்ந்து கொண்டேயிருப்பவர்கள்.. அந்த பல் சக்கரங்களின் பிடியிலிருந்து விடுபட முடிபவர்கள் . சிலருக்குத் தெளிவு கிடைக்கிறது. சிலர் அப்படியே இருப்பதில் சுகம் காண முடியாவிட்டாலும் அப்படியே இருப்பதைச் சகித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்களை அந்த ஊர சார்ந்த ஆன்மீக அனுபவங்களால்,  சொந்த வாழ்க்கை தரும் தீர்வுகளால் தெளிவாகிக் கொள்கிறார்கள்.பாலியல் உணர்வுகள் பெரும்பான்யோரை அலைக்கழிப்பதை கலவியின் இன்ப உச்ச வரிகளிலேயே விளக்கிகிறார். அவரின் மொழி நவீனத்துவ அனுபவங்களோடு   இணைந்தது பலமாக இருக்கிறது. பெருங்கூட்டத்தில்  தொலைந்தவனின் தனிமை  என்று துபாய் வாழ் நாகா அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்பொன்று இருக்கிறது. அய்யனாரின் மனிதர்கள் பெருங்கூட்டத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் வாழ்வியலாக விரிந்திருக்கிறது. பெரும்பான்மையோரின் சமூகவியல் சார்ந்த விடயங்கள்  தவிர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை இன்னும் விரிந்து அவரின் படைப்புகளில் வ்சீகரமும் தீவிரமும் காட்டும்

  ( ரூ150.  கிழக்குப் பதிப்பகம் , சென்னை  )
மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்
சாமான்ய மனிதர்களின்  கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர்  பற்றிய பல சாமான்ய மனிதர்களின்  கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர்   மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர்   பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர்   பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்... கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன
ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில்  எம்.ஜி.ஆர்  அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே  என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.

வல்லமை.காம்  மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின்  தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்
எம்.ஜி.ஆர்   பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.
( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )
ுகிறார்.

( ரூ 100, டிஸ்கவ்ரி புக் பேலஸ் சென்னை வெளியீடு   )
பெருங்கூட்டத்தில்  தொலைந்தவனின்  தனிமை : நாகாவின் கவிதை நூல்..
--சுப்ரபாரதிமணீயன்

வானொலியில் மேஸ்ட்ராலிஜி “ நிகழ்ச்சியில் எழுத்தாளர்களின் சந்திப்புக்கென்று பெயர் வாங்கியவர் நாகா. அவரின் இக்கவிதைத் தொகுப்பு முழுக்க நாஸ்டாலாஜியா “  கவிதைகளால் நிரம்பியிருக்கிறது. எல்லாக்கவிதைகளிலும் நினைவுகள் சார்ந்த அனுபவங்கள் அந்த அனுபவங்களை இன்றைய வாழ்வியல், விஞ்ஞானம், வளர்ச்சி, மாறுதலோடு பொருத்திப் பார்க்கும் ஏக்கமான முத்தாய்ப்பு வரிகள் அல்லது முத்துக்குளித்து எடுத்த முத்துக்கள்  என்று வடிவமைத்திருக்கிறார். அத்தனையும் முத்தான அனுபவங்கள்., சொந்த அனுபவங்களை மட்டுமில்லாமல் பிறரின் அனுபவங்களை தன் அனுபவங்கள் போல் வரித்துக் கொண்டு எழுதுகிறவனே நிறைய எழுத முடியும், விசாலப் பரப்பைச் சென்றடைய முடியும்.அது நாகாவிடம் சாத்தியமாயிருக்கிறது. எல்லாவகைக் களங்களிலும் இவ்வகை அனுபவங்கள் நாகாவுக்கு வாயத்திருக்குமா என்ற   சந்தேகம் எனக்கு வந்த போது சிறுகதைத் தன்மையைக் கொண்டுவர அவர் எடுத்துக் கொள்ளும் அனுபவங்கள் கற்றதும் பெற்றதுமாக இருப்பது மகிழ்ச்சி தந்தது.. நதிகள் பற்றியக் கவிதைகள் குறிப்பாக எங்களூர் நொய்யல் பற்றியக் கவிதையைப் படித்த போது இந்த ஆச்சர்யம் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நொய்யல் பற்றிய கவிதையில் அவரின் கேட்டறிந்த அனுபவம் அந்தக்கவிதைக்குள் ஊடாடியிருப்பது தெரிந்தது.. மகிழ்ந்தேன்.  இவ்வகையில் நிறையப் படைப்புகளை சவால் தன்மையுடன் நாகாவால் தொடர்ந்து தருவதற்கான வாசல்களை இக்கவிதைகள் எனக்குச் சொல்லின. இந்நூலின் முன்னுரையில் சீ.அஞ்சுகம் மேற்கோள் காட்டும் நீண்ட பட்டியலான வரிகளை நானும் ஆமோதித்து திரும்பச் சொல்ல விழைகிறேன். தனிமையை நிராகரிக்கும் மனம் கொண்ட அனுபவங்கள் இக்கவிதைகள். பெரும்பாலும் அதிக மக்கள் திரளைச் சென்றடையும் வானொலி, சின்னத்திரை,திரைப்பட, சமூக ஊடங்களில் பணிபுரிகிறவர்கள்  குறைந்த வாசகர்களைக் கொண்ட புத்தக முயற்சிகள், படைப்பாக்க முயற்சிகளில் அதிக் அக்கறை காட்டமாட்டார்கள். ஆனால்  துபாய் வானொலியில் பணிபுரியும் நாகாவின் தொடர்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் அவரின் மூலவேர் படைப்பிலக்கியத்தளத்தில் ஆழமாய் சென்றிருப்பதைக் காட்டுகிறது.அதைத்தொடர்ந்து படைப்பிலக்கியமுயற்சிகளில் வெளிப்படுத்தி வருகிறார்.

( ரூ 100, டிஸ்கவ்ரி புக் பேலஸ் சென்னை வெளியீடு   )